-
3rd November 2014, 04:35 PM
#11
Junior Member
Veteran Hubber
1964ம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகி சோடை போன திரைப்படங்களின் பட்டியலில் நமது மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் "படகோட்டி” இல்லை என்பது தனிச் சிறப்பு.
முதல் வெளியீட்டின் சாதனை :
அ. சென்னை பிளாசா அரங்கில் l௦௦ நாட்கள் ஓடியது.
ஆ. சென்னை, கிரவுன்,புவனேசுவரி அரங்குகளில் 12 வாரங்கள் ஓடி பின்பு சீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு இணைந்த 1௦௦ நாட்களை கடந்தது.
இ. தமிழகம் முழுவதும் 38 அரங்குகளில் 5௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து வசூல் சாதனை புரிந்தது.
ஈ. நெல்லை ரத்னா அரங்கில் 77 நாட்களை கடந்தது.
உ. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகரில் 3 அரங்குகளில் 5௦ நாட்கள் கடந்து ஓடியது.
ஊ. மதுரை நியூ சினிமா அரங்கில் 92 நாட்கள் வெற்றிகரமாக ஓடி புதிய அத்தியாயம் படைத்தது.
எ. திருச்சியிலும் 12 வாரங்கள் கடந்தது.
ஏ. சேலம் மாநகரில் ஒரு அரங்கில் 84 நாட்களும் மற்றொரு அரங்கில் பின்னர் மாற்றப்பட்டு (ஷிப்டிங் செய்யப்பட்டு) 36 நாட்களும் ஓடி மொத்தம் 1௦௦ நாட்களை கடந்தது.
ஏற்கனவே, 1982 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் புரட்சிகரமான சாதனைகள் புரிந்து வரலாறு படைத்த செய்தியினை சில மாதங்களுக்கு முன்பு இத்திரியின் வேறொரு பாகத்தில் பதிவுட்டுள்ளேன்.
மறு வெளியீட்டில், சென்னையில் 1982 ம் ஆண்டில் மட்டும் பல அரங்குகளில் தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
1964 ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் 7 படங்களும் மறுவெளியீடுகளில் இன்றும் சக்கை போடு போட்டு வருகிறது.
இதுதான் மக்கள் திலகத்தின் மகிமை.
Last edited by makkal thilagam mgr; 3rd November 2014 at 04:49 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd November 2014 04:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks