-
30th September 2013, 02:11 PM
#11
Senior Member
Veteran Hubber
பலமணி நேரத்தை பாங்காய் செலவிட்டு
அழகாய்த்தான் படைத்தேன் ஆலத்தின் பதிவுதன்னை
எந்தக்கோப்பில் சேமித்தேன் என இன்னமும் தேடுகிறேன்
கிடைத்ததும் பதிக்கிறேன், இல்லையேல் மீண்டும் படைக்கிறேன்.
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
வசந்தமாளிகை தன்னில் கிண்ணத்தை ஏந்தியவள்
என்னைப்போல் ஒருவனிடம் வேலாலே விழிகளில்
காமம் கலந்த காதலை சிந்தியவள்
மன்னவன் வந்தானடியில் ராஜஸ்தானில் ராஜாவாகப் பொறந்த
யாரோ ஒருவனைத் தேடியவள்... வருவாள் விரைவில்
வராமல் எங்கே போவாள்...... அதுவரை
தூக்கம் வராமல் ஏக்கத்தில் தொலையாதீர்
மன்மத லீலையில் மயக்கம் கொள்ளாதீர்
நான் சொல்ல வந்தது என்னவென்றால்......
(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....
-
30th September 2013 02:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks