திண்டுக்கல் தேர்தல்
http://i57.tinypic.com/2mwzcps.jpg
http://i62.tinypic.com/34dldgo.jpg
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
Printable View
திண்டுக்கல் தேர்தல்
http://i57.tinypic.com/2mwzcps.jpg
http://i62.tinypic.com/34dldgo.jpg
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
‘பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை;
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை...’
என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். வியப்பால் விரிந்த விழிகளை இன்னும் சுருக்க முடியவில்லை.
சென்னை பிளாசா, ஸ்ரீநிவாசா, புவனேஸ்வரி திரையரங்குகளில் 75 நாட்களும் பிளாசா, ஸ்ரீநிவாசா திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடிய படகோட்டி வெற்றித் திரைக் காவியத்தின் 75 மற்றும் 100வது நாள் விளம்பரங்களை வெளியிட்டு, நல்லோர், நடுநிலையாளர், மனசாட்சி உள்ளோரின் கண்களுக்கு காணிக்கையாக்கி, புது ஆதாரக் குண்டு மூலம் பொய் கோட்டைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி, உண்மையை உலகுக்கு உரத்து உரைத்திட்ட தலைவரின் புகழ்பாடும் தங்கம், வேலூர் கோட்டை சிங்கம் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்... ம்.....ம்... கொன்னுட்டேள் போங்கோ!
இந்த அரிய ஆவணத்தை தந்து உண்மை வெளிவர உதவிய திரு.பாஸ்கரன், திரு.ஸ்ரீனிவாசன் ஆகியோரின் கர மலர்களில் என் கண் மலர் பதித்து வணங்குகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கறுப்பு வெள்ளை படமான தலைவரின் நான் ஆணையிட்டால் 9 நாட்கள் ஓடி ரூ.1,27,500 வசூல் புரட்சியை நிகழ்த்தியுள்ள தகவலை அளித்த திரு.எஸ்.குமார் மற்றும் அந்த தகவலை பதிவிட்டு மதுரை தலைவரின் கோட்டை என்ற உண்மையை உணர்த்தியுள்ள திரு.லோகநாதன் ஆகியோருக்கு நன்றிகள். அது சரி... தமிழகமே தலைவரின் கோட்டை என்னும்போது மதுரை மட்டும் என்ன.... மலேசியாவிலா இருக்கிறது?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
PADAHOTTI, Makkalthilagam MGR's third but Gnvelmani's, Saravana Films- First Colour Movie...It hits a tremondous level on that time not only today also... Today's its Commercial value approxmately Rs.3 Crores...
cial
1964ம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகி சோடை போன திரைப்படங்களின் பட்டியலில் நமது மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் "படகோட்டி” இல்லை என்பது தனிச் சிறப்பு.
முதல் வெளியீட்டின் சாதனை :
அ. சென்னை பிளாசா அரங்கில் l௦௦ நாட்கள் ஓடியது.
ஆ. சென்னை, கிரவுன்,புவனேசுவரி அரங்குகளில் 12 வாரங்கள் ஓடி பின்பு சீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு இணைந்த 1௦௦ நாட்களை கடந்தது.
இ. தமிழகம் முழுவதும் 38 அரங்குகளில் 5௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து வசூல் சாதனை புரிந்தது.
ஈ. நெல்லை ரத்னா அரங்கில் 77 நாட்களை கடந்தது.
உ. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகரில் 3 அரங்குகளில் 5௦ நாட்கள் கடந்து ஓடியது.
ஊ. மதுரை நியூ சினிமா அரங்கில் 92 நாட்கள் வெற்றிகரமாக ஓடி புதிய அத்தியாயம் படைத்தது.
எ. திருச்சியிலும் 12 வாரங்கள் கடந்தது.
ஏ. சேலம் மாநகரில் ஒரு அரங்கில் 84 நாட்களும் மற்றொரு அரங்கில் பின்னர் மாற்றப்பட்டு (ஷிப்டிங் செய்யப்பட்டு) 36 நாட்களும் ஓடி மொத்தம் 1௦௦ நாட்களை கடந்தது.
ஏற்கனவே, 1982 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் புரட்சிகரமான சாதனைகள் புரிந்து வரலாறு படைத்த செய்தியினை சில மாதங்களுக்கு முன்பு இத்திரியின் வேறொரு பாகத்தில் பதிவுட்டுள்ளேன்.
மறு வெளியீட்டில், சென்னையில் 1982 ம் ஆண்டில் மட்டும் பல அரங்குகளில் தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
1964 ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் 7 படங்களும் மறுவெளியீடுகளில் இன்றும் சக்கை போடு போட்டு வருகிறது.
இதுதான் மக்கள் திலகத்தின் மகிமை.
இதுவும் தெரிந்ததே!
படகோட்டி வெற்றிக் காவியத்தில் படகுபோட்டி காட்சியில் நாகேஷ் ‘இதுவும் தெரிந்ததே’ என்று ஒவ்வொன்றாக கூறுவார். அதே பாணியில் எனது சுருக்கமான கண்ணோட்டம்
கீ
ழே
* ஜி.என்.வேலுமணி தயாரித்த முதல் வண்ணப்படம் படகோட்டி என்பது தெரிந்ததே.
* திசைக்கு ஒரு படம் வரலாம் இசைக்கு ஒரு படம் என்பது தெரிந்ததே.
*சமூகப் படமான இந்தப் படம் முழுவதும் தலைவர் பேண்ட் அணியாமல் வருவார் என்பது தெரிந்ததே.
* மீனவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை விளக்கும் வகையில் படம் முழுவதும் செருப்பே அணியாமல் (என்ன ஒரு ரியலிசம்) தலைவர் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.
*போனவன் போனான்டி பாடலில் வரும் ‘ஹொய் ஹொய்யா..’ ஹம்மிங்கைப் போலவே, திரு.ரஜினிகாந்த் ‘கதாநாயகனாக’ நடித்த விடுதலை படத்தில் வரும் நீலக்குயில்கள் ரெண்டு பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் இருக்கும் என்பது தெரிந்ததே.
*படகுப் போட்டி காட்சியில், நீலமேகம் (நம்பியார்) தலைமை தாங்குவார் என்பது தெரிந்ததே என்று நாகேஷ் கூறும்போது எதேச்சையாக நம்பியாரின் நாய் குலைக்கும். அப்போது நாகேஷ் ‘இதுவும் தெரிந்ததே’ என்று கூறுவார். அந்த அற்புத கலைஞனுக்கு என்ன ஒரு டைமிங் சென்ஸ் என்பதும் தெரிந்ததே.
*தலைவர் - சரோஜாதேவி காதல் காட்சிகளில் இருவருக்குமிடையே இப்போது பரவலாக சொல்லப்படும் ‘வேதியியல்’... அதாங்க கெமிஸ்ட்ரி அருமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும் என்பது தெரிந்ததே.
*தனது மக்களுக்காக காதலை தியாகம் செய்வதாக தலைவர் கூறும் காட்சியில் ‘நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை..’ என்று கூறுவார். அவர் மக்களின் அடிமையாக வாழ்ந்த தலைவன் என்பதும் தெரிந்ததே.
*படகோட்டி திரைக்காவியம் 100 நாள் கொண்டாடிய வெற்றிக் காவியம் என்பதும் இன்று உலகிற்கே தெரிந்ததே!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்