இனிய காலை வணக்கம்...
Sent from my ASUS_T00J using Tapatalk
Printable View
இனிய காலை வணக்கம்...
Sent from my ASUS_T00J using Tapatalk
Second week confirmed in sathyam studio 5. 80% of the seats already booked for sunday 3.45 pm
வாசு - உங்கள் இந்த பதிவு இங்கு இருக்கும் எல்லா திரிகளிலும் பதிவிட வேண்டிய ஒன்று . உங்களுக்கு நினைவிருக்கலாம் - இப்படிப்பட்ட கருத்துக்களை நான் திரு கலை வேந்தன் அவர்களிடமும் , திரு வினோத் அவர்களிடமும் , பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் . உங்களிடமும் இதைப்பற்றி பேசினேன் . இவர்கள் நல்ல கருத்துக்களை , பாரபட்ச்சம் இல்லாத இப்படிப்பட்ட கருத்துக்களை வரவேற்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு - இன்னும் பல நல்ல இதயங்கள் அங்கும் இருக்கின்றன - இப்படிப்பட்ட கருத்துக்கள் அங்கும் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் . இந்த படம் திரு சிவாஜி கணேசன் நடித்த படமே இல்லை .. ஒரு கட்டபொம்மனை நிஜமாகவே உயிர்ப்பித்து இங்கு கூட்டிக்கொண்டு வந்த படம் . இருவருக்கும் வேண்டுமென்றால் சில உருவ ஒற்றுமைகள் இருந்திருக்கலாம் . இந்த தேசத்தில் இன்னும் தமிழ் வாழ்கிறது , இனிமேலும் வாழும் என்று நம்புவர்கள் , தேச பக்தி அழிந்து விடவில்லை - இன்னும் பலர் மனதில் வீரத்தழும்புகள் இருக்கின்றது என்று சொல்லிக் கொள்பவர்கள் , யாரும் சொல்லாமலே இந்த படத்தை மீண்டும் பார்க்க வருவார்கள் . நம் தலைமுறைக்கு மட்டும் அல்ல , இனி வரும் தலை முறைகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு படம் வரப்பிரசாதம் . இப்படியும் இனி ஒருவன் வரப்போவதில்லை - எவரும் இப்படிப்பட்ட படமும் எடுக்கப்போவதில்லை , தமிழை இனி எந்த ஒரு தமிழனும் இவ்வளவு அழகாக பேசி நாம் கேட்க்கப்போவதும் இல்லை .
திரு.ஆதவன் ரவி அவர்களே,
வருக. தங்களுடைய கவிதைகளை முகநூல் மூலமாகப் படித்து மகிழ்ந்திருக்கிறோம். சில கவிதைகள் இந்தத் திரியிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தங்களின் நேரடிப் பங்களிப்பில் இத்திரியில் தங்களின் பாமாலைகள் மூலம் நடிகர்திலகத்தின் புகழ்ப் பரணி ஒலிக்க வாழ்த்துக்கள்
வாசு சார்
தங்களுடைய அருமையான தெளிவான பதிவின் மூலம் இங்குள்ள அனைவர் உள்ளத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளீர்கள்.
நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரத விலாஸ், திருவிளையாடல் போன்ற திரைக்காவியங்கள், தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவை. இவற்றையெல்லாம் அவர்கள் வெறும் வசூலுக்காகவோ, சாதனைகளுக்காகவோ செய்யவில்லை. ஒரு தவம் போல் பணியாற்றி மக்களிடம் உன்னதமான விஷயங்களைச் சொல்வதற்கென்று மெனக்கெட்டார்கள். அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பொறுத்த மட்டில் உலக அளவில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இசை என மூன்று பிரிவுகளில் உலகப்பட விழாவில் வென்று தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற சூளுரையை நிரூபித்தது.
இவையெல்லாம் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய கொண்டாட வேண்டிய உன்னதத் திரைக்காவியங்கள். அதுவும் தங்களுடைய வீட்டில் உள்ள ஒவ்வொரு தலைமுறையினரையும் பார்க்க வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு சிலர் இவற்றின் தோல்வியில் மகிழ்ச்சியடைவதும் அதில் இன்பம் காணுவதும் உண்மையிலேயே அவர்கள் மனசாட்சியுடன் தான் செயல்படுகிறார்களா என்றோர் எண்ணத்தைத் தோற்றுவிப்பதை மறுப்பதற்கில்லை.
மனக்கசப்புகள், மனமாச்சரியங்கள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து ஒவ்வொருவரும் இதுபோன்ற உன்னதத் திரைக்காவியங்களை உளமார வரவேற்று ஆதரித்தால், தமிழனின் பெருமை மேலும் மேலும் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் சென்று சேரும்.
படம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சமாக இவற்றைத் தோல்விப்படமாக சித்தரிப்பதில் இன்பம் காணுவதும் ஈடுபடுவதும் தவிர்த்தாலே இது தமிழனின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும்.
Mr K C Sir,
Wish you many more happy returns of the day.
சற்றுமுன் வந்த செய்தி
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்தை தமிழக அரசே கட்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்.
Many happy returns of the Day Chandra
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணிமண்டபம் - Chief Minister of Tamilnadu #Jayalalithaa
Breaking News
Hope this becomes true , Very Happy Moment
Birth Day Gift to Chandrasekar
http://newsalai.com/wp-content/uploa...01.2014-cm.jpg
விதி எண் 110ன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அரசே மணிமண்டம் கட்டும் என உறுதியளித்துள்ளீர்கள். தங்கள் மீது என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக, இது வெறும் மணிமண்டபமாக இல்லாமல் நடிகர் திலகத்தின் நினைவினை என்றென்றும் நினைவு கூறும் வகையில் கேலரி, ஆய்வுக்கூடம், நூலகம், முன்னோட்டத் திரையரங்கு போன்றவை அமைந்தால் மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாயும் இருக்கும். காலம் தோறும் தங்கள் பெயர் சொல்லும்.
நடிகர் திலகம் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற அறிவிப்பு உண்மையிலேயே தங்களுக்கு அவர் மேல் இருக்கும் மதிப்பையும் காட்டுவதோடு, தங்கள் மேல் மக்களுக்கு இருக்கும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
மணிமண்டப அறிவிப்பு செயல்படும் நாளைஆவலுடன் எதிர்பார்த்து, தங்களுக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
What a wonderful B'day gift to Mr KC Sir.
சந்திரசேகர் சார்!
உங்கள் நல்ல மனது போலவே எல்லாம் நன்றாக நடக்கிறது. உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
கட்டபொம்மனின் கர்ஜனை வெற்றி, மணிமண்டப அரசாங்க அறிவிப்பு என்று சந்தோஷ நிகழ்வுகள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. நம் ரசிகர்களுக்கு இதைவிட மகிழ்ச்சி தருணம் ஏது?
நான் ரசித்த கட்டபொம்மன்
நடிகர் திலகம் படம் re ரிலீஸ் அதுவும் டிஜிட்டல் முறையில் என்று அறிவிப்பு வந்த உடன் இருந்த குஷி படம் பார்த்து முடிக்கும் வரை இருந்தது
அதுவும் கடந்த சண்டே மாலை காட்சிக்கு அட்வான்ஸ் booking செய்த பொது நண்பர்கள் சிரித்தார்கள் , பாவம் அவர்களுக்கு தெரியாது அரங்கு நிறைந்து விடும் என்று , கடைசியில் நான் அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இருந்தது தனி கதை
6.45 காட்சிக்கு நான் 4.30 மணிக்கு சென்று விட அப்போதே அரங்கம் களைகட்ட அதை காண கண் கோடி வேணும் .
ஒரு பக்கம் 10000, வாளா வெடிக்க , மக்கள் ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்த்து படத்தை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள் , அதுவும் படத்தின் சாதனைகள் பற்றி பேச , அந்த வளாகமே சந்தோசம் நிறைந்து இருந்தது . பட்டாசு வெடித்த பொது டிராபிக் ஜாம் வேறு , ஆனால் மக்களுக்கு இடையுறு இல்லாமல் இருந்தது , ரசிகர் மன்றத்தினர் சிலர் இனிப்பு கொடுக்க , சிலர் மலர் தூவ , பலர் தியேட்டர் அலங்காரத்தை பார்த்து கொண்டு உள்ளே சென்றார்கள்
படம் ஆரம்பிக்கும் பொது மீண்டும் கரகோஷம் , நடிகர் திலகம் திரையில் தெரிந்த உடன் அரங்கம் முழுவதும் கிளாப்ஸ் ,whistle , etc
ஒரு பக்கம் நான் என் நண்பர்கள் , மற்றும் என் தந்தை உடன் இதை அனைத்தும் பார்த்து ரசித்து கொண்டு இருந்தோம் .
அரங்கம் 90 % புல். ஜாக்சன் துரை உடன் பேசும் காட்சிக்கு கிடைத்த reception பற்றி சொல்ல தேவை இல்லை ,
இடைவேளையில் சில ரசிகர்கள் , மற்றும் மக்கள் பேசி கொண்டு இருந்தத பொது அவர்கள் சாய்ஸ் APN படங்கள் , குறிப்பாக தில்லானா மோகனம்பாள் , சிவந்த மண் , தெய்வ மகன் , ராஜா ராஜா சோழன் , நவராத்திரி
இடைவேளை முடிந்த உடன் மீண்டும் படம் துவங்கி கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு
பிரிண்ட் நன்றாக இருந்தது , இருந்தும் சில காட்சிகள் , பாடல்களை ட்ரிம் செய்து இருக்கலாம்
முக்கியமான , நடிகர் திலகத்தின் படங்களை இப்பிடி re ரிலீஸ் செய்தால் அந்த படத்தின் நெகடிவ் பாதுகாக்க படும் , மேலும் வசூலிலும் சாதனை படைக்கும்
படம் கர்நாடிக் அரங்கில் 2 காட்சிகள் மட்டும் , SPI சினிமாஸ் 1 காட்சி , யமுனாவில் 2 காட்சி , கக் 1 காட்சி
ஒரு அரங்கில் 4 காட்சி இருந்தால் மக்கள் படத்தை இன்னும் அதிகம் ரசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை
ராகுல்
கட்டபொம்மன் வெளியீடும் மணிமண்டபமும் தங்களை வரவழைத்து விட்டது பார்த்தீர்களா..
தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
Courtesy: Tamil Hindu
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "சிவாஜி கணேசன் நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவர்.
'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியார் அவர்களால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவர்.
'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.
'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவர்.
மறைந்த சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று உத்தரவிடப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று தமிழக அரசே அமைத்தது.
தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை.
அந்த இடத்தில் தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
நாள்
26ஆக
2015*
12:16
பதிவு செய்த நாள்
ஆக 26,2015 11:35
சென்னை: சென்னை சட்டசபை கூட்டத்தொடரில், தமிழகஅரசு சார்பில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது எழுந்த காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார். விஜயதாரணியின் பேச்சுக்கு பதிலளித்த ஜெ., சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார். இதனால் அதிமுக மற்றும் காங்., உறுப்பினர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி காங்கிரஸ்காரர் இல்லை. அவர் காங்., கட்சியே வேண்டாம் என்று சென்று, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கியவர் என்றார்.
நடிகர்திலகம் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு மனதில் தேன் பாய்ச்சுகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு மிக விரைவில் செயல் வடிவம் பெறும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
அயராது பாடுபட்ட சகோதரர் சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Dear k c s sir,
many many happy returns of the day.what a memorable gift to you on your birthday.
Dear aadhavan sir,
a warm welcome to the glorious thread of nadigar thilagam
Yesterday 3.30 show sathyam 90% full as per the status at 2.15pm
today 3.30 show sathyam 80% full as per the status at 1.00pm
Courtesy: Daily Thanthi
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகவும், உரிமைக்காகவும் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்து வதிலும், அவர்களது பெருமை களை வருங்கால சந்ததியி னர் அறிந்து பின்பற்றும் வகை யில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்கள் எழுப்பி மரியாதை செய்வ திலும் எனது தலைமை யிலான அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கு கிறது.
அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், பொறியியல் அற்புதமான கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன், தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆகியோருக்கு மணி மண்டபங்களும் தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்டன.
மேலும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியா தைச் சுடரொளி ஜீவரத்தினம், மனு நீதிச் சோழன், சுவாமி சகஜானந்தா, ஹைதர் அலி - திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்க வும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்ப வும் என்னால் ஆணையிடப் பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவரும், 'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப் படுத்தியதன் காரணமாக தந்தை பெரியாரால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவரும், 'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரரும், 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று நான் உத்தர விட்டேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசனுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்ட தன் பேரில் நான் இந்த உத்தரவை வழங்கினேன். அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக் கப்பட்டது.
அவ்வாறு ஒப்படைக்கப் பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்பு களுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
சிவாஜி கணேசன் மணி மண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது. தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் நான் அப்போதே வழங்கியிருப்பேன்.
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனது அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத் தில் தமிழக அரசே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இனிமையான, மகிழ்சிகரமான செய்தி - உலக தமிழர்க்கு உண்மையான தமிழர்க்கு !
நமது நடிகர் திலகம் அவர்களுக்கு உண்மையான ரசிகர்களுக்கு, அவர் மீது பற்றும் அன்பும் கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கு மிக நல்ல செய்தியாக இது இப்போதாவது வந்தது.
http://i501.photobucket.com/albums/e...psqlflpf3g.jpg
சட்டசபையில் நடிகர் சங்கத்தின் கையாலாகாதனத்தை முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டு பேசியது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம். எங்களுக்கு அதை கட்டுவதற்கு எங்களுக்கு வழியில்லை என்று அப்போதே நடிகர் சங்கம் கூறியிருந்தால் மணிமண்டபத்தை என்றோ நான் கட்டியிருப்பேன் என்று கூறிய முதல்வர் செல்வி ஜெயலலிதா, "நாங்களே கட்டுகிறோம்" என்று வாய் சவடால் விட்டு வாய்தா வாங்கிய நடிகர் சங்கத்தின் இப்போதைய தலைவர் சரத்குமார் மற்றும் கும்பலுக்கு மிக பெரிய குட்டு கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.
CONGRESS இன் INSTANT சதி !
CONGRESS அமைச்சர் ஒருவர் நடிகர் திலகம் CONGRESS ஐ சேர்ந்தவர் என்று ஒரு EGO முதல்வருக்கு கிளப்பி அதன் மூலம் மணிமண்டபம் கட்டுவதை தடை செய்யலாம் என்று மனப்பால் குடித்து சதியை சட்டசபையில் கட்டவிழ்த்தார்.
அந்த அமைச்சர் முகத்தில் அறைந்தாற்போல, தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் உடனே இடைமறித்து நடிகர் திலகம் என்பவர் எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல ! அவர் இந்தியாவுக்கு, இன்னும் சொல்லபோனால் உலக தமிழர்களுக்கு சொந்தமானவர் என்று புகழுரை கூறியது அனைவரயும் மெய் சிலிர்க்கவைத்து மிகுந்த ஆரவாரத்தை கைதட்டல் மூலம் சட்டசபையில் ஏற்படுத்தியது !
முதல்வர் அவர்கள் நமது நடிகர் திலகத்துடன் சுமார் 17 படங்கள் நடித்துள்ளார். அதில் முக்கால் வாசி SUPERHIT ரக படங்கள், நடிகையாக இருந்த காலத்தில் FORMALITY க்கு மட்டும் கதாநாயகியாக இல்லாமல் நடிகர் திலகம் திரைப்படங்களில் மிக சிறந்த நடிகையாகவும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது !
https://www.youtube.com/watch?v=PgBAx_bl1YE
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
முதல்வருக்கு எங்கள் நன்றி !
MOST IMPORTANTLY -
SIVAJI SAMUGA NALA PERAVAI FOUNDER Mr. CHANDRASEKHAR Sir !
What can i say about the time at which you started the KOARIKKAI UNNA VIRADHAM !!
GURU HORAI ! SUBAMUGOORTHTHAM ! PATTOLI VEESIDUM VETRI !!
YOUR REQUEST HAS BEEN FAVOURABLY CONSIDERED..! THANKYOU SIR...
NADIGAR THILAGAM's SOUL is With You by all means is what this announcement indicates !
ATLEAST NOW, WE WISH, THE DIFFERENCE OF OPINION BETWEEN GROUPS VANISH & STAY UNITED FOREVER !!!
RKS
Atleast now, we wish, the difference of opinion between groups vanish & stay united forever !!!
Exactly.
Courtesy: Tamil Hindu
நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகm சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல.
இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர். ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
என்றென்றைக்கும் புத்தம்புது பொலிவுடன் திகழும் நடிகர்திலகத்தின் வரலாற்றுக்காவியமான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியத்தின் மெருகேற்றப்பட்ட வடிவத்தின் கோலாகல வெளியீட்டையும், அதன் இமாலய வெற்றியையும் தாங்கள் அனுபவித்தது மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் என்னைப்போன்ற பல்லாயிரக் கணக்கான ரசிகர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் எழுத்து வடிவத்திலும், நிழற்படங்களாகவும், வீடியோ வடிவமாகவும் அளித்து மகிழ்வுற வைத்த அனைத்து நண்பர்களுக்கும், ரசிக நெஞ்சங்களுக்கும் நன்றி.
வீரபாண்டிய கட்டபொம்மன் ரசிகர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் காண வேண்டிய காவியம் என்று கட்டுரை வாயிலாக வடித்த சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
great great news GOLDEN MOMEMENTS IN MY-OUR LIFE kattabomman really made us to remember him for ever.
THANK YOU AMMA AMMA FOR YOUR MAGNAMIOUS GENEROCITY,
aS RAGHAVENDER mentioned it should a milestone in all aspects AND NOT A SIMPLE MADAPAM
VALGA VALRGA NADIGARTHILAGAM PUGAL.
இதில் ஒரு விஷயம் நாம் கவனிக்கவேண்டியது !
http://i501.photobucket.com/albums/e...psqlflpf3g.jpg
நடிகர் திலகம் அவர்களது தாயாரின் சிலையை பரந்தமனதுடன் நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க திறந்துவைக்க சம்மதித்து, அதனை திறந்து வைத்து சிறப்பித்தவர் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் M G R அவர்கள்.
இன்று நடிகர் திலகம் அவர்களது மணிமண்டபத்தை, நடிகர் சங்கம் எந்த காலத்திலும் அவர்களது காழ்புணர்ச்சியால் திறக்கமாட்டார்கள் என்பதை ஊர்ஜிதபடுத்திகொண்டு, அந்த மணிமண்டபத்தை தாமே தமது அரசால் கட்டப்படும் என்று அறிவித்தவர் மக்கள் திலகம் வழிவந்த அதிமுக வின் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் !
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அந்நாளில் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி !
https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk
நடிகர் திலகம் அவர்கள் கலையை பொருத்தவரை கலைவாணி அருள் பெற்றவர் !
https://www.youtube.com/watch?v=uubrCumAOvk
அவர் ஆசியால்தான் திரை உலகில் மிகபெரிய ROUND கலைச்செல்வி அவர்கள் வந்தார் என்றால் அது சத்தியமான, தத்துவமான விஷயம் !
RKS
கட்டபொம்மன் படம் உருவான பொது நடந்த சம்பவங்கள் , படத்தை பற்றிய சில விஷயங்கள் ,படத்தின் வெற்றியின் வீச்சு , என்று என்னால் முடிந்த அளவு எழுதி உள்ளேன்
கட்டபொம்மன் நாடகத்தின் ரிஷிமூலம் :
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சின்ன வயசில் அவர் வசித்த ஊரில் கம்பளத்தார் கூத்து என்று நடத்துவார்கள் , அதில் கட்டபொம்மன் நாடகம் தான் நடத்துவார்கள் , கம்பலத்தாரில் 47 வது தலைமுறையில் வந்தவர் தான் கட்டபொம்மன் . நடிகர் திலகத்தின் தந்தை நாட்டு பற்று அதிகம் உள்ளவர் அதனால் கட்டபொம்மன் நாடகம் அடிகடி பார்க்க தன் மகனை அழைத்து சென்று விடுவாராம் சிவாஜியின் தந்தை . அந்த கூத்தில் முக்கிய வேஷங்கள் போடுபவரை தவிர பிற வேஷங்களுக்கு குழந்தைகளை மேடையில் நடிக்க விடுவார்கள்
முதல் நாடக அனுபவம் :
சிறுவனாக இருந்த கணேசன் இப்படி தான் முதல் முதலில் மேடை ஏறினார் . சரி கட்டபொம்மனாக நம் மனதில் வாழந்த , வாழ்ந்து கொண்டு இருக்கும் சிவாஜி சாருக்கு அந்த நாடகத்தில் கொடுக்க பட்ட வேஷம் என்ன ?
வெள்ளைகார பட்டாளத்தில் ஒருவனாக நடித்தார் நம் நடிகர் திலகம்
அடி கிடைத்தது நடிப்பு ஆசை வந்தது , ஒரு நடிகர் பிறந்தார் :
நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் கணேசன்க்கு தந்தையிடம் இருந்து அடி கிடைத்து . காரணம் தான் யாரை எதிர்த்து சிறை சென்றாரோ அந்த வெள்ளைகாரன் படையில் ஒருவனாக தன் மகன் நடித்ததின் விளைவு. சிவாஜியின் தந்தை அடிக்க சிவாஜிக்கு மேடையில் கிடைத்த கைதட்டல் காதில் ஒலிக்க நடிகராக தீர்மானித்து நாடக குழுவில் இணைந்தார் .
