Enjoy your holidays chinnakkaNNan ! :) We are also going on vacation to California from the end of this month for four weeks ! Our fun is with the grandchildren ! :)
Printable View
Enjoy your holidays chinnakkaNNan ! :) We are also going on vacation to California from the end of this month for four weeks ! Our fun is with the grandchildren ! :)
கோவிலெல்லாம் ஏதுக்கு கொஞ்சும் குமரிக்காய்
பாவில் இசைப்போமே பண்ணைத்தான் – தூவிடும்
சாரலாய் நெஞ்சைச் சரம்போல் நனைத்துதான்
தூறும் அழகோ சுகம்.
https://youtu.be/6C_1sBH75vI
thanks rajraj sir..
Pazhaiya write up and puthiya song
அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..
“ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..
”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..
வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
…வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..
இல்லையா டியர்”
“ஹேய் வாட் ஹேப்பண்ட் ( .: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )
என்ன பண்றதுமனக்களைப்பு டியர்..
சரி போம் ஓய் ஒரு ரொமாண்டிக் பாட் நான் வேணுமானா பாடட்டா..
பாடேன்..
https://youtu.be/QcGmozm9Wlc
( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)
ஓஹோ!:)
சின்னா!
'முத்துக் குளிப்பவ்ரே கொஞ்சம் பக்கத்தில வாங்க'.
எத்தனை முறை கேட்டாலும் முத்துதான்.
இந்தப் பாடலை ரவி த்ரெட்டில் தரவேற்றி எழுதிய ஞாபகம் வந்து விட்டது. ராகவேந்திரர் கொடுத்த உற்சாகத்தினால் செய்தேன். இப்படத்தின் எந்த தகவல்களும் அப்போது இல்லாத நிலையில் ராஜ் டிஜிட்டல் பிளசில் அதிர்ஷ்டவசமாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை அப்லோட் செய்து பதித்தேன்.(2011)
http://jollyhoo.com/wp-content/uploa...Gallery-46.jpghttps://i.ytimg.com/vi/Ou6-Wl2jIsk/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/1esaLrBI9-4/hqdefault.jpg
'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா ('பணமா பாசமா' புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழி மாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)
'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.
இப்படத்தின் vcd,dvd எதுவும் அப்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். ஆனால் இப்போது வாங்கி விட்டேன். ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...
பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை 'விஜய்' தொலைக்காட்சியில் கூட முன்பு ஒருமுறை போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியை மீண்டும் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.
என்ன பாட்டுய்யா அது! 'சத்தியம் தவறாதே' ரவி, விஜயநிர்மலா ஜோடி. பாட்டுக்கள் ஒவ்வொன்றும் டாப் ரகம். இப்போது உங்கள் ரசனையால் இங்கேயே நானும் ரசிக்கிறேன்.
உங்கள் விடுமுறை நாட்கள் இனிதே கழிய வாழ்த்துக்கள் சின்னா!
மிக மிக அரிதான இந்தப் படத்தில் தோன்றும் நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா?
http://www.gulte.com/content/2012/12...This--1303.jpg
கருவின் கரு - பதிவு 83
முத்து - தொடர்ச்சி
இந்த பாடல் CK விற்கு சமர்ப்பணம் - அருமையான பாடல் - அந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த ஒன்று - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - இந்த பாடலும் , "முத்து குளிக்க வாரீங்களா " என்ற பாடலும் - ஆச்சியின் நடிப்பும் , நாகேஷ் அவர்களின் நகைச்சுவையும் கலந்த பாடல் - பாடல்களுக்காக பதிவுகளை போடுவதில்லை எனவே எல்லா பாடல்களையும் போட முடிவதில்லை -- சில உதாரணங்களை மட்டுமே தருகிறேன் .
https://youtu.be/BiD6xmKQcwg
கருவின் கரு - பதிவு 84
பவழம் ( Coral)
Unlike most other gemstones which are of mineral origin, Coral is organic, formed by living organisms. It forms from branching, antler-like structures created from coral polyps in tropical and subtropical ocean waters. When the coral polyps die, the hardened skeleton remains, and this material is what is used as a gemstone. Most coral is white, but nature can create coral in several other colors, including the popular orange to red forms. This Red Coral, or Precious Coral as it is often known by, is the most used gemstone form of Coral. In fact, the color known as coral is derived from the typical pinkish-orange color of many red Coral gemstones.
http://i818.photobucket.com/albums/z...psqcbtqlti.jpg
http://i818.photobucket.com/albums/z...psanuvmctm.jpg
http://i818.photobucket.com/albums/z...pskekyoyso.jpg
அகத்தியரின் லலிதா நவரத்தின மாலை 4 - பவழம்
"சிந்தை நிறம்ப வளம் பொழி பாரோ
தேம் பொழி லாமிது செய்தவ யாரோ "
அம்பிகை நல்ல அறிவினை தரக்கூடியவள் - மழை போல அந்த உயர்ந்த அறிவை தருபவள் யாரோ அவளை நமஸ்கரிக்கிறேன் ..
நமது எண்ணங்கள்
அன்னை அறிவை மட்டுமா நமக்குத்தருகிறாள் , நல்ல பண்புகள் , எல்லோரயும் சமமாக நினைக்கும் சுபாவம் , சுய நலம் , தற்பெருமை இல்லாத அதே சமயத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இத்தனையும் அல்லவா நமக்கு ஊட்டுகிறாள் - இதனால் பவழமும் அவளிடம் , வயிரம் , முத்துக்கள், நீலம் தோற்றதைப்போன்று தோற்றுப்போய் விடுகிறது . அம்பிகையை விட அன்னை உயர்ந்தவள் ஆகுகிறாள் இங்கே .
உண்மை சம்பவம் 11 :
என் நண்பனின் அன்னை எங்கள் எல்லோரிடமும் முடிந்தவரை தருமம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் - ஒரு முறை மிகுந்த ஏழ்மை நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் , எங்களிடம் சொல்வதைப்போலவே தருமம் முடிந்தவரை செய் என்றாள் - அவன் சிரித்தான் - " அம்மா என் தினக்கூலி ரூபாய் 10 முதல் 30 வரியும் தான் - சராசரியாக மாதத்திற்கு ருபாய் 750 லிருந்து 800 வரைக்கிடைக்கலாம் - என்னால் எப்படி அம்மா தருமம் செய்ய முடியும் ? "
அந்த தாய் கொடுத்த அறிவுரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் கூட கிடைத்திருக்காது --- " தம்பி உன்னால் ஒரு ருபாய் தானம் செய்ய முடியுமா தினமும் ? " அவன் சொன்னான் - " முடியும் அம்மா "
" அது போதும் ! ஒரு காரியம் செய் - மளிகை கடைக்கு செல்- ஒரு ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை வாங்கு - அதை ஒரு எறும்பு புற்றில் போடு - அங்கே இருக்கும் ஆயிரம் எறும்புகளின் வயிறு நிறையட்டும் . யார் சொன்னது , மனிதர்கள் வயிறுதான் நிறைய வேண்டும் என்று ? அன்ன தானத்திற்கு மேல் ஒரு சிறந்த தானம் இல்லையப்பா !"
அந்த ஏழை இன்று ஒரு கம்பெனியின் முதலாளி - அந்த அன்னை சொன்ன அறிவுரை அவனை ஒரு மாடி வீட்டு செல்வந்தனாகியது .....
"பவழ நிறம் அவன் செவ்விதழ் "----- திருமங்கை ஆழ்வார் - உருக வைக்கும் ரங்கனின் நினைப்பு .....
https://youtu.be/l9dg_SPhdxM
காதுகளில் தென் பாயும் அடுத்த பாடல் உங்களுக்காக
https://youtu.be/oFLYvDYxGls
கருவின் கரு - பதிவு 85
பவழம் ( Coral)
https://youtu.be/ldnKyyfyI88 ( repeat )
https://youtu.be/qZP1-W-f_Fg
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை...
https://www.youtube.com/watch?v=FPcypPogwCA
Thanks to Banu Oussaine Issoup & youtube for the video, MSV for the amazing composition
and Balu for the superb singing! :)
நன்றி ராகதேவன். என்ன ஒரு அருமையான பாடல்! இப்பாடல் பற்றி பாலா தொடரில் விரைவில் வரும்.
இருந்தாலும் மனம் கேட்கவில்லை
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
நான் வாவென அழைக்கையில் விரைந்'தோடி'
வந்து தழுவிடும் தேவ மனோகரி
ஆ(யா)ரபிமனமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன் போல் பாவை இல்லை
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்க
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
ராகத்தின் பெயர்களைக் கொண்டு அருமையான ராகத்தில் ரகளை பாட்டு ராகதேவன் சார். அளித்ததற்கு மீண்டும் நன்றி!
vaNakkam thiru Vasudevan 3135 :)
It was indeed a pleasure to post one of my favorite Balu songs. By the way, who wrote the lyrics? I am sure it was Kannadasan; but a friend of mine says it was Vaali!
... and the song reminds me of one of my very dear friends! :)
ராகதேவன் சார்
'உனை என் வசம் தாவென நான் கேட்க' வரியின் போது 'தா' என்பதை பாலு 'தா' என்று வல்லினத்தில் உச்சரிப்பார். கவனித்தீர்களா! சரியோ? தவறோ?:)
ராகதேவன் சார்,
இன்று முழுக்க இப்பாடலை முணுமுணுக்கும் படி செய்து வைத்து விட்டீர்களே!:)
ரவி
பவழம்... அருமையான ரத்தினம்.. பாடல்களும் அதே போல்..
இதோ மறக்க முடியாத பவழம் ... இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் இசையரசியின் குரல்களில்
பவழ மணித் தேரேறி பவனி வரும் தென்றலே..
[ஆஹா.. சி.க. சாரின் கற்பனைக்கு செம தீனி ]
http://www.inbaminge.com/t/n/Neram%20Nalla%20Neram/
அபூர்வ கானங்கள்
டி.எம்.எஸ். பாடி நடித்து பாடல் காட்சி.. இசைக் குழுவை நடத்துபவர், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜெயவிஜயா.
பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஷண்முகப்ரியா
https://www.youtube.com/watch?v=RW7TP50y68A
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
வாசுசார்..அதகளம் பண்ணிவிட்டீர்கள் மு.கு பாட்டை.. எனக்கு படமெல்லாம் எப்படி என்று தெரியாது. .இந்தப் பாட்டு சின்னவயதில் கேட்டிருப்பேனா எனவும் நினைவில்லை..இங்கு நமக்காகத் தேடியபோது தான் கேட்டேன் சில தினங்கள் முன்..பச்சக் கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது- தில் தடுகனே தூ வில் அனுஷ்கா ஷர்மா ரன்பீர் சிங்கிற்குக் கொடுக்கும் லிப் லாக்கைப் போல (படம் பார்க்கவில்லை எனில் பார்க்கவும்..கொஞ்சம் நீளம் ஆனால் நைஸ்)- அழகான விவரணைக்கு தாங்க்ஸ்..
பவழம் நு (கோரல் கொஞ்சம் காஸ்ட்லி ஸ்டோன் தெரியுமோ) பார்த்தவுடனே ஆஹா அழகான பாட்டுக்கள் இருக்கேன்ன்னு நினைச்சேன்.. எல்லாம் கொடுத்துட்டீங்க ரவி.. மு.கு.வா பாட்டுக்கும் தாங்க்ஸ்
ராகவேந்தர் சார்..அந்தப் பாட்டுக் கேட்டதில்லையே.. சரி வீட் போய்க் கேக்கறேன்.. முதல்வரியே இன் ட்ரஸ்டிங்கா இருக்கு
ராகதேவன்..இனிய சர்ப்ரைஸ்.. நீ ஒரு ராக மாலிகை.. எனக்கும் பிடிக்கும் தாங்க்ஸ் :)
வியாழன் தான் போகிறேன் லீவில் எனில் .. உஷார் அதுவரை வருவேன் :)
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..
ராகதேவன் சரியா.. சரி சரி குருதட்சனையா இன்னோர் பாட் போடுங்க ( ஆஹா சிஷ்யப் புள்ளைங்க எண்ணிக்கை ஜாஸ்தி ஆவுதே!) :)
ராகதேவன் தனக்கு தமிழ் வராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது எழுத்துக்கள் எல்லாமே அவர் ஒரு சிறந்த தமிழர் என்று நிரூபிக்கவே செய்கிறது.
வணக்கம் ஜி
'த' வல்லினம் சின்னா. சரி! அதையே இன்னும் 'த' என்று மிக வன்மையாக உச்சரிப்பார் பாலா. 'த' வை இன்னும் பிளாக்காகக் காட்டியிருக்கிறேன் பாருங்கள். தாமரைப் பூக்களை தாமரைப் பூக்கள் என்று உச்சரிக்க இயலாதே.:)
ஆரம்பத்தில் பாலு சில வார்த்தைகளையும் எழுத்துக்களையும் தவறாக உச்சரித்திருப்பார். போக போக சரியாக்கிகொண்டார் .
டபக்குன்னு மனசுல பட்ட பாட்டு செந்தமிழில் ஒரு பாட்டெழுதி.. கெடைக்கலை.. ஆனா எஸ்பிபி..மெல்ல வரும். வாசு சார் கிட்டக்க இருந்து..:)
இசை அமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது ஒரு symbiotic உறவே. நௌஷட் ஒரு விஸ்வநாதன்-ராமமூர்த்தி பக்தர். விஸ்வநாதன்-ராமமூர்த்தியோ நௌஷத் அவர்களை குரு போல பாவிப்பவர்கள். Mutual Admiration Group .நௌஷட் சாத்தி படத்தில் பாலும் பழமும் போல தர முடியவில்லை என்று குறிப்பிட்டதாக ஞாபகம்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,சுப பந்துவராளி ராகத்தில் அவர்கள் பாலும் பழமும்(1961) படத்தில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா என்று முயற்சி செய்தனர். பல அற்புத பாடல்கள் நிறைந்த அந்த படத்தில் ஏனோ இந்த பாடல் சுமாராகவே எடு பட்டது. பாடல் நல்ல பாடல் என்ற போதும் ,ஒரு முழுமை missing .பிறகு 1964 இல் leader என்ற படம் நௌஷட் இசையமைப்பில் பேச பட்ட படம்.இதில் லலித் என்று ஹிந்துஸ்தானி ராகத்தில் ஒரு பாடல்.(ஏக் ஷஹன் ஷா ,ரபி-லதா)
http://www.bing.com/videos/search?q=...995E7D3F662F76
ஆஹா ,இணை ,இந்த feel ,melody ,ராக கூறுகள் ,சுப பந்துவராளியின் சில சங்கதிகள்,காதலின் உருக்கம் ,காலத்தை வென்று நிற்கும் பாடல் தயார்.உன்னை நான் சந்தித்தேன்(1965) .சுசிலாவின் அற்புத மாய குரலின் உருக்கம் நிறைந்த பிரிவின் துயர்,காதலின் போக்கு,எதிர்பார்ப்பு .
பிறகு இதனை மிஞ்சும் ஆட்டுவித்தால் யாரொருவர்(1975) இதே சுபபந்துவராளியில்.சௌந்தரராஜன் ,சுயவிரக்கம்,சுய விளக்கம்,தத்துவம் சார்ந்த சுய ஆறுதல் கலந்து பாட ,மற்ற பாடல்களுக்கு அமையாத இன்னொன்று நடிகர்திலகம்.ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவர்,கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நண்பன் குழந்தையை சட்டென்று நிலைக்கு வராமல், சுதாரிக்கும் அழகு. புது பரிமாணம் கண்ட பாடல்.
https://www.youtube.com/watch?v=SPuXeYJcXhA
https://www.youtube.com/watch?v=K0kaOdXV21g
https://www.youtube.com/watch?v=3erd1grA2y0
ராப் இசை கொடி கட்டி பறந்த காலமது
கணவனுடன் ஒரு விருந்துக்கு செல்கிறாள் மனைவி
தலைவிரி கோலமாக எல்லோரும் ஆடிக்கொண்டிருக்க மனைவி பொருக்க முடியாமல் நிறுத்துங்கள் என்று கத்தி
நம் மண்ணின் பெருமையை பாட்டாக படிக்கிறாள்
https://www.youtube.com/watch?v=mg4CHkvyyUo
டியர் சின்னக்கண்ணன் சார்,
சைக்ளோன் பற்றி இவ்வளவு பில்டப் கொடுக்கும்போதே நினைத்தேன், அது உங்களை ஏமாற்றி விட்டு வேறு பக்கம் போய் விடுமென்று. ஆனால் சொல்லவில்லை. சொல்லப்போய் அது மாதிரி நடக்கப்போய், எதுக்கு வம்பு. ஏற்கெனவே திரியில் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லபேரு.
ஆனால் புயல் வரலைன்னு வருத்தப்படுற ஆள் நீங்க ஒருவராகத்தான் இருக்கும். அந்த அளவு வெயில் வாட்டிஎடுக்குதுன்னு நினைக்கிறேன். இங்கும் அப்படித்தான்.
தவிர நான் வெண்பா இலக்கணம் படித்தவன் அல்ல. உங்கள் வெண்பாக்களை படித்துப் பார்த்து 'ஓஹோ வெண்பா இப்படித்தான் எழுதணும் போலும்' என்று எழுதிப் பார்த்தேன். சரி, வெண்பாவில் சேர்க்கத் தகுதியில்லை என்றாலும் 'வெறும்பா' விலாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
எனது தமிழில் ஏன் எல்லோருக்கும் சந்தேகம் என்று தெரியவில்லை. நான் தமிழ் மட்டுமே தெரிந்த தமிழன். தமிழ் எழுதத் தெரியாதவன் அல்ல. ஆனால் அதை எப்படி இணையத்தில் சேர்ப்பது என்று வழி தெரியாமல் விழித்தவன். அன்பு நண்பர் பிரபுராம் வழிகாட்டினார். அதனால் என இணையத்தமிழுக்கு அவர்தான் குரு. என முதல் தமிழ்ப் பதிவைக்கூட அவருக்கே சமர்ப்பித்தேன்.
'பாடல்கள் பற்றி அலசும் இடத்தில் இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறான்' என்று யாரோ அடிக்க வருகிறார்கள். ஆகவே விடு ஜூட்.
//பாடல்கள் பற்றி அலசும் இடத்தில் இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறான்' என்று யாரோ அடிக்க வருகிறார்கள். ஆகவே விடு ஜூட்.// அன்பின் ஆதிராம்..உங்கள் தமிழில் சந்தேகம் இல்லை.. நன்றாகவே இருக்கிறது.. சரி அதைவிடுங்கள்
சுயபுராணம் எல்லாம் பாடலாம் தான்.. நான் பாடாததா.(எல்லாரும் எவ்ளோ பொறுமையா இருக்காங்க தெரியுமா :) ).என்ன அத்துடன் ஒரு பாட் போட்டு விடுங்கள் எழுத்தில்.. அல்லது காணொளியாய்.. அம்புட்டு தான் ..அதான் இங்கே கண்டிஷனே..
அருமை கோபால் சார் - உங்கள் முதல் பதிவே கலக்குகிறது - ரசித்துப்படித்தேன் - நன்றி
திரு ராகதேவன் - உங்களைப்பற்றி மிகவும் உயர்வாக வாசு சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் - உங்கள் வரவு இந்த திரியில் நல்வரவாகட்டும் .
அன்புடன்
ரவி
Ck - "எங்கேயோ போயிட்டிங்க " என்று சில நாட்களுக்கு முன் உங்களை பற்றிக்குறிப்பிட்டிருந்தேன் - உண்மையில் இந்த ஒரு மாதத்தில் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று தெரிகிறது ... ம்ம் எல்லாம் மாய மோதிரமும் , பாரதியும் செய்யும் வேளை .. உங்கள் விடுமுறை அருமையாக அமைய வாழ்த்துக்கள் .
நன்றி ராகவேந்திரா சார் - பவழத்தை ரசித்தது மட்டும் அல்லாமல் விட்டுப்போன பாடலையும் அருமையாக பதிவிட்டதற்கு