-
நான் சுவாசிக்கும் சிவாஜி! (10) - ஒய்.ஜி. மகேந்திரா!
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013,00:00 IST
எங்களது, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' நாடகத்தின், நூறாவது நாள் விழாவிற்கு, சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில், சேஷப்பா என்கிற சவடால் பேர்வழியாக, ஏ.ஆர்.எஸ்., நடித்திருப்பார். அதில் வரும் நகைச்சுவை, சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் இருவரையும் பார்க்கும் போதெல்லாம், 'டேய், அந்த ரிகார்டு ஜோக்கை, ஒரு தரம் சொல்லேன்...' என்று கேட்பார்.
அந்த, தமாசு இது தான்:
ஒரு பாகவதர், ஏ.ஆர்.எஸ்.,சிடம் (சேஷப்பா), கோவில் திருவிழாவில் பாடுவதற்கு சான்ஸ் கேட்பார்.
'இல்ல. நாங்க ரிகார்டு வைக்கப் போறோம்...'
'ரிகார்டு வைக்கிற இடத்தில், என்னை வைக்க கூடாதா?' என்று, பாகவதர் கேட்பார்.
'சீ...சீ அந்த இடத்தில உன்னை வைச்சா ஊசி கிழிச்சிடும்...'
சிவாஜிக்கு, ஒரு தனிச் சிறப்பு உண்டு. 'மாஸ்' என அழைக்கப்படும், எளிய ரசிகர்களும் சரி, 'கிளாஸ்' என்று கூறப்படும், மேல்தட்டு ரசிகர்களும் சரி, இந்த இரு வகையினரையும், அவரால், முழுமையாக கவர முடியும்.
சிவாஜி காலமான பின், 'பாரத் கலாச்சார்' அமைப்பு வெளியிட்ட, 2001ம் ஆண்டு மலரில், நான் குறிப்பிட்டது, நினைவுக்கு வருகிறது, 'பார்வதி தேவி, சிவாஜியை, கைலாயத்தில் பார்த்து, சிவபெருமானே வந்து விட்டார் என்று நினைப்பதாகவும், அந்த காட்சியை பரமசிவனே ரசிப்பது போலவும்' குறிப்பிட்டிருந்தேன்.
உண்மை தான். தேச பக்தர்களை, பாரதம் போற்றும் தலைவர்களை, எந்த அளவு அவர் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறாரோ, அந்த அளவு, புராண பாத்திரங்களில் சிவனாக, பெருமாளாக, நாரதராக இன்னும் எத்தனையோ சிவனடியராக, பெருமாள் பக்தராக நடித்து, நம்மை அசத்தி இருக்கிறார்.
இதே போல், சமுதாயத் தில் உயர் மட்டத்தில் இருக் கும் பல பாத்திரங்களை அவர் செய்திருப்பதால், உயர் மட்டத்தில் இருப் போருக்கும் அவரை பிடிக்கும். மும்பையில் நான் கண்கூடாக பார்த்த, சுவையான அனுபவத்தை, இங்கு குறிப்பிடுகிறேன்.
மும்பையில் உள்ள, ஷண்முகானந்தா சபா, அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய இருக்கைகள் கொண்ட, பெரிய அரங்கு. நாடகம் போட வரும் கலைஞர்களுக்கு, அங்கேயே தங்கிக் கொள்ளவும் வசதி உண்டு. ஷண்முகானந்தா ஹாலை உருவாக்கி, பம்பாய் நகர மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஒரு பிரபல தமிழர்.
அந்த அரங்கில், எங்கள், யு.ஏ.ஏ., குழுவின் நாடக விழா நடந்து கொண்டிருந்தது. அங்கு, பொதுவாக நாடகங்கள் இரவு, 8:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிலையில், எங்கள் அறையில், நாங்கள் இருந்த போது, ஒரு வட மாநில சிறுவன் வந்து, 'கோன் ஒய்.ஜி.,?' (யார் ஒய்.ஜி.,) என்று கேட்டான்.
'நான் தான்...' என்றேன்.
'கோயி சிவாஜி கணேசன் புலாதா ஹை...' (யாரோ சிவாஜி கணேசனாம்... டெலிபோனில் அழைக்கிறார்) என்றான்.
சிவாஜியிடமிருந்து போன் என்றதும், ஆடிப் போய் விட்டேன். யாரோ கிண்டல் செய்கின்றனர் என்று தான், முதலில் நினைத்தேன். தயக்கத்துடன் போனை எடுத்தால், கம்பீரமான குரலில், 'என்னடா பண்றே பம்பாயிலே...' என் றார் சிவாஜி.
'சார் நீங்களா...' என்றேன் தயக்கத்துடன்
'நீ, எங்கே போனாலும் மடக்கிட்டேன் பார்த்தாயா... இந்தியன் எக்ஸ்பிரஸ் ரங்க நாதன், இன்னிக்கு, உன் டிராமா இருக்குன்னு சொன்னான்...' என்றவர், கிண்டலாக, 'சென்னையில ஆடியன்சை கெடுத்தது போதாது என்று, பம்பாயிலும் கெடுக்க போயிட்டீயா...சரி டிராமா எட்டு மணிக்கு தானே... நான் லீலா பேலஸ்லிலே இருக்கேன். வந்து பார்த்துட்டு போ.... தனியாக வராதே. சோட்டாவையும் கூட அழைத்து வா...' என்றார். சோட்டா என்று, அவர் குறிப்பிட்டது, எங்கள் குழுவின் காமெடி நடிகர் சுப்புணியை. அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.
சிவாஜி கூப்பிட்டு இருக்கிறாரே என்று, அரக்க பரக்க சுப்புணி, நான், மற்றும் எங்க மானேஜர் கண்ணன் போன்றோர் ஆட்டோ பிடித்துக் கிளம்பினோம்.
ஏழு நட்சத்திர ஓட்டலின் பெரிய பிரமாண்டமான அறையில், (அப்போது அதுதான் பெரிய ஸ்டார் ஓட்டல்) சிம்மாசனம் போன்ற சோபாவில், சிவாஜி உட்கார்ந்திருந்தார்; அருகே, மற்றொரு இருக்கையில், கமலாம்மா. சிவாஜி உட்கார்ந்திருந்த சோபாவுக்கு அருகே, தரையில், கார்ப்பெட்டில், நன்றாக உடை அணிந்திருந்த ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ரங்கநாதனை தெரியுமென்பதால், அவருக்கு வணக்கம் சொன்னேன். அருகே இருந்த சோபாவில், எங்களை உட்கார சொன்னார் சிவாஜி.
தரையில் கார்ப்பெட்டில் அமர்ந்திருப்பவரை காட்டி, 'இவர் யார் தெரியுமா?' என்று, கேட்டார் சிவாஜி.
'தெரியலையே சார். உங்க ரசிகரோ...' என்று, கேட்டேன்.
'ரசிகர் தான். ஆனால், அதை விட, முக்கியமானது, இவர் தான் இந்த லீலா பேலஸ் ஓட்டலுக்கு, சொந்தக்காரர்...' என்றார்.
ஏழு நட்சத்திர ஓட்டல் அதிபர், தரையில் அமர்ந்திருக்க, நாங்கள் சோபாவில் அமர்ந்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்த, நானும், சுப்புணியும் எழுந்து நின்றோம். நான் ஓட்டல் உரிமையாளரான நாயரைப் பார்த்து, 'சோபாவிலே வந்து உட்காருங்க...' என்றேன்.
மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.
எங்கள் நாடக குழுவில், சிவாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர் சுப்புணி தான். டிராமா பார்க்க வருவதற்கு முன், 'அவன், இந்த டிராமாவிலே இருக்கானா?' என்று தான், முதலில் கேட்பார்.
என் மகள் மதுவந்தியின் திருமணத்திற்கு, சிவாஜி வந்த போது சுப்புணியும், நானும் அவரை வரவேற்றோம். அப்போது நாங்கள், 'டிவி'யில் செய்து கொண்டிருந்த, 'மிஸ்டர் ட்ரெயின் மிஸ்டர் ப்ரெயின்' தொடரில், சுப்புணி வில்லனாக நடித்திருப்பார். சிவாஜி அந்த, 'டிவி' தொடரை சுட்டிக் காட்டி, 'சுப்புணி... வில்லனாக, வக்கீல் பாத்திரத்தில் நன்றாக செய்திருக்கேடா...' என்றார். சுப்புணிக்கு சந்தோஷப்படுவதா, நெகிழ்வதா தெரியவில்லை. அடுத்து, உடனே, சிவாஜி தனக்கே உரித்தான பாணியில்,
'டேய் சுப்புணி... இப்படி ஒரு வக்கீல் ரோல், நீ பண்ணப் போறேன்னு தெரிந்திருந்தால், கவுரவம் படத்தில், பாரிஸ்டர் ரஜனிகாந்த் ரோலை, நான் பண்ணியிருக்க மாட்டேன்...' என்றார்.
அனைவரும் சிரித்தோம்; சிவாஜியும் சிரித்தார்.
பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும்; அது சிவாஜியிடம் தாராளமாக இருந்தது.
மிகவும் அதிகமான இசைக்கருவிகள் வைத்து, புதியபறவை படத்திற்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் ரிகார்டிங் செய்த பாடல், 'எங்கே நிம்மதி...'
அறுபதுக்கும் மேற்பட்ட வயலின்களை, இசைக் கலைஞர்கள் வாசித்தனர். ரிக்கார்டிங் தியேட்டரில் அனைவருக்கும் இடம் இல்லாமல், தியேட்டருக்கு வெளியே பிரத்யேக இடம் அமைத்து, அதில், பல இசைக்கலைஞர்களை உட்கார வைத்து ரிகார்டிங் நடத்தினர்.
அதேபோல, மிகவும் குறைந்த அளவு இசைக்கருவிகள் வைத்து, அதாவது, மொத்தமே மூன்று தான். புல்லாங்குழல், தபலா, எபெக்ட் தரும் கருவி ஆகிய மூன்றை மட்டும் வைத்து, ரிகார்டிங் செய்யப்பட்ட பாடல். 'தாழையாம்பூ முடிச்சு'...' என்ற பாடல். பாகப் பிரிவினை படத்தில் இடம் பெற்ற இப்பாடலை பாடுவதற்கு, ரிகார்டிங் தியேட்டருக்கு வந்த டி.எம்.சவுந்திரராஜன், இசைக்கருவிகள் அதிகம் இல்லாமல் இருந்ததை பார்த்து, 'இன்னிக்கு ரிகார்டிங் இல்லையா?' என்று கேட்டார். மொத்தமே, மூன்று இசைக்ருவிகள் தான் என்று அவருக்கு விளக்கிய போது, ஆச்சரியப்பட்டார். மிகவும் அதிகமான கலைஞர்கள் பங்கெடுத்த, 'எங்கே நிம்மதி' பாடலும், மிகக் குறைந்த இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்பட்ட, 'தாழயாம் பூ முடிச்சு' பாடலும், சூப்பர் ஹிட் பாடல்கள்.
சிவாஜியின் சிறந்த நடிப்பால், எம்.எஸ்.வி.,யின் சிறந்த இசையால், டி.எம்.சவுந்திரராஜனின் கம்பீர குரலால், இன்றும் அந்த பாடல்கள் நம் மனதில் நிற்கின்றன.
- தொடரும்.
எஸ்.ரஜத்
dinamalar
-
சரி.இப்படியே போனால் முடிவெங்கே? நடிகர்திலகத்திற்காக எதையும் இழக்க தயார் என்று எண்ணும் பக்தனாக ,மற்றவர் போல வசந்தமாளிகை லதா ரேஞ்சில் சுய கெளரவம் பார்த்து கொண்டிராமல், என் பணியை தொடர போகிறேன். ராஜ பார்ட் ரங்கதுரை ,நமது கூத்து நாடக கலை,பாய்ஸ் கம்பெனி தொடர்பானதால்,அவற்றை பற்றி விஸ்தாரமாக எழுதி விட்டு,ராஜபார்ட் ஆய்வுடன் என் 1973 பணி தொடங்கும்.
-
[QUOTE=sivaa;1094811]நான் சுவாசிக்கும் சிவாஜி! (10) - ஒய்.ஜி. மகேந்திரா!
மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.
எங்கள் நாடக குழுவில், சிவாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர் சுப்புணி தான். டிராமா பார்க்க வருவதற்கு முன், 'அவன், இந்த டிராமாவிலே இருக்கானா?' என்று தான், முதலில் கேட்பார்.
என் மகள் மதுவந்தியின் திருமணத்திற்கு, சிவாஜி வந்த போது சுப்புணியும், நானும் அவரை வரவேற்றோம். அப்போது நாங்கள், 'டிவி'யில் செய்து கொண்டிருந்த, 'மிஸ்டர் ட்ரெயின் மிஸ்டர் ப்ரெயின்' தொடரில், சுப்புணி வில்லனாக நடித்திருப்பார். சிவாஜி அந்த, 'டிவி' தொடரை சுட்டிக் காட்டி, 'சுப்புணி... வில்லனாக, வக்கீல் பாத்திரத்தில் நன்றாக செய்திருக்கேடா...' என்றார். சுப்புணிக்கு சந்தோஷப்படுவதா, நெகிழ்வதா தெரியவில்லை. அடுத்து, உடனே, சிவாஜி தனக்கே உரித்தான பாணியில்,
'டேய் சுப்புணி... இப்படி ஒரு வக்கீல் ரோல், நீ பண்ணப் போறேன்னு தெரிந்திருந்தால், கவுரவம் படத்தில், பாரிஸ்டர் ரஜனிகாந்த் ரோலை, நான் பண்ணியிருக்க மாட்டேன்...' என்றார்.
அனைவரும் சிரித்தோம்; சிவாஜியும் சிரித்தார்.
பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும்; அது சிவாஜியிடம் தாராளமாக இருந்தது.
ரசித்தேன்.
சிறிய நடிகர்களையும் பாராட்டும் பெரும் மனது படைத்தவர் நம் சிவாஜி
-
Quote:
Originally Posted by
Gopal,S.
பம்மலார் ,விரைவில் நமது நூலை கொண்டு வர ,நூறு நிச்சய முன் பதிவுகளாவது எதிர்பார்க்கிறார். நம் திரி பார்வையாளர்களில் பத்தில் ஒருவர் ,committed Fan என்று கணக்கிட்டாலும்,அந்த நூறு முற்று பெற்றிருக்க வேண்டுமே?செய்வீர்களா?அந்த தெய்வ தேவர் திருமகனுக்கு,தமிழகமே கடன் பட்டுள்ளதே?நம் ரசிகர்களாவது,அந்த கடனில் சிறு பகுதியை நேர்த்தியாக செலுத்தாலாமே?[/B][/SIZE]
என்னுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் உண்டு !
-
RARE PIC - NT WITH FORMER MINISTER RAJARAM
http://i40.tinypic.com/2u5x2jn.jpg
-
welcome to thread dear Ragavan
-
நமது நடிகர் திலகம் திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் திரு ராகவன் அவர்களை
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்
என்று சொல்லி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 1970-களின் முதல் பகுதி என்ற பொற்கால நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் சம்பவக் கோர்வையை வைத்து பதிவிட தொடங்கியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். இது போன்ற பகிர்தல்களையும் மேலும் எதிர்பார்க்கும்
அன்புடன்
-
உண்மை உணரும் நேரம் - 2
இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் வரலாறாக இருந்தாலும் சரி திரையுலக வரலாறாக இருந்தாலும் சரி, அதைப் பற்றிய உண்மை தகவல்கள் யாருமே எழுதுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தக் காலகட்டத்தைப் பற்றிய சரியான தகவல்கள் பெரும்பாலோனோருக்கு தெரியாது எனபது ஒன்று. சரியான தகவல்கள் தெரிந்த மிக குறைவான சிலரும் சில தனிப்பட்ட லாப நோக்கங்களுக்காகாவோ அல்லது சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோதான் அதை எழுதுகிறார்கள். நமது நடிகர் திலகத்தை பொறுத்தவரை மிக தவறான தகவல்கள்தான் பெரும்பான்மையாக எழுதப்படுகிறது. ஆகவே பழைய விஷயங்களைப் பற்றி பேசும்போது நமக்கு உண்மை நிலவரங்கள் மற்றவர்கள் மூலம் கிடைப்பதில்லை.
சில மாதங்களுக்கு முன் நமது ஹப்பிலேயே நடிகர் திலகம் பற்றிய ஒரு பதிவு வெளியாகியிருந்தது. ஒரு புத்தகத்தில் வெளியாகியிருக்கும் தகவல் என குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விஷயம் என்னவென்றால் நடிகர் திலகம் தன் பிறந்த நாளை திருச்சியில் கொண்டாடப் போவதாக செய்தி வந்ததாம். சிவாஜி படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கோபத்துடன் இருந்த எம்.ஆர்.ராதா அவர்கள் இதை படித்தவுடன் மிகுந்த ஆத்திரமுற்று இதற்கு எதிராக அறிக்கை விடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாராம். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் உடனே ராதாவின் தனிப்பட்ட ஒப்பனையாளர் கஜபதி அவர்களை அழைத்து அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று தான் சொன்னதாக ராதாவிடம் சொல்ல சொன்னாராம். அப்போது எம்.ஜி.ஆருக்கும் ராதாவிற்கும் நல்லுறவு இருந்த காரணத்தினால் ராதா திருச்சி விழாவை தாக்கி விட இருந்த அறிக்கையை வெளியிடவில்லையாம்.
நான் பல வருடங்களாக பல முறை கவனித்து வந்திருக்கும் நிகழ்வு என்னவென்றால் பழைய வரலாற்றை எழுதும் பலரும் உண்மை நிலவரம் தெரியாமல் எழுதுவதால், எழுதப்படும் விஷயம் சரியா? லாஜிக் இருக்கிறதா? காலப் பிரமாணம் என்று சொல்வார்களே அதன்படி நாம் எழுதும் விஷயம் ஒத்துப் போகிறதா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதி விடுகிறார்கள். சிலர் தங்கள் அபிமானத்துக்குரியவரை புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை அள்ளி விடுவார்கள்.
நாம் இனி மேற்சொன்ன விஷயத்திற்கு வருவோம். அதில் உள்ள லாஜிக் ஓட்டைகள், கால பிரமாண ஓட்டைகளை பார்ப்போம்.
சிவாஜி படங்களில் ராதாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இதை முதலில் எடுத்துக் கொள்வோம்.
எம்.ஆர்.ராதா அவர்கள் 1930-களின் இறுதியில் திரையுலகில் நுழைந்தார். சின்ன சின்ன வேடங்களே கிடைத்தால் மீண்டும் நாடக மேடைக்கே திரும்பி சென்ற அவர் மீண்டும் 1954-ல் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மூலமாக மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அதன் பிறகும் சில வருடங்கள் தேக்க நிலை. 1958-ல் வெளியான APN-ன் நல்ல இடத்து சம்பந்தம் படத்தின் மூலமாக ஒரு நிலையான இடத்தை பிடித்தார். 1959-ல் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் பாகப்பிரிவினை திரைப்படத்தில் இணைந்து நடித்தார். அன்றிலிருந்து அதாவது பாகப்பிரிவினை வெளியான 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி முதல் 1965-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று வெளியான சாந்தி திரைப்படம் வரை ஏராளமான சிவாஜி படங்களில் நடித்தார். சொல்லப்போனால் அவரது திரையுலக வாழ்க்கையிலே மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் அவருக்கு நடிகர் திலகத்தின் படங்கள் மூலமாகவே கிடைத்தன. பாகப்பிரிவினை,பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, இருவர் உள்ளம், புதிய பறவை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இனி 1965 ஏப்ரல் 22-க்கு பிறகு 1967 ஜனவரி 12-ந் தேதி வரை நடிகர் திலகம் நடித்து வெளி வந்த படங்கள் என்னவென்று பார்ப்போம்.
திருவிளையாடல் - 31-07-1965
நீல வானம் - 10-12-1965
மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26-01-1966
மகாகவி காளிதாஸ் - 19-08-1966
சரஸ்வதி சபதம் - 03-09-1966
செல்வம் - 11-11-1966
கந்தன் கருணை - 14-01-1967
நான் ஏன் 1967 ஜனவரி 12 வரை குறிப்பிட்டேன் என்பது அனைவருக்கும் புரியும். இந்தப் பட்டியலில் இருக்கும் படங்கள் 7. அவற்றில் மூன்று புராணப் படங்கள். அந்தக் காலத்தில் இந்த திராவிட புலிகள் தங்கள் கொள்கைப்படி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகவே திருவிளையாடல், சரஸ்வதி சபதம் மற்றும் கந்தன் கருணை படங்கள ruled out.[ஆனால் இந்த திராவிட புலி பசித்த போது KSG யின் தசாவதாரம் என்ற புராணப்பட புல்லை 1976-ல் தின்றது]. மீதி நான்கில் காளிதாஸ் படமும் mythology வகையில் படும் என்பது மட்டுமல்ல அதில் ராதாவிற்கு ஏற்ற வேடம் இருந்ததா என்பதை பார்த்தவர்களே சொல்லலாம். பாக்கி மூன்று சமூக படங்கள். நீலவானம், மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் செல்வம். இந்த மூன்றிலும் கூட ராதா அவர்கள் நடிக்கும்படியான வேடம் ஏதும் இல்லை என்பதுதானே உண்மை.
1967 ஜனவரி 12-ந் தேதி நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு பிறகு ராதா மருதுவமனையிலும் பின்னர் சிறைசாலையிலும் காலத்தை கழித்தார். ஒரு வாததிற்காக எடுத்துக் கொண்டால் கூட அதன் பின் வந்த நெஞ்சிருக்கும் வரை, பேசும் தெய்வம், தங்கை மற்றும் பாலாடை போன்ற படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை பரிசீலனை செய்தோம் என்றால் ராதாவிற்கேற்ற ரோல் இல்லை எனபது விளங்கும். உண்மை நிலைமை இப்படி இருக்க ராதாவிற்கு வாய்ப்பு கொடுப்பதை நடிகர் திலகம் தடுத்தார் எனபதே அபத்தமான குற்றசாட்டு எனபது தெளிவாகும். தான் நடித்த கட்டபொம்மன் படத்திற்கு போட்டியாக அதே சரித்திரத்தை வேறு படமாக எடுத்து கட்டபொம்மன் வெளியான திரையரங்குகளில் தான் சார்ந்திருந்த கட்சியினரை விட்டு குழப்பம் விளைவித்து கட்டபொம்மன் படத்தின் வெற்றியை தடுக்க நினைத்து தலை குப்புற விழுந்து தோல்வியை தழுவிய எஸ்.எஸ்.ராஜேந்திரனை கூட மன்னித்து தன படங்களில் வாய்ப்பு கொடுத்த "தெய்வப்பிறவி" சிவாஜியை யாரும் மறந்து விடவில்லை.நடிகர் திலகத்தை கடுமையாக விமர்சித்து எழுதியவரும் சிவகங்கை சீமை படத்தை தயாரித்தவருமான கண்ணதாசனும் சிவாஜியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். மாற்று முகாமிலிருந்த போது சிவாஜியை பல முறை திரையிலும் பேட்டிகளிலும் கிண்டலும் கேலியும் செய்த தேங்காய் அவரது கடைசி பத்து வருட வாழ்க்கையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தது நடிகர் திலகத்தினால்தான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இரண்டாவது அபத்தம் சிவாஜியின் பிறந்த நாள் விழா திருச்சியில் நடப்பதாக இருந்தது என்ற தகவல். வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாக்கள் நடைபெற ஆரம்பித்ததே 1970 அக்டோபர் 1-ந் தேதியிலிருந்துதான். அதிலும் திருச்சியில் பிறந்த நாள் விழா நடைபெற்றதேயில்லை. அங்கே நடைபெற்றது நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி வெளியான போது 1971 ஜூலை 10,11 தேதிகளில் 150-வது பட விழா கொண்டாடப்பட்டது.
அப்போது எம்.ஆர். ராதா எங்கே இருந்தார்? அந்த வரலாற்று குறிப்புக்கு வருவோம்.
1967 ஜனவரி 12-ந் தேதி நடந்த நிகழ்ச்சிக்காக ராதா மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கின் இறுதியில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார் ராதா. அங்கும் அது உறுதி செய்யப்படவே உச்சநீதி மன்றத்தை அணுகினார் ராதா. அந்த மேல் முறையீட்டில் அவரது தண்டனை 5 வருட காலமாக குறைக்கப்பட்டது. அதன்படி அவர் 1972-ம் ஆண்டு விடுதலையாக வேண்டும். ஆனால் 1971-ம் ஆண்டு மே மாதத்தில் நன்னடத்தை(?) காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று அன்றைய திமுக அரசாங்கம் அறிவித்தது.
கோபாலபுரத்தாரின் இந்த நடவடிக்கை ராமாவரத்தாருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில் 1972-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட பிளவிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது இங்கிருந்துதான். அந்த அரசியலுக்குள் நாம் நுழைய வேண்டாம். இதை இங்கே குறிப்பிட காரணமே எம்ஜிஆர் அவர்களுக்கும் எம்ஆர்ராதா அவர்களுக்கும் நல்லுறவு இல்லாமல் இருந்த காலம் என்பதை தெளிவுப்படுத்தவே.
மூன்றாவது அபத்தம் அல்லது உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். சிவாஜி வளர்ந்து வரும் நடிகர். அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள இது போன்ற விழாக்களை நடத்துக்கிறார்.அதை எதிர்த்தோ விமர்சித்தோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாராம். தமிழில் முதல் பேசும் படம் வெளியான 1931-ல் தொடங்கி அன்றைய 1971 ஜூலை வரை 40 வருட காலத்தில் எந்த நடிகனாலும் செய்ய முடியாத சாதனையாக முதல் படத்திலிருந்தே 150 படங்கள் வரை நாயகனாக நடித்து வெற்றி வெற்றி மேல் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திலகம் வளர்ந்து வரும் நடிகராம். எப்படி இருக்கிறது அளப்பு?
நான் சிவாஜி ரசிகன்தான். ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் இப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்பதுதான் என் கணிப்பு. அந்தளவிற்கு எதார்த்தம் தெரியாதவர் அல்ல அவர். அது மட்டுமல்லாமல் அவர் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்க லாஜிக்கான காரணமும் இருக்கிறது.
எம்.ஆர். ராதா, சிவாஜி விழாவை எதிர்த்து அறிக்கை வெளியிடுக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன நடக்கும்? ஆஹா ராதா சொல்லி விட்டார் ஆகவே விழா நடைபெற வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்திருப்பார்களா? இல்லை ரசிகர்கள் திருச்சிக்கு போகாமல் இருந்திருப்பார்களா? ஊர்வலம் நடக்காமல் இருந்து விடுமா? மேடையில் நடிகர் திலகம் தோன்றாமல் இருந்து விடுவாரா? இல்லை மாநாட்டில் பங்கெடுத்த அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் வராமல் இருந்திருக்கப் போகிறார்களா? இப்படி எதுவுமே நிற்காது என்பதை மற்றவர்களை விட நன்றாக தெரிந்த எம்ஜிஆர் எப்படி இப்படி ஒரு வாதத்தை முன்வைப்பார்?
1965 முதல் 1971 வரை மேற்சொன்ன விஷயங்கள் நடைபெற்றதை கோர்வையாக படிப்பவர்களுக்கு இந்த செய்தி எவ்வளவு பெரிய புருடா என்பது புரியும். விஷயம் இத்துடன் முடியவில்லை. இது ஒரு புத்தகத்தில் வந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இதை சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு தினமலர் வாரமலர் இதழில் எழுதியவர் எஸ்.விஜயன். முகாம் மாறி சென்ற விஜயன். இதழ் வெளியான அன்றே இதை படித்துவிட்டு ராதாரவி அவர்கள் விஜயனை தொடர்பு கொண்டு ஏன் இப்படி பொய்யான தகவல்களையெல்லாம் எழுதுகிறீர்கள் என கண்டிக்க, இதை எதிர்பார்க்காத விஜயன் நான் எழுதவில்லை. வாரமலர் ஆசிரியர் குழுதான் இதை இப்படி மாற்றி போட்டு விட்டார்கள் என்று சொல்ல, ராதாரவி உடனே வாரமலரை தொடர்பு கொண்டு கேட்க அவர்கள் நாங்கள் எதுவும் மாற்றவில்லை. விஜயன் எழுதியதைத்தான் பிரசுரித்திருக்கிறோம் என்று உண்மையை உடைத்து சொல்லி விட்டார்கள். ராதாரவி மீண்டும் விஜயனை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்கிறார். இவர் இப்படி எழுதியதோடு மட்டுமல்லாமல் தங்கள் மீதும் பழி போட்டதை சீரியஸாக எடுத்துக் கொண்ட வார மலர் அதன் பிறகு விஜயனிடமிருந்து கட்டுரைகள் வாங்குவதை நிறுத்தி விட்டது. வருடத்தில் மூன்று நான்கு முறை சிவாஜி பிறந்த நாள், நினைவு நாள், எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் தவறாமல் வாரமலரில் வந்துக் கொண்டிருந்த விஜயனின் கட்டுரை கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வராமல் இருப்பதன் காரணம் இதுதான்.
இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் 1965-67 காலகட்டத்திலும் சரி,1971 காலகட்டத்திலும் சரி லாஜிக் மற்றும் வரலாற்றின் chronological order அடிப்படையில் பார்த்தாலும் சரி அபத்தமான இந்த பொய் செய்தியை இது சரியான தகவலா? நடந்தவற்றைதான் இந்த புத்தகத்தில் எழுதியிருகிறார்களா என்பது பற்றியெல்லாம் சற்றும் யோசிக்காமல் ஒருவர் இங்கே பதிவு செய்கிறார் என்றால் அதற்கு காரணம் எனக்கு தெரிந்தவரை ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். நமக்கு பிடித்தவரை பற்றி தூக்கி எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு பிடிக்காதவரைப் பற்றி தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. உடனே copy paste பண்ணி பதிவிடு என்ற எண்ணம்தான் அது.
யார் இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நானாகவா எழுதினேன், இந்த புத்தகத்தில் வந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணம். மிக மிக வேதனையான போக்கு.
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
உண்மை உணரும் நேரம் - 2
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
டியர் முரளி சார்,
தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நடிகர்திலகத்தைப் பற்றி மட்டும்தான் இப்படி வரலாற்று உன்மைகள் மறைக்கப்பட்டு செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன என்பது வேதனையான விஷயம்.
தங்களைப்போன்றவர்களின் பதிவுகள் மூலம் வெளிச்சத்து வரும் இத்தகைய உண்மைகளை, காலப்போக்கில் கண்டிப்பாக அனைவருமே உணர்ந்துகொள்ளக்கூடிய நிலை அமையும் என்று நம்புவோம்.
-
-
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
உண்மை உணரும் நேரம் - 2
மூன்றாவது அபத்தம் அல்லது உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். சிவாஜி வளர்ந்து வரும் நடிகர். அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள இது போன்ற விழாக்களை நடத்துக்கிறார்.அதை எதிர்த்தோ விமர்சித்தோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாராம். தமிழில் முதல் பேசும் படம் வெளியான 1931-ல் தொடங்கி அன்றைய 1971 ஜூலை வரை 40 வருட காலத்தில் எந்த நடிகனாலும் செய்ய முடியாத சாதனையாக முதல் படத்திலிருந்தே 150 படங்கள் வரை நாயகனாக நடித்து வெற்றி வெற்றி மேல் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திலகம் வளர்ந்து வரும் நடிகராம். எப்படி இருக்கிறது அளப்பு?
நான் சிவாஜி ரசிகன்தான். ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் இப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்பதுதான் என் கணிப்பு. அந்தளவிற்கு எதார்த்தம் தெரியாதவர் அல்ல அவர். அது மட்டுமல்லாமல் அவர் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்க லாஜிக்கான காரணமும் இருக்கிறது.
யார் இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நானாகவா எழுதினேன், இந்த புத்தகத்தில் வந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணம். மிக மிக வேதனையான போக்கு.
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
திரு. முரளி அவர்களே,
மிகவும் அற்புதமாக, உண்மையை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.
இந்த அபத்தத்தை நானும் நேற்று எங்கோ படித்தேன். வழக்கம் போல கோபமடைந்தேன். முக்கியமாக, திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்தை "அவர் வளர்ந்து வரும் நடிகர்" என்று - அதுவும் - அறுபதுகளில்! முதல் படத்திலேயே உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தவரை!! அடக்க முடியாமல் சிரிப்பும் வந்தது - வரலாறு தெரியாதவர்களை நினைத்து!!! மக்கள் திலகம் "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்று பாடினார் (வாலி மூலமாக) கூடவே, மனம் போன போக்கிலே மனிதன் பிதற்றலாமா என்றும் பாடியிருக்கலாம்!
இதை எழுதுவதற்கு நேரம் இல்லாத போதும், ஒரு முக்கியமான அலுவல் மீட்டிங்குக்கு இடையே வந்து எழுதுகிறேன். உங்களின் அற்புத எழுத்தாற்றலையும், உடனே இந்த அபத்தத்திற்கு ஒரு மறுப்பு எழுதி விட வேண்டும் என்ற உங்களது அர்ப்பணிப்பையும் கோபத்தையும் பார்த்து!
Hats Off!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
உண்மை உணரும் நேரம் - 2
இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் வரலாறாக
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
இது தான் நெற்றி அடி!
ஆஹா தகவல் திலகம் பதிவை படித்து நாள்கள பல ஆகிவிட்டனவே.
நம்முடைய பதிவுகளை, நம் சிவாஜியின் பெருமையை பறை சற்றும் வகையில் இன்றைய கல கட்டத்துக்கு ஏற்றபடி,
ஒரு டிவி சேனல் அமைய வேண்டும்.
-
Dear Mr. Chandra Sekhar,
We do not have words to praise and show our (every NT fan too) gratitude.
I am sure, you will succeed.
Regards,
R. Parthasarathy
-
முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர் இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் .
Ravi
:smile2::smokesmile:
-
Kc சார் - உங்கள் முயற்சி அபாரம் - இதற்கு உரிய கூலி நமக்கு கிடைக்காமல் போகாது !
-
Quote:
Originally Posted by
g94127302
முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர் இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் .
Ravi
:smile2::smokesmile:
murali sir has come out with a very big bang of facts of yesteryears in a chronogical order for any lay man also understand about the great actor NT in a simple way.go ahead sir every and now and then so that we can establish the TRUTH ALWAYS,
had we have a channel we could do better, sankara has given a wise suggestion
at right time.
-
Dear Murali Sir,I really appreciate you for the efforts in establishing the truth.There are lot of fans like me,who have high regards for people like you.The hard-work you put to establish things cannot be explained in words.Why these people give wrong information/ For their survival,better they can do some other cheap profession.
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
உண்மை உணரும் நேரம் - 2
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
Dear முரளி சார்!
அற்புதமான இந்த ஆவணப்பதிவிற்கு நன்றிகள் கோடி.பிய்த்து உதறிவிட்டீர்கள்.
தலைவர் எங்கு வளர்ந்தார்.?என்ன முட்டாள்தனமான பேச்சு?
உலக கலைஞர்களில் வளராத ஒரே கலைஞர் நம் தலைவர்தான்.
17/10/1952 மதியம் மூன்றுமணிக்கு அவர் ஒரு வாமனர்.
பகல் கட்சி முடிந்தது.
அவர் விஸ்வரூபம் எடுத்து விட்டார், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விட்டார்.
அப்புறம் எங்கே அய்யா வளர்வது.?
கம்பர் கூற்றின்படி, ரசிகர்கள்,
எடுத்தது கண்டனர்
இற்றது கேட்டனர்.
அவ்வளவுதான் எல்லாம் ஓவர்!
The Big Bang Event of Film world had taken place.
தமிழர்களாகிய நாம்தான் இன்னும் நிறைய வளர வேண்டும்.
-
Murali Sir,
Hats Off -you have stressed precisely the point - Bang on false statements
KC Sekar Sir,
I am at loss for words - in one word your gratitude towards NT will give desired results
-
-
-
trivandrum International Film Festival
-
திரு முரளி சார்,
பொய்யர்களின் முகமூடியை கிழித்து உண்மையை எல்லோரும் உணரும்படி ஆணித்தரமாக நிரூபித்துவிட்டீர்கள் ,நன்றி
-
நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில சிவாஜி மன்றம் சார்பில் பெங்களூர் டவுன்ஹால் முன்பாக 12-12-13 அன்று காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
-
-
-
எனது உண்மை உணரும் நேரம் பதிவை பாராட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி! நடிகர் திலகம் பற்றிய தவறான தகவல்களோ, வரலாற்றுப் பிழையான செய்திகள் வரும்போது அதை சரியான ஆதாரங்களோடு இது போல் எதிர்கொள்வோம்.
அன்புடன்
-
-
-
-
-
இன்றைய துக்ளக் இதழில் கேள்வி-பதில் பகுதியில் நடிகர் திலகத்தின் சிலை விவகாரம் பற்றிய சோ அவர்களின் கருத்து :-
சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
கே: சிவாஜி சிலை விவகாரத்தில் தங்கள் கருத்து என்ன?
ப: இந்த ஒரு சிலைதான் போக்குவரத்துக்கு இடைஞ்சல் போல இதை அகற்ற வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள எல்லா சிலைகளையும் அகற்றுகிறோம் என்று ஒரு பட்டியல் போட்டு, அதில் சிவாஜி சிலையையும் சேர்த்தால் அதில் தவறு இருக்காது. மாறாக இந்த ஒரு சிலைதான் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பது மாதிரி இதை அகற்ற முற்படுவது சரியல்ல.
-
திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.
உங்கள் கட்டுரையின் உண்மைத்தன்மை அதனுடன் தாங்கள் அளித்துள்ள விளக்கங்கள் ஆதாரங்கள் போற்றுதலுக்குறியது. இருந்தாலும் இந்தக் கலியுகத்தின் இயல்புப்படி வீணர்களின் வாய்ச்சொல்லும் அவர்களின் தவறான கூற்றை நம்புவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த யுகத்தின் சாபக்கேடு நல்லவர்களுக்கும் அவர்கள் தம் செயல்களுக்கும் சரியான அங்கிகாரம் கிடைப்பது கிடையாது.
பொய்யானவர்களும் பித்தலாட்டக்காரர்களும்தான் இந்த உலகத்தின் தற்போதைய நாணயஸ்தர்கள்.
-
விகடன் பொக்கிஷத்தில் வந்த தலைவரின் பேட்டிக்கு கமெண்ட்ஸ் ,
COMMENT(S): 7
சிவாஜி ஒரு சகாப்தம். சரித்திரம்
ஒரு கொம்பனும் மறுக்க முடியாது
kattalai
என்ன இருந்தாலும் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்... சிவாஜி படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசித்த பரவசமான நாட்கள் அவை... இன்னும் தேடிப்பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன்... அழியா புகழ் பெற்றவர்...
அசோகன், சிங்கப்பூர்
ஓம் ஸ்ரீ முருகன் துணை
"நான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தை முழுமையாகக் காட்ட இந்த இரு பாத்திரங்களிலும் நான் செவ்வனே நடித்திருந்தால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.''
இந்த குரு பக்தி வேண்டும் அனைவருக்கும் வாழ்வில் முன்னேறுவதற்கு
நன்றி! வாழ்க வளமுடன்
Manikkavel
அப்படிப்பட்ட பெரும் புகழும் உள்ள மனிதரை இன்று காக்கைகள் எச்சில் படுத்துகின்றன.
சேகர்
'கப்பலோட்டிய தமிழன்’
அன்று வ.உ.சிதம்பரம் பிள்ளையை நடுத்தெருவில் நிறுத்திய தமிழர்களை ஒரு நிமிடம் சிந்தனையில் நிறுத்தியிருந்தால் இயக்குனர் இந்தப்படத்தை எடுத்திருக்க மாட்டார்.
சிதம்பரம் பிள்ளையின் தமிழ், கனிவான பேச்சு, நிதானம் அனைத்தையும் தத்ரூபமாக சிவாஜி வெளிப்படுத்திய படம். இருந்தென்ன புண்ணியம், அவர் பிறந்தது தமிழகத்தில் அல்லவா!
Crap
நிறையா பெரு இவர ரொம்ப ஒவ்வார் ஆக்டிங் பண்றாருன்னு சொல்றாங்க. தேவர் மகன் படத்துல நல்ல பண்ணிருந்தாரு.
dsad
மறைந்த திரு.சிவாஜி கணேசனை பற்றி பலரும் விமரிசித்து இருக்கிறார்கள். ஆனால் அவர் எடுத்துக்கொண்ட பாத்திரங்களின் வித்தியாச அளவு மிகப்பெரியது (Range).
இன்றுவரை உலக அளவில் எந்த நடிகரும் முயற்சிக்க துணியாத வீச்சு அது. சில சோதனைகளில் அவர் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் முயற்சி செய்யவில்லை என்று யாரும் கூற இயலாது.
வயது (அப்பர்); இமேஜ் (அந்தநாள், திரும்பிப்பார்); இப்படி எந்த கட்டுப்பாடும் வைத்துக்கொள்ளாமல் அனைத்து பாத்திரங்களையும் செய்த ஒரே நடிகர் சினிமா சரித்திரத்தில் அவர் ஒருவர்தான்.
