http://youtu.be/85-amUwRvbk
Printable View
A very good and timely choice. Thank you for posting it. Hope you won't mind me posting
Muthukumar's national award winning ஆனந்த யாழை மீட்டுகிறாய்...
http://www.youtube.com/watch?v=eAUdpyIMJxY
ம்ஹீம் பார்க்க முடியலை ஆர்.டி..
CK: Click on "Watch on youTube" on the above screen, or cut and paste the link below on to your browser:
youtube.com/watch?v=eAUdpyIMJxY&feature=player_embedded
Thanks RagadevarE.. naan paarththu vittu solkirEn
பார்த்தேன் ஆர்டி.. நாட் ஸோ இம்ப்ரஸ்ஸிவ்..ஒருவேளை படம் பார்த்திருந்தா பிடிச்சுருக்குமோ என்னவோ.. நீ தானே என் பொன்வசந்தம் பாடல்கள் கொஞ்சம் பெட்டர்..
:ty: madhu and ck for the song clip and audio
For wives in joint families: (just for fun! :lol: ). I used to sing this song.
YEzhu Malai AaNdavane VenkataramaNaa ...........
http://www.youtube.com/watch?v=jnKdguYYMug
Of course, joint families are almost non existent! :)
lovely song Vathiyarayya... anegama indha kaalathavarukku idhu puriyave povadhillai ....
( ஒரு ஜமீந்தார் மகன் ஊர் சுற்றப் போனபோது ஒருவன் அழுவதைப் பார்த்தானாம். விசாரித்தபோது அவன் பசிக்குது என்று சொன்னதும் "அதற்காக ஏன் அழவேண்டும். சமையற்காரனை கூப்பிட்டு என்ன வேண்டும் என்று சொன்னால் அவன் செய்து டைனிங் டேபிளில் வைத்துப் பரிமாறுவான். சாப்பிட்டால் பசி போய்விடும். அவ்வளவுதானே ?" என்றானாம். இந்தக் காலத்தவருக்கு கூட்டுக் குடும்பத்தின் நல்லது, கெட்டது எல்லாம் புரிந்து கொள்வதே கஷ்டம்தான் )
கூட்டுக் குடும்பத்தில் கெட்டது என்று ஒன்று இருப்பதாக இல்லை..அது என்னவோ..காலம் மாறிப்போச்சுன்னு ந்னு சமாதானப் படுத்திக்க வேண்டியது தான்..மனித உறவுகள் கூட (அப்பா சித்தப்பா சித்தப்பா பையன் அத்தை அத்திம்பேர் மருமான் என ) கொஞ்சம் விலகியிருக்கவே ஆசைப் படுகின்றன இந்தக் காலத்தில்..
கெட்டதுன்னு ஒண்ணு நினச்சால் - ப்ரைவஸி இல்லை என்பார்கள்..பட் அதெல்லாம் பார்த்துக் கொண்டால் பாசம் எப்படி வளருமாம்..( நான் அந்த வீடியோ பார்க்கவில்லை இன்னும்)
Good song, beautifully composed by Raja, well sung by Malaysia Vasudevan; but ruined by poor picturization and amateurish acting (in my opinion). "அப்படியே கண்ணை மூடி அந்த இசையை மட்டும் கேட்டால் ..Raja would levitate you like a magician"... I fully agree! :)
ரொமாண்டிக் சீனுடன் இளவயதினர் டூயட் பாடும் பாடல் தான் மனதைக் கவருமா என்ன(அஃப்கோர்ஸ் ஹீரோயினைப் பொறுத்து) ம்ம் இந்தப் பாட்டு பார்த்தது வெகு தற்செயல்..இரண்டு முது ஜோடி.. நன்னாத்தான் மனசை வருடுது ஸாங்க்.படம் பண்ணையாரும் பத்மினியும்..
http://www.youtube.com/watch?v=EDNes-jrLQM&hd=1
Thanks for introducing athe song....ck...really wonderful
சிக்கா... நீங்க சங்கராபரணம் காலத்திலேயே துளசி ரசிகர் மன்றத் தலைவர் இல்லையோ ? :)
இந்தப் பாட்டைக் கேட்டபோது யாரோ புதுமுக இளஞ்சோடிகளுக்கு என்றுதான் நினைத்திருந்தேன். அப்புறம்தான் விஷயம் புரிஞ்சது. இதுவும் நல்லாவே இருக்குது.
//Time to practice at home, your home ! // ராஜ்ராஜ் சார் :)
//சிக்கா... நீங்க சங்கராபரணம் காலத்திலேயே துளசி ரசிகர் மன்றத் தலைவர் இல்லையோ ? // ஹி ஹி..:) பட் ஆனா இது துளசின்னு வீகாவும் இல்லை என்று நானும் நேத்து சின்ன ஆர்க்யுமெண்ட்..ம்ம் என் சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி..
From Thaai Illaa PiLLai
Chinna Chinna OoruNiyaam....
http://www.youtube.com/watch?v=BF9rUoR4f1k
This song always reminds me of my ancestral village(native place) founded by my great grandfather with one large house,two guest houses, a pond(ooruNi),a well, a temple and a garden (next to the pond). There is a mango tree next to the pond (ooruNiyin karaiyil). I used to visit the village during summers to climb trees and pick raw mangoes and tamarind fruits! :lol: Of course, tender coconut (iLaneer) and nongku( tender palm seeds) were the main attraction!
I still visit the village!
uma, loved ur share of musical bliss. banco sabadell. Human emotions are priceless.
*
அவன் அழகன்..அப்போ அவள் அழகியா இருக்கணுமே..யெஸ்;..அப்புறம் லவ்.? யெஸ் அப்ப டூயட்டா சொல்லப் போறீங்க..ஆமா..ஆனா இது வேற டைப்ப்..
அவனுக்கு நிறையப் படிக்கணும் அஃதாவது ஐஏஎஸ் படித்து பாஸ் பண்ண வேண்டும்கறது தான் லட்சியமே..எக்ஸாமிற்காக நகரத்துக்குப் போறதுக்கு முன்னால லவ்வரப் பாத்துட்டுப் போலாமா ந்னு மனசு சின்னதா ப்ராண்டறது..
சரின்னு போய்ப் பாக்கறான்..அவ இருக்கா வீட்டுல..ஸர்ப்ரைஸ்..கூட யாருமே இல்லை..வேறென்ன..காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்ற இன்பம் வாழ்வில் இனிக்கத் தான் செய்யும்
..பட்.. டச்சிங்கே போதும்னு அவனும் அவளும்..ப்ளஸ் ரெண்டு பேர் மனசுலயும் ஓ காட்.. இந்த கடிகாரத்த நிறுத்திடேன்.. நான் இவன்கூடவே இருப்பேன்ல இன்னும் கொஞ்ச நேரம்.. நு அவ க்ளாக்கப் பாக்கறா..அவனுக்கும் தான்..பட் என்ன சிரிச்சுப் பேசி சாப்பிட்டுட்டு அப்ப்ப்புறம் கொஞ்சம் கொஞ்சலாமா..ம்ம்ம்ம்ஹீம்..உதறி எழுந்துட்டு ஓடியேபோறான் புள்ளையாண்டான்..படிக்கணுமே..
படிக்கையிலும் அந்த பாழாப் போன பெளர்ணமி நிலா முகம் டபக்குனு கண்ணு முன்னால வர,பக்கெட் வாட்டர எடுத்து தலையில ஊத்திக்கறான்..ஒரு வழியா எக்ஸாம் முடிச்சு ரிஸல்ட் வந்த வுடனே அவளுக்கு ஃபோன் போட்டா அவ மறுமுனைல.. இந்தாம்மா நான் ஐஏஎஸ்பாஸ்பண்ணிட்டேன்னு அவன் அழ.. நீங்க ஜெயிப்பீங்கன்னு எனக்குத் தெரியும்னு அவ அழ (எல்லா வார்த்தையும்பாட்டுல மூழ்கிவிட)..ம்ம் அச்சோ பாட்டு முடிஞ்சுடுத்தே..
கொஞ்சம் எசகுபிசகா ஆகியிருக்க வேண்டிய பாட்டு தான்..ஆனா சமாளிச்சு நல்லாவே எடுத்துட்டாங்க..( நரேன் சினேகா) பாக்காம கேட்டா இன்னும் நல்லா இருக்கும்…
யாராக்கும் லிரிக்ஸ்னு தெரியலை.. மியூசிக் இளைய ராஜா? பள்ளிக் கூடம்..
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உறையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா...
ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து வெளியில் தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய் இருந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்துகிறதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
இதயம் நொறுங்குகிறதே இதையே விரும்புகிறேன்
இதுவே போதும் கண்ணே இறப்பேனே பெண்ணே
ஓஹோ ஆயிரம்காலம் வாழ்ந்திடும் வாழ்க்கை நிமிடத்தில் வாழ்ந்தேனே
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த திசையாகும்
உன்முகம் இருக்கும் திசையே எந்தன்
கண்கள் பார்க்கும் திசையாகும்
கோடையும் வாடையும் இலையுதிர்காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்
உன்னுடன் இருக்கும் காலத்தில் தான்
எந்தன் நாட்கள் உருவாகும்
உந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்
இதுகாதலில்லை காமமில்லை..
ஓஹோ தேகத்தைத் தாண்டிய மோகத்தைத் தாண்டிய
உறவும் உறவும் இது தானோ..
**
பாட்டு வீடியோவா இருக்கு..போதாக்குறைக்கு பாடல் வரிகளும் இருக்கு..இருந்தாலும் அதப்பத்தி என்ன சொல்லலாம்..
மதுரையில் இருந்தாலும் மஸ்கட்டில் இருந்தாலும் அம்பத்தூரில இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் பெங்களூர் இருந்தாலும் பெஹல்காமில் இருந்தாலும் மாம்பலத்தில் இருந்தாலும் மலேசியாவில் இருந்தாலும் மழை என்பது ஒன்று உண்டு.. அது சோவென்று பெய்யும் போது டபக்கென மண்ணில் கலந்த வாசம் வந்து ஒரு மகிழ்வைத் தருமே..அந்த மாதிரியான மகிழ்வுணர்வைத் தருகின்ற பாட்டு இது..ரொமான்ஸ் தான்..கொஞ்சம் வித்யாசமான அழகு. பாடலாசிரியர் விவேகா..பாடியோர் ஹரிணி மதுபாலகிருஷ்ணன் மியூசிக் வித்யாசாகர்...
http://www.youtube.com/watch?v=xAeTiGe9ZKM&hd=1
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
===
வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லித் தீரா இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட தாழை போல
உன்னால் நானும் பூத்தாட
உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும்
===
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
===
எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை
மண்ணுக்குள்ளே வேரை போல
நெஞ்சுகுள்ளே நீ தான் நீ தான்
===
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணுக்குள்ள உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
=====
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகிப் போனவள்,
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
புரியலை.. நெகிழின்னா தமிழ்ல ப்ளாஸ்டிக்னு சொல்லுவாங்க..பாட்டை எழுதினது யார்..மதன் கார்க்கி..
காதலனைப் பிரிஞ்சு போயிட்டா அவ.. சரி..அவளுக்கு கல் நெஞ்சுன்னுன்னு தானே சொல்வோம்..கொஞ்சம் வித்யாசமா ப்ளாஸ்டிக்னு சிந்திச்சிருக்கார்..என்னவோ இந்தப் படத்தில ரெண்டு ரொமாண்டிக் ஸாங்க்ஸ்.. நெஞ்சம் கொள்ளை போகும்..
முதலில் நெகிழி..
http://www.youtube.com/watch?v=94a3FL_tZIk&hd=1
காதல்னா என்னய்யா பண்ணும் நம நமங்குமா என்பார் சுஜாதா ஒரு கதையில்.. காதல்னா பாயைப் ப்ராண்டறதுன்னு கே பாலச்சந்தர் காதல் பகடையில் அழகான முதல் எபிஸோட்ல ஒரு குழந்தை மூலமா சொல்வார்..சரி ஈ..காதலுக்கு பல்விதமா டெஃபனிஷன்ஸ்லாம் இருக்கு..ஆனா இந்தக் காதல் எப்படிப்பா வரும்..
அ..யாரையாவது பார்த்தாலே மனசுக்குள்ள பல்ப் எரியணும், மணியடிக்கணும் என்பார் இயக்குனர் ராதாமோகன் ப்ருத்விராஜின் வாயிலாக.. அப்படிக் காதல் வர்றப்ப என்ன ஆகும்..இதோ இந்தக் கவிதையான பாட்டு எனச் சொல்வதற்கு முன்..
ஜெயம் ரவி ஸீதா ஜாதா ஆசாமி..அதாவது நேர்படப் பேசு..நேர்பட வாழ்..என நினைத்து வாழ்ந்து பார்த்து அவஸ்தைப் படுபவர்..அவருக்கு நேரெதில் அம்லாபால்.. பரவால்லை லஞ்சம்லாம் கொடுக்கற்து சகஜம்ப்பா வேலை சுளுவா முடியுதுல்ல என இருக்கும் பெண்..இருந்தாலும் குணத்தில் எக்ஸாக்ட்லி ஆப்போஸிட் ஆன ஜெயம் ரவியைப் பிடித்திருக்கிறது. காதல் வருகிறது.எதனால் எனில் “உன்னை மாதிரி என்னால் இருக்க முடியாது..ஆனால் உன்னை மாதிரி இருக்கும் ஒருவரோட வாழ ஆசையாய் இருக்கு” என நேரிடையாய்ச் சொல்ல...
வேறென்ன.. பாடல் பிறக்கிறது..(இதுவும் எனக்குப் பிடிச்சுருக்கு)
http://www.youtube.com/watch?v=YgYj9A4UFaw&hd=1
Vaazhkkai was a popular (hit) movie and the songs were also popular. Here is one:
eNNi eNNi paarkka manam inbam koNdaadudhe.......
http://www.youtube.com/watch?v=VfUNJKD1lf0
I used to sing this song in my high school years. Now, I sing thinking of my childhood years in Tamilnadu ! :lol:
Other songs I liked were 'un kaN unnai yEmaatrinaal' used to tease friends and 'aasai koLLum meesai uLLa aambaLaiya paarthiyaa' ! :)
The tune for 'eNNi eNNi paarkka manam' is from the Hindi song- 'chup chup khade ho...'.
சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் எனும் திரு நாவுக்கரசர் வேளாண் மரபிலும், சுந்தரமூர்த்தி நாயனார் எனப்படும் நம்பி ஆரூரர் ஆதிசைவ மரபிலும், திருவாதவூரர் எனும் மாணிக்கவாசகர் அமாத்தியர் எனும் மரபிலும், ஞானசம்பந்தர் அந்தணர் மரபிலும் தோன்றியவர்கள். "பாலை"க் கொடுத்து சம்பந்தரையும், "ஓலை" கொடுத்து சுந்தரரையும், "காலை"க் கொடுத்து மணிவாசகரையும் "சூலை" எனும் நோய் கொடுத்து அப்பரையும் இறைவன் ஆண்டு கொண்டான் என்று வரலாறு. அப்பர் ஒருவரே சமண சமயத்தைச் சார்ந்து பின்னர் மீண்டும் சிவனாரின் திருவடி நிழல் தேடி வந்தவர். அதனால்தானோ என்னவோ அவரை இறைவன் சோதனை செய்யப்படும் பக்தர்களின் திலகமாக பரமன் படைத்து விட்டார் என்று தோன்றும்.
மாணிக்கவாசகர் இறைவனை குருவாகவும், சம்பந்தர் தந்தையாகவும், சுந்தரர் நண்பனாகவும், அப்பர் ஆண்டவனாகவும் ( அதாவது முதலாளியாக ) எண்ணி வந்த காரணத்தாலேயே அப்பரின் வாழவில் பல் இன்னல்கள் ஏற்பட்டு விலகின. அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு பிரபலம் அடைய விரும்பாத பெருந்தகை. அதனாலேயே பாடலில் கூட "யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்றபோது" என்று பாடினார்.
கையில் உழவாரப் படையுடன் எளிமைக்கும், பக்திக்கும் விளக்கமாய்த் திகழும் அப்பர் பெருமானை வணங்குவோம்
http://www.tamilhindu.com/wp-content...vukkarasar.jpg
Appar ThEvaaram: Munnam Avnudaiya Naamam KEttaaL.....
http://www.youtube.com/watch?v=LNpUXxr1ERk
A moving rendition by MLV and a matching performance by Kumari Kamala ! :)
பாசமலரே... is quite a sentimental song. Sivaji does such roles with so much ease. Reminds me of மரகத வல்லிக்கு மணக்கோலம்... from அன்புள்ள அப்பா.
அன்பை உரைத்திட வாய் இல்லாத....அழகுச் சிலை இவள்!!!!
கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்.....
(இந்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க முடியாது..........எத்தனை ஆழமான வரிகள்........ஒவ்வொரு தந்தை-தாய் மகளுக்கு உரிய அன்புப் பிணைப்பு)
More father-daughter sentiments; Sivaji with Nadhiya...
திரைப்படம்: அன்புள்ள அப்பா (1987)
வரிகள்: வைரமுத்து
இசை: சங்கர்/கணேஷ்
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
காலையில் கதம்பம்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களிள் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித் தங்கம் இனிமேல் அங்கே
என்னப் பூவை அணிவாளோ
கட்டிகொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ
தினம் தோறும் திருநாளோ
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டி போகுறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டி பார்க்குறது
இமைகள் அதை மரைக்கிறது
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
கோலம் திருக் கோலம்
Good comedy, very well acted and presented! :)
Long time back a friend told me that if I wanted to learn Chitharanjani Ragam I should listen to 'Kadhal Kani Rasame' and practice! :)
Here is 'Kaadhal Kani Rasame....' from Mangaiyarkkarasi by P.U.Chinnappa:
http://www.youtube.com/watch?v=asg3QSrkJuU
He was right. You don't have to practice 'Nada Tanumanisam' ! :)
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி.. இதில் தலைவி என்னும் பெயரில் என்ன பெருமை உண்டடி..
ம்ம்...இப்படி மீனாட்சி மனதுக்குள் எண்ணி இருப்பாளோ.. ?
அழகர் மலை கள்ளழகர் அவசரமாக வருவது தெரியாமல் அங்கயற்கண்ணியின் மனது இப்படி பாடி இருக்குமோ ?
படம் : பிராயச்சித்தம்
குரல் : சுசீலா
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி.. மாயவன் அண்ணனைக் காணவில்லை என்று..
http://www.inbaminge.com/t/p/Prayach...hurai.vid.html
அப்படியும் சொல்ல முடியாதுங்கோ... பெருமாள் நின்று கொண்டு இருக்கும் கோவில்களில் கூட அனேகமாக தாயார் விஸ்ராந்தியாக உட்கார்ந்து கொண்டுதான் இருப்பார். ஆனால் சிவன் கோவில்களில் எல்லாம் அம்பாள் கால் கடுக்க நின்று கொண்டுதான் இருப்பாள். தனியாக இருக்கும் காமாட்சி, மாரியம்மன் ஆகியோருக்குதான் உட்கார நேரம் உண்டு. ( ஒரு சில விதிவிலக்குகள் உண்டு .. Like திருமணஞ்சேரி கோகிலாம்பாள்.. May be கல்யாணத் தம்பதிகள் அதனால் இருக்கலாம் )
மங்கலம் தருவாள் மதுரைக்கு அரசி..
அங்கயற்கண்ணி அன்பு மீனாக்ஷி
அண்டங்கள் அனைத்தும் அன்னையின் ஆட்சி
இப்படி உலகம் அனைத்தையும் காக்கும் அன்னைக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று காட்டவே பரமன் கால் பிடிக்கவும் தயங்கவில்லை. சிதம்பரத்தில் தன் ஆனந்த நடனத்தால் ஐந்தொழில் புரிந்தருளும் பரமனுக்கு சிவகாமி ( பேரில் கூட சிவனை விரும்புபவள் என்றே இருக்கு பாருங்க ) கால் பிடித்து விடக்கூடும்.
எனக்குப் பிடித்தது திருச்செங்கோடுதான்.. ஆளுக்குப் பாதி உடல் கொண்ட அர்த்தநாரீஸ்வரக் கோலம். ரெண்டு காலும் ஊன்றி நிற்கும்போது பாலன்ஸ் சமம். யாருக்கும் கால் வலிக்காது பாருங்க..
திருச்செங்கோடு தன்னாந்தனியாக உயர்ந்து நிற்கும் பாறை மலை. ஈரோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது. செங்கோட்டு வேலவனும் மிக அழகிய தெய்வம்.
http://static.panoramio.com/photos/large/31333344.jpg
A song by T.V.Rathinam in Miss Malini about Madras:
http://www.youtube.com/watch?v=ux3Dp1wzM0U
In 1947 living in Madras(PattaNam) carried a lot of prestige. My father came to be known as 'PattaNathu appaa' or 'PPattaNathu Maamaa' by my cousins because he started his career teaching Mathematics in a college iin Madras in 1934. The name stuck even after he left teaching to join the government of Madras! :lol: Now I am America Maamaa! :)
We used to talk about migration pattern:
---Tanjore-Madras
---Tanjore-Madras-Bombay
---Tanjore-Madras-Bombay-New York
Mine was Chingleput-Coimbatore-Chicago! :lol:
Have fun laughing at the song! :)