பருவமே.. பழைய பாடல் பாடு 4
கண்ணை மூடினால் உறக்கம் வரமாட்டேன் என்கிறது. மூடினால் அவள் முகம்..திறந்தாலும் தான்..
ஆஹா..எவ்வளவு இனிய முகம்..எவ்வளவு அழகிய குரல் அவளும் நளினம்..அவளது உடலும் நளினம்..
போகத் தான் வேண்டும்.. இப்போது போகக் கூடாதாம்..தாயாரின் சிரார்த்தமா.. என்னடா இது மங்கள் தாஸ்.. நீ இந்த ஊரின் பெரிய வணிகர் ரகுநாதரின் ஒரே மகன்..பார்க்குமிடமெல்லாம் இந்த ஊரில் உன் அப்பாவின் வீடுகள், நிலங்கள், கடைகள்.. ஏன் நான் செலவு செய்தாலென்ன..
செய்வது யாருக்கு..என் சிந்த்த்தூவிற்குத் தானே..சுருக்கமாகச் சொன்னால் அவள் முகம் சுருங்கத் தான் செய்யும்..சிந்தாமணி என்றால் முகமலரும்..அப்படியே உன் பாட்டியைப் போல நீட்டி முழக்கிக் கூப்பிடுகிறேனா என்றால்வெட்கச் சிரிப்புசிரிப்பாள்..
அதுவும் அடடா அவள் செய்யும் வெல்லப் பணியாரம்..அவள் கைப்பக்குவத்திலோ என்னவோ உடலெங்கிலும் தித்திப்புப் பரவும் பின் ஆவலாய் பச்சை வெற்றிலையை க் காம்பைக் கிள்ளும்போது அவள் புறங்கையில் தெரியும் பச்சை நரம்புகள் அதுவும் அவளது அழகிய பால்வண்ணமா..கொஞ்சம் மஞ்சள் பொடி சிறிதளவே தூவிய பால்வண்ணமா ஆம் அது தான் சரி.. அந்தக் கையில் எவ்வளவு அழகாய் இருந்து உளத்துக்குள்ளே உலையைப் பற்றவைத்தது..
ஆஹா இந்தச் சிந்தாமணியின் பெயரைச் சொர்க்கமென்று வைத்திருக்கலாம்..பிரம்மன் ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கிறதென்று விஷ்ணுவிடம் ஒப்புதல் வாங்கி விடுமுறையில் ஏகாந்தத்தில் இருக்கும்போது இவளை வடித்திருப்பான் போல..
கண்ணிமையும் அழகு; கண்களும் அழகு
புருவமும் அழகு; பருவமும் அழகு
முறுவலும் அழகு முறுவும் இதழும் அழகு
நாசியென்றால் எள்ளுப் பூவாமாமே.. ம்ம்ஹூம் இல்லவே இல்லை இவளுடையது தான்..அதில் செல்லமாய்க் குத்தப்பட்டு சிரிக்கும் வைரமூக்குத்தி
கன்னமும் அழகு..காதுமடல் அழகு..
ம்ம்கொஞ்சம் கீழிறங்கி யோசித்தால்..வேண்டாம் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள்வோம்!
மொட்டை மாடி அழகிய நிலா சிரித்தபடி மேகங்களுடன் நடை பழகிக் கொண்டிருக்கிறது..இப்படி நடக்கின்ற நடையில் படக்கென இளைத்து இளைத்து தேய்ந்து விடும்.. பின் மறையும் பின் எழும்.. ஆனால் எனது அக்னி..சிந்தாமணியின் சிந்தனையில் ஏற்படும் உடலக்னி என்னசெய்வது..
முடியவில்லையே..மங்கள் தாஸா சீக்கிரம் ஒரு முடிவெடு..
மங்கள் தாஸ் ஒரு முடிவெடுத்தான்..
உடன் கீழிறங்கி பின்பக்கம் கொல்லைப்புறச்சுவரைத் தாண்டிய போது தான் அதை உணர்ந்தான்..எங்கிருந்தோ மேகங்கள் சூழ்ந்து கொண்டதை..காற்றில் குளிரும் ஈரப்பதமும் கலந்திருப்பதை..என்ன இது என் சிந்த்தூவைப் பார்க்கப் போகவேண்டுமே..மழை வரும்போலிருக்கிறதே..
வருமென்ன..வந்தேவிட்டது
சுற்றிச் சுழன்றடிக்கும் காற்று..காற்றில் படபடக்கும் மரங்களின் இலைகள் இவையெல்லாவற்றுக்கும் கவலைப் படாமல். இப்படி எங்கேடா போகிறாய் மங்களா எனத் தடுப்பது போலவே உரக்க இடிக்குரலில் மின்னல்விளக்கில் மழை ஹோ ஹோ ஹோ வெனப் பெய்ய ஆரம்பித்தது.
ம்ஹூம் .. உள்ளக்கனல் தகிக்க சிந்தாமணியை அவள் நினைவே ஒன்றாகி சடக் சடக்கென வேகவேகமாக ஆற்றங்கரைப் பக்கம் சென்றால்.. இது என்ன ஆற்றில் வெள்ளம்..ஆற்றின் அக்கரையில் அவள் வீடு.. எப்படிச் செல்வேன்..அடடா அடடா அடடா அவள் ஏதோ செய்கிறாள் எனை..அட இது என்ன..
ஆஹா இருட்டிலும் இறைவன் நமக்குக் கருணைவைத்திருக்கிறான்..இந்த வான நிலா மேகத்தில் புகுந்துகொண்டால் என்ன.. என் இதய நிலா தான் இந்தக் கட்டையை எனக்குக் கொடுத்திருக்கிறாள் இறைவனிடம் சொல்லி..
நினைத்துத் தாவி அங்கே ஆற்றின் போக்கோடு எதிர்க்கரைப்பக்கம் சென்றுகொண்டிருந்த கட்டை மேல் மங்கள் தாஸ் ஏற அதுவும் அந்தப்புறம் அடித்துக் சென்றது அவனை..ஆனால் அவனறியாதது அவன் ஏறிய கட்டை நிஜமான கட்டையில்லை..பொய்யுடம்பு.. உயிரில்லாதது..ம்ஹூம் அதன் நாற்றத்தையும அவன் உணரவில்லை.. இருளில் ஆற்றின் கரை அருகில்வரக்கட்டையை விட்டுமறுபடி நீந்தி ஏறி வேகவேகமாய் (ஏன் இந்த மழை நிற்க மாட்டேன் என்கிறது) வேக வேகமாய் அவளுடைய வீடு இருக்கும் தெருவிற்குச் செல்ல விளக்குகள் எல்லாம் இல்லை..தெருவும் இருளோ என இருந்தது அவன் மனத்தைப் போல.
வீடும் இருளில்.. இருந்தாலென்ன.. அதோ முதல் மாடியில் அந்த நிலவு எனக்காக நின்றிருக்கும்..
மங்கள் தாஸின்கைகள் மாடியில் ஏறுவதற்காக அந்தப்பக்கமிருந்த மரத்தின் கிளையைப் பிடிக்கலாமெனத் தேட அகப்பட்டது ஒரு கயிறு அதைத் தொற்றி அங்கிட்டிருந்து சொய்ங்க்க் என மாடிக் கைப்பிடிச் சுவரைப் பற்றி அவ்வாறு பற்றுகையில் கைகளில் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு வழுக்க்கினாலும் மறுபடி தொற்றி உள்ளே குதிக்க சத்தம் கேட்டு சிந்தாமணி மாடியறையை விட்டு வெளியே வர
ப்பளீர்
.
வானத்தில் ஒரு மின்வெட்டு..மின்னற்குழந்தை கடகடவெனச் சிரிக்க..அந்தவெளிச்சத்தில் அந்த்ப் பதினைந்திலிருந்து பதினெட்டு வயதிற்குள் இருந்த மடந்தை (ஹப்பாடி விஷய்த்துக்கு வந்தாச்சு) சிந்தாமணி அவளும் பளீரென ஒரு மின்னல் போலத் தான் தோன்றினாள் மங்கள் தாஸிற்கு..
ஹச்சோ.. நீங்கள் நீங்கள் எப்படி இங்கே..உங்கள் தாயாரின் சிரார்த்தமென்று சொன்னார்களே உள்ளே வாருங்கள்..
குரலில் பதற்றம் உடலில் பதற்றம் கண்களில் பதற்றம் மட்டுமின்றி நாசியிலும் பதற்றம்..ஏதோ தேவையில்லாத நாற்றம்..
காட்டிக்கொள்ளாமல் உள் சென்று எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கில் மங்கள் தாஸைப் பார்த்தவள் அதிர்ந்தாள்..
கண்களில் காமத்தீ
உடலிலோ ரத்தம் வரும் சிராய்ப்புக்கள்..அதோ ஓரம் கயிறாய் ஊர்வது என்ன. ஓ...ஹ்.. பாம்பா..இதைப்பற்றியா ஏறி வந்தான்.. ஆற்றை எப்படிக் கடந்திருப்பான்
சிந்த்த்ட்தூஊஉ..
நாக்குழற அருகில் வர மங்கள் முயற்சிக்க எப்படி ஆற்றைக்கடந்தீர்கள்..
ஒரு கட்டை கிடந்தது அதைப்பற்றி வந்தேன் எனக் கைபற்ற முற்பட அவன்கைகளில் சில அழுக்குக்கள்..அந்தக் கட்டையுடையவை..
பார்த்தாள் சிந்தாமணி.. நள்ளிரவு..மழை..வெள்ளம் எல்லாம் கடந்து என்னை என்னிருப்பிடத்தை என்னுள்ளத்தை..இல்லை இல்லை என்னுடலைத் தேடி இவன் வந்திருக்கிறான்..இது சரியா சரியில்லையே.. என்ன செய்யலாம்..
மங்கள்..அங்கு குளியலறையில் மாலையில் போட்டுவைத்திருந்த வென்னீர் இருக்கிறது போய்க் குளித்து விட்டு வாருங்கள்..
சிந்த்தூ.. ஒரே ஒரு சின்ன அணைப்புக் கொடேன்.. ஓ உன்னுடையும் நனைந்து அழுக்காகுமோ எனப் பயப்படுகிறாயா..
இல்லைபடவா..உன் உள்ள அழுக்கை எடுக்கப் பார்க்கிறேன்.. முகம் கல்லாகி.. மங்கள் போய்க் குளித்துவாருங்கள்..
அந்த எண்ணெய் தீபத்தைப் போல அவள் குரலும் படபடக்க அவன்போய்க் குளித்து உடைமாற்றி வரும்போது அவள் கட்டிலில் திரும்பி அமர்ந்திருந்தாள்..
சிந்தூ..
திரும்பினாள்..
என் சிந்துவா இவள்.. சீற்றமிக்க கடலலைகள் இவள் கண்களுள் ஏன் பொங்கு கின்றன.. கண்களும் சிவந்திருக்கின்றன..முத்தாட அழைக்கும் உதடுகள் ஏன் இயல்பு மாறித் துடிக்கின்றன..
என்னாயிற்று..
நீங்கள் எப்படி வந்தீர்கள் தெரியுமா
தெரியும் மழை, கட்டை, கயிறு நீ.. இதற்காகவா கோபம்..
இல்லை மங்கள்.. நீங்கள் கட்டையாய்ப் பிடித்தது பிணம்.. கயிறாய்ப்பிடித்ததுபாம்பு.. இங்கு வந்திருப்பது என்றாவது ஒரு நாள் அழகெலாம் இழந்து ரத்தம் சுண்டி கட்டையாக ஜீவன் விடப்போகிற இந்த அற்ப மடந்தைக்காக (ஹை..ரெண்டாவது தடவையும் சொல்லியாச்சு)
சிந்தூ என்ன சொல்கிறாய் நீ..
தலையூசி ஒன்றை எடுத்தாள் நறுக்கென தனது சுண்டுவிரலில் குத்தினாள்.. ரத்தம் அவள் இதழ் நிறத்தைப் போலத் துளிர்க்க பாருங்கள் மங்கள்.. ரத்தமும் சதையும் கொண்ட சாதாரணப் பெண் நான்..எனக்காகவா இவ்வளவு பாடு உங்களுக்கு..இதில் கொஞ்சமே கொஞ்சம்பிற்காலத்தில் வரப்போகும் கணக்கான ஒரே ஒருசதவிகிதம் இறைவன் பால்காட்டினீர்கள் என்றால்.. அந்தக் கிருஷ்ணன் மீது ப்ரேமித்திருந்தீர்களென்றால் எங்கேயோ சென்றிருப்பீர்கள்..
