Oh ! mOhana senthaamaraiyE - Magudam Kaatha Mangai -1957
ஆன்லைனில் கேட்டு ரசித்தவற்றுள் ஒன்று
ஓஹ் ! மோஹன செந்தாமரை ...மகுடம் காத்த மங்கை 1957
https://www.youtube.com/watch?v=6r-V3x5uR14
இந்தியில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட பிரபலமான திரைப் பாடல் *
* வார்த்தைப் பிரயோகமும் வரிகளும் அதை உணர்த்தினாலும்
ஜிக்கி + T .A மோதியின் வசீகரக் குரலும் O . P நாயரின் மெல்லிய இசையும்
எமை ஈர்ப்பதில் ஆச்சர்யமில்லை
(Qaidi 1957 - Yun Muskurake Samne Aaya Na Kijiye -Mohammad Rafi & Asha Bhonsle)
https://www.youtube.com/watch?v=hnNR5lZ7JFw
இதே திரைப்படத்தின் பிரபலமாகாத வேறு சில பாடல்களும் என்னிடம் உள்ளன
அதில் பத்மினி நடித்து பார்த்த எண்ணம்
Regards
Uthami Petra Rathinam -T Chalapthi Rao
முதன்முறையாக யூடியூப்பில் அன்பர் ஒருவர்
உத்தமி பெற்ற ரத்தினம் ( 1959 ) படப்பாடல்களை தந்திருக்கின்றார்
T சலபதிராவின் மென்மையான இசையில்
அந்நாளில் மிகவும் பிரபலமான பாடல்கள்
( இணைய தளங்களில் கே வி எம் என்றெல்லாம் கூட போட்டு இருக்கிறார்கள் )
.. பூவின்றி மணமேது பூமியின் மீது ...
டி எம் எஸ் கெஞ்சுகிற தொனியில் குரல் கொஞ்சம் கம்மி பாடியிருக்கிறார்
பி லீலாவின் வசீகர இனிமை !
http://www.youtube.com/watch?v=Ai2mZvAegyM
தேடிடுதே வானமிங்கே ...கொஞ்சம் இன்பமாக ஏக்கத்தோடு எதிர்பார்த்து பி சுஷீலாவும்
http://www.youtube.com/watch?v=qfCcG0VsF10
தேடித் துவண்டு பி பி ஸ்ரீநிவாசும் ..
http://www.youtube.com/watch?v=GjK8twYITOQ
திரையில் கே பாலாஜியோடு மாலினி
என் பங்குக்கு 1959 இன் விளம்பரத்தை சேர்த்து விடுகிறேன்
விரைவில் வருகிறது !
சாண்டோ M M A சின்னப்பா தேவர் அளிக்கும்
அமரா புரொடக்க்ஷன்ஸ்
உத்தமி பெற்ற ரத்தினம்
கதை வசனம் ஆருர்தாஸ் கதை வசனம்
சங்கீதம் T சலபதிராவ்
ஒளிப்பதிவு C V மூர்த்தி
தயாரிப்பு E ராதாகிருஷ்ணன்
டைரக்க்ஷன் M A திருமுகம்
http://i871.photobucket.com/albums/a...UPRathinam.jpg
Regards
Sengamalatheevu 1962 -KVM - Trichy Thyagarajan -1962
Quote:
Originally Posted by
madhu
Wow.. thanks TFML... arumaiyana paadalgaL..
adhai ketka ponappao indha paattu kidaichadhu..
pEsiyadhu naanillai kangaLthaane..
http://youtu.be/W_NSv1Pzwc8
இன்னும் கே வி மகாதேவன் திருச்சி தியாகராஜன் கூட்டணியில் வெளிவந்த செங்கமலத்தீவு 1962 பாடல்கள்
http://i871.photobucket.com/albums/a.../sengamala.jpg
பேசியது நானில்லை கண்கள் தானே ..எம் எஸ் ராஜேஸ்வரியின் மழலைக் குரலில்
கண்களாலே பேசி உணர்ச்சியைக் காட்டி நடிக்க வேண்டும் என்று ராஜஸ்ரீக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள்
அவர் கண்ணை சிமிட்டி சிமிட்டிக் காட்டுகிறார்
இதுவே E V சரோஜாவாக இருந்திருந்தால் ஒரு வழி பண்ணியிருப்பார் !
(ராஜஸ்ரீ நெற்றியிலே நங்கூர முறுக்கு சுற்றியிருக்கிறார்கள் )
டி எம் எஸ் குரலில் மிகவும் பிரபலமான சிந்தித்தால் சிரிப்பு வரும்..
திறமை + தீர்க்கமான பார்வையுடன் கூடிய கம்பீரம் இருந்தும் கூட
அதிக வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட C L ஆனந்தனுக்காக
http://www.youtube.com/watch?v=IfTieCApYnA&feature=plcp
வழக்கமாக மொட்டை மாடி rocking chair இல் அமர்ந்து கொண்டு
தென்றலில் ஆடும் காகிதப் பூக்களுக்கு நடுவே புன்னகை மாறாமல்
பகல் கனவு காணும் C Lஆனந்தனுக்கு
வித்தியாசமான பாத்திரம் நடையுடை பாத்திரம் போல் தெரிகிறது
அவரது மானரிஸம் நன்றாகவும் இருக்கிறது
ஆராய்ந்து பார்த்ததில் இலங்கை வானொலியில் அதிகம் ஒலிபரப்பாகிய
தத்துவப் பாடல்களில் ஒன்று எனவும் தெரிந்தது
ஆச்சர்யமில்லை ,அருமையான கருத்துக்கள் !
எத்தனை டூயட்டுகள் கள்ளபாட் நடராஜனுக்கு வாய்த்திருக்கும் ?
ஆனால் இதுபோல் காதல் ரஸத்தோடு மென்மையான பி பி ஸ்ரீநிவாசும் எல் ஆர் ஈஸ்வரியும்
சேர்ந்து பாடுவது போல் அமைந்திருக்க வாய்ப்பில்லை
http://www.youtube.com/watch?v=kwnWPA8AT28&feature=plcp
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதை பறித்தாய் எங்கே வைத்தாய் ..?
மலர் போல என் மனதை பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடு நெருப்பில் எறிந்தாயே என்று
பிந்நாளில் வாலியும் ஆதங்கப் பட்டதுண்டு ..
நல்ல வேளை காதிலே உங்கள் செருகவில்லை என்று சந்தோஷப்படுங்கள்
அழகான புன்சிரிப்பு கள்ளபாட் நடராஜனுக்கு
கூட ஆடுவது அவழுக்கென்ன அழகிய முகம் ....
பழமுதிர்ச் சோலையிலே ..பார்த்தவன் வந்தானடி நடிகை தானே ?
ஆரம்ப காலங்களில் எஸ் ஜானகிக்கு மிக இனிமையான பாடல்களைத் தந்ததில்
அவரது குரலின் இனிய மென்மை நிறைந்த பெண்மையின் தன்மையை
மிக நளினமாக வெளிக்கொணர்ந்ததில்
கே வி எம் மகாதேவனுக்கு மிகப்பெரும் பங்குண்டு
அந்த வகையில் C L ஆனந்தன் ராஜஸ்ரீ ஜோடிக்காக ..
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன் பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
டி எம் எஸ்ஸுடன் எஸ் ஜானகி பாடிய என்ற இந்தப் பாடலும்
அவரது பழைய பாடல்களின் இனிமைக்கு ஓர் உதாரணமாகிறது
http://www.youtube.com/watch?v=6tQNQVOCQVM
Regards