-
9th January 2013, 04:22 PM
#2781
Raghavendar sir-kku support pannuvadharkkaaga indha nabar, Gopal sir-ai thittiyapothe ivar yaar endru doubt patten.
ippo vetta velichamaagi vittathu.
paavam puthithaaga vandha Vanaja madaththaiyum, than paattukku poikkondirundha Kalnayak sir-aiyum idhula join panni vittuttaar. Threadukkee varaadha irandu senior hubbersaiyum vidavillai.
No problem, ippothaan ivar yaarunnu therinju pochu illaiyya?. inime paarunga namma vilaiyaattai.
-
9th January 2013 04:22 PM
# ADS
Circuit advertisement
-
9th January 2013, 04:25 PM
#2782
Vanaja sister,
In his previous name, another hubber also posted in the same page.
-
9th January 2013, 04:44 PM
#2783
Junior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
Vanaja sister,
In his previous name, another hubber also posted in the same page.
still don't get it
-
9th January 2013, 04:49 PM
#2784
Junior Member
Junior Hubber
come on
sir
-
9th January 2013, 04:51 PM
#2785
Junior Member
Devoted Hubber
whatever it is, the recent discussions has lead this thread to a sombre mood and I lost interest in posting any. will peep in from time to time though.
-
9th January 2013, 05:08 PM
#2786
Vanaja sister,
in the same name, another new hubber is here.
ippavum puriyavillai endraal, 'nilakkari'yaik kondu 'anal minsaaram' undaakki, andha 'Gnana oli'yil paarungal.
-
9th January 2013, 06:26 PM
#2787
Junior Member
Seasoned Hubber
Don's lose heart. Pls continue your posting as usual Madam.
-
9th January 2013, 07:19 PM
#2788
paavam, pudhusaa vandha oru lady memberai indha mirattu mirattinaal virakthi adaiyaamal enna seyvaar?.
nijamaagave 'panmugam' konda oruvar matravargalaip paarththu sammandhamillaamal 'panmugam', panmugam endru mirattinaar.
ippo mirattiyavarin saayam veluththu pochu.
naan, MURALI sir-aiyum, Pammalaraiyum, Chandra Sekaraiyum mattum admire panninenaam. adhanaal vandha poraamaidhaan idhu. enakku pidiththa padhivai tharubavargalaiththaan naan paaraatta mudiyum. adhukku ennai thaakkattum. sammandhamillaadha matravargalai yen?.
-
10th January 2013, 07:13 AM
#2789
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
மனபூர்வமான மன்னிப்பை கோருகிறேன்.அளவுக்கு அதிகமாகவே வார்த்தை பிரயோகம் செய்து விட்டதை உணர்கிறேன்.என்னை விட மூத்தவர் என்ற முறையில் மன்னியுங்கள். இது தங்களின் வயது, அனுபவம், நடிகர்திலகத்துக்கு தாங்கள் செய்து வரும் தொண்டு(nadigarthilagam .com ) ஆகியவை கருதி நான் செய்த தவறை திருத்தி கொள்கிறேன். ஆனாலும் சிறிய வேண்டுகோள். தாங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கூறலாமே தவிர, கூறாத ஒன்றை திரித்தல், அடிப்படை நேர்மையை சந்தேகித்தல்(இந்த திரியை பொறுத்த வரை அடிப்படை நேர்மை நடிகர்திலம் ரசிகராய் இருத்தல்),இவைகளால்தான் நான் ஆவேச பட்டேனே தவிர, எதிர்ப்பை எண்ணி அல்ல. அத்துடன், நீங்கள் நம் நண்பர்கள் பலருடன்,நான்தான் ஆதிராம் என்ற பெயரில் எழுதுவதாக நான் அறியாமல் வதந்தி பேசியுள்ளீர்கள். நான் மாற்று பெயரில் ,ஒரே திரியில் வருவதை விரும்ப மாட்டேன். அப்படி,சுவாரஸ்யம் கருதி யாராவது நண்பர் வந்தாலும் குறை கூற ஒன்றுமில்லை. ரசித்து விட்டே போகலாம்.
எல்லா நண்பர்களுக்கும் மிக நன்றி. எனக்கு ,வியாபார அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்த திரியில் வினையாற்றுவதை ,ஒரு சந்தோசம் கருதி செய்து வந்தேன். ஆனால், என் மூத்த சகோதரர் வயது கொண்ட நான் மதிக்கும் ஒரு மனிதர், என் சந்தோஷத்தை குலைத்து,என்னை இந்த திரிக்கு வில்லனாய் சித்திரி ப்பதை தொழிலாய் கொண்டு அலையும் போது ,தன்னை மாற்றி கொள்ள மாட்டேன் என்று சொல்லி வலம் வரும் போது ,நானும் எளிதில் கோபபடும் இயல்பு கொண்டவன் என்பதால், சற்று தள்ளி நிற்கிறேன். (விலகவில்லை)
திரியின் நண்பர்களுக்கு, சிறிய வேண்டுகோள். நதி மூலம்,ரிஷி மூலம் பார்க்காமல் எழுத தூண்டுங்கள். அழகாக கருத்துகளை முன்னெடுத்து, வினை-எதிர்வினை ஆற்றுங்கள்.தனி மனித துதி-நிந்தனை தவிருங்கள். இங்கு நமது ஒரே மூல கடவுள் நடிகர் திலகம் மட்டுமே.அதை மனதிலேடுத்து செயல் படவும்.யாரையும் எழுத விடாமல் செய்ய வேண்டாம்.திரி நன்றாக பயணிக்க வேண்டும். எப்போதுமே தீய சக்திகள் ஒன்று படுவதும்,நல்ல சக்திகள் பிரிந்து கிடப்பதும் நாட்டின் தலைவிதி போலும் !!?? நல்ல சக்தியான நாம் ஒருங்கிணைவோமாக.
-
10th January 2013, 08:16 AM
#2790
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
முதலில் தங்களுடைய பதிவுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன். தங்களுடைய பதிவில் தனிப்பட்ட முறையில் கோபம் ஏதுமில்லை. நான் ஏற்கெனவே நண்பர்களிடம் கூறியது போல் நடிகர் திலகத்தைப் பற்றிக் குறை கூறும் போது மட்டும் தான் என் வாழ்க்கையில் இது வரை கோபம் என்பதையே அடைந்திருக்கிறேன். என்னுடைய பதிவினை நன்கு கவனித்தீர்களானால் தெரியும். தங்களுடைய நேர்மையை நான் சந்தேகிக்கவில்லை அப்படி யாருடைய நேர்மையினையும் சந்தேகிக்கும் தகுதியும் எனக்கில்லை. நான் நேர்மையாக இருக்கிறேனா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டும் அதைத் தான் செய்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் நாமே விமர்சிக்கும் போது நாம் ஏன் எழுதக் கூடாது என்கிற அடிப்படையில் மேலும் நடிகர் திலகத்தை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று மேலும் கடுமையாகவோ அல்லது நம் மனம் புண்படும் வகையிலோ எதிர்காலத்தில் பதிவுகள் இடம் பெற காரணமாக நம்முடைய பதிவுகள் முன் மாதிரியாக அமைந்து விடக் கூடது என்பது தான். அந்த அடிப்படையில் தான் தங்கள் பதிவினையும் அணுகினேன். விமர்சனம் என்பது இரு பக்க நாணயம் போன்றது என்பதை அறியாதவனல்ல நான். அதில் தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தின் தொழிலைப் பற்றிக் குறிப்புகள் வந்தால் மட்டுமே நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். தாங்கள் வேண்டுமென்று எழுத வில்லை என்றாலும் தங்களையும் அறியாமல் வந்து விடக் கூடாதே என்கிற எண்ணத்தில் சுட்டிக் காட்டினேனே தவிர மனம் புண்படும் வகையில் நான் யாரையும் எழுத மாட்டேன். இங்கு அனைவருமே தங்களுடைய பல்வேறு சிரமங்கள், அலுவல்கள், கவலைகள் இவற்றுக்கிடையில் தங்களுடைய வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வித்த்தில் தங்களுடைய நேரத்தையும் எண்ணங்களையும் உழைப்பினையும் செலவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொருவரையும் நாம் பாராட்ட வேண்டும்.
அதே சமயம் தனிப்பட்ட முறையில் என் எண்ணத்தையும் கூற விரும்புகிறேன். தான் இறக்கும் கடைசி நேரம் வரையில் தன் தொழிலில் முழு மனதுடன் போற்றி வந்தவர் நடிகர் திலகம். தன்னுடைய ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியவர் அவர். அவருடைய நடிப்பு எந்த குறிப்பிட்ட ஸ்டைலிலும் அடங்காத்தாகும். அவர் தனக்கென எந்த பாணியினையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையையும் உள்வாங்கி அதற்கேற்றவாரு அதனை தன் நடிப்பினால் வெளிப்படுத்தியவர். உலகில் யாரை வேண்டுமானாலும் மிமிக்ரி பண்ண முடியும் நடிகர் திலகத்தைத் தவிர. இப்போது செய்கிறவர்கள் ஒரு சில குறிப்பிட்ட படங்களில் அவர் நடிப்பை வைத்துத் தான் செய்ய முடிகிறதே தவிர பொதுவாக செய்ய முடியாது.
எனவே அவருடைய நடிப்பை குறிப்பிட்ட படத்தில் குறிப்பிட்ட பாத்திரத்தில் அவர் எப்படி செய்துள்ளார் என்ற அடிப்படையில் அணுகுவதே சரியாக இருக்கும் என்பது தான் என் கருத்து. இந்த அடிப்படையில் பார்த்தால் அவருடைய நடிப்பில் தனியாக அவர் வகுத்த இலக்கணம் இருக்கலாமே தவிர, உலக நடிப்பின் இலக்கணத்தை அவருடைய நடிப்பில் புகுத்துவது சரியாக இருக்க முடியாது.
Character oriented Acting – இது தான் என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் அணுகுமுறை, அவர் நடிப்பின் பாணி என்று சொல்ல்லாம்.
இது என் தனிப்பட்ட கருத்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.
இன்னொன்று ஒருவரே எத்தனை பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும். சொல்லப் படும் கருத்து தான் முக்கியமே தவிர சொல்லும் நபரல்ல. எனவே யார் பெயரில் யார் எழுதினாலும் அதனை நாம் பொருட் படுத்த வேண்டாமே. இதனைத் தான் என் நண்பர்களிடமும் சொன்னேன். சொல்லுகிறேன்.
யாரும் விலகி நிற்க வேண்டும் என நான் எண்ணவதும் இல்லை சொல்லுவதும் இல்லை. எனவே தாங்கள் தொடர்ந்து தங்களுடைய கவலை தீர்க்கும் மருத்துவ மனையாக நம் திரியினை எண்ணிக் கொள்ளுங்கள்.
தங்களுடைய பணியிலும் உடல் நலத்திலும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks