-
30th September 2013, 01:28 PM
#11
Senior Member
Seasoned Hubber
ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.
நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நான் சுட்டிக் காட்டியது திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள். நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். சொல்லப் போனால் நான் கிருஷ்ணமூர்த்தி அருகில் அமர்ந்து தான் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ராமஜெயம் அவர்களும் ஆனந்த் அவர்களும் மேடையில் கௌரவிக்கப் பட்டார்கள்.
மற்றவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசுகிறார்களா என்பதில் தான் என் கவனம் சென்றது. அது தொடர்பாகத் தான் என் பதிவும் உள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2013 01:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks