thanks sir
Printable View
கோவை சண்முகா திரை அரங்கில் குடியிருந்த கோயில் காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 450 பேர்கள்.
தகவல் - திரு. ஹரிதாஸ் - கோவை
அன்பு சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
தங்களின் நச்சென்று கொடுத்த நறுக்கான பதில் உண்மையிலேயே வாயடைக்க செய்யும் என்று நம்புகிறேன். தங்களின் சிறப்பான, விரிவான பதிவுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !
தாங்கள் கூறியபடி, ஒரு சிறு typographical error ஏற்பட்டு விட்டது. பின்னர் உடனே அதை சரி செய்தும் விட்டேன். ஆனால், திரு முரளி சீனிவாஸ் அவர்கள் என்னுடைய பிந்தைய edited பதிவை பார்க்காமலே, தனது வழக்கமான, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியில், பதிவை மேற்கொண்டிருப்பது துரதிர்ஷ்ட வசமானது.
அந்த பக்கம் வீண் விவாதத்தை ஆரபித்தால், இந்த திரியில் ஆதாரத்துடன் என்னுடைய பதில் பதிவுகள் இருக்கும்.. புரட்சித்தலைவரின் நற்பெயருக்கும், அவரது புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் எந்த செய்திக்கும், காழ்ப்புணர்ச்சி கொண்டு பதிவுகள் மேற்கொள்வோருக்கும், எனது தக்க பதிலடி எப்போதும் இருக்கும் என்று இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் அருமையான அற்புதமான பதிவிற்கு மீண்டும் நன்றி !
மாற்று திரி ஒன்றில், அறிவு ஜீவி ( ? ! ) ஒருவர், தனது வழக்கமான நையாண்டி கலந்த நக்கலான, பொய்யான பதிவுகளை மீண்டும் துவக்கியிருக்கிறார்.
எகிப்து அதிபர் நாசர் விசாரித்துதான், தங்களின் அபிமான நடிகரை ஜவஹர்லால் நேருவுக்கே தெரியும் என்று கூறியவர் ஆயிற்றே !
நானும் எனது 47 வருட அனுபவத்தில், (அதாவது என்னுடைய 12 வயதில் - 1968 முதல்) தமிழ் திரையுலக ரசிகன் என்ற முறையில், எவ்வளவோ ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன். .
யாம் அறிந்த மொழிகளிலே இனிதான தமிழ் மொழி போல் உண்டோ ? என்று மகாகவி பாரதியார் பாடியது போல்,
நாமறிந்த நடிகரிலே - தலைவரிலே, எழுச்சியையும், உற்சாகத்தையம் அளிக்கக் கூடிய இனிதான நம் புரட்சித்தலைவரைப்போல் கண்டதுண்டோ ! என்று பாடத் தோன்றுகிறது.
எவருடன் ஒப்பிட முடியாத எவரெஸ்டாய் உயர்ந்து நிற்பவர், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நமது புரட்சித்தலைவர் !
நமது திரியின் அற்புத பதிவாளர்களின் பதிவுகள் அருமை...அட்டகாசம்... மூத்த சகோதரர் வரதகுமார் சுந்தராமன் alias க்ஸ்.குமார் அவர்களின் ரசிகர் மன்ற தகவல்கள், நோட்டீஸ் -ஆகியன நீண்ட நாட்கள் இடைவெளியில் காணுவது பேரின்பமானது... உச்சி சூரியனுக்கு டார்ச் லைட் அடித்து ஒளி ஏற்படுத்துவது .....என சொல்லுவார்களே, அது போல நமது மக்கள்திலகம் - முடி சூடா மன்னன், முடி சூடிய சக்கரவர்த்தி ஆவார்கள்...நமது ஆவணங்கள் மூலம் தான் அவர்தம் சாதனை- சரித்திரம்- சகாப்தம் - இவைகளை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் நம் மன்னர்-மன்னன் நம்மை வைக்க வில்லை ... A -Z தான் சம்பந்தப்பட்ட துறைகளில் வேறு எவரும் நினைத்து கூட பார்க்காத, நெருங்கவே இயலாத செயல்களை, சாதனை கற்றைகளை அடுக்கு மேல் அடுக்குகளாக படைதிருக்கிறார் !!! தயவு செய்து இணையே இல்லா MGR ., அவர்களுடன் வேறு எவரையும் ஒப்பிட வேண்டாம்...
கடந்த 1981- ஆம் ஆண்டு சினி ரமா - மாத இதழில் திருச்சி மாநகரில் நம் மக்கள்திலகம் காவியம் உலகம் சுற்றும் வாலிபன் - 1973- 1979 ஆறு ஆண்டுகளிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளில் மட்டும் மிக அதிக முறை திரையிட பட்டு வேறு எந்த நடிகர்- நடிகைகள் நடித்த படங்களும்( மக்கள்திலகத்தின் மற்ற காவியங்கள் தவிர) பிரம்மாண்டமான வசூலை தந்த விவரத்தை வெளியிட்டு இருந்தனர்...அந்த ஆவணம் இருப்போர் பதிவிட்டால் மகிழ்ச்சி...
புரட்சித்தலைவர் சாதாரண மனிதன் அல்ல நண்பரே பிறவி எடுப்பதற்க்கு, அவர் ஒரு அவதாரம் [தத்துவம் சொல்ல அவதாரமாக இருக்க வேண்டும்].
https://www.youtube.com/watch?v=tAvAHZtCjDw
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, he is the SUPER COSMIC POWER.
We need to respond to numerical jokes as well.
ஆங்கிலமோ அல்லது தமிழிலோ தனது அபிமான நடிகரின் படத்தை பற்றியும் , நடிப்பை பற்றியும் ஆய்வு செய்து பக்கம் பக்கமாய் எழுதி பரவசம் அடைந்து என்ன பயன் திரு கோபால் ? மற்றவர்களை ''தரமற்றவர்கள் '' என்று சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது . நீங்கள் ஆய்வு செய்த படங்களின் வேதனைகளை சொல்ல வேண்டுமா ? உங்கள் தில்லு முல்லுகளை மக்கள் அறியாததா ? தேவரை நேரில் சந்திக்கும் போது நீங்கள் நிச்சயம் மன்னிப்பு கூறுவீர்கள் .