//(கல்லானாலும் கிம்பர்லி சுரங்க கல்லாவேன்! நான்,அணிலானாலும் அம்பானி வீட்டு அனிலாவேன் என்ற பிரசித்தி பெற்ற tms பாடல் ஒலிக்கிறது)// கண்பத் சார் ஹி ஹி :)
Printable View
//(கல்லானாலும் கிம்பர்லி சுரங்க கல்லாவேன்! நான்,அணிலானாலும் அம்பானி வீட்டு அனிலாவேன் என்ற பிரசித்தி பெற்ற tms பாடல் ஒலிக்கிறது)// கண்பத் சார் ஹி ஹி :)
டியர் கண்பத் சார்,
தங்களுடைய ரங்கன், செளத்திரி கேரக்டர்கள் வர்ணனை அருமை. தாங்கள் கூறியபடி, நடிகர்திலகத்தின் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும், அவருக்கு ரசிகர்களை இருக்கிறோம் என்று பெருமைப்ப்படும்போதும், அந்த பாக்கியத்தைப் பெற்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.
என்னைப் போல் ஒருவன் விழாத் தொகுப்பு அருமை. மலரும் நினைவுகளாக கர்ணன் விழாக்களையும் அளித்ததற்கு நன்றி.Quote:
Originally Posted by [B
இது என்ன சில பட தலைப்புகளுக்கு மட்டும் போராட்டம்?இதிலும் ஓர வஞ்சனையா?(அதிலும் நமது ஆட்களே)
திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் தலைப்புகளுக்கு போராடியவர்களுக்கு ,ராஜா ராணி என்பது நடிகர்திலகத்தின் பிரபல படத்தின் தலைப்பு என்பது தெரியாது போனது ஏனோ?(பீம்சிங் முதல் முதலாக இணைந்த அற்புத படம்)
இது என்ன தேர்ந்தெடுத்த போராட்டங்கள்?
டியர் முரளி சார்,
என்ன ஒரு தீர்க்கமான ஆய்வு, திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர் படங்களின் மறு வெளியீடுகளின்போது சென்னை முதல் குமரிவரை அனைத்து ஊர்களிலும் நடந்த உண்மைகளை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள். தயாரிப்பாளர் தரப்பு, விநியோகஸ்தர் தரப்பு, அரங்க உரிமையாளர் தரப்பு என அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, நடந்தவைகளை அப்படியே புட்டுப்புட்டு வைத்ததோடு, இன்னும் எப்படியெல்லாம் செய்திருக்க வேண்டும் என்ற அருமையான ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறீர்கள். பதிப்பதில் உள்ள சிரமங்களைவிட அவற்றை திரட்டுவதில் இருந்திருக்கக் கூடிய சிரமங்கள் அதிகம் என்பது உண்மை.
பாசமலர் பட வெளியீட்டில் இருந்த சிரமங்களை அறியாமல் சிலர் அப்படத்தின் சமீபத்திய ஓட்டத்தில் ஏற்பட்ட குறைகளை (இல்லாதததும் பொல்லாததும் கூட சேர்த்து), மண்டை மண்டை சைஸ் எழுத்துக்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்கள். (நமது திரியில் அல்ல).
தொலைக்கட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் / டிவிடிக்களில் மிகவும் தெளிவாக கிடைக்கக்கூடிய படங்களை திரையரங்குகளில் திரையிடும்போது தரம் நன்றாக இருப்பதும், சரியான முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதும் போன்ற விஷயங்களை கையாண்டால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற முடியும்.
மூன்று வெள்ளிவிழா படங்களின் மறு வெளியீடுகளின் பின்னணி நிலவரங்களை தெளிவாக உலகுக்கு உணர்த்திய தங்களுக்கு மிக்க நன்றி....
அன்புள்ள சந்திரசேகர் சார்!
மிக்க நன்றி.
நாம் எனும் வார்த்தை உங்கள் பெருந்தன்மையையும் பேரன்பையும் காட்டுகிறது என்பதை
உங்கள் Profile Photo வே நிரூபிக்கிறது.
நீங்கள் பெற்ற பாக்கியம் வேறு.
உங்களுடன் அளவளாவும் பாக்கியம் மட்டுமே எனக்கு.
மரியாதையுடன்,
'அன்னை இல்லம்' நுழைந்தோர்கள் எல்லார்க்கும் அடியேன்.
