நான் முன்னரே குறிப்பிட்ட மாதிரி இவர்களுடைய அனைத்து படங்களின் முதல் வெளியீடு சாதனைகள் நமது தலைவரின் சராசரி படங்களின் மறுவெளியீடு முன்னால் தவிடுபொடி
Printable View
நான் முன்னரே குறிப்பிட்ட மாதிரி இவர்களுடைய அனைத்து படங்களின் முதல் வெளியீடு சாதனைகள் நமது தலைவரின் சராசரி படங்களின் மறுவெளியீடு முன்னால் தவிடுபொடி
[quote=kalaiventhan;1249871]
திரு கலைவேந்தன் அவர்களே,
நடிகர் திலகத்தை பற்றிய தவறான தகவலை வேண்டுமென்றே சொல்வதைதான் புளுகல் என்றேன். அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் உங்களை நான் கூறவில்லையே. பொய் தகவலை கூருபவர்களைதான் கூறினேன். அதற்குள் நீங்கள் அவசரபடுகிரீர்கள்.
நடிகர் திலகம் அவர்களை வைத்து படமெடுத்தவர்கள் எந்தவிதத்திலும் கஷ்டப்பட்டதில்லை நஷ்டப்பட்டதில்லை என்பதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள் முதலில் சார் !
நஷ்டப்பட்டவர் எல்லாம் திரும்ப திரும்ப வந்து நடிகர் திலகத்தை வைத்து படத்தை எடுத்துக்கொண்டே இருப்பார்களா ? நீங்கள் கூறினாலும் சரி யார் கூறினாலும் சரி...கூறும் கருத்தில் கொஞ்சமாவது ஒரு ஞ்யாயம் இருக்கவேண்டும்.
நான் ரசிகர் மன்ற நோட்டிசை கையில் பிடித்துகொண்டு எந்தகாலத்திலும் வசூல் ஒப்பீடு செய்ததில்லை என்பதை திரி படிக்கும் அனைவரும் அறிவர்.
ராஜா மற்றும் ரிக்க்ஷகாரன் வசூல் ஒப்பீடு நான் விளம்பரத்துடன் பதில் பதிவு செய்துள்ளேன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு...அதுவும்...பதில் பதிவு தான்...வாதம் தொடங்கியது கூட நான் அல்ல....ஆனால் நீங்கள் அப்படி என்றாவது செய்துள்ளீர்களா என்று சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்.
நவரத்தினம் படம் பற்றி கூட நான் பேச்சை எடுக்கவில்லை திரு apn கூறியதாக திரு பேராசிரியர் அவர்கள் ஞாபக படுத்துவதாக சொன்ன குறிப்பிற்கு பதில் தான் கொடுத்தேன்...உண்மை தகவல்தான் அது...! நவரத்தினம் ஓடவில்லை என்றால் ஓடவில்லை..இது உங்களுக்கு தெரியும்...அனைவருக்கும் தெரியும்...நான் அதனை பற்றி கூறினாலும் கூறாவிட்டாலும்.
நன்றாக ஓடி பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படத்தை ...அவர் சொன்னார் ....இவர் சொன்னார்....அந்த பத்திரிகையில் வந்தது...இந்த பத்திரிகையில் வந்தது என்று நீங்கள் பதிவு செய்யலாம்....ஆனால், அதனை விளக்கி நான் பதில் பதிவு செய்தால் அய்யஹோ...உய்யஹோ என்று என் மீது பாய்வீர்கள் ....அதனை சிரமேற்கொண்டு நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் இதுதான் உங்கள் எண்ணம் !
சிவந்தமண் திரு ஸ்ரீதர் அவர்களுக்கு சிறந்த லாபத்தை எப்படி கொடுத்தது என்பதனை நான் நன்றாக விளக்கியுள்ளேன்....நீங்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் திரு ஸ்ரீதர் அவர்கள் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் என்று தவறாக பதிவு செய்துள்ள இணைப்புகளை இங்கு பதிவு செய்தாலும், அவை கிசு கிசு வுக்கு என்ன மதிப்போ அந்த மதிப்புதான் !
அந்த இணைப்பில் விட்டுள்ள கதையை ....அது தாங்கியுள்ள கல்கி இதழை முதலில் பதிவு செய்யுங்கள் ....பிறகு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் !
Rks
..எல்லோர் மனங்களிலும் எம்ஜிஆர்!!...........
மனிதன் அழகாகப் பிறப்பதுண்டு...ஆனால்
அழகே மனிதனாகப் பிறந்ததுண்டா?
உண்டு! அவர் யார்?
அவர்தான் எம்ஜீயார்!!
எட்டாம் வள்ளலே!!
ஏழு வள்ளல்களைப் பற்றிப்
படித்திருக்கிறேன்!
எல்லோருக்கும் எட்டும்
வள்ளலே..உன்னைப்
படித்து,பார்த்துப் பார்த்து
வியந்திருக்கிறேன்.
உம்மால் பலரிங்கு
உயர் பதவியிலிருப்பதை...நான்
கண்ணாரக் காண்கிறேன்!
அன்னமிட்ட கையே!!
பசிக்கொடுமையை
முழுதாக அறிந்தவனும் நீயே;
அதை முற்றாக அழித்தவனும் நீயே!!
வாடிய பயிரைக் கண்டபோது
வாடினாராம் வள்ளலார்...நீயோ
வாடிய மனிதர்களுக்கு
வாரிக்கொடுத்து வாழ்வும் கொடுத்தாய்!
.
சந்திரனும் சூரியனும்
விண்ணிலிருப்பது சத்தியம்!!
இராமச் சந்திரனே......
மக்களின் மனங்களில்
நீயுமிருப்பது நிச்சயம்!!
courtesy net
இருட்டினில் வாழும் இதயங்களே..கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்..தலைவரின் சாதனை உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் .."
எத்தனை படம் நடித்தார் என்பது கேள்வி இல்லை அதில் அத்தனையும் சாதனை படைத்த தலைவரின் படங்கள் போல் இன்று வரை எவரும் நடித்தது இல்லை
தனி ஒரு கூட்டம் திருந்திவிட்டால் இந்த வாதத்திற்கு முடிவு உண்டு
நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.
அருமையான கேள்வி
இதயம் பேசுகிறது இதழில் 1983-1984 ஆண்டுகளில் இயக்குனர் ஸ்ரீதர் -மனம் திறந்து பேசுகிறேன்- கட்டுரையிலும் அந்த பட நஷ்டத்தை கூறி உள்ளார்... என்னுடைய பொருளாதார சரிவை 80% சரி செய்து மிக நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்ட படம் மக்கள்திலகம் நடித்த காவியம் "உரிமைக்குரல்"... இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் புரட்சி தலைவருக்கு நன்றி கடன் பட்டவன் ஆவேன்... எனவும் சொல்லி இருக்கிறார்...
super sugaraam sir