இன்றைய ஸ்பெஷல் (25)
இன்று உற்சாகமூட்டும், தன்னம்பிக்கை உரமூட்டும் ஒரு அபூர்வ பாடல்.
'விஜயபுரி வீரன்' (1960) திரைப்படத்திலிருந்து.
http://www.photofast.ca/files/products/7787.jpg
சி.எல்.ஆனந்தன், ஹேமலதா, ராமதாஸ், அசோகன், பாண்டி செல்வராஜ், சந்திரகாந்தா முதலிய நட்சத்திரங்கள் மின்னிய படம் இது.
அதுவரை நடனக் கலைஞராக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஆனந்தன் இப்படத்தின் ஹீரோவாக்கப் பட்டார். நடனம், வாள்வீச்சு, குதிரையேற்றம் இவற்றில் சிறந்த பயிற்சி பெற்றிருந்ததால் அவர் இந்தப் படத்தில் நன்கு சோபித்து 'விஜயபுரி' ஆனந்தன் என்று படத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டார். வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாசுக்கும் இது முதல் படம்.
http://4.bp.blogspot.com/_hwdv3bttE4...0/scan0014.jpg
சிட்டாடல் பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பு இது. ஜோசப் தளியத் ஜூனியர். நம் திருலோகச்சந்தர் திரைக்கதை அமைத்து உதவி இயக்கமும் செய்து இருந்தார். டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். நல்ல வெற்றி பெற்ற படமும் கூட.
தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இப்படத்தில் இயற்றிய சூப்பர் பாடலை இன்று பார்க்கலாம்.
பொதுவாகவே அப்போதைய கதாநாயகன் குதிரையில் ஏறி காடு, மலை, மேடு, தேயிலைத் தோட்டமெல்லாம் ஒத்தையடிப் பாதையில் வளைந்து வளைந்து சுற்றி வந்து 'டொக் டொக்' என்ற குளம்பொலியுடன் புரட்சி கருத்துக்களை டி.எம்.எஸ்.வாய்ஸிலோ அல்லது சீர்காழியாரின் வாய்ஸிலோ பாடி ஜனங்களின் நாடி நரம்புகளை அந்த சமயம் முருக்கேற்றுவான்.
ஆனால் இந்தப் படத்தில் மூன்று நாயகர்கள் ஒன்று சேர்ந்து அருமையான அறிவுத்தல் பாடல் ஒன்றைப் பாடி வருகிறார்கள். அதுவும் மிருதுவான குரல் கொண்ட ஏ.எம்.ராஜா அவர்களின் இனிய குரலில் கோஷ்டியாக. அதுதான் இப்பாடலின் வித்தியாசம், விஷேசம்.
இம்மாதிரிப் பாடல்களை கம்பீரமான குரல்களிலேயே கேட்டுப் பழகிப் போன நமக்கு சாப்ட் வாய்ஸாலும் இப்பாடலை நன்கு ரசிக்க வைக்க முடியும் என்று தன் தங்கக் குரலால் நமக்குப் புரிய வைத்திருப்பார் ராஜா. பாப்பாவும் கூட.
இரண்டாவது எளிமையான வளமான புரியக்கூடிய கருத்துக்கள். விளக்கமே தேவையில்லாத வரிகள். இனிமையான இசை.
நெஞ்சிலே துணிவும், தன்மானமும் என்றும் கொண்டிருக்க வேண்டும் என்ற தத்துவத்தை அழகாக விளக்கும் பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு உத்வேகம் பிறப்பது தவிர்க்க முடியாதது.
பொதுவாக 'ஆளுக்கொரு வீடு கட்டுவோம்'... 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா', என்று ரம்பம் போடும் தொல்லைக்காட்சி சேனல்கள் இம்மாதிரிப் பாடல்களை ஒளிபரப்புவதே இல்லை.
சிறுவயது முதலே இப்பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். நீங்களும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
இப்போது நம் திரியின் வாயிலாக இன்னொரு முறை.
உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா
(குதிரைகள் குளம்பொலி)
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலவே சீறக் கூடாது
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலவே சீறக் கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டுவிடக் கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டுவிடக் கூடாது
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம்
மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம்
மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா
கார்த்திக் சார்,
'மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே'
வரிகள் நமக்காகவே எழுதப்பட்டது போல் இல்லை?
http://www.youtube.com/watch?v=4p4Nq...yer_detailpage