என்ன சொல்கிறாய் நீ
என் மீதுள்ள ப்ரேமையை விடுங்கள் என்கிறேன்.. கொஞ்சம் ஆண்டவனை நினையுங்கள் என்கிறேன்..
நீ சொல்வதானால் எதையும் செய்வேன் சிந்தூ இதையும் செய்கிறேன் என்ற மங்கள் அன்றிலிருந்து பகவான் கிருஷ்ணனின்பக்தனானான்.. பிற்காலத்தில் லீலா சுகர் என்று அறியப்பட்டார்..க்ருஷ்ணாம்ருதமென்ற காவியத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார்..
*
மடந்தைப் பருவம் 15 இலிருந்து 18 வயதிற்குள்ளாமாம் பெண்களுக்கு..
அதைத் தேடப்போய் பில்வ மங்கள் பற்றிய குறிப்புக் கிடைக்க அதற்குக் கொஞ்சம் ஜிகினா வேலை செய்து எழுதிப்பார்த்தேன்.. (கவிதையைத்தவிர்த்ததற்குக் காரணம் கலை இது தான் என் ரூட் என்றுவிடுவார் என்ற பயம்)
இந்தப் பில்வ மங்களின் கதை ஒரு படமாகவும் வந்ததாக்கும்..எப்போது 1937 இல் ..எம்.கே.தியாகராஜ பாகவதரின் இரண்டாவது படம்.. சிந்தாமணி என்ற பெயர்.. எடுத்தது மதுரை ராயல் டாக்க்கீஸ் என்ற கம்பெனி.. ஒருவருடத்திற்கும் மேலாக எல்லாஇடங்களிலும் ஓடி மதுரை நியூ சினிமாவிலுமாம்- அதில் வசூலித்த பணத்தை வைத்து அந்த தயாரிப்பாளர்கள் மதுரையில் ஒரு தியேட்டர் வாங்கினார்களாம்..அதற்கும். சிந்தாமணி என்றே பெயர் வைத்தார்களாம்
.சிந்தாமணி தியேட்டரில் பல படங்கள் பார்த்திருக்கிறேன்(இப்போதும் இருக்கா என்ன) இந்த விஷயம் எனக்குத் தெரியாத ஒன்று (உண்மையா முரளி)
மறுபடியும் மடந்தைக்கு வந்தால்:
பெரிய திருமொழியில்:
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் என்று திருமங்கையாழ்வார் ஸ்ரீதேவி பூதேவிப்பிராட்டிகளை இளைய பருவம்கொண்ட நங்கையர்கள் எனச் சொல்கிறார்.
கோவலனும்பாருங்க.. விஷமக்காரன் மட்டுமல்ல விஷயக்காரன் தான்..
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் என சிலப்பதிகாரத்தில் வருகிறது.. கண்ணகிக்கு என்னவாக்கும் வயசு..பாவம் அவள் இன்னும் சின்னப் பொண்ணாம்..பன்னிரண்டு வயது மங்கைப்பருவம் என்கிறது சிலப்பதிகாரம்..
*
எனில் மடந்தைக்கு என்னப் பாட் போடலாம்..என யோசித்தால் முதலில் சிந்தாமணியில் வரும் ராதே எனக்குக் கோபம் ஆகாதடி..
https://youtu.be/7Gv2JlXTJng
பதினாறுக்கு நிறைய பாட்டுக்கள் இருக்கு..வாசு வந்ததுனால போட்டாச் சொல்ல வைக்கலாம்..
என்றும்பதினாறு .. வயது பதினாறு
மனதும் பதினாறு..அருகில் வா வா விளையாடு..
**
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது
*
அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை
தப்புங்க்ணா.. பருவ மடந்தைன்னு வந்துருக்கணும்..
ம்ம் திடீர்னு யூட்யூப் லிங்க் கனெக்ட் பண்ண டயமாகுதா.. சரி..ஒருபாட்டோட நிறுத்திக்கலாம்..லாமா..
அடுத்த பருவத்தில் சந்திக்கலாம்..
வாரேன்..:)