-
17th August 2014, 12:15 PM
#3241
Senior Member
Diamond Hubber
இனிமேல் நாளும் இளங்காலைதான்
காணொளியை பதிவேற்றம் செய்தம் RajsMed அவர்களுக்கு நன்றி. பாடலுக்கு முந்தைய காட்சிகளையும் இணைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. ராஜாவின் பின்னணி இசையின் மேதமை அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாதஸ்வர ஓசை மேலோங்கிப் போவதும், அது அப்படியே மங்கையின் வாழ்க்கை மீதான நம்பிக்கை-அவநம்பிக்கை நினைவலைகளுக்கு ஏற்றவாறு காற்றில் கரைந்து மறைவதும், தயக்கங்களுக்கான இசைப்படலம் முடிந்தவுடன் மேகமூட்டங்களுக்கு இடையே மீண்டும் நாதஸ்வர இசையோடு பாடல் தொடங்குவதும்.. வெகு நேர்த்தியான பாடல் அமைப்புத் திட்டம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2014 12:15 PM
# ADS
Circuit advertisement
-
18th August 2014, 06:52 AM
#3242
Senior Member
Diamond Hubber
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்.. பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். அதன் ஆரம்ப இசையே மகத்துவமானது.. நான் கவனித்த வரையில்.. அந்த ஆரம்ப இசையை கேட்க ஆரம்பிக்கையில் ரொம்ப குறைவான நேரத்தில் அது இசைக்கப்பட்டு முடிவடையப் போகிறதே என்ற ஏக்கம் தொக்கிக் கொள்கிறது. ஆனால் ராஜா கூடுமான வரையில் அதை நீட்டித்துக் கொண்டெ செல்லும் அழகு இருக்கிறதே! ஒவ்வொரு முறை அதைக் கேட்கும்போதும் அடையும் பரவச நிலையை வார்த்தையால் விவரிக்க முடியாது. வானில் வெகு நேர்த்தியாக ஒரு ஓவியத்தை இசையால் வரைகிறார் ராஜா.
ஆரம்ப இசையை லயித்து கேட்பதிலேயே பாடலின் சாராம்சம் கிடைத்து விடுகிறது. எதிர்பார்ப்பு - லாபம்(ப்ரேக் ஈவன்). அதிலிருந்து தொடங்கும் பாலு-ஜானகி உரையாடல் எல்லாமே அளவுக்கு மீறிய லாபம்.
இப்படி ஒரு இசையை வேறு எங்கிலும் காணமுடியாது என அதீதப் பற்றுடன் சொல்லலாம். ஆனால், யாரும் இதுபோல ஒன்றை இதுவரை தரவேயில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
Last edited by venkkiram; 18th August 2014 at 06:55 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th August 2014, 03:54 AM
#3243
Senior Member
Diamond Hubber
ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்... (வருடம் 1992)
ராஜாவின் இசை ஒரு திருக்குறள்.. புறநானூறு, அகநானூறு, கம்பராமாயணம்..குரான்.. பைபிள் போல.. நூலின் ஏதேனும் ஒரு பக்கத்தை திறந்து ஒரு சிறிய பத்தியை வாசித்தாலும் அதைவைத்தே அன்றைய பொழுதினை நகர்த்த ஏதுவாறு சிந்தனைகளை அசைபோட பயனுள்ளதாக இருப்பதுபோல ராஜா என்ற இசை அருவியில் எந்த பருவகாலத்தில் குளித்தாலும் உடலும் மனமும் ஆரோக்யப்படும்.
ரம்மியமான பாடல் அமைப்பு!
இது என்ன ராகம், இதில் வேறெந்த இசையமைப்பாளர்கள் இதுபோன்ற ஒரு சிறப்பான பாடலை தந்திருக்கிறார்கள் என்ற அலசலை இலக்கண அறிவு கொண்ட மக்களிடமே விட்டுவிடுகிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd August 2014, 09:31 AM
#3244
Senior Member
Diamond Hubber
திரு விக்கியின் இணையப் பக்கத்திலிருந்து..
________________________________________________
How much can one count in one bar of music convey...?
An eternity..
கண்ணா வா கவிதை சொல்வேன் வா!
Watch that phrase 'bE' in the word 'MunbE' @ 1:27. (It's the opening words of First stanza - "Sruthi sErum munbE").
There is a micro pause between 'Mun' and 'bE'. That pause actually makes me skip a beat inside every time I listen to it!
First of all there is the pause..
And then the musical clarity of that phrase 'bE' (descending notes of 'mgsn')..
And then the continuity is still maintained as if that pause wasn't there...
And then there is the emotion of that phrase which can drain your soul..
Try singing that line with all these ingredients and you will begin to realize why there is only one S Janaki..
http://www.saavn.com/p/song/tamil/Ma...aa/HgRaSCJxD2o
_________________________________________
Last edited by venkkiram; 23rd August 2014 at 09:45 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd August 2014, 09:52 AM
#3245
Senior Member
Diamond Hubber
'தமிழ்த் திரை இசை' என்ற தேரில் சாரதியாக ராஜா! சீறி ஓடும் குதிரைகளாக ஜானகி, பாலு, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா (இன்னொரு குதிரையாகவும் ராஜா என்ற பாடகர்), தேரில் கூடவே பயணிக்கும் பலப்பல வாத்தியக் கருவிகள் ( முக்கியமாக வயலின், புல்லாங்குழல், தபேலா, ட்ரம்ஸ், லீட் கிடார், பாஸ் கிடார், ஆர்கன் இப்படி நிறைய ), மற்றப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் .. இப்படி ஒரு கற்பனைச் சித்திரம் என்னிடம் சமீப காலங்களில் வந்து வந்து மறைகிறது. இதை வாசிக்கும் திறமையான ஒவியர்கள் எனது கற்பனையை நிறத்தில் வடிக்கலாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd August 2014, 10:09 AM
#3246
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
'தமிழ்த் திரை இசை' என்ற தேரில் சாரதியாக ராஜா! சீறி ஓடும் குதிரைகளாக ஜானகி, பாலு, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா (இன்னொரு குதிரையாகவும் ராஜா என்ற பாடகர்), தேரில் கூடவே பயணிக்கும் பலப்பல வாத்தியக் கருவிகள் ( முக்கியமாக வயலின், புல்லாங்குழல், தபேலா, ட்ரம்ஸ், லீட் கிடார், பாஸ் கிடார், ஆர்கன் இப்படி நிறைய ), மற்றப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் .. இப்படி ஒரு கற்பனைச் சித்திரம் என்னிடம் சமீப காலங்களில் வந்து வந்து மறைகிறது. இதை வாசிக்கும் திறமையான ஒவியர்கள் எனது கற்பனையை நிறத்தில் வடிக்கலாம்.
ஆஹா ,ஆஹா, நானே சுமாரான ஓவியன்.(தியரி நன்றாக தெரியும்)
கிருஷ்ண பரமாத்மா தேரில் இருக்கும் படம் வரைந்து பாகங்கள் குறித்து விடுகிறேன். கூடவே ,எதிரிகளின் மீது அம்பு விடும் அர்ஜுனனாக தாங்கள்.(சிறிது முத்து ராமன் சாயல் ஒகே யா?)ஜானகியை சற்றே வயதான அராபிய குதிரை ரேஞ்சில் அசத்தி விடுகிறேன். மலேசியா வாசுதேவனை குதிரையாக நினைத்து பார்க்கவே முடியவில்லை.
மன்னரே,பரிசு உண்டுதானே?
Last edited by Gopal.s; 23rd August 2014 at 06:52 PM.
-
23rd August 2014, 03:21 PM
#3247
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
இனிமேல் நாளும் இளங்காலைதான்
காணொளியை பதிவேற்றம் செய்தம் RajsMed அவர்களுக்கு நன்றி. பாடலுக்கு முந்தைய காட்சிகளையும் இணைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. ராஜாவின் பின்னணி இசையின் மேதமை அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாதஸ்வர ஓசை மேலோங்கிப் போவதும், அது அப்படியே மங்கையின் வாழ்க்கை மீதான நம்பிக்கை-அவநம்பிக்கை நினைவலைகளுக்கு ஏற்றவாறு காற்றில் கரைந்து மறைவதும், தயக்கங்களுக்கான இசைப்படலம் முடிந்தவுடன் மேகமூட்டங்களுக்கு இடையே மீண்டும் நாதஸ்வர இசையோடு பாடல் தொடங்குவதும்.. வெகு நேர்த்தியான பாடல் அமைப்புத் திட்டம்.
கத தொடறனு மலையாள படத்தில் இடம் பெற்ற ஆரோ பாடுன்னு தூரே பாடல் கேட்ட நாளிலிருந்து அதன் தொடக்கத்தை எங்கேயோ கேட்டிருக்கிறேன் என்று குழம்பிய எனக்கு இன்று தான் விடை கிடைத்தது. மறந்து போன இரவு பூக்கள் படத்தையும், இனிமேல் நாளும் இளங்காலை பாடலையும் நினைவு படுத்தியுள்ளீர்கள்.நன்றி. பாடலுக்கு முன்னர் இடம் பெறும் நாதஸ்வரம் மற்றும் அதை தொடர்ந்து இசைக்கும் உங்கள் விளக்கம் அருமை. ராஜேந்தர் அறிமுகங்கள் அனைவரும் ஒரு வலம் வந்துவிட்டு போயிருக்கிறார்கள், நல்ல பாடல்கள் அவர்களுக்கு நூற்றுகணக்கில் அமைந்திருக்கிறது.
-
23rd August 2014, 08:00 PM
#3248
Junior Member
Devoted Hubber

Originally Posted by
rajaramsgi
கத ராஜேந்தர் அறிமுகங்கள் அனைவரும் ஒரு வலம் வந்துவிட்டு போயிருக்கிறார்கள், நல்ல பாடல்கள் அவர்களுக்கு நூற்றுகணக்கில் அமைந்திருக்கிறது.
Could you please, tell me the name of this actress ? she looks pretty !! Thanks.
-
23rd August 2014, 09:26 PM
#3249
Junior Member
Devoted Hubber
வானொலிக்காக இளையராஜா இசையில் பி. சுசீலா பாடிய பாடலாம் இது, ‘அன்னக்கிளி’க்கு முன்பா, பின்பா என்று தெரியவில்லை
-
23rd August 2014, 10:55 PM
#3250
Junior Member
Devoted Hubber

Originally Posted by
poem
Could you please, tell me the name of this actress ? she looks pretty !! Thanks.
ஜீவிதா.. (இது தாண்டா போலீஸ் ராஜசேகரின் மனைவி)
நான் தேடும் செவ்வந்தி பூ பாடலில் இவர் தான் நாயகி.
யாரோ சொன்னது போல் அப்போதைய காமன் வாகனங்கள் இப்போது கனரக வாகனங்கள் ஆகிவிட்டன.. (no offence please..just a joke)
Last edited by rajaramsgi; 23rd August 2014 at 11:05 PM.
Bookmarks