-
4th October 2013, 06:57 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
நடிகர்திலகத்தின் மேதைமையை எவ்வளவோ விவரித்தாயிற்று. ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக....... அவர் மேதைமை புலப்படும்.
லட்ச கணக்கில் இருக்கே கோபால் சார்!
ரங்கன் தயங்கித் தயங்கி அந்த வீட்டினுள் நுழைகிறான்.
சில மாதங்களுக்கு முன்தான் அவன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பான்.
அந்த வீட்டின் எஜமானன் அவனுக்கு தந்தை; எஜமானியம்மாள் தாய்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் /சதிகள் அவனை அந்த நல்லவர்களிடமிருந்து பிரித்து விடும்
வீட்டில் நுழையும் அவனுக்கு அங்குள்ள ஒரு அமானுஷ்ய அமைதி கலக்கத்தை கொடுக்க,
கண்கள் பயத்துடன் நாலாபுறமும் சுழலும்.அதோ அங்கே அவன் தந்தையின் படம்..
ஆனால்,ஆனால்..... அதற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதே!
அந்த அதிர்ச்சி தாக்க, அப்படியே திரும்பும் அவன், அங்கு கீழே அமர்ந்திருக்கும் தாயைக் காண்கிறான்....
விதவைகோலத்தில்..
அப்படியே மனம் உடைந்து, இடி தாக்கியது போல “ஐயோ” என அலறிக்கொண்டு, கதறிக்கொண்டு,
வேரற்ற மரம் போல அவள் கால்களில் விழுகிறான்.
சில விநாடிகள்தான்!
பிறகு அந்த அழுகை போன இடம் தெரியவில்லை.
கண்களில் ஒரு வெற்றுப்பார்வை.
ஒரு காலியிடத்தை (vacuum)உருவாக்குவார் பாருங்கள்.!!
அனுபவித்தவர்களுக்கே தெரியும், ஒரு மாபெரும் சோகத்தை தொடர்வது இயலாமையின் பிரதிபலிப்பு..
இனி அழுது என்ன ஆகபோகிறது எனும் ஒரு விரக்தி கலந்த மனக்கசப்பு.
இப்படி ஒரு ஜீவனுள்ள, நம் கலாச்சாரம் கலந்த, ஆண்மகனின் உண்மையான சோகத்தை,
எந்த ஒரு நடிகனாலும் காட்ட முடியாது.பார்வையாளனை அப்படியே உலுக்கும் அந்த காட்சியில்
சோகத்திற்கு ஒரு இலக்கணமே படைக்கப்பட்டிருக்கும்.
இந்த spontaneity க்கு மறுபக்கம் செளத்திரியின் சோகம்.
காதல் மனைவியின் உடல் முன் அழக்கூடாது எனும் உறுதியுடன் வரும் போலீஸ் உயர் அதிகாரி
சிறிது சிறிதாக சிதைந்து கதறும் அந்த அற்புத காட்சி.
முந்தையது emotional fission என்றால் இரண்டாவது emotional fusion.
நடத்துபவரோ....
திரையுலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..
நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்!
Last edited by Ganpat; 4th October 2013 at 07:00 AM.
-
4th October 2013 06:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks