Originally Posted by
venkkiram
'தமிழ்த் திரை இசை' என்ற தேரில் சாரதியாக ராஜா! சீறி ஓடும் குதிரைகளாக ஜானகி, பாலு, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா (இன்னொரு குதிரையாகவும் ராஜா என்ற பாடகர்), தேரில் கூடவே பயணிக்கும் பலப்பல வாத்தியக் கருவிகள் ( முக்கியமாக வயலின், புல்லாங்குழல், தபேலா, ட்ரம்ஸ், லீட் கிடார், பாஸ் கிடார், ஆர்கன் இப்படி நிறைய ), மற்றப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் .. இப்படி ஒரு கற்பனைச் சித்திரம் என்னிடம் சமீப காலங்களில் வந்து வந்து மறைகிறது. இதை வாசிக்கும் திறமையான ஒவியர்கள் எனது கற்பனையை நிறத்தில் வடிக்கலாம்.