Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இது சம்பிரதாய வார்த்தைகள் அல்ல, இதயத்தின் அடித்தளத்திலிருந்து வருபவை. விழாவில் கலந்துகொள்ள முடியாத என்போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மானசீகமாக விழாவைத்தரிசிக்கச் செய்து விட்டீர்கள்.
'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றி விழாவைப்பற்றி மட்டுமே கிட்டத்தட்ட அறுபது பதிவுகள். அதுவே ஒரு சாதனை. அவற்றில் அடங்கியுள்ள பொக்கிஷங்கள்தான் எத்தனை எத்தனை.....
கர்னன் வெற்றி விழா நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு...
வி.ஐ.பி.க்களின் சிறப்பு உரை (காணொளியாக)...
ரசிகப்பிள்ளைகள் வெளியிட்ட குறும்பிரசுங்களின் அணிவகுப்பு...
கர்ணன் வெற்றிவிழா பற்றி எந்தெந்த இணைய தளங்களிலெல்லாம் செய்திகள், நிழற்படங்கள் வந்துள்ளனவோ அவற்றை தேடித்தேடி இங்கு கொண்டுவந்து குவித்த உழைப்பு... அவற்றின் இணைப்புகளைத்தந்ததன் மூலம் அனைவரின் சிரமங்களைக்குறைக்க நீங்கள் எடுத்துக்கொண்ட அளவுக்கதிகமான சிரமங்கள்....
வெற்றி விழாவன்று செய்தித்தாள்களின் அன்புள்ளங்கள் வெளியிட்ட விளம்பரங்கள்....
கர்ணன் விழா பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த செய்தித்தொகுப்புக்கள் மற்றும் நிழற்படங்கள்....
அப்பப்பா... பட்டியல் போடும் எனக்கே மூச்சு வாங்குகிறதே, இவற்றைத் தேடித்தேடிக்கொணர்ந்து, அனைத்தையும் ஸ்கேன் செய்து தளத்தில் பதிப்பதென்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை...!!!!!!!!!!!!!!!!.
கர்ணன் புரிந்த சாதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதனை, எங்கள் பம்மலார் படைத்திருப்பது. முந்தாநாள் மாலை நாங்கள் சென்னையில் இருந்த உணர்வை உண்டாக்கி விட்டீர்கள்.
""மவனே...., நீ ரசிகன்யா""