படம்லாம் முடிச்சாச்சு..ரீரெகார்டிங் எல்லாம் முடிச்சாச்சு..ஏற்கெனவே ட்ராமாவா சக்ஸஸ் ஃபுல்லா ஒடினது தான்..ப்ரிவ்யூ பார்க்கற்ச்சே
நல்லாத் தான் இருக்கு
மாமல்ல புரத்துல ஒரு பாட்டு, செட்ல ஒரு பாட்டு, ஒரு டான்ஸ்ட்ராமா.. எல்லாம் இருக்கு. ஹீரோன்னு ஒரு ஆள் இருந்தாலும், காமெடியன் தான் ஹீரோ
சூப்பரா நடிச்சுருக்கார்.. இருந்தாலும்..என்னவோ ..இன்னும் முழுமையா இல்லாத மாதிரி..ஒரு ஃபீலிங்க்...
செட்டியார் நகம் கடித்தார்.. டைரக்டர் யோசித்தார்.. என்ன செய்யலாங்கறீங்க..
செட்டியார்..’ அந்தக் காமடியன் படபடன்னு நிறைய படத்துல நடிச்சுட்டு உசரத்துக்குப்போறாங்கறீங்க..அங்க கொஞ்சம் இடிக்குது
டைரக்டர்.. என்னங்க அது...
செட்டியார் பிரகாசமாகி... குரு, நம்ம கவிஞர் இசை அமைப்பாளரக் கூப்பிடு ஒரு பாட்டு ...டபக்குன்னு துள்ளத் துடிக்க ட்யூன்ல வரணும்..அதை ச் சேர்த்து விட்டுடலாம்..கூப்பிடுங்க...
கவிஞர், எம் எஸ்வி சேர்ந்து டிஎம் எஸ் எல ஆர் ஈஸ்வரியோட கொடுத்தபாட்டு ஹிட்..அது..
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
வா வா என்பதை விழியில் சொன்னாள் (innikkellaam vizhiyil mirattath thaan seyraanga)
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
கனிவோடு…
சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)