நிலாப் பாடல் 29: "ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ"
---------------------------------------------------------------------------------------------------------
மறுபடி ஒரு காதல் பாட்டுதான். வெண்ணிலா கீழே இறங்கி வந்ததாக காதலன் காதலியை பாடுவதாக ஒரு பாடல். பாசிலின் படத்திற்காக பிரபு, ரேவதி நடிப்பில் கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் பாட இளையராஜா இசையமைத்த்து கிறக்கினார். பாடல் நெறய உவமைகளாக கொண்டிருக்கிறது. காதல் இல்லாம படம் எடுத்து நிலா இல்லாமல் பாடல் எழுதுறதை விட, காதலை படமெடுத்த்து நிலா மற்றும் மலர் இல்லாம பாடல் எழுதுவதுதான் சிரமம் என்று நினைக்கிறேன். மலர்களை பற்றி அடுத்த தொடர் துவங்கினால் தமிழில் 60-லிரிந்து 70 சதவீத பாடல்களை குறிப்பிட்டு விடலாம்.
பாடல் வரிகள்:
----------------------
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
(ஆகாய வெண்ணிலாவே)
ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )
பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
(ஆகாய வெண்ணிலாவே)
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் காட்சி:
---------------------
https://www.youtube.com/watch?v=XEnNT2qI4Cw
சாயங்கால வேளையில் இரவு நேரங்களில் பாடலாம். எல்லா அரங்கேற்றவேளைகளில் இப்பிடியெல்லாம் பாட முடியுமா?