வினா : வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி ! மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
விடை : நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் மக்கள் மனதில் (கலை மற்றும் அரசியல் சேவை காரணமாக) நிலையாக, நீங்காத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம், தனது திரைப் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி தமிழ் திரை உலகின் புரட்சி நாயகனாக திகழ்ந்து, நற்போதனைகளை வழங்கி மக்களை நல்வழிப்படுத்தியது மட்டுமல்லாமல், பதவி வரும் போது பணிவும் வர வேண்டும், துணிவும் வர வேண்டும், பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் என்ற தனது பாடலின்படி எளிமையாக வாழ்ந்து, மக்களோடு மக்களாக கலந்து, வீரத்தின் விளை நிலமாய் வெற்றி உலா வந்து, இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று நினைக்க வைத்து, தமிழகத்தை ஆண்ட 10 ஆண்டுகளில் எந்த சொத்தையும் வாங்காமல் பொது நலம் கருதி மக்கள் நலன் ஒன்றையே, குறிக்கோளாக கொண்டு பொற்கால ஆட்சியை தந்த பொன் மனச் செம்மல் அவர்களின் ஆசியுடன் இத்திரியினில் எனது 100வது பதிவினை வெற்றிகரமாக பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லா புகழும் எங்கள் குல தெய்வமாம் இறைவன் எம்.ஜி. ஆர். அவர்களுக்கே - என்று கூறி,
என்னை உற்சாகப் படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வருகின்ற மங்காப் புகழ் மனிதப் புனிதரின் அன்பர்களாகிய -
திருவாளர்கள் :
பெங்களூர் வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், சென்னை ரூப் குமார், வேலூர் ராமமூர்த்தி, புதுவை கலியபெருமாள், மற்றும்
திருவாளர்கள் ஜெய்சங்கர், மாசானம், சைலேஷ் பாபு, tfm lover, ஆகியோருக்கும்,
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் அபிமானிகள் திருவாளர்கள் ராகவேந்திரா, பம்மல் சுவாமிநாதன், நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும்
எனது பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன் : புரட்சித் தலைவரின் புனிதப் பாசறையில் அணி வகுத்து நின்று என்றும் அவர் புகழ் பாடும் சௌ. செல்வகுமார்
Bookmarks