Mr Gopal Sir,
Wish you many more happy returns of the day.
Printable View
Mr Gopal Sir,
Wish you many more happy returns of the day.
Dear Mr.Sivaji senthil,
Thank you for your wishes. I am dreaming about the day of conferring life time achievement Oscar for our God.
Parthasarathy Sir,
Many thanks for your kind wishes.
Thank you vasudevan sir.
Wish you many more happy returns of the day to S.Gopal.
Happy birthday Gopal, S. Great that you share same birthdate with Kamal.
Thanks a lot Rakesh, Kalnayak .
Dear gopal sir,
wish you a very happy and cheerful birthday
அன்புள்ள திரு. Vankv அவர்களே (தங்களது பெயர்?),
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி.
நடிகர் திலகத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் / இருப்பார்கள்.
பத்து நாட்களுக்கு முன், வட இந்தியாவில் உள்ள லக்னோவுக்கு ஒரு வேலையாக என் குடும்பத்துடன் சென்றிருந்தோம். என்னுடைய நண்பர் மூலம் அங்குள்ள ஒருவருடைய உதவியால் சென்ற இடத்தில் சில வேலைகளை சுலபமாக முடிக்க முடிந்தது. மாலை அவருடைய வீட்டிற்குச் சென்று உரையாடிக் கொண்டிருந்த போது, அவ்வீட்டின் குடும்பத்தலைவி (அரசு உயர் பதவியில் வேலை செய்பவர்), நடிகர் திலகத்தைப் பற்றி பேசி, குறிப்பாக, "கர்ணன்" படத்தை சிலாகித்து நினைவு கூர்ந்தார்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
இந்தக் காட்சியைப் பற்றி அலை பேசியில் உங்களுடனும், திரு. ராகவேந்திரன் மற்றும் திரு. முரளி அவர்களிடமும் சொன்ன அதே விஷயம் தான்.
எப்படி இந்த விஷயம் சாத்தியப் பட்டது? கற்பனையும், நடித்துக் காட்டும் திறனும் மட்டும் இருந்தால் போதுமா? தொழில் நுட்ப விஷயங்களும் நுணுக்கங்களும் கூட தேவைப் படுகிறதே! இந்தக் காலக் கலைஞர்களுக்கு தொழில் நுட்பம் கிட்டத்தட்ட என்பது சதவிகிதம், நடிப்பும் திறமையும் தான்!!).
அந்த இரண்டு நிமிடக் காட்சியில், கடைசி சில நொடிகளுக்கு முன், ஒரு பத்து நொடிகள் மட்டுமே, வேறு முக ஒப்பனையில் வரும் காட்சியை மட்டும் பார்த்தோமேயானால், க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். லாங் ஷாட்டில் எடுத்திருந்தால், அது சாத்தியப் பட்டிருக்காது. ஆகவே, ரொம்பவும் சாதுர்யமாக யோசித்து, க்ளோசப்பில், எடுக்க வைத்து, அதற்கு முன் வரும் ஒன்றே முக்கால் நிமிடங்களுக்கு என்ன மாதிரியான எனர்ஜியையும், பாவனையையும் கையாண்டாரோ, அந்த எனர்ஜியையும், உணர்ச்சிகளையும் மட்டும் maintain செய்து எந்த உறுத்தலும் இல்லாமல் அந்த இரண்டு நிமிடக் காட்சியை யாரும் பெரிய அளவிற்கு கவனித்துக் குறை காண முடியாமல் செய்திருப்பார்.
இந்தக் காட்சியின் வெற்றிக்கு, படத் தொகுப்பாளரின் அறிய பங்களிப்பையும் நாம் பாராட்டியே தீர வேண்டும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்களுடைய "ஆலய மணி" ஆய்வு மிகவும் சிறப்பாக இருந்தது.
இருப்பினும் திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல், சில முக்கிய, புகழ் பெற்ற காட்சிகளையும் குறிப்பிட்டிருக்கலாம். ("எங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?").
இந்தப் படத்தைப் பற்றிய ஆய்வை நான் ஏற்கனவே "நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த பத்து படங்கள் - பிற மொழியிலும் எடுக்கப் பட்டவை" என்கிற தலைப்பில் எழுதியிருந்தேன்.
பல காட்சிகள் - தற்கொலை முயற்சிக்குப் பிறகு, எஸ்.எஸ்.ஆரும், தான் மணக்கவிருந்த சரோஜா தேவியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்து, பரவாயில்லை அவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று நினைத்து, அந்தத் திருமணத்திற்கு மற்றவருக்குத் தெரியாமல் வந்து, திருமணம் எஸ்.எஸ்.ஆருக்கும் விஜய குமாரிக்கும் என்று தெரிந்து சரோஜா தேவி, அவரை மறக்காமல் இருப்பதை அவர் பேசுவதன் மூலம் கேட்கும் போது, அவர் காட்டும் முக பாவனைகள்.. அப்பப்பா! கதவருகே காது கொடுத்துக் கேட்க ஆரம்பிக்கும் போது, சரோஜா தேவி அவரைப் பற்றிப் பேசத் துவங்கும் போது, அடுத்த வார்த்தை அவருடைய வாயிலிருந்து என்ன வரப் போகிறது என்பதை இவர் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பையும், அந்த ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தும் அழகும், அவரைப் பற்றிய நல்ல வார்த்தை வர, வர, இவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியும்....
கடைசியில், சரோஜா தேவி தற்கொலைக்குத் துணிந்து தற்கொலைப் பாறை மேல் நிற்கும் போது, கத்து கத்தென்று கத்தி கடைசியில் சரோஜா தேவி அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஓடி வர வர, இவர் ஓடும் ஓட்டம். கீழே விழுந்து எழுந்து ஓடும் ஓட்டம். அந்த ஓட்டத்தில் அவர் காட்டும், ஆனந்தம், அவசரம், துடிப்பு, குதூகலம், இவை எல்லாமும், அந்த நடக்க முடியாத முடவனின் நடையுடன்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், மனிதனின் மன வலிமையையும், இதை நிர்ணயிக்கிறது. இதை ஒரு அகழ்வாராய்ச்சி போல், 50 வருடங்களுக்கு முன்னரே, கதாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குனரும், நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரத்தை வைத்து செய்து காட்டினார்கள்.
When it comes to intensity, none can even think of Nadigar Thilagam.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் நடித்த
நீதிக்கு பின் பாசம் - குமரிகோட்டம் -உரிமைக்குரல்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்
நடிகர் திலகத்தின்
புதியபறவை -படித்தால் மட்டும் போதுமா -பாரதவிலாஸ்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்
பத்மநாபன் - புகழ் நாட்டில் குடியிருக்கும்
அன்பு நண்பர் திரு கோபால் அவர்களுக்கு எங்களது இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
http://i50.tinypic.com/14vs28x.gif
ஒரே முறைதான் உன்னோடு [உங்களோடு ] பேசி பார்த்தேன்
நீ [நீங்கள் ]ஒரு தனி பிறவி
என்றும் அன்புடன்
esvee
இனிய அதிர்ச்சி இதுதானோ? உன்னோடு என்றே சொல்லலாம்.உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் அரிய குண நலன்களை பற்றி கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் பேசும் போது ,இன்னும் அருமையாய் உணர்ந்தேன். முழு முதற்கடவுள் கணேசனின் ஆசி உங்களுக்கு முழுவதும் பூரணமாய் கிட்ட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி.
ராஜ ராஜ ராஜ ராஜ நடை
வால்மீகி ராமாயணத்தில் ராமனின் நடையை விளக்கும் போது நாலு வகை நடையை சிறப்பாக குறிப்பிடுவார். சிங்க நடை,புலி நடை,யானை நடை,எருது நடை என்று.
நடிப்பின் கடவுள் ஒருவர்தான் ராமனுக்கு பிறகு இந்த நான்கு வித ராஜ நடைகளையும் வித்யாசம் காட்டி நடந்தார்.பொத்தாம் பொதுவாக ராஜ நடை என்று ஒரே வகையாக நடக்காமல்(ப்ரித்வி ராஜ் கபூர் போல்) சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடிப்பின் உச்சத்தை காட்டினார்.
சிங்க நடை-தலைமை மாண்பை கம்பீரத்துடன் குறியிடும் நடை.உத்தம புத்திரன் பார்த்திபன் கடைசி காட்சியில் நடப்பது,ஹரிச்சந்த்ராவில் நடப்பது,கர்ணன் படத்தில் ராஜாவாக பதவியேற்கும் போது நடப்பது.
புலி நடை-அதிக பட்ச கோபத்தில்,சீற்றத்தில் நடப்பது. உத்தம புத்திரன் விக்ரமன் ,பார்த்திபனை பிடிப்பதில் கோட்டை விட்ட கோபத்தில், திருவிளையாடலில் தன பாடலில் பிழை சொன்ன கோபத்தில்.
யானை நடை-பெருமித நடை.திருவருட்செல்வர் நடை,கந்தன் கருணை நடை,ராமன் எத்தனை ராமனடி சிவாஜி நடை-சாதித்த பெருமிதம்.
எருது நடை-அகந்தையை,அலட்சியத்தை குறிப்பது. உத்தம புத்திரன் விக்ரமனின் பதவியேற்பு விழா நடை,வீரபாண்டிய கட்டபொம்மன் உச்ச காட்சி நடை.
நான் மிக மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு(1976 )பிறகு வந்த நடிப்பு கடவுள் சில காட்சிகள்-----
---ரோஜாவின் ராஜா படத்தில் சினிமா தியேட்டர் காட்சி. படி படியாய் மனநோய்க்கு ஆட்படும் அருமையான காட்சிகள்.
---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.
---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.
---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் போது ,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.
----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.
---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.
---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.
---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.
---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.
---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.
---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.
---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.
-----பந்தம் படத்தில் டிரைவருடன் கோபித்து நடக்க ஆரம்பிக்கும் காட்சி.
---துணை,முதல் மரியாதை ,தேவர் மகன் -முழு படமுமே . எந்த காட்சியன்று சொல்வது.
Gopal Sir
Shall try to do it.
There is also a DVD released by Mr Srinivasan of Tiruchy which contains about 2 to 3 minutes (or may be more) of different walks of NT in films which is noteworthy.
இருவர் உள்ளம்- 1963 -பகுதி-1
நடிகர்திலகத்தின் நடிப்பின் பாணி stylised method acting ஆக விளங்கிய 60 களில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
(தொடரும்)
Nam Nanbar Thiru Anand Avargal has compiled multiple clippings from our Kalai Avadhaaram Nadigar Thilagam Films....
https://www.youtube.com/watch?featur...Y&noredirect=1
இருவர் உள்ளம்-1963 - பகுதி-2
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
(தொடரும்)
இருவர் உள்ளம்-1963 -பகுதி-3
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
(முற்றும்)
என்னை அவளிடத்தில் தருகிறேன் - அவள்
இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள் - அந்த
இனிய மகள்
எனது தாய்க்கு மருகளானாள் - இன்று..
கண்ணெதிரே தோன்றினாள்
http://youtu.be/FjNQ462oCec
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் பாடல்களில் உள்ள சிறப்பம்சம், பல்லவி good என்றால் சரணம் பெஸ்ட். அது அவருக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பல்லவியை விட சரணம் சிறப்பாக அமைக்க, இசையமைப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தப் பாடல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கவியரசரின் வரிகள் ... அந்த பாத்திரத்தை இலக்கியமாய் அமைக்க, நடிகர் திலகம் அதை கவிதையாக்கி விடுவார்.
நாயகி முகத்தைக் காட்டத் தயங்கி திரும்பி நின்று கொண்டிருக்க, இவருடைய கற்பனையில் அவள் திரும்பிப் பார்ப்பதாக காட்டி அந்த வர்ணனைக்கு உயிர் கொடுப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று - இதே போன்ற காட்சியமைப்பு இதய கமலம் படத்தில் உன்னைக் காணாத பாடலிலும் வருவதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மற்றவர்களின் படப் பாடல்கள் கேட்கக் கேட்க அலுக்காது என்றால் நடிகர் திலகத்தின் படப் பாடல்கள் ..
பார்க்கப் பார்க்கவும் அலுக்காது ...
http://youtu.be/7guKJYxRwPc
என்ன உண்மை தானே ...
பள்ளியறைப் பெண் மனதில் ஏக்கம் ஏக்கம் என்ற வரிகளின் போது கால்கள் நேராகவும் ஏக்கத்துடன் இருக்கும் ஒரு பெண்ணின் கால்களைப் போன்று தரையில் பாவாமல் தவிப்பது போன்றும், பக்கத்தில் துணையிருந்தால் வரியின் போது நாயகன் கால்கள் அருகில் வருவதும் உடனே நாயகியின் கால்கள் திரும்புவதும் பின் கேமிரா சற்றே மேற்சென்று இருவரின் முகத்தையும் காட்டும் போது இருவரின் முகத்திலும் அந்த வரிகள் உயிருடன் பிரதிபலிப்பதையும் பார்க்கும் போது ..
கோபால் சொன்ன வரிகள் 100க்கு 1000 சதவீதம் சரி ..
இவரிடம் வரும் போது தான் நடிகைகள் தாங்கள் நடிக்கவும் வேண்டும் என்பதையே உணர்ந்து நடிப்பார்கள் போல...
ராகவேந்தர் சார்,
நான் நல்லாவே பாடுவேன். கண்ணெதிரே தோன்றினாள் பாடி ,கிண்டி கல்லூரியில் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். பொன்னொன்று கண்டேன்,இரண்டு பேர் வாய்ஸ் இலும் நானே பாடி எம்.ஐ.டி யில் முதல் பரிசு.
இந்தப் பாடலைப் பற்றி கோபால் சார் விரிவாகக் கூறிவிட்டார் ... வேறென்ன வேண்டும் ..
பார்ப்போமே..
http://youtu.be/TwMSXh-HxMA
ஐயோ சார்,
இப்படி சுட சுட போட்டு தாக்கறீங்களே. ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
டியர் கோபால் அவர்களே,
ஏனய்யா இப்படி இம்சை பண்ணுகிறீர்?
அடுத்தடுத்து, இரு மாபெரும் வெற்றிப் படங்களின் ஆய்வா? ஒன்று நீண்ட ஆய்வு; மற்றது சற்றே சிறிய ஆய்வு. வழக்கம் போல், மிக நன்றாக வந்திருக்கிறது.
இருவர் உள்ளம்:- நடிகர் திலகத்தின் படங்களில், இதுவும் "தெய்வ மகனும்" தான் நான் அதிக முறை தியேட்டரில் பார்த்த படங்கள். இரண்டும் 30 முறை. நடிகர் திலகத்தின் படங்களில், எனக்குத் தெரிந்து, மறு வெளியீடுகளில், "கர்ணன்" தவிர்த்து, விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும், (ஏன் ரசிகர்களுக்கும் தான்), பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் இரண்டு படங்கள், "வசந்த மாளிகையும்", "இருவர் உள்ளமும்" தான் (சென்னையில்). ஒற்றுமையை கவனித்தால், இரண்டுமே, சற்றேரக்குறைய ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட படங்கள்; திரை இசைத் திலகத்தின் "சூப்பர் ஹிட்" பாடல்களைத் தாங்கிய படங்கள். பார்க்கும் மக்கள் அனைவரையும், "அடடா! இரண்டும் பேரும் சேர்ந்து விட மாட்டார்களா" என்று ஏங்க வைத்த படங்கள். இரண்டு படங்களிலும், நடிகர் திலகத்தின் நடிப்பு, கதா பாத்திரத்தை ஒட்டி, subtle-ஆக இருக்கும். ரசிப்புத் தன்மையே இல்லாதவரையும் ரசிக்க வைக்கும்.
சிவந்த மண்:- நடிகர் திலகத்தின் அணுகு முறை எப்போதும் நூறு சதவிகிதம் சின்சியராக இருக்கும். எந்தக் கதா பாத்திரமாயிருந்தாலும். அதற்கு, இந்தப் படம் மிகச் சிறந்த உதாரணம். ஒரு அட்வென்ச்சர் படத்தை அவருக்கேயுரிய சின்சியாரிடியுடன் அணுகியிருப்பார். ஒரு மேம்போக்கான, ஆக்க்ஷன் படத்தில் நடிப்பது போல் தான் எந்த நடிகரும் இந்தப் படத்தில் நடித்திருப்பார். ஆனால், இவர் மட்டும் வேறு மாதிரி, மிக மிக சின்சியராக அணுகியிருப்பார்.
பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறீர்கள். நடக்கட்டும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
இருவர் உள்ளம் & தெய்வ மகன்:- இரண்டு படங்களிலும், நடிகர் திலகம் முதல் ப்ரேமிலிருந்தே, திரை அரங்கத்திலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்டிருப்பார். (இன்னும் இது போல் நிறைய படங்கள் உண்டு என்றாலும்). முன்னதில், ஜாலியாக, பின்னதில், உணர்ச்சி மயமாக.
1985-இல், இருவர் உள்ளம் சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது, மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து, ஒன்றரை வருடங்கள், சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருந்தது. முக்கியமாக, ஏராளமான, சமூகத்தின் பல்வேறு தட்டுகளிலிருந்து, புதிய ரசிகர்களை, நடிகர் திலகத்திற்குப் பெற்றுத்தந்தது. முக்கியமாக, ரசிகைகள்; அதுவும், இளம் ரசிகர்/ரசிகைகள்.
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Mr Parthasarathy Sir,
Iruvar Ullam always evergreen hit. It is money spinner for the distributors.
கோபால்,
இருவர் உள்ளம் படத்தின் ஆய்வை எங்கள் ரசிப்பிற்கு ஏற்ற வகையில் விளக்கமாக எழுதியதற்கு நன்றி. படம் பற்றிய என்னுடைய கருத்துகளை விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
சசி சார் உங்களுக்காக,
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -
மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
நான் மிக மிக ரசித்த காதல் காட்சிகள்-
---- ராஜா ராணி
----தெய்வ பிறவி- அவர் பத்மினியை கணக்கு பண்ணும் காட்சிகள்
----இரும்பு திரை- சிவாஜி வைஜயந்தியிடன் தன் கன்று காதலை சொல்லும் காட்சிகள்
----இருவர் உள்ளம- சரோஜா தேவியிடம் காதல் முயற்சிகள் .
----ஆண்டவன் கட்டளை- அழகே வா,
-----நீலவானம்- முதலிரவு, பவுடர் பூசும், மேலும் பல பல காட்சிகள்.
----புதிய பறவை- உன்னை ஒன்று கேட்பேன்(இரண்டாம் முறை) இரவு காட்சி
----கலாட்டா கல்யாணம் - பல ஜாலி காதல் காட்சிகள்
----உயர்ந்த மனிதன் - வாணிஸ்ரீயிடம் காதல்.........
----தங்க சுரங்கம் - பாரதி டீசிங் , பாரதி-நிர்மலா சக்களத்தி போராட்ட காட்சி
----ராஜா -கல்யாண பொண்ணு லீடிங் காட்சி( அப்புறம்தான்ன்ன்)
---தெய்வமகன்- லவ் டீசிங் காட்சிகள்.
---சுமதி என் சுந்தரி- பலூன் காட்சி (லலலல்லா)
----தர்மம் எங்கே- ஒருவரை ஒருவர் செல்லமாக அடித்து காதலை வெளியிடும் காட்சி
----வசந்த மாளிகை- plum கடிக்கும் காட்சி.
--- தீபம்- சுஜாதாவை மடிக்க முயலும் காட்சிகள்.
----நவராத்திரி - கடைசி காட்சி. கண்ணோடு கண் நோக்கின்.........
---தில்லானா மோகனாம்பாள்- ரயில் காட்சி(யாருக்குத்தான் பிடிக்காது உலகில்?)
---முதல் மரியாதை- கல்லை தூக்க முயன்று வெட்கப்படும் காட்சி.
----டாக்டர் சிவா- கன்னங்கருத்த குயில் பாடலுக்குப் பின் சமாதானம்(எங்கேடா நம்ப பொண்டாட்டி)
Where is pammalar nowadays? Is he posting here?! :)
Dear Vijay [SKV],
Swami is very much here in Chennai and keeps himself updated of hub happenings. He has taken a temporary sabbatical from posting due to a slight strain in his wrist. He has almost come out of that and may start posting post Deepavali.
Regards
Thanks Murali Sir! :) long time back, I have asked him for some old article about Ilaiyaraja! thatswhy i asked for him!
Majestic Sivaji with powerful lyrics!
http://www.youtube.com/watch?v=_pyYU7U4kQs