BALA.
-
நல்லதே நடக்கும்!!
நாளை ஒரு இனிய நாளாக இருக்கட்டும் ! காக்கைகள் எச்சிபடுத்தினாலும், அவைகளும் NT யின் ரசிகர்களே - நாளை ஒரு நல்ல உழைப்புக்கும், பல நல்ல உள்ளங்களின் ப்ராத்தனைகளுக்கும் , KC sirன் அயராத முயற்சிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் நாள் - நல்லதையே நினைப்போம் - நல்லதே நடக்கும்!!
:smile2::smokesmile:
-
இந்ததிரியில் பல புதிய நண்பர்கள் வந்தவிதம் உள்ளனர் - மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது - கூடவே ஒரு சிறிய இனம் புரியாத பயமும் வருகின்றது - புதிய நண்பர்கள் தொடர்ந்து பங்கு கொள்ளவேண்டும் - திரியை விட்டு விலக கூடாது என்பதே. விலகிசெல்பவர்கலை தங்க வைக்க நாம் இன்னும் பாடு பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. ஒருவர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ , வருத்தமோ இருந்தால் , நாம் ஏன் தனிப்பட்ட முறையில் PM அனுப்பக்கூடாது ? திரியில் ஏன் நம் கோபத்தையோ , வருத்ததையோ பதிவிட வேண்டும் ? ஒருவரின்
பதிவு நன்றாக இருந்தால் அதை கண்டிப்பாக உற்சாக படுத்தவேண்டும் - அதில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து சொன்னால் , அவர் காணாமல் போக நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த திரி சமீப காலத்தில் நன்றாக பதிவிடும் பல நல்ல உள்ளங்களை இழந்துள்ளது . இனியும் அப்படி நடக்க விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் - இப்போது நம் கவனம் முழுவதும் சிலை அகற்ற படாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் உள்ளது - ஒப்புகொள்கிறேன் - அதே சமயம் சிலைக்கு உள்ள அத்தனை சக்தியும் , உயர்வும், பெருமையும் இந்த திரிக்கு உள்ளது என்று ஆணித்தரமாக நம்புவர்களில் நானும் ஒருவன். இந்த திரியையும் சிலைபோல பாதுகாத்து இன்னும் உயரே எடுத்து செல்லவேண்டும் என்ற ஆசையினால் இதை எழுதுகிறேன் .
அன்புடன் ரவி
:):smokesmile:
-
Mr Muali Sir,
Your article really a nice one. It is very common to write false information
on NT wherever possible. But due to you and other's efforts in giving a
correct picutre on NT will be a eye opener for those people.
-
டியர் முரளி சார்
தங்களுடய பதிவு எனக்கு படித்ததிலிருந்து ஒரு வித ப்தட்டத்துடனேயே இருக்கிறேன். இப்படி நடிகர் திலகத்தை பற்றி தவறாக பிரச்சாரம் செய்வதால் அவர்களுக்கு கிடைப்பது என்ன ? தங்களைப் போல ரசிக வல்லுனர்களை நமது நடிகர் திலகம் பெற்றிருப்பதனால் இது போன்றபொய் பித்தலாட்டங்கள் அவ்வப்போது தவிடுபொடியாவது நிஜம். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
dear kc sir thanks for your great effort
யாருக்கும் செய்நன்றி மறவாதவ்ரும் கடுகளவும் பிறருக்கு துரோகம் செய்யாதவரும் தன் தொழிலை நேர்மையாக செய்து கலைசேவை செய்த ஒப்பற்ற நம் ந்டிகர் திலகத்தின் சிலை அகற்றாமல் அதே இடத்தில் இடம் பெறச்செய்ய நீதி தேவதை தான் அருள் புரிய வேண்டும்.
இத்தனை நாட்கள் ரசிகர்கள் துணையோடு பல போராட்டங்களை திறம்பட நடத்தி அரசுக்கு அறிவுத்திய செயல் வீரர் திரு.சந்திரசேகர் அவர்களின் அறப்போருக்கு நல்ல நீதி கிடைக்க இறைவனை வேண்டுவோம்
-
Quote:
Originally Posted by
g94127302
இந்ததிரியில் பல புதிய நண்பர்கள் வந்தவிதம் உள்ளனர் - மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது - கூடவே ஒரு சிறிய இனம் புரியாத பயமும் வருகின்றது - புதிய நண்பர்கள் தொடர்ந்து பங்கு கொள்ளவேண்டும் - திரியை விட்டு விலக கூடாது என்பதே. விலகிசெல்பவர்கலை தங்க வைக்க நாம் இன்னும் பாடு பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. ஒருவர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ , வருத்தமோ இருந்தால் , நாம் ஏன் தனிப்பட்ட முறையில் pm அனுப்பக்கூடாது ? திரியில் ஏன் நம் கோபத்தையோ , வருத்ததையோ பதிவிட வேண்டும் ? ஒருவரின்
பதிவு நன்றாக இருந்தால் அதை கண்டிப்பாக உற்சாக படுத்தவேண்டும் - அதில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து சொன்னால் , அவர் காணாமல் போக நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த திரி சமீப காலத்தில் நன்றாக பதிவிடும் பல நல்ல உள்ளங்களை இழந்துள்ளது . இனியும் அப்படி நடக்க விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் - இப்போது நம் கவனம் முழுவதும் சிலை அகற்ற படாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் உள்ளது - ஒப்புகொள்கிறேன் - அதே சமயம் சிலைக்கு உள்ள அத்தனை சக்தியும் , உயர்வும், பெருமையும் இந்த திரிக்கு உள்ளது என்று ஆணித்தரமாக நம்புவர்களில் நானும் ஒருவன். இந்த திரியையும் சிலைபோல பாதுகாத்து இன்னும் உயரே எடுத்து செல்லவேண்டும் என்ற ஆசையினால் இதை எழுதுகிறேன் .
அன்புடன் ரவி
:):smokesmile:
exactly.