டியர் கோபால் சார்,
திரைப்பட தலைப்பைப் பொருத்தவரை, அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு (25 ஆண்டுகள்) அந்தத் தலைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் அந்தத் தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. ஏ.வி.எம், ஏ.பி.என் போன்ற சில நிறுவனங்களே தங்களுடைய திரைப்படங்களுடைய தலைப்பை புதுப்பித்து வருகிறார்கள். சரஸ்வதி சபதம் தலைப்புகூட ஏ.பி.என் மகன் பரமசிவன் அவர்களுடைய ஒப்புதலோடேயே வைக்கப்பட்டதாக அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமாதிரி திரைப்படத்தின் தலைப்புகள் புதுப்பிக்கப்படாவிட்டால் அதே பெயரில் திரைப்படம் எடுப்பதை சட்ட ரீதியாக எதிர்க்கமுடியாது. சரஸ்வதி சபதம் தலைப்பைக் கூட எதிர்த்து வழக்கறிஞர் நோட்டீஸ் 12 மாவட்டங்களிலிருந்து அனுப்பவைத்ததோடு (உங்க பாணியில் சொன்னால் - சும்மா பயம் காட்ட) , சென்சார் போர்டு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுக்கும் கடிதம் எழுதி நெருக்கடி கொடுக்கப்பட்டது. சென்சார் போர்டிலிருந்து எனக்கு வந்த கடிதத்தை பார்வைக்கு இனைத்துள்ளேன்.
இது மாதிரி முக்கிய திரைப்படத் தலைப்புகளில் மீண்டும் திரைப்படம் எடுப்பதைத் தடுக்கவேண்டும் என்றும் அத்தகைய பெயர்களைப் பதிவு செய்வதே தவிர்க்கப்படவேண்டும் என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏற்கனவே கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
சில தேர்ந்தெடுத்த படங்களுக்கு மட்டுமே போராடக் கூடிய காரண காரியங்கள் இருந்தன. கடவுளர்களை (திருவிளையாடல், சரஸ்வதி சபதம்) சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு அத்தகைய காரணங்கள் இருந்தன. அதேபோல வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசியத் தலைவர்களின் பெயரில் திரைப்படங்கள் எடுத்தால் எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும். சமூகப் படங்களை (கெளரவம், ராஜா ராணி) எதிர்ப்பது என்பது வெறும் கூசசலாகவே முடிந்துவிடக்கூடும். (ஆயிரத்தில் ஒருவன் பெயரில் கூட மீண்டும் திரைப்படம் வந்தது தங்களுக்கும் தெரியும்) உத்தம புத்திரன் திரைப்படம் முதலில் பி.யு.சின்னப்பா நடித்து, பின்னர் நடிகர்திலகம் நடித்து தற்போது தனுஷ் நடித்து என மூன்று திரைப்படங்கள் அதே பெயரில் வந்துவிட்டது.
இங்கு வெறும் எதிர்ப்பு என்பது மட்டுமல்ல. நம் எதிர்ப்பின் மூலம் அந்தப் படங்களின் பெயர்கள் மாற்றப்பட்டால்தான் அதில் அர்த்தம் இருக்கும். வெறும் அறிக்கை விட்டு எதிர்ப்பது என்பதல்ல.
இதன்மூலம் திரைப்படத் தலைப்பு சம்பந்தமாக சந்தேகம் இருப்பவர்களுக்கு (எனக்கு தெரிந்த அளவில்) விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
http://i1234.photobucket.com/albums/...psbdaf4dc2.jpg
டியர் சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய தங்கள் விவரமான பதிவுக்கு மிக்க நன்றி. ஸ்ரீரங்கம் விழாவின் சிறப்பு பற்றி இருவர் அழகாக எடுத்துரைத்திருந்தார்கள். அடுத்து திருப்பூரில் நடக்க இருக்கும் விழா, ஸ்ரீரங்கம் விழாவை மிஞ்ச வாழ்த்துக்கள்.
நமது கண்பட் சார் சொன்னதுபோல, உங்கள் அவதார் போட்டோவைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் சற்று பொறாமை ஏற்படுவது உண்மை. அந்த மகானை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் பாக்கியம் மட்டுமே கிடைக்கப் பெற்றவன் நான். (கிட்டேயே இருந்து, பேசி, மகிழ்ந்து.... என்ன ஒரு கொடுப்பினை தங்களுக்கு)......