-
Quote:
Originally Posted by
vasudevan31355
போனஸ் ஸ்பெஷல்
(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)
'சௌந்தர்யமே வருக வருக'
மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா.
ரொம்ப கிக் கொடுக்கிறீங்களே சார் !! :) நன்ன்ன்ன்றி....
பாடல்களின் வீடியோக்கள் முன்பு யூடியூபில் இருந்தன. நானே முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன். பிறகு காபிரைட்ஸ் என்று சொல்லி காணாமல் அடித்துவிட்டார்கள். மீண்டும் எங்காவது எட்டிப் பார்த்தால் இழுத்து வந்து விடுவோம் !!
இதோ உன் காதலி கண்மணி எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதன் வீடியோவை மட்டும் சட்டுனு டவுன்லோட் செய்துவிட்டேன். ஆனால் அதை மறுபடி அப்லோடு செஞ்சா கணககை மூடிடுவாங்களே என்ற பயம் :)
-
Quote:
Originally Posted by
gkrishna
நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா
சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்
'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
திருமணம் வந்த நாள் '
இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.
பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...
மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க
http://youtu.be/qcPVlvpzZEE
ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க
http://youtu.be/l-gfjVU6rkU
எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக
"ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்
http://youtu.be/yM54-CDY-WU
-
Iravil irandu paravaigal ,Bala & vani mattum illa along with them Isaiyarasiyum jolly abrahamum undu. Beautiful song
-
சும்மா சும்மா சீரியஸா பாட்டமட்டும் கேட்டுக்கிண்டிருந்தா எப்படி..சிரிக்க வேணாமா..ஒரு பாட்டுப் போடலாம்னு சர்ச் பண்ணி ஒரு வெப் சைட் போனேன்..அந்த பாட்டோட ஆரம்பம்..
அணைக்க அந்த மேடம் பாடல்கள் மற்றும் விவரங்கள் :) // ஷாக் ஆகிட்டீங்களா
http://tamilsongslyrics.our24x7i.com...AF%8D/1248.jws
லிங்க் வேலை செய்யாமல் போனால் என்னைத் தவறாக நினைக்கவும் வாய்ப்புண்டு.. :) எனில் பாடலின் சில வரிகள்..அங்குள்ளதைப் போலவே
ஒயுங்கு தவறாமே ஊரை எட்டி வாயாமே
பொயுதே வீணக்காமே ரூபாவைத் தேடிக்கணும்..
ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
அதுவும் கூட இல்லாக்காட்டி ப்லட்ஃபொர்ம் சொந்த இடம்
//ஆமா ஒருதலை ராகம் ரூபா எங்க இருப்பார்..:) //
-
சிக்கா...
அது "எட்டி" இல்லே.. "ஊரை எத்தி வாயாமே"...
சென்னை பிளாட்ஃபார்ம் பாஷையில் சுசீலாம்மா கலக்கிய பாட்டு..
தெட்டிக்கினு போறதுக்கு திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க தூங்காம முயிப்பாங்க
துட்டும் கையிலே இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
பொட்டியும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே
http://youtu.be/4_dPyndat90
-
அதான்..அது நல்ல பாட்டுதேன்.. அத எப்படி எழுதியிருக்காகன்னு சொன்னேன் மதுண்ணா..எனிவே வீடியோவுக்கும் ஒரு தாங்க்ஸ்..
-
வாசு சார் எனது pm பார்க்கவும்
-
thanks madhu sir
Quote:
Originally Posted by
madhu
இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.
பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...
மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க
ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க
எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக
"ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்
மது சார்
விடியோ எனக்கு கிடைக்க மாட்டேங்குது உங்களுக்கு ஈஸி ஆக கிடைக்குது . மிக்க நன்றி .
அந்த ஹீரோ நம்ம பாலச்சந்தர் நூல்வேலி நாராயண ராவ்
நினைத்தாலே இனிக்கும் படத்திலும் வருவர் -ஜெயசுதாவின் கணவராக
http://www.idlebrain.com/movie/photo...narao-0034.jpg
நான் சிலோன் ரேடியோவில் கேட்டு ரசித்த சில பாடல்களை மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
-
பைரவி - கலைஞானம் - முதல் தயாரிப்பு
-
சி.க.சார் ஜாலியாகக் கேட்டதால் ஒரு ஜாலி பாடல் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும் மாதிரி.
என்னா ஒரு தீர்க்க தரிசனம் இந்தப் பாடலில்
http://i.ytimg.com/vi/ga3SN7VaUgM/0.jpghttp://img.youtube.com/vi/hh4zrcovLgA/0.jpg
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவசரமா வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
க்யூவிலே நீ வந்து நிக்கணுமா
குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டாக்கா விலை இப்போ சுண்டாக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில
மகனே உனக்கேன் தெரியவில்லை
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது
நடக்கட்டும் விடு ராஜா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
பாடகர் திலகத்தைத் தவிர இந்தப் பாடலுக்கு வேறு யார் பொருந்துவார்கள்?
ஜெய் படு கேஷுவல். வரிகள் யதார்த்தம்.
இந்தப் பாடல் 'மறந்தே போச்சு... ரொம்ப நாளாச்சு'
'அத்தையா மாமியா'.... அங்கேயா இங்கேயா
http://www.youtube.com/watch?v=xEpf7...yer_detailpage