வசந்த் டி.வீ யில் நடிகர்திலகம் பிறந்த நாள் (01/10/2013)கொண்டாட்டங்கள். பார்த்து மகிழவும். வழக்கம் போல காதல்,வீரம் பட்டிமன்றம் உண்டு.
Printable View
வசந்த் டி.வீ யில் நடிகர்திலகம் பிறந்த நாள் (01/10/2013)கொண்டாட்டங்கள். பார்த்து மகிழவும். வழக்கம் போல காதல்,வீரம் பட்டிமன்றம் உண்டு.
பிறந்த நாளில் கவுரவம் பெறும் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.(இளமை என்னை ஒருமையில் விளிக்கவே தூண்டுகிறது.நான் என்ன செய்ய??)
சுசீலாவிற்கு பிறகு என்னை கவர்ந்த பாடகி ஈஸ்வரி தான். என்னவெல்லாம் சொல்லலாம்??? சுசிலாவை பற்றி கேட்டால் சுலபமாக சொல்லி விடலாம். ஈஸ்வரி பற்றி கேட்டால்..... ஹூம்... முயற்சிக்கிறேன்.
Husky ,Alluring ,Seductive , Sultry ,Tantalizing , Smoky என்று எழுதி கொண்டே போகலாம். கொஞ்சம் சுலபமாக்க தேன்,சாக்லேட்,வொயின்,அபின் எல்லாவற்றையும் சரி சமமாக குழைத்தால்.... இனி வருமா அப்படி ஒரு காலம்!!!!!
என்னுடைய முதல் 25....
1)அம்மம்மா கேளடி தோழி-கருப்பு பணம்.
2)ஆட வரலாம்- கருப்பு பணம்.
3)நீ என்பதென்ன- வெண்ணிற ஆடை.
4)பட்டத்து ராணி- சிவந்த மண்.
5)கண்களுக்கென்ன - நில் கவனி காதலி.
6)எந்தன் நெஞ்சம் யாரை -காதலித்தால் போதுமா.
7)வெண்ணிலா முகம்- செல்வ மகள்.
8)மல்லிகை - பவானி.
9)நாம் ஒருவரையொருவர்-குமரி கோட்டம்.
10)துள்ளுவதோ- குடியிருந்த கோயில்.
11)கண்ணில் தெரிகின்ற வானம்-ரகசிய போலிஸ்.
12)பறவைகள் சிறகினால்-நினைவில் நின்றவள்.
13)அலங்காரம் கலையாமல்-நம்ம வீட்டு லட்சுமி.
14)அம்மம்மா கன்னத்தில்-வல்லவன் ஒருவன்.
15)பளிங்கினால் ஒரு மாளிகை-வல்லவன் ஒருவன்.
16)குடிமகனே- வசந்த மாளிகை.
17)அம்மனோ சாமியோ- நான்.
18)நதியே படகானால்- தங்க சுரங்கம்.
19)எலந்த பயம் எலந்த பயம்-பணமா பாசமா.
20)சந்திப்போமா- சித்தி.
21,அவன் காதலித்தான்- வாலிப விருந்து.
22)எங்கே எங்கே என் மனது- வாலிப விருந்து.
23)பட்டு சிறகு கொண்ட-கருப்பு பணம்.
24)நானொரு காதல் சந்நியாசி-தவ புதல்வன்.
25)வெண் பளிங்கு மேடை கட்டி-பூஜைக்கு வந்த மலர்.
கவுரவிக்க படும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
1)முக்தா- இவரை பற்றி தவ புதல்வன் விமரிசனம்(கவனிக்க ,ஆய்வல்ல.) முன்னோட்டமாய் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படித்து விடுங்கள்.
2)சி.வீ.ராஜேந்திரன்-அப்போது இளமையின் தகிப்பில் இருந்த என் போன்ற நடிகர்திலகம் பக்தர்கள் ,இளமை ஜொலிக்கும் திராவிட அழகனை கொஞ்சம் விளையாட விட்டு ,நிஜமான erotism என்றால் என்ன ,இளமை காதல் என்றால் என்ன,காதல் குறும்பு என்றால் என்ன,வன்மை காதல்,மென்மை காதல் என்று எல்லாவற்றையும் அனுபவிக்க செய்ய ஒருவர் வேண்டும் என்று ஏங்கிய போது நிஜமான libido கொண்ட சிவாஜியின் அருமை தெரிந்த, ஸ்ரீதர் என்ற நல்ல technician உருவாகிய இளவல்,கலர் psychology தெரிந்த ,டிரஸ் சென்ஸ் கொண்ட சி.வீ.ஆர் ,சிவாஜி ரசிகர்களின் டார்லிங் ஆனதில் வியப்பு என்ன?
3)மனோரமா- ஆச்சி ஒரு தங்கையின் ஸ்தானத்தை பூர்த்தி செய்தவர். சிவாஜி நிஜமான அண்ணனாகவே ,இவர் அன்னையின் மறைவின் போது தன் கடன்களை நிறைவேற்றினார். பொறுப்பற்ற கணவன்,பொறுப்பற்ற பிள்ளை இவர்களால் அலைகழிக்க பட்டு ,சிறிதே சந்தர்ப்பவாதி ஆகி விட்ட ஆச்சிக்கும் வாழ்த்துக்கள்.
4)சுப்பு ஆறுமுகம்- வில்லு பாட்டு வித்தகர். (என்ன சம்மந்தம் என்று புரியவில்லை). காதல் ஜோதி படத்தின் உன்மேல கொண்ட ஆசை, ஏன் படம் இவரின் குறிப்பிடும் படியான சில.
5)கலைஞானம்- அன்பைத்தேடி மூல கதாசிரியர். மிருதங்க சக்ரவர்த்தி,ராஜ ரிஷி படங்களின் தயாரிப்பாளர். நான் நேரில் சந்தித்த தருணங்கள் ஒன்றிரண்டில்,சிவாஜி பற்றி நிறைய பேசி மகிழ்ந்தோம். சொல்ல மறந்து விட்டேனே.... என் அருமை மானசீக...... வாணிஸ்ரீ என்கிற ரத்னகுமாரியை அறிமுகம் செய்த ஒரே காரணத்துக்காக இவருக்கு பாரத ரத்னா சிபாரிசு செய்து முன்மொழிகிறேன்.
Raajjaa,
You are testing my patience. What do you try to prove? Many hubbers said you come in different names with dubious intentions. But I ignored and considered you as an intelligent hubber and answered you with respect and patience. If your intention is to irritate and not to contribute anything positive,I am sorry.I am not a match to you. Pardon me.Dont you know the difference between guest appearance and second Hero? He appeared in lot of movies as a special guest on the request of Sriram,Panthulu,sridhar,S.V.Subbaiya,Muktha,Anjali ,NTR,vanisree,K.bagyaraj,barathiraja, ETC.He has been doing it as a special favour to friends since 1954. Nothing new in 1984.
Let me ask you politely to stop the diversions and intrusions ,Please.
http://im.rediff.com/movies/2009/feb/02slid1.jpg
இன்று பிறந்த நாள் இந்த இளைஞனுக்கு... தமிழ்த் திரையுலகின் ஈடில்லா நகைச்சக்கரவர்த்தி நாகேஷை நினைவு கூறும் வகையில்
http://youtu.be/KvzAjiSWLRk
அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள்.
30 வருடங்களுக்கு முன்பே மதுரையில் வீர பாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீட்டில் 50 நாட்கள் ஓடியது.
இப்போ கர்ணன்.
சிவாஜி 200 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஏன் இந்த மாதிரி படங்கள் மட்டும்
ஓடுகிறது? சிவாஜியின் திரை உலக வரலற்றில் மிகப் பெரிய வெற்றி படம் திரிசூலம் சமீபத்தில் திரை இடப் பட்டதே அது எத்தனை நாட்கள் ஓடியது?
Dear Fellow Hubbers,
Pl.Do not reply to Raajjaa or lose patience with him. I heard that his intentions are malicious and venomous. I request you to lodge protest with moderators and administrators .
நாகேஷ்,
அபார திறமைகள் கொண்ட அற்புத நடிகர். இவரை ஏ.பீ.என்,ஸ்ரீதர்,பாலசந்தர், கமல் போன்றவர்கள் அற்புதமாக பயன் படுத்தி இவர் அபார திறமையை வெளிக்கொண்டு வந்தனர். நடிகர்திலகம் படங்களில் என் தேர்வு,எல்லோர் தேர்வையும் ஒத்ததே. திருவிளையாடல்,ஊட்டி வரை உறவு,தில்லானா மோகனாம்பாள். திருவிளையாடலில் இவர் திருவிளையாடல்,தெருவில் எறிய படாமல் தப்பித்ததில்,நடிகர்திலகத்தின் பெருந்தன்மை முன்னின்றது.
நடனம் என்றால் abc தெரியாமல் இயக்குனரிடம் திட்டு வாங்கிய இவர் பிரபுதேவாவிற்கு முன்னோடியான கதை.... அது ஒரு முயற்சியின் உச்சம். சந்திர பாபு,நாகேஷ்,கவுண்டர்,வடிவேலு என நம் நகைச்சுவை பாரம்பரியம்..... அடடா....
Happy Birth Day Nagesh Sir. We salute you.
கோபால் சார்,
நீங்கள் எல்லாம் எது வேண்டுமானாலும் பேசலாம். நான் அதற்கு பதில் தரக் கூடாதா?