Thank you Gopal, Adiram and Ramachandran for the Birth Day Greetings.
God Bless You.
Printable View
Thank you Gopal, Adiram and Ramachandran for the Birth Day Greetings.
God Bless You.
Facebook, Whatsapp, Twitter என உடனடித் தகவல் தொடர்பு ஊடகங்கள் பல்கிப் பெருகினாலும் கூட அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக நமது மய்யம் இணைய தளம் திகழ்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயம். இங்கு நாம் நம்முடைய நாயகனைப் பற்றியும் மற்றும் சினிமாவைப் பற்றியும் பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள், நினைவலைகள், தகவல்கள், நிழற்படங்கள் என யாவையுமே இன்று வெவ்வேறு விதங்களில் பத்திரிகைகள் உள்பட பல்வேறு ஊடகங்களுக்குப் பயன்பட்டு வருகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். அதிலும் நமது நடிகர் திலகத்தின் மேன்மையைக் கூறும் நம் நண்பர்களின் கருத்தானாலும் சரி, ஆவணத்திலகம் பம்மலாரின் ஆவணங்களானாலும் சரி, நிழற்படங்களானாலும் சரி, இன்று பரவலாக எங்கும் பயன்படுகின்றன. அந்த வகையில் நமது மய்யம் இணையதளத்தின் பங்கு இன்றியமையாததாய் விளங்குகிறது. நாளுக்கு நாள் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து கொண்டே போகும் தகவல் தொடர்பு ஊடகங்களின் நடுவே மய்யம் இன்றும் வெற்றியுடன் தொடர்கிறது என்றால் அதற்கு நம்முடைய பங்களிப்பாளர்களே முக்கிய காரணம். அனைவருக்கும் அதே போல் மய்யம் இணைய தளம் ஸ்தாபனத்தாருக்கும் நமது உளமார்ந்த நன்றி.
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.
பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது
நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்
இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .
மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..
நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.
(தொடரும்)
அன்புடன்
Written by Mr. Sudhangan,
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
திருமால் பெருமை’ படத்தைப் பற்றிச் சொல்லும்போது அதில் புதைந்துள்ள ஓர் அந்தரத்ம ரசனைகளைத் துாண்டும் பாடல்களையும் அதன் சுவைகளையும் சொல்லாமல் இருக்க முடியாது!
12 ஆழ்வார்களில் ஏ.பி. நாகராஜன் சில ஆழ்வார்களை மட்டுமே எடுத்துக் கையாண்டிருப்பார்! அதில் அவர் துவக்கியிருப்பது. பெரியாழ்வார்! காரணம், அதில்தான் ஒரு பெண் கதாபாத்திரமான ஆண்டாள் வருகிறாள்! ஆழ்வார்களில் ஒருத்தி ஆண்டாள் என்கிற கோதை நாச்சியார்!
பெரியாழ்வார் தோட்டத்தில் கண்டெடுத்த பெண்! ஜனகனுக்கு ராமாயணத்தில் பூமியில் கிடைத்த சீதையைப் போல! பெரியாழ்வார் வேடத்தில் சிவாஜி! பெரியாழ்வார் யார்?
அவர்தான் சிவாஜி என்று சொல்லுகிற மாதிரியாகவே, அந்த பாத்திரமாகவே மாறியிருப்பார் நடிகர் திலகம்! அவர் பாடிக்கொண்டே வருவார்! பாசுரங்கள் இயற்றிய 12 ஆழ்வார்களில் மூத்தவர் நம்மாழ்வார் என்றால் அதில் முக்கியத்துவம் பெற்றவர் பெரியாழ்வார்!
அவருக்காக கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார்! பெரியாழ்வார் பூப்பறிக்க வருவார்! அப்போது பாடல் துவங்கும்
‘மலர்களிலே பல நிறம் கண்டேன் – திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்! மலர்களிலே பல மணம் கண்டேன் – அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்! பச்சை நிறம் அவன் திருமேனி-பவள நிறம் அவன் செவ்விதழே! மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்! வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்! நானில நாரணம் விளையாட்டு! தாயெனும் பெயரில் திருப்பாட்டு! ஆயர்குலப் பிள்ளை விளையாட்டு! இந்த அடியர்வர்க்கென்றும் அருள் கூட்டு!’
இப்படி பாடியபடி பெரியாழ்வார் தன் நந்தவனத்திலிருந்து பூக்களை கொய்து வந்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதாக காட்சி!
அவர் பாடிக் கொண்டு வந்து கண்ணனுக்கு பூக்களை சொறியும்போது அவருடைய சின்ன மகள்– மண்ணில் கண்டெடுத்த மகள் கோதை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பாள்!
இந்த படத்திற்கும், வழக்கமாக ஏ.பி. நாகராஜன் படத்திற்கு இசையமைக்கும் கே.வி மகாதேவன் இசையமைத்திருப்பார். இசையும், படத்தின் கதையும் இசைந்து இணைந்திருக்கும்! இந்தப் பாடலை படத்தில் பெரியாழ்வார் பாடி முடித்ததும், அவருடைய சிறு மகள் கோதை வருவாள்! பெரியாழ்வார் கேட்பார், ‘எங்கேயம்மா போயிருந்தாய்?’ ‘அப்பா மணல் வீடு கட்டிக்கொண்டிருந்தேன்! அப்போது ஒருவர் நாராயணா நாராயணா என்று சொல்லிக்கொண்டே வந்து என் மணல் வீட்டை கலைத்துவிட்டார்! அவரிடம் சண்டைக்குப் போனேன்!’ ‘நாராயணன் நினைவில் தவறு நடந்து விட்டது!’ என்றார். ‘யாரப்பா அந்த நாராயணன்?’ என்று மகள் கோதை தந்தை பெரியாழ்வாரிடம் கேட்பாள்!
‘உன்னையும் என்னையும் படைத்தவன்! உலகத்திற்கே படியளப்பவன்! மூவலகத்தையும் அளந்தவன்!’ ‘அடேயப்பா! அவ்வளவு பெரியவனா?’ என்று கேட்பாள் கோதை!
‘முதலும் முடிவுமில்லாதவன்! கமலக்கண்ணன்!’ ‘அவருக்கு ஏன் கண்ணன் என்று பெயர் வந்தது?’ என கேட்பாள் கோதை.
‘அழகான கண்களை உடையவன்!’ ‘அப்பா, அந்த கண்ணனின் கதையை கூறுங்கள்’ என்பாள் கோதை!
சொல்லத் துவங்குவார் பெரியாழ்வார்! கண்ணனின் லீலைகளை காட்டுவார்கள்! அந்தக் காட்சியில் கண்ணன் மண்ணைத் தின்பான்!
தாயார் வாயை திறக்கச் சொல்வாள்! அதில் உலகம் தெரியும்! இப்போது பெரியாழ்வார் மீண்டும் மகளிடம் கண்ணனின் மகிமையைச் சொல்வார்!
அந்தக் கதையைக் கேட்ட கோதை ‘அப்பா! நான் அந்தக் கண்ணனை காண முடியுமா?’ என்று கேட்பாள்!
அந்தக் கண்ணனையே நினைத்திருந்தால் என்றாவது அவனைப் பார்க்க முடியும்!’ என்பார் பெரியாழ்வார்.
‘அப்படியானால் இன்று முதல் அந்த கண்ணனையே நினைத்திருப்பேன்’ என்பாள் கோதை!
அடுத்து கோதை தந்தையிடம் ஒரு கேள்வி கேட்பாள்! ‘தினமும் ஒரு மாலையை தொடுத்து க்கொண்டிருக்கிறீர்களே! அது யாருக்கு?’ ‘என்று கேட்பாள் கோதை.
‘அது அந்த கண்ணனுக்குத்தானம்மா’ என்பார் பெரியாழ்வார்! ‘கண்ணனுக்கு மாலை என்றால் மிகவும் ஆசையாப்பா?’ ‘ மிகவும் ஆசை!’ அப்படியே கிளம்புவார் பெரியாழ்வார்!
‘எங்கே போகிறீர்கள் அப்பா?’ என கேட்பாள் கோதை!
‘பழங்கள் பறித்து வருகிறேன் அம்மா.’ கிளம்புவார் பெரியாழ்வார் இப்போது கோதை கண்ணன் சிலையிடம் போவாள்! அவனை விளையாட அழைப்பாள். அவன் வரமாட்டான்!
உடனே,‘அது சரி! அப்பா சொன்னதைப்போல் மாலை போட்டால்தானே உனக்கு பிடிக்கும்!’ என்று சொல்லிவிட்டு மாலையை எடுக்க போவாள் கோதை! பிறகு தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்
‘இந்த மாலையை உனக்கு சூடமாட்டேன்! நானே சூடிக்கொள்வேன்! அப்போதுதான் இந்த மாலைக்காக நீ என்னுடன் விளையாட வருவாய்’ என்று சொல்லியபடி அந்த மாலையை தானே சூடிக்கொள்வாள்!
அப்போது பெரியாழ்வார் அங்கே வந்து அலறுவார்! ‘கோதை! யார் கொடுத்த தைரியம் இது? அனுதினமும் நான் ஆண்டவனுக்கு செய்து வரும் தொண்டினை அரை நொடியில் கெடுத்து விட்டாயே? பாடுபட்டு உன்னை வளர்த்ததற்கு பலனா இது?
அப்படியே இதுவரையிலும் கண்டித்திராத மகளை ஒங்கி கன்னத்தில் அறைவார் பெரியாழ்வார்! பெண்ணை ‘ என் முன் நிற்காதே! போ வெளியே’ என்று துரத்துவார்!
பிறகு மனம் இரங்கி பெண்ணிடம் கொஞ்சுவார்! வேறொரு மாலையை தொடுத்து பெருமாளுக்கு கோயிலில் போய் சாத்துவார்! ஆனால், அந்த மாலை சூட்டியவுடன் கீழே விழுந்து விடும்! பெரியாழ்வார் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்!
‘குழந்தை செய்த தவறுக்கு இத்தனை பெரிய கோபமா? மன்னிப்பு கேட்ட பிறகும் உன் மனம் நிம்மதி அடையவில்லையா? என் தொண்டின் பலனை இப்போது நான் இழந்து விட்டேனா? இறைவா, இந்த பூவுலகில் உன் அடியவன் என்ற சொல்லுக்கே நான் அருகதையற்றவனாகி விட்டேனா? வேண்டாம்! வேண்டாம்! அந்த அறியாச் சிறுமி தெரியாமல் தவறு செய்துவிட்டாள்! ஆத்திரப்படாமல் எங்களுக்கு அருள் செய்!’ என்று கதறுவார் பெரியாழ்வார்.
அப்போது சிறுமி கோதை தான் சூடிக்கொண்ட மாலையை எடுத்து வருவாள்! ‘அப்பா! நான் சொல்வதைக் கேட்டு ஆத்திரமடைய வேண்டாம்! ஆண்டவன் குழந்தைகளிடம்தான் அதிக அன்பு காட்டுவான் என்று நீங்கள் தானே சொல்வீர்கள்! அப்படியானால் நான் சூட்டிக்கொண்ட மாலையை பெருமாள் ஏற்றுக்கொள்ளாமலா போவார்! கண்ணன் மேல் கொண்ட ஆசையினால்தானே நான் சிறிது நேரம் அதை கழுத்திலே போட்டுக்கொண்டேன்! அதையா தவறாக கருதுவார்? ஒருக்காலும் இல்லை!
அப்பா, நான் சூட்டிக்கொண்ட மாலையை ஒரே ஒரு முறை அந்த ஆண்டவனுக்கு சூட்டித்தான் பாருங்களேன்’ என கெஞ்சுவாள் கோதை!
பெரியாழ்வார் அதை சூட்டுவார்.
அங்கே ஓர் அற்புதம் நடக்கும்!
(தொடரும்)
நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கல் 50 ஆண்டுகளுக்கு பிறகும் திரையரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் அதிசயம்,
சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கம்
சிவகாமியின் செல்வன், கர்ணன் இரண்டும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு 60, 50 நாட்கள் என கடந்து வெற்றி மகுடமாய்
http://i66.tinypic.com/ivenf8.jpg
http://i67.tinypic.com/258ba02.jpg
100 வது நாள் அந்தமான் காதலி
http://oi64.tinypic.com/24l2cm0.jpg
100 வது நாள் ஜெனரல் சக்கரவர்த்தி (யாழ்ப்பாணம்- ராஜா)
http://oi68.tinypic.com/fxe70x.jpg
நடக்கும் நடையில் 4000 வகை காட்டிய ஒப்பற்ற கலைஞன்,
நம் மனதை கொள்ளை கொண்ட உத்தமன், அந்த தெய்வமகன் காட்டிய ஸ்டைல் 4 லட்சம் வகை, இந்த தெய்வப்பிறவி நடிகர்திலகம் உலகின் 8 வது
அதிசயம், கடவளின் 11வது அவதாரம், உதாரணம்,
1969 ல் வெளியான தெய்வமகன்
இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு சென்ற முதல் படம் என்ற பெருமையோடு ஆஸ்காரின் கதவுகளை சிவாஜி என்ற ஒரே பலத்துடன் தட்டியபோது ஒரே மனிதனால் இப்படி 3 வகை வித்யாசமாகவும்,...
300 வகையான பாவனைகளும்,
நிச்சயமாக செய்ய முடியாது,
என ஆஸ்கார் தேர்வுக்குழுவில் இருந்த முட்டாள்களால் தெய்வமகன் தேர்வு செய்யப்படவில்லை.
http://oi65.tinypic.com/5vvi8w.jpghttp://oi63.tinypic.com/dorltt.jpghttp://oi65.tinypic.com/21980hg.jpg
http://oi65.tinypic.com/1zplfh3.jpghttp://oi64.tinypic.com/w6wktz.jpg
(முகநூலில் இருந்து)
திரு.சிவா சார்,
நடிகர்திலத்தின் இலங்கை சாதனைகளை தொடர்ந்து பதிவிட்டுவரும் தங்களுக்கு நன்றி. தாங்கள், சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சென்னையில் இருக்கும் தகவல் பற்றி தெரிவித்திருந்தால், நம் நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடியிருக்கலாம்.
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
Yes I am also supporting this matter.
காசு பணம் துட்டு துட்டு.....நடிகர்திலகம் கூர்நோக்கில்!
காசேதான் கடவுளடா ...ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!
https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14
கரோகே !
Quote:
தலைமுறைகள் தாண்டியும் ஈர்க்கும் அமரத்துவம் பெற்ற நடிகர்திலகத்தின் சிரஞ்சீவிப் பாடல் !!
https://www.youtube.com/watch?v=UR5KIe2ktEY
பொன்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள்....காசுபண மழையாக! இதைவிட ஒரு கலர்புல் கனவு கண்டதுண்டா எவரேனும்!?
https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...6e&oe=57C50BB6
இந்த நிழற்படத்தை வண்ணத்தில் இப்போது தான் காண நேரிட்டது. இது ஒரிஜினல் வண்ண புகைப்படமா அல்லது வண்ணமாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படமா தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இந்த நிழற்படத்தை முதன் முதலில் தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
நண்பர் ஸ்வாமி துரைவேலு அவர்களின் முகநூல் பகிர்விலிருந்து...
நண்பர் சிவா அவர்களே,
சென்னை வந்து சென்றதில் உங்களுக்கு நல்ல ஆவண அறுவடை நடந்திருக்கிறது என புரிகிறது. பராசக்தியின் 38 வது வார விளம்பரம் பிரமாதம். அது போலவே இலங்கையில் எந்த படமும் செய்யாத சாதனைகளை செய்த உத்தமன் மற்றும் அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய படங்களின் 100-வது நாள் விளம்பரங்களின் அணிவகுப்பு மிக பிரமாதம்.
ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்வை கொடுத்த புகைப்படம் பட்டிக்காடா பட்டணமாவின் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாட்ட புகைப்படமே. அந்த நாள் ஞாபகம் என்பது நான் விரும்பி எழுதும் தொடர். இளைய சகோதரன் செந்தில், சந்திரசேகர் சார் மற்றும் பலரும் விரும்பி படிக்கும் தொடர் அது.
என்னிடம் பேப்பர் கட்டிங்களோ, டைரி குறிப்புகளோ இல்லை.அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய செய்தித்தாள்களை பார்க்கவும் குறிப்பெடுக்கவும் வசதியும் கிடையாது. என் நினைவிலிருந்து எழுதும் குறிப்புகளே அவை. ஆகவே எந்த தவறும் நேர்ந்துவிடாமல் எழுத வேண்டுமே என்பதனாலேயே நேரம் எடுத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நான் எழுதியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் வண்ணம் விளம்பரங்களோ, புகைப்படங்களோ அல்லது செய்திகளோ இவற்றை யாரேனும் தரவேற்றும்போது எனக்கு ஏற்படும் மகிழ்வு அளவிடமுடியாதது. வசந்த மாளிகை வெளியான அன்று மதுரையில் பெய்த மழை செய்தியாக வந்திருந்ததை சுவாமி பதிவு செய்தார். 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை வசந்த மாளிகையோடு சேர்த்து காண்பித்ததை விளம்பரத்தின் மூலம் செந்தில்வேல் பதிவு செய்தார். இப்போது மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா நிகழ்விற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை பதிவு செய்திருந்தேன். அந்த நிகழ்வு பத்திரிக்கையில் புகைப்படமாக வந்திருந்ததை இங்கே நீங்கள் தரவேற்றியிருக்கிறீர்கள். நாம் எழுதும் சம்பவங்கள் உண்மையின் அடிப்படையில் சொல்லப்படுபவை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை.
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
சந்திரசேகர் சார், பரணி மற்றும் ராமஜெயம் சார்,
உங்கள் ஆவலை நிறைவேற்றும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி!
அன்புடன்
சிவா சார்,
அது போன்றே நடிகர் திலகத்தின் ராணுவ சீருடை Blow Up ஸ்டில் சூப்பர். சினிமா எக்ஸ்பிரஸ் முதன் முதலாக பெரிய வடிவில் வெளியானபோது அதன் நடுப்பக்கத்தில் வந்த Blow Up இது. 1980 மார்ச் 15 அன்று வெளியான சினிமா எக்ஸ்பிரஸ் என்று நினைவு. அந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகியிருந்தது. அதற்கு முன்பு பாலும் பழமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த Blow Up வெளியான இதழையும் வைத்துக் கொண்டு கட்டபொம்மன் பார்க்க தியேட்டருக்கு சென்று தியேட்டருக்கு எதிர்வரிசையில் இருந்த மளிகை கடை வாசலில் நண்பனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது கடை உரிமையாளர் என்னிடமிருந்து கேட்டு வாங்கி புத்தகத்தை பார்த்து விட்டு நடுப்பக்க Blow Up- ஐயும் பார்த்துவிட்டு [மதுரைக்கே உரித்தான ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு] "கணேசனை அடிச்சிக்க ஒரு பயலும் கிடையாது. எந்த டிரஸ் போட்டாலும் எப்படி இருக்காப்பல பாரு" என்று சொன்னது இப்போதும் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நாள் ஞாபகத்தை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த தங்கள் பதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
சென்ற ஞாயிறு 29.05.2016 மாலை திருச்சியில் சிவாஜி ஃபிலிம் கிளப்பில் நமது நண்பர்கள் வாசுதேவன், சுப்ரமணியம், ஆதவன் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபம் திரையிடலை சிறப்புற நடத்தியுள்ளார்கள். அவர்களை திரு அண்ணாதுரை அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள். நமது வாசுதேவன் அவர்களின் முகநூல் பகிர்விலிருந்து..
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d7&oe=57C1E244
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a3&oe=57CF0A1E
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...5e&oe=57D9B0CF
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...db&oe=57CE2E5F
திரு சந்திரசேகர் சார்
சில தேவை நிமித்தம் குறுகியகால அவகாசத்தில் சென்னை வந்திருந்தேன்
சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அமைந்தது
மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கே திரு முரளி சார் திரு s.வாசுதேவன் சார் திரு khan திரு சொக்கலிங்கம் சார்
மற்றும் டைரக்டர் திருc.v. ராஜேந்திரன் அவர்களையும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது
முழுமையா பங்கேற்கமுடியாமல்போய்விட்டது மிகவும் கவலையாக இருக்கிறது.
மீண்டும் சென்னை வரும் காலம் வராமல் போகாது
சந்திப்போம்.
10 வது ஹவுஸ் புல் வாரம்
பட்டாக்கத்தி பைரவன்
ஜெஸிமா(கிராண்பாஸ்) ஶ்ரீதர் (யாழ்ப்பாணம்)
http://oi66.tinypic.com/255rgaw.jpg
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...12&oe=57C6CA74
SSS என நம்மால் அறியப்படும் நமது அன்பும் பாசமும் நிறைந்த நண்பர் சுந்தரபாண்டியன் அவர்களுக்கு நமது நடிகர் திலகம் திரி சார்பில் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறையருளால் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
இனிய உதய நாள் நல்வாழ்த்துகள்.. சுந்தர பாண்டியன் சார்!
என்றும் அன்பிற்குரிய வீயார் சார் மற்றும் ஆதவன் ரவி சார் அவர்களே , மனதார வாழ்த்திய நடிகர் திலகத்தின் உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...என் உயிர் மூச்சி உள்ளவரை நடிகர் திலகமே என் துணை... நீங்கள் அனைவரும் உறுதுணை... மிக்க நன்றி...
சுந்தர பாண்டியன்
http://oi68.tinypic.com/j6tppf.jpg
(முகநூலில் இருந்து)
10 வது வாரம்
சிவகாமியின் செல்வன்
http://oi67.tinypic.com/fp6yh3.jpg(முகநூலில் இருந்து)
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!
மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!
குறுந்தொடர் பகுதி 1 ஹம்மிங் இடைசெருகல்கள் !
Humming Bird 1 TMS! / பாலும் பழமும்
https://www.youtube.com/watch?v=iw_QtgwIer8Quote:
ஹம்மிங் என்றதும் முதன்மையாக மனதில் தோன்றுவது நடிகர் திலகத்தின் பாலும் பழமும் பாடலில் துவக்கத்தில் வரும் TMS ஹம்மிங்கே!
ம்ம்ம்ம்ம்ம்ம்ஹொஹொஹொ ......என்னவொரு மனதை வருடும் தேன்மதுர தென்றலிசைத் துவக்கம்!
இப்பாடலின் தனித்தன்மை சிறப்பு என்னவென்றால்......பாலும்பழமும் பாலும்பழமும் பாலும்பழமும் என்றே முழுப்பாடலையும் பாடி முடித்து விடலாம்!
Humming Bird TMS's interlude is a perfect cuff and collar match in this evergreen honeyfilled song sequence!
https://www.youtube.com/watch?v=lWDg8dheihg
யாழ்நகர் -ராணி திரை அரங்கில்
நீதி படம் திரையிட்டிருந்தபொழுது
மக்கள் கூட்டம்
http://oi67.tinypic.com/2ptrv3q.jpg
அன்பு நண்பர் sss என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சுந்தர பாண்டியன் சார்,
உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசிகளும், துணையும், வாணி ஜெயராம் அம்மாவின் வாழ்த்துக்களும் இன்னும் நூறாண்டு காலம் தங்களை நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வைக்கும். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். நேற்று முழுக்க ஷிப்டில் இருந்ததால் நேற்றே வாழ்த்த இயலவில்லை. மீண்டும் தங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிவா சார்,
அதிர வைக்கும் ஆண்டவரின் இலங்கை சாதனை ஆவணங்களைத் தந்து அசர வைப்பதற்கு நன்றி. தங்கள் சென்னை வருகை எனக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் தங்களை நிச்சயம் சந்தித்திருப்பேன். பரவாயில்லை. அடுத்த முறை சந்திக்கலாம்.
'பட்டாக்கத்தி பைரவனி'ல் எனக்கு அதிகம் பிடித்த தலைவரின் நடிப்புக் காட்சிகள் சில உண்டு. தங்கள் விளம்பரத்தைக் கண்டதும் அப்படியே அந்தக் காட்சிகள் கண்முன் நிழலாடுகின்றன. அவை எழுத்து வடிவிலும் விரைவில் வெளிவரலாம். அந்த அருமையான விளம்பரத்திற்காக உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள் பல.
தலைவர் பட சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் ஓடோடி முன்னால் சென்று கலந்து கொண்டு சிறப்பிக்கும் சித்தூர் வாசுதேவன் சாருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
முரளி சார்,
அந்தநாள் ஞாபகம் தொடரின் கன்டியூட்டி அட்டகாசம். எவ்வளவு அற்புதமான நினைவாற்றலுடன் கூடிய கட்டுரை! அனுபவித்துப் படித்து வருகிறேன். நிஜமான என் நன்றிகள் தங்களுக்கு.
ராகவேந்திரன் சார்,
வண்ண குணசேகரன் படம் அள்ளிக் கொண்டு போகிறது மனதை. என்னுடைய செல்லில் டெஸ்க்டாப் வால் பேப்பராக அலங்கரிக்கிறது நம் இதய தெய்வத்தின் அந்த நிழற்படம். மிக்க நன்றி.
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!
மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!
குறுந்தொடர் பகுதி 2 விசிலிங் இடைசெருகல்கள் !
பார் மகளே பார் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் இப்பாடலின் விசிலாரம்பம் இன்றுவரை பிரசித்தம் ...சிறப்பொலி சித்தர் சதன் புண்ணியத்தில்!
Where Eagles Dare ஆங்கில திரைப்படம் தமிழில் மொழிமாற்றமாகி வெளியிடப்பட்டபோது ரிச்சர்ட் பர்டன் ஒரு ராணுவ ரகசிய சந்திப்புக்காட்சியில் இதே விசிலை சங்கேத சங்கீதமாக அடிக்கும்போது தியட்டரில் ஆரவாரம் அமளி துமளி ....
https://www.youtube.com/watch?v=LKOwry1Re5E
விசி(ல்) கணேசன் விசில்திறம் விசித்திரம் !
https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg
நன்றி சின்னக்கண்ணு ....!
https://www.youtube.com/watch?v=IwgIGOYs_9Y