சோக "என்னடி ராக்கம்மா"
https://www.youtube.com/watch?featur...&v=ZIpNh34pwsg
Printable View
சோக "என்னடி ராக்கம்மா"
https://www.youtube.com/watch?featur...&v=ZIpNh34pwsg
நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நான் சுட்டிக் காட்டியது திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள். நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். சொல்லப் போனால் நான் கிருஷ்ணமூர்த்தி அருகில் அமர்ந்து தான் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ராமஜெயம் அவர்களும் ஆனந்த் அவர்களும் மேடையில் கௌரவிக்கப் பட்டார்கள்.Quote:
ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.
மற்றவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசுகிறார்களா என்பதில் தான் என் கவனம் சென்றது. அது தொடர்பாகத் தான் என் பதிவும் உள்ளது.
//ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம் // ஹி ஹி
ஆழமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆலம் இருக்கும் அழகு!!
ல ழ வை மாற்றிப் போட்டா
ஆலமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆழம் இருக்கும் அழகு
ஹை..ரெண்டுமே நன்னா இருக்கே :)
பலமணி நேரத்தை பாங்காய் செலவிட்டு
அழகாய்த்தான் படைத்தேன் ஆலத்தின் பதிவுதன்னை
எந்தக்கோப்பில் சேமித்தேன் என இன்னமும் தேடுகிறேன்
கிடைத்ததும் பதிக்கிறேன், இல்லையேல் மீண்டும் படைக்கிறேன்.
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
வசந்தமாளிகை தன்னில் கிண்ணத்தை ஏந்தியவள்
என்னைப்போல் ஒருவனிடம் வேலாலே விழிகளில்
காமம் கலந்த காதலை சிந்தியவள்
மன்னவன் வந்தானடியில் ராஜஸ்தானில் ராஜாவாகப் பொறந்த
யாரோ ஒருவனைத் தேடியவள்... வருவாள் விரைவில்
வராமல் எங்கே போவாள்...... அதுவரை
தூக்கம் வராமல் ஏக்கத்தில் தொலையாதீர்
மன்மத லீலையில் மயக்கம் கொள்ளாதீர்
நான் சொல்ல வந்தது என்னவென்றால்......
(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....
Mr. Karthik ஹி ஹி :)
ஊடியே செல்லும் உணர்ச்சிகள் தானுந்தி
தேடிப் பதிவீர் தெளிவு..
NO OTHER WAY
LET GOALJI ...................................
http://youtu.be/n7Qzz_2u-bQ
டியர் கார்த்திக் சார்,
ஆலத்தின் பதிவை
ஆர்வமாகக் கேட்டபோதும்
கோபம் கொப்பளிக்க
கோபால் சார் கேட்டபோதும்
பதிவர்கள் பலரும்
பவ்யமாய் கேட்டபோதும்
அய்ம்பதுக்கு மேல் வரும்
அதீத ஆசை என்றும்
அவ்வப்போது வரும் ஆர்வக் கோளாறு என்றும்
அலட்சியமாய் இருந்துவிட்டேன் - இன்று
ஆலத்தைப் பற்றிய தங்களின்
ஆண்மையான கவிதையால்
எப்போது பதிவு வரும் என்ற
ஏக்கம் எனக்குள்ளும்.
இனிய நண்பர் திரு கோபால் சார்
அந்நிய மண்ணில் ஆலமின் நினைவால் வாடும் உங்களின் ஏக்கம் புரிந்தது .
நண்பர்களின் கவிதைகள் + படங்கள் + பாடல் எல்லாமே உங்களை எங்கோ அழைத்து சென்று இருக்கும் என்று நினைக்கிறேன் .
இப்போது இந்த சமயத்தில் உங்களின் நிலை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் .
இந்த பாடல் ...... உங்களை நினைவு படுத்துகிறது [ ஜாலியான பாடல் . நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் ]
http://youtu.be/60uvrackjS8