சிவாஜி நாடகம் மன்றத்தின் கட்டபொம்மன் நாடகம் உருவான விதம் :
ஒரு நாடகம் நடத்தி விட்டு திருநெல்வேலி வழியாக வந்து கொண்டு இருந்த பொது சிவாஜி சாருக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது , கட்டபொம்மன் நாடகத்தை முதலில் பார்த்து அதில் ஈர்க்க பட்ட சம்பவங்களை அசை போட்டு கொண்டு வந்தார் . அந்த நினைவுகளில் இருந்து உதயமானது தான் கட்டபொம்மன் நாடகம் . சக்தி கிருஷ்ணசாமியிடம் தன் ஆசையை வெளி படுத்த கட்டபொம்மன் வாழ்கை வரலாற்றை அடிபடையாக கொண்டு நாடகத்துக்கு தகுந்த சம்பவங்களை தொகுத்து நாடகத்துக்கான கதையை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி .
எனது சுயநலத்தில் பொது நலமும் கலந்து இருக்கிறது :
கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்பது சிவாஜி சாரின் பல நாள் ஆசை , ஆனால் அதை நாடகமாக எடுக்க வேறு ஒரு காரணமும் இருந்தது . சிவாஜி நாடக மன்றத்தில் சுமார் 60 நபர்கள் இருந்தார்கள் , இவர்களில் பல பேர் நாடகத்தின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தார்கள் , எனவே அடிகடி நாடகம் நடத்துவது அவசியம் , சரித்திர நாடகத்தை நடத்தும் பொது huge ஸ்டார் cast இருக்கும் , அதனால் அனைவருக்கும் வேலை , ஊதியம் இரண்டும் கிடைக்கும் , இது கட்டபொம்மன் நாடகத்தை நடத்த இரண்டாவது காரணம்
கட்டபொம்மன் நாடகத்தின் கதை முடிவான உடன் 1 வருடம் pre production வேலைகள் நடந்தது . இதற்க்கு செலவு 50,000 ரூபாய்கள்
நாடகம் வந்த காலத்தில் இந்த cost மிகவும் அதிகம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் அரங்கேற்றமும் , அதை தொடர்ந்து நடந்த சுவையான சம்பவங்களும்
இந்த நாடகம் நடக்க சிவாஜி சார் மற்றும் கிருஷ்ணசாமி சார் இருவரையும் தவிர நாம் இந்த நேரத்தில் நினைக்க வேண்டிய இரு நபர்கள் நாடக குழுவின் இயக்குனர் SA கண்ணன் மற்றும் சண்முகம் என்ற efficient , meticulous organiser
1957 ல் கட்டபொம்மன் நாடகம் சேலத்தில் அரங்கேற்றம் . தலைமை
மு.வ. 9 நாட்கள் நடந்த இந்த நாடகம் சொல்லும் ஒரே செய்தி அரங்கேற்றம் செய்த புது நாடகம் மக்கள் ஆதரவினால் bumper ஹிட் என்பது தான் அது
ஒரு முறை ராஜாஜி அவர்கள் நாடகத்தின் இடைவேளையில் மயங்கி விழந்து விட்டார் , சிவாஜி சார் பதறி போய் வந்த உடன் அவரிடம் strong ஆக காபி வாங்கி குடித்து விட்டு மேற்கொண்டு நாடகத்தை நடத்த சொன்னவர் சிவாஜி சாருக்கு ஒரு சால்வை அணிவித்து சிறிது நேரம் நாடகத்தை பற்றி பேசினார் .
பிறகு மேடையில் இருந்து கிழே இறங்கியவர் மீண்டும் மக்களை பார்த்து சிவாஜி கட்டபொம்மன் ஆக நன்றாக நடிக்கிறான் , நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறி இருக்கிறார் , இதை ஜீரணிக்க உங்களுக்கு திராணி இருக்கா என்று கூறி சென்று விட்டார்
ராஜாஜியின் பாராட்டு கோடி ருபாய்க்கு சமம்
கட்டபொம்மன் கிட்ட தட்ட 100 தடவைகள் நடந்தது , அந்த நாடகம் நடந்த சமயத்தில் நடிகர் திலகம் ஒரு பிஸியான நடிகர் இருந்தாலும் நாடகம் தாமதம் இன்றி நடந்தது . நாடகம் 6 மணி என்றால் நாடகம் சரியான நேரத்துக்கு தொடங்கி விடும்
நாடகத்தில் நடித்துகொண்டு இருக்கும் பொது ரத்தம் குபுக் என்று வந்து கொண்டு இருக்கும் , எதற்கும் கவலைபடாமல் இவர் நடித்து கொண்டே இருப்பார் , நாடகத்தில் வசனம் பேசும் பொது நாடகத்தின் வசனம் அடிவயிற்றில் இருந்து வருகிறதா இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா என்றே அறியமுடியாமல் நடித்து கொண்டே இருப்பார் நடிகர் திலகம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் படமானது :
நாடகத்தின் வெற்றி திரு பந்தலு அவர்களை கட்டபொம்மன் கதையை படமாக எடுக்க தூண்டியது , அதன்படி உருவானது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் 1959 ல் வெளிவந்தது
இந்த படத்துக்கு research work தலைவராக ம .பொ . சிவஞானம்
அங்கத்தினாராக
சக்தி கிருஷ்ணசாமி , பந்துலு , கணேசன் , P. A. குமார் , K. சிங்கமுத்து and S. கிருஷ்ணசுவாமி என்று பலரும் பங்கேற்று படத்தின் கதைகருவுக்கு வலு சேர்த்தார்கள்
வெள்ளையதேவனாக திரு SSR நடிப்தாக இருந்தது , சிவகங்கை சீமை படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் அவரால் அந்த commitment ல் இருந்து வரமுடியாமல் போகவே ஜெமினி கணேசன் அந்த பாத்திரத்தில் நடித்தார் . அப்போது திரு சாவித்ரி கர்பமாக இருந்ததால் ஜெமினி வர தயங்க நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சாவித்ரி ஜெமினி கணேசனை நடிக்க ஜெய்பூர் அனுப்பி வைத்தார் . தினமும் ஜெய்பூர் ல் இருந்து சென்னைக்கு trunk call செய்து சாவித்ரியின் உடல் நலம் குறித்து விசாரிபாரம் ஜெமினி கணேசன்
படம் வெளி வந்தது பெரும் வெற்றி பெற்றது , இது அனைவருக்கும் தெரிந்தது .
கட்டபொம்மன் பெற்ற விருது , கெளரவம் :
ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழா :
1960 ல் ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தேர்வு செய்ய பட்டது ,அங்கும் அரசியல் செய்ய பார்த்து வேறு ஒரு படத்தை ணைபின்னர்கள் , ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தான் தேர்வு செய்யப்பட்டது . இந்த விழாவில் பங்கேற்க பந்தலு , பத்மினி , சிவாஜி எகிப்து சென்றார்கள் . விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் திரைட பட்டது , இங்கே நம் ஊரில் கை தட்டி ரசித்ததை போலே , அங்கேயும் ரசிக்க பட்டது
பெஸ்ட் ஹீரோ விருது நம்மவருக்கு , விருது அறிவித்ததும் ஒரு வித பரபரப்பில் மயங்கி விழுந்து விட்டார் நடிகர் திலகம் , பிறகு மேடைக்கு சென்ற உடன் 5 நிமிடம் standing ovation மரியாதை கிடைத்தது நம்மவருக்கு
மேலும் சிறந்த இசை , டான்ஸ் , கதை இந்த category ல் கட்டபொம்மன் விருது கிடைத்தது
அதிபர் நாசர் சென்னை வருகை :
எகிப்து விழாவில் அதிபர் நாசர் பங்கேற்கவில்லை , காரணம் அவர் சிரியா சென்று இருந்தார் , அதிபர் வீட்டுக்கு சென்ற பட குழு அதிபரின் மனைவி உடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசும் பொது அதிபர் வரமுடியாமல் போன காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்டார் அதிபர் மனைவி .
நாசர் இந்திய வருவது அறிந்த நடிகர் திலகம் பிரதம மந்திரி நேருவிடம் அதிபர் சென்னை வரும் பொது சிறிது நேரம் தன்னுடைய விருந்தாளியாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள 2 மணி நேரம் அதிபர் நாசர் சிவாஜியின் விருந்தாளியாக இருந்து சிறப்பித்தார்
அதிபரை வரவேற்க சில்ரன் தியேட்டர் முழுவதும் தேச தந்தை காந்திஜியின் படங்கள் மற்றும் இந்திய நாட்டின் பெருமையை எடுத்து கூறும் படங்களால் அலங்கரித்தார்கள் , மேலும் RED CARPET வரவேற்பு அளிக்க பட்டது . வெள்ளியில் ஷீல்ட் , ல் நடராஜர் சிலைக்கு இருபக்கமும் பிரமிட், மற்றும் தஞ்சாவூர் கோபுரம் , மேலும் யானை , ஒட்டகம் வடிவமும் செய்து அதிபருக்கு வழங்க பட்டது . இதற்க்கு சிகரம் வைத்தது போல் ஆங்கிலத்தில் திருக்குறள் பொரிக்க பட்ட தங்க தகடும் கொடுக்க பட்டது , அதற்க்கு ஒரு மொள்வியை வரவழைத்து அரபு மொழி வாசகங்களை பொரித்து அதையும் பரிசாக வழங்கி நாசர் அவர்களை கௌரவித்தார்கள்
SSR சிவகங்கை சீமையில் நடித்தால் தான் கட்டபொம்மன் படத்தில் நடிக்க வில்லை என்பது அனைவரும் அறிந்தது ,
வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தின் துவக்க விழாவுக்கு கவிஞர் கண்ணதாசன் சென்று இருந்தார் அப்படி இருக்கும் பொது
சிவகங்கை சீமை கட்டபொம்மன் படத்துக்கு போட்டியாக எடுக்க பட்ட படமா ?
சிவகங்கை சீமை மருதுபாண்டியர் கதை , கட்டபொம்மன் படமும் , சிவகங்கை சீமை படமும் ஒரே கதை என்று கதை கட்டி விட்டார்கள் . ஆனால் உண்மையில் அப்படி இல்லை
கட்டபொம்மன் இறந்த பிறகு , ஊமைத்துரை சிறையில் அடைக்க படுகிறார் , அத்துடன் முடிவது வீர பாண்டிய கட்டபொம்மன்
ஆனால் ஊமை துறை தப்பித்து வருவதில் இருந்து தொண்டங்குவது தான் சிவகங்கை சீமை கதை . sequel (கட்டபொம்மன் படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பார்த்தல் ஒரு பெரிய novel படித்தது போல். இருக்கும் .
படத்தின் preview பார்த்த AVM கட்டபொம்மன் வெளிவந்து 2-3 மாதம் கழித்து சிவகங்கை சீமை படத்தை ரிலீஸ் செய்தால் பணம் பார்க்கலாம் என்று சொல்ல அதை செய்யாமல் படத்தை கட்டபொம்மன் வெளிவந்து 2 வாரத்தில் அவசரமாக படத்தை ரிலீஸ் செய்ததால் படம் தோல்வியை தழுவியது
காரணம் கட்டபொம்மன் படத்தின் grandeur , சிவாஜியின் வசனம், நடிப்பு சகலமும் படத்தின் + points
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் முதல் டெக்னி கலர் படம் மேலும் ஜெய்பூர் அரண்மனையில் படம் பிடிக்க பட்டது . நடிகர் திலகம் கட்டபொம்மன் அவர்களுக்கு சிலை , நினைவு சின்னம் எழுபின்னர் , இந்த நாடகத்தின் வசூல் பல பொது காரியங்களுக்கு தானமாக கொடுக்க பட்டது .
நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
அதே நன்னாளில் அவர் அரும்பாடு பட்டு வலியுறுத்தி வந்த நடிகர் திலகம் மணிமண்டப அறிவிப்பு வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
சிவாஜிக்கு மணி மண்டபம்... ஜெயலலிதாவுக்கு பிரபு நன்றி! Posted by: Shankar Published: Wednesday, August 26, 2015, 14:21 [IST] Share this on your social network: Facebook Twitter Google+ Comments (0) Mail மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்ததற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சிவாஜி மகன் பிரபு. ADVERTISEMENT ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு கூறுகையில்: Manimandapam for Sivaji: Prabhu Thanked Jayalalithaa எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அம்மா அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள். எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...aa-234295.html
Courtesy: Tamil Hindu
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகூரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி.
அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்'' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Wish you Happy Birthday to Mr. Chandra sekhar and congrats for Mani mandapam news also.
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .
ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள் :)
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .
எனக்கும் அந்த சந்தேகம் வந்துள்ளது. ஜோ உங்கள் பதிவை பார்த்த பின்.