-
14th June 2015, 02:39 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
திரு முரளி ஸ்ரீனிவாசன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ''உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - தங்கபதக்கம் மூன்று படங்களின் வசூல் விபரங்கள் அடங்கிய எம்ஜிஆர் மன்றம் நோட்டீஸ் -பிரதிகளை பதிவிட்டேன் .திரு ஆர் .கே .எஸ் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபனை விட தங்க பதக்கம் அதிக வசூல் பெற்று1.75 கோடிமொத்த வசூல் பெற்றது என்று திரு பம்மல் சுவாமிநாதன் கூறியதாக பதிவிட்டு அதை உறுதி செய்திட உங்களிடம் கேட்டு இருந்தார் .திரு ஆர் .கே .எஸ் அவர்களின் தவறான பதிவுக்காகநான் என்னிடம் இருந்த வசூல் நிலவரத்தை பதிவிட்டேன் .
நான் பதிவிட்டதில் தவறு இருப்பின் , உங்களிடம் சரியான ஆதாரம் இருந்தால் ,அதை இங்கே பதிவிடவும் .நானும் ஒப்பு கொள்கிறேன் .
எப்படியோ இதுவரை நிலவி வந்த மாயை என்னுடைய ஆவணம் மூலம் நீங்கி விட்டதில் பெருமையே .இனி பிரச்சினை எதுவும் இல்லை .உண்மை நிலவரத்தை எல்லோருக்கும் புரிய வைக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி .
திரு.குமார் சார்,
நமக்கு இந்த விவாதமே தேவையற்றது. நீங்கள் பதில் கூறினால்தான் 1973-ம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளியான தமிழ்ப்படங்களை எல்லாம் வசூலில் முறியடித்து விட்டது என்றும் தலைவர் திரையுலகில் இருந்தவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்றும் தெரியுமா? ஏற்கனவே தெரிந்ததுதானே?
ஜூன் 8ம் தேதி இரவு நாளை (9ம் தேதி) தலைவர் முதல்வராக பதவியேற்ற நாள் என்றும் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் அதற்காக மதுரை வாழ் மக்களுக்கு நன்றி என்று வினோத் சார் பதிவு போட்டால், உடனே அதற்கு எதிர்வினையாக நள்ளிரவில் பட்டிக்காடா பட்டணமா?தான் மதுரையில் அதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்தது என்று திரு.முரளி ஸ்ரீனிவாஸ் கூறுவார்.
ஆனால் பதிலுக்கு அதே மதுரையில் உரிமைக்குரல் படம் ரூ.7 லட்சம் வசூல் செய்து அதற்கு முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்தது என்ற உண்மையை நாம் கூறக்கூடாது.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தலைவர் வெற்றி பெற்றார் என்று கூறக்கூடாது. நாடோடி மன்னன் வெற்றி விழாவில் தலைவர் 4 குதிரைகள் பூட்டிய சாரட்டில் லட்சோப லட்சம் மக்களின் வாழ்த்தொலிகளுக்கிடையே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு விழா மேடையில் 110 சவரன் தங்க வாள் பரிசளிக்கப்பட்டது என்று கூறக்கூடாது.
மதுரையில் அவர்கள் படம் செய்த சாதனைகளை பற்றி மட்டும்தான் கூறலாம். ஏன்? காரணம் மக்கள்திலகத்தின் சாதனைகள் பற்றி நாம் எப்படி எழுதலாம்? நமக்கு அந்த உரிமை கிடையாது. அதுவும் மதுரை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்தாகிவிட்டதே?
படகோட்டி திரைப்படம் 100 நாள் ஓடியது என்று நாம் கூறினால், ஓடவில்லை என்பதை மறைமுகமாக காணாமல் போன படம் என்று திரு.முரளி கூறுவார். இதை யுகேஷ்பாபு சுட்டிக்காட்டினால், ‘படகோட்டி ஓடவில்லை என்று நான் கூறவில்லை. எனவே, உங்கள் திரியில் உண்மையான விளம்பரம் வந்தபோது நான் பயப்படவும் இல்லை’ என்பார். ஆனால், அவர்கள் திரியின் முந்தைய பாகம் 257-ம் பக்கம் கடந்த நவம்பர் 3-ம் தேதி வெளியான அவருடைய பதிவில், (பதிவு எண் 2569)
//ஆனால் அதே 1964 தீபாவளி படங்களைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். காஸ்ட்லி கலர் படங்களையெல்லாம் காணாமல் போக வைத்த//
என்று படகோட்டியை மறைமுகமாக கூறுவார். அப்படி படகோட்டியை கூறவில்லை என்றால் வேறு எந்த படத்தை கூறினார்? என்று நாம் கேட்கக் கூடாது.
நவரத்னம் படத்தை எடுத்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று கூறுவார். இதற்கும் அவரது அபிமானத்துக்குரியவரின் சாதனைகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று நாம் கேட்கக் கூடாது.
திரு.முரளிக்கு அவர் வரித்துக் கொண்டவரின் புகழ் பாடுவதை விட தலைவரையும் அவரது படங்களையும் அவ்வப்போது தாழ்த்திப் பேசுவது வழக்கம். அவரது அபிமானத்துக்குரியவரின் மீதான பற்றை விட தலைவர் மீதான வெறுப்புணர்வையே அதிகம் வெளிப்படுத்துவார்.
ஆனால், நாம் அதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது.
வேண்டுமானால் நாமும் ஒன்று செய்யலாம். உரிமைக்குரல் படம் மதுரையில் 3 வாரம் மட்டுமே ஓடியது என்று கூறிவிடுவோம். அவர்களும் சந்தோஷப்படட்டுமே.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தமிழகத்தில் 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. கூடுதலாக 2 தியேட்டர்களை சேர்த்து 6 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே கூறவில்லை. அதை சரிப்படுத்தியும் விட்டார். 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று திருத்தி தவறை சரி செய்துவிட்டார்.
அதுவும் கூட திரு.முரளி சுட்டிக்காட்டிய பிறகு மாற்றவில்லை. திரு.முரளி அவர்கள் இதைக் கூறியிருப்பது நேற்று இரவு (14ம் தேதி) 12. 54 மணிக்கு போட்ட பதிவில். ஆனால் திரு. செல்வகுமார் தவறை சரி செய்தது 12-ம் தேதி இரவு 8.18 மணிக்கு (நமது திரியின் 292ம் பக்கம் பதிவு 2,918) இதை யாரும் சரிபார்த்துக் கொள்ளலாம். வேண்டுமென்றே வெள்ளி விழா ஓடிய தியேட்டர்களை அதிகரித்துக் கூறி தலைவருக்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் நமக்கில்லை. அந்த நிலையிலும் தலைவர் நம்மை வைக்கவில்லை. திரு.செல்வகுமார் மீது குற்றம் சாட்டுவதற்கு முன் அதை மாற்றிவிட்டாரா? என்பதை கூட திரு.முரளி அவர்கள் சரிபார்க்கவில்லை.
அங்கும் கூட நேற்று முன்தினம், திருச்சியில் வசந்த மாளிகை திரைப்படம் வெள்ளியன்று வெளியாகியது என்றும் பின்னர் ‘வியாழன் என்று மாற்றிப் படிக்கவும்’ என்றும் மாற்றங்கள் செய்யப்படுகிறது. தவறாக சொல்லவில்லை. வேண்டுமென்றே யாரும் செய்ய மாட்டார்கள்.
இதையெல்லாம் கூறினால், ‘என்னை பழிக்கிறீர்கள்’ என்று என் மீது குறை கூறுவார். ஆனால், அவரது அபிமானத்துக்குரியவரையும் அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்வதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்று என் மீது பழிசுமத்துவார். தலைவரையும் நண்பர்களையும் பாதுகாப்பது போன்ற பிம்பத்தை நான் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்துவார்.
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு இனி , என்னிடமிருந்து எதிர்வினை வராது என்று கூறி ஒதுங்கிக் கொள்வார். இதையெல்லாம் பலமுறை பார்த்து சலித்து விட்டது சார்.
ஆனானப்பட்ட ராஜதந்திரிகளே எவ்வளவோ முயற்சித்தும் தலைவரின் புகழை குறைக்க முடியாதபோது......?
விவாதத்தை தொடராமல் நாம் நம் தலைவரின் புகழை தொடர்ந்து பாடுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 14th June 2015 at 05:28 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015 02:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks