-
12th January 2013, 03:17 PM
#2841
Nadippil ivvalavu anubavam ulla Shivaji sir, ippadi oreyadiyaaga 'directors hero'vaaga irundhirukka koodaathu. Thalaiyida vendiya idangalil thalaiyittu, thaanudaiya portionum padamum nandraaga vara siraththai eduththuk kondirukka vendum.
Dr. Siva padam Manjulaavinaal kettathu endru oppukkolla maatten. another heroine irundhaalum adhu appadiththan amaindhirukkum. padaththin stuff avvalavuthaan.
Good story, Vanishree ellaam irundum 'Ilaiya thalaimurai' enna saadhiththu vittathu?.
-
12th January 2013 03:17 PM
# ADS
Circuit advertisement
-
12th January 2013, 04:20 PM
#2842
Junior Member
Seasoned Hubber
To all the hubbers and Millions of NT's Fans HAPPY PONGAL.
-
12th January 2013, 05:50 PM
#2843
Senior Member
Seasoned Hubber
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய ரசிக நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வுறுகிறேன். இதில் இருக்கும் வாசகங்களையே என்னுடைய வாழ்த்தாக அளிக்கிறேன். அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்

ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 12th January 2013 at 05:53 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th January 2013, 08:54 PM
#2844
Senior Member
Seasoned Hubber
கலப்பையைச் சுமந்து கொண்டு சோறூட்டும் மாடுகளுடன் நடிகர் திலகம் பொங்கல் வாழ்த்தினைத் தெரிவிக்கிறாரோ...
முப்பரிமாணத்தில் வடிவமைப்பு. அதற்கான கண்ணாடி யணிந்து பார்க்கவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th January 2013, 09:33 AM
#2845
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கடந்த ஆண்டு 2012ல் நமது ntfans அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்
22.01.2012 - துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி. அரங்கு, சென்னை - 17.
01.04.2012 - பலே பாண்டியா திரைப்படம் - four frames அரங்கு, சென்னை
27.05.2012 - எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
22.07.2012 - படித்தால் மட்டும் போதுமா திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
01.09.2012 - கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
23.09.2012 - வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
21.10.2012 - நீலவானம் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
25.11.2012 - ஆலயமணி திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
இந்த அமைப்பு துவங்குவதற்கு உந்துசக்தியாயிருந்த நமது மய்யத்திற்கும், அடியேனுடைய கனவினை நனவாக்குதற்கு பெரிதும் முயற்சி செய்து செயல் வடிவமாக்கிய முரளி சாருக்கும் மற்றும் நமது மய்ய நண்பர்களும் இவ்வமைப்பின் துணைத் தலைவர் திரு மோகன் ராம், நிர்வாகக் குழு உறுப்பினர்களுமான திரு பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மய்ய நண்பர்கள் மேலும் பலர் இந்த அமைப்பில் சேர்ந்து பயனுற்று நடிகர் திலகத்தின் புகழினைப் பரப்புவதில் பங்கு கொள்ள அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
சந்திரசேகர் சார்,
சிவாஜி பேரவை தலைவர் என்று சொல்லி கொண்டு, இதில் உறுப்பினர் ஆகாமலிருந்தால் எப்படி?சீக்கிரமே உறுப்பினராகுங்கள்.
-
13th January 2013, 12:04 PM
#2846
Junior Member
Junior Hubber
கற்பனை உரையாடல்
பல்லவ நாட்டு அரசவை
பல்லவ மன்னன் - நடிகர் திலகம்
புலவர் - நடிகர் திலகம்
நாடக நடிகர் நடிகர் திலகம்
மூன்று வேடங்களில் நமது நடிகர் திலகம் .
மன்னன் ; என்ன புலவரே . உமது முகத்தில் இன்று சோகம் மிளிர்கிறது ?
புலவர் ; மன்னா நமது அரசவை நாடக நடிகரின் திறமையை பாராட்டி முகம் தெரியாத ஒருவர் அடிக்கடி தனது பெயரி மாற்றி ஓலை அனுப்புகிறார் .
மன்னன் ; என்ன அது ? யார் அவர் ? உடனே கண்டு பிடியுங்கள் .
புலவர் ; மன்னா .எனக்கு தெரிந்த வரையில் குங்கும நாயகி பெயரிலும் , முருகனின் பெயரிலும் ,வட மொழி பெயரிலும் , ராமனின் பெயரிலும் , பாராட்டு ஓலையும் , நக்கல் ஓலையும் , வில்லத்தனமான ஓலையும் அனுப்பி
கற்றவர் சபையில் வியப்பையும் ,அதிர்ச்சி களையும் தருகிறார் மன்னா .
நாடக நடிகர் ; மன்னரே .. புலவரே
பல்லவ நாடு வாழ்க
எனது தொழில் நடிப்பு .மக்களை மகிழ்விப்பது .
எனது நடிப்பை பற்றி வரும் ஓலைகள் பற்றி புலவர் கூறினார் .
பாவம் விட்டு விடுங்கள் மன்னா , நாடகத்தில் என்னுடன் இணயாக நடித்த யாமினி - வளர்மதி - மங்களா தேவி - பூமிகா - பாமாஸ்ரீ - கவிலலிதா - வேதா -அஞ்சலா .இவர்களில் சிலரை பலருக்கு பிடிக்கும் . பலருக்கு சிலரை பிடிக்கும் . விட்டி விடுங்கள் மன்னா .
புலவர் - எப்படி நடிப்புலக சக்கரவர்த்தி அவர்களே
உங்கள் நடிப்பென்ன .சிம்ம குரல் என்ன , யார் நடித்தாலும்
உங்களுக்கு இணை யார் ?
மன்னன் - புலவரே நீரே சொல்லும் . நமது நடிப்பு வேந்தருக்கு சரியான இணை யார் ?
புலவர் - மன்னா - உங்களுக்குமா இந்த சந்தேகம் ?
நாடக நடிகர் - புலவரே . சற்று முன் ஒரு ஓலை .எனக்கு வந்துள்ளது . எனது நடிப்பை பாராட்டி அந்நிய மண்ணில் இருந்து சரோஜா என்ற நடிகை என்னை பார்க்க வருவதாக
செய்தி .
மன்னன் ; புலவரே . திறமை எங்கிருந்தாலும் பாராட்ட வேண்டும் .பன்முகம் கொண்ட ஒருவரை எப்படி கண்டு பிடித்தீர்கள் ?
புலவர் , - எங்கே மன்னா . நான் கண்டு பிடித்தேன் , ஓலை அனுப்பியவரின் பல செய்திகளை வைத்தே நமது நாடக நடிகர் கண்டு பிடித்து விட்டார் .
நாடக நடிகர் ; மன்னரே - புலவரே
என்னிடமே நாடகமா . வைத்தேன் ஒரு பார்வை . கிடைத்தார் வசமாக . போனால் போகட்டும் மன்னா .
புலவர் ; எப்படியோ மன்னா - நமது நாட்டின் சொத்து
இந்த நாடக நடிகரின் உலகளாவிய புகழை தொடர்ந்து நாம் ஆராதனை செய்வோம் .
நாடக நடிகர் ; நன்றி மன்னரே - நன்றி புலவரே .
மன்னன் ; அடுத்த கேள்வி
பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா ?
புலவர்; மீண்டும் திருவிளையாடலா?
சுபம் .
-
13th January 2013, 01:59 PM
#2847
Senior Member
Seasoned Hubber
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
-
13th January 2013, 02:14 PM
#2848
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gopal,s.
சந்திரசேகர் சார்,
சிவாஜி பேரவை தலைவர் என்று சொல்லி கொண்டு, இதில் உறுப்பினர் ஆகாமலிருந்தால் எப்படி?சீக்கிரமே உறுப்பினராகுங்கள்.
டியர் கோபால் சார்,
தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளதால் என்னுடைய பதிலை அளிக்கிறேன்.
Ntfans அமைப்பின் (22.01.2012) துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி.அரங்கில் நடைபெற்றபோதே என்னுடைய உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சந்தா தொகையை கொடுக்க எத்தனித்தபோது, உறுப்பினர் படிவத்தை பரிசீலனை செய்து பின்னர் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதுசம்மந்தமாக 2, 3 முறை விசாரித்தும் ( இந்தத் திரியிலும் கேட்டிருக்கிறேன்). உரிய பதில் இல்லை. காரணம் தெரியவில்லை.
அந்த அமைப்பில் சேரக்கூடிய தகுதி எனக்கில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த அமைப்பில் இணைவதால் சிலருக்கு தர்மசங்கடம் நேரும் என்றால் விலகி இருந்து, வெளியிலிருந்து வாழ்த்துவது நல்லது என்று ஒதுங்கியிருக்கிறேன்.
எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
-
13th January 2013, 02:17 PM
#2849
Senior Member
Seasoned Hubber
டியர் முத்துராம் சார்,
திருவிளையாடல் - கற்பனை உரையாடல் அருமை.
-
13th January 2013, 02:26 PM
#2850
Junior Member
Newbie Hubber

Originally Posted by
KCSHEKAR
டியர் கோபால் சார்,
தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளதால் என்னுடைய பதிலை அளிக்கிறேன்.
Ntfans அமைப்பின் (22.01.2012) துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி.அரங்கில் நடைபெற்றபோதே என்னுடைய உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சந்தா தொகையை கொடுக்க எத்தனித்தபோது, உறுப்பினர் படிவத்தை பரிசீலனை செய்து பின்னர் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதுசம்மந்தமாக 2, 3 முறை விசாரித்தும் ( இந்தத் திரியிலும் கேட்டிருக்கிறேன்). உரிய பதில் இல்லை. காரணம் தெரியவில்லை.
அந்த அமைப்பில் சேரக்கூடிய தகுதி எனக்கில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த அமைப்பில் இணைவதால் சிலருக்கு தர்மசங்கடம் நேரும் என்றால் விலகி இருந்து, வெளியிலிருந்து வாழ்த்துவது நல்லது என்று ஒதுங்கியிருக்கிறேன்.
எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
நான் தெரிந்து கேட்பேனா சார்?தெரியாமல்தான் கேட்டேன். விளக்கத்திற்கு நன்றி.
Bookmarks