-
23rd August 2014, 03:21 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
இனிமேல் நாளும் இளங்காலைதான்
காணொளியை பதிவேற்றம் செய்தம் RajsMed அவர்களுக்கு நன்றி. பாடலுக்கு முந்தைய காட்சிகளையும் இணைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. ராஜாவின் பின்னணி இசையின் மேதமை அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாதஸ்வர ஓசை மேலோங்கிப் போவதும், அது அப்படியே மங்கையின் வாழ்க்கை மீதான நம்பிக்கை-அவநம்பிக்கை நினைவலைகளுக்கு ஏற்றவாறு காற்றில் கரைந்து மறைவதும், தயக்கங்களுக்கான இசைப்படலம் முடிந்தவுடன் மேகமூட்டங்களுக்கு இடையே மீண்டும் நாதஸ்வர இசையோடு பாடல் தொடங்குவதும்.. வெகு நேர்த்தியான பாடல் அமைப்புத் திட்டம்.
கத தொடறனு மலையாள படத்தில் இடம் பெற்ற ஆரோ பாடுன்னு தூரே பாடல் கேட்ட நாளிலிருந்து அதன் தொடக்கத்தை எங்கேயோ கேட்டிருக்கிறேன் என்று குழம்பிய எனக்கு இன்று தான் விடை கிடைத்தது. மறந்து போன இரவு பூக்கள் படத்தையும், இனிமேல் நாளும் இளங்காலை பாடலையும் நினைவு படுத்தியுள்ளீர்கள்.நன்றி. பாடலுக்கு முன்னர் இடம் பெறும் நாதஸ்வரம் மற்றும் அதை தொடர்ந்து இசைக்கும் உங்கள் விளக்கம் அருமை. ராஜேந்தர் அறிமுகங்கள் அனைவரும் ஒரு வலம் வந்துவிட்டு போயிருக்கிறார்கள், நல்ல பாடல்கள் அவர்களுக்கு நூற்றுகணக்கில் அமைந்திருக்கிறது.
-
23rd August 2014 03:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks