ஒரு அணிலின் கண்ணோட்டத்தில் --------------
E&OE
இந்த திரியில் சிறிதே அண்ணாந்து பார்க்கும் பொழுது , பல நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன - அருமையான படைப்பு வடிவத்தில் - யாரை பாராட்டுவது எதை பாராட்டுவது - பாராட்டத்தான் நமக்கு என்ன தகுதி உள்ளது ??? இப்படி குழம்பிகொண்டிருக்கும் வேளையில் , அணிலாகவே இருந்து சிறிய சிறிய பதிவுகளை படைத்துகொண்டே இருந்தால் சந்தோஷமே என்ற முடிவில் ஏற்பட்டதுதான் இந்த பதிவு
One person was ,for a long suffering from Insomnia and he met one sathu one day and explained his problem – the sathu asked him – are you not really getting sleep ? If so do one thing from today – start counting your blessings – you will get excellent sleep ….
How true it is ! We always compare ourselves with those who are less fortunate than ourselves and get depressed – and we find no end to our miseries. NT seems to be an exception .
யாருடுனும் compare செய்தாலும் எவள்ளவு அழகாக பொருந்துகிறார்- நீங்களே பாருங்களேன் :)
1. NT & Lord Siva
Siva(ji)
முப்புரத்தை எரித்தவர் - ருத்திர தாண்டவம் புரிபவர் - பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குபவர் .
Sivaji
சிவனாகவே மாறியவர் - நடிப்புலகில் 50 வருடங்களுக்கு மேலாக ருத்ர தாண்டவம் புரிந்தவர் - கேட்ட நடிப்பை கேட்டவர்களுக்கு வாரி வாரி தந்தவர் - சிவா(ஜி) அழைத்ததினால் நம்மை பிரிந்து சென்றவர்.
2. NT & Lord Vishnu
விஷ்ணு : பத்து அவதாரங்களை எடுத்தவர் - அதில் நான்கு அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை - மோகினியாக மாறி அசுரர்களின் உறக்கத்தை கெடுத்தவர் . நன்மையை மட்டும் செய்பவர்.
NT
பல அவதாரங்களை பட உலகில் எடுத்தார் - எதையுமே மறக்க முடியாத வகையில் தன் அவதாரங்களை அழகு படுத்தினார் . நடிப்புலகில் மன்மதனாக நர்த்தனம் புரிந்தார் . மற்றவர்களுக்கு நன்மை புரிவதை மட்டுமே விரும்பினார்
NT and Rahim
Rahim
நல்ல எண்ணமும் , அன்பும் தான் ஒரு மனிதனுக்கு தேவை - எந்த மதமும் Violence க்கு சம்மதம் தருபவை அல்ல என்பதை ரஹீம் நடத்தி காட்டினான்
NT
ரஹீம் ஆக நடித்துமட்டும் காண்பிக்கவில்லை - வாழ்ந்தும் காட்டினார்
NT and Antony
Antony
தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக வாழ்தவன் - தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக அழித்துகொண்டான்
NT
தன்னை நம்பின பெருமாளின் கனவுகளை ஒரே படத்தில் மூலம் நிறைவேற்றினார் - நன்றியே அவருக்கு நன்றி சொன்னது
NT & Karnan
கர்ணன்
விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தான் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் அவன் வீரத்தை வீழ்த்தினர்
NT
விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தவர் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் NT யின் புகழை வீழ்த்த விரும்பினர் பலர் – நடக்கவில்லை
NT & Raja Raja Cholan
Raja Raja Cholan
ஒரு பெரிய கோயிலை கட்டி மாபெரும் மன்னனாக வாழ்தவன் -மன்னனாக இருந்தும் பதவி ஆசை இல்லாதவன்
NT
அந்த பெரிய கோயிலுக்கே ஒரு யானையை பரிசாக வழங்கினவர் . பதவியே இல்லாமல் மக்களின் மனதில் அரசாட்சி புரிந்து கொண்டுஇருப்பவர்
NT & Veera pandiya Kattabomman
Kattabomman
வெள்ளையர்களை விரட்ட ஒரு கருப்பு வித்திட்டது வீர முழக்கத்துடன்
NT
கருப்பு வெள்ளை படங்களிலும் பல வெள்ளி விழாக்களை வசூல் முழக்கத்தில் நடத்தி விரோதிகளை விரட்டி அடித்தவர் . இன்னும் விரட்டி அடித்துகொண்டிருப்பவர்
NT & வா.வூ.சி
Chidambaram Pillai
ஒரு கப்பலை வாங்கினார் மக்களை நம்பி - மக்கள் அவருடைய கப்பலை தொலைத்தனர் அவர் சிறையில் இருக்கும் வேளையில் . சுதந்திர தாகத்தினால் வந்த விக்கலில் அவர் உயிர் பிரிந்தது
NT
நாடு தாண்டி உள்ள மக்கள் , அரசாங்கம் அவரை பூஜித்தனர் , புகழாரம் சூட்டினர் - ஆனால் இந்த நாடோ , தமிழகமோ அந்த மரியாதையை செய்யாமல் தன் மதிப்பை தொலைத்துவிட்டது - தமிழின் தாக்கத்திலே , தமிழனாகவே வாழ்ந்த உயிர் நம்மை விட்டு பிரிந்தது - பிரிந்தது உயிர் மட்டும் அல்ல - நக்கீரர் வளர்த்த தமிழும்தான் - இப்பொழுது வாழ்வது " கொலைவெறி" மட்டுமே
இன்னும் தொடரலாம் ----------
Ravi
:):smokesmile: