ராகவேந்தர் சார்
உங்கள் மீது எனக்கு சிறு கோபம் உள்ளது உண்மைதான் மறைப்பதற்கில்லை. ஒரு நல்ல விஷயத்திற்காக அதுவும் உண்மை விஷயம் பொய்யாக திரிக்கபடுகையில் உங்களை போன்ற நடிகர் திலகம் அவர்களுடன் மிக மிக நெருங்கி பழகியவர் தான் ஆதரவு தரவேண்டும்.
நீங்களே யோசித்து பாருங்கள், எனக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவேனும் நீங்கள் செய்திருப்பீர்களா. உங்களை போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்ப்பது தவறா சொல்லுங்கள் சார் ?
Rks கூறும் தகவல்கள் சரியே...அல்லது...rks கூறும் தகவல் தவறு..இப்படி ஏதாவது கூட நீங்கள் பதில் எழுதியிருக்கலாமே. பம்மளார் அவர்கள் சுத்தமாக எதுவுமே எழுத வருவதில்லை அவர் தினசரி மையம் படித்தாலும் கூட...அவருக்கு வேலை பளு இருந்தாலும் இது போன்ற சந்தர்பங்களில் மட்டுமாவது வரமாட்டாரா..வந்து உண்மையை உரைக்க மாட்டாரா என்ற ஏக்கம் எனக்கு இருக்காதா ? அல்லது நம் மற்ற ரசிகர்களுக்கு இருக்காதா ? நீங்களாவது தகவலை அவரிடம் கேட்டு பதிவு செய்யலாமே என்று உங்களிடம் ஒரு சிறு கோபம் இருந்தது உண்மைதான்.
உங்களை தாழ்த்த வேண்டிய எண்ணம் என் தாயின் மீது ஆணையாக இல்லை. எல்லோருக்கும் அவர் அவரின் தாய் எவ்வளவு உயர்வானவர் என்பது உங்களுக்கு தெரியும். அந்த தாய் மீது ஆணையிட்டு கூறுகிறேன். உங்கள் மீது கோபம் சிறிது இருந்ததே தவிர உங்களை தாழ்த்தும் எண்ணம் எனக்கு சிறிதும் கிடையாது சார் !
இதை நான் தனியாக மினஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பி இருக்க முடியும். அப்படி செய்யாமல் இங்கு பகிரங்கமாக பதிவு செய்வதன் காரணம் என் மீதி தவறு உள்ளது என்பதால் மேலும் நான் பதிவு செய்தது இங்கு என்பதால். எனக்கு EGO கிடையாது ஆகவே தான் இந்த பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் !
மக்கள் திலகம் திரியிலும் அப்படிதான் இதுவரை இருந்துள்ளேன். என்மீது தவறு இருப்பின் நிச்சயம் நான் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோர தயங்கியதே இல்லை. அந்த பக்தர்களும் அதை அறிவார்கள் !
உங்கள் மனம் வேதனை அடைந்துள்ளதை புரிந்து கொள்கிறேன். தங்கள் காலில் நான் சாஷ்டாங்கமாக
நமஸ்காரம் செய்வதாக நினைத்துகொள்ளுங்கள் , நினைத்து , மூத்த சஹோதரர் நிலையில் இருந்து என்னை மன்னித்து விடுங்கள்..ப்ளீஸ் !
தங்கள் மனம் வருத்தப்ப்படுமாறு இனி நான் எழுதமாட்டேன். I promise on my mother !
rks