Originally Posted by
Gopal,S.
முரளி,
பல பல நல்ல அம்சங்களை தன்னுள் அடக்கிய பழனி ,trend மாறி கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் ,எதிர்பார்த்த வெற்றியை பெறாவிடினும் , ஒரு குறிப்பிட தக்க நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. நடிகர்திலகம் வாழ்ந்திருப்பார்.
நடிகர்திலகம் எப்போதுமே தமது படங்களில் கவிஞரோ,மற்ற நடிகர்களோ ,வேற்று agenda கொண்டு ஏதாவது செய்தால் குறுக்கிட்டதேயில்லை.கதையின் போக்கை சிதைக்காமல் இருந்தால். எஸ்.எஸ்.ஆர் பேசும் போது குறிப்பிட்ட ஒன்று. உள்ளத்துக்குள்ளே பாடல் ,நடிகர்திலகம் ஆலோசனை படி சேர்த்ததாம்.(படத்தில் relaxation அம்சங்கள் குறைவானதால்.)எனக்கு மிக பிடித்த பாடல்.
நன்றி முரளி.