-
8th July 2014, 04:13 PM
#1511
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் பதிவாக வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் இடம்பெற்ற 'நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான்' என்ற அருமையான பாடலை எதிர்பாராமல் தந்து இனிய பொழுதாக்கி விட்டீர்கள்.
அந்தப்படத்தை நிற்க வைத்ததே பாடல்கள்தான். இந்த பாடலுக்கு முன்னர் வரும்
'அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்'
பாடலும்,
படத்தில் முதல் பாடலாக இடம்பெறும்
'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்குமலை
மேற்குமலை எங்கள் மலை'
பாடலும்
படத்தில் இரண்டு முறை (சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும், பெரியவர்கள் சோகமாகவும் பாடும்) நீங்கள் குறிப்பிட்ட
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடுகட்டி
பாடலும் என, அனைத்துப் பாடலுமே அருமைதான்.
ஜெமினி - சரோஜாதேவி ஜோடியின் இன்னுமொரு கல்யாணப்பரிசு, கைராசியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றியது...
-
8th July 2014 04:13 PM
# ADS
Circuit advertisement
-
8th July 2014, 04:28 PM
#1512
-
8th July 2014, 05:00 PM
#1513

அதை விட ரகசியம் 1978
க்ருபா சங்கர் இயக்கம்
(இவர் துணை நடிகராக இருந்து இயக்குனர் ஆகி பின் துணை நடிகர் என்று கேள்விபட்டேன் )
கண்ணதாசன் கதை
சிவகுமார் ஜெய்கணேஷ் படபட் சுமா நடித்து வெளிவந்தது
ஷங்கர் கணேஷ் இசை
மலேசிய வாசுதேவன் ஜானகி குரல்களில்
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே
நல்லதொரு குத்து பாடல்
-
8th July 2014, 05:56 PM
#1514
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே
கிருஷ்ணா சார்!
அன்ன(ம்)மே
Last edited by vasudevan31355; 8th July 2014 at 08:19 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th July 2014, 06:08 PM
#1515
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
ஆசிரியருக்கு(!) மாணவர் தந்த 'எங்க பாடன் சொத்து ராஜ்கோகிலா பா(ப)டம். ஆஹா! மாணவர் என்றால் இப்படியல்லவோ இருக்கணும்! குருதட்சணை அபாரம் சார்!
காலையில் நீங்க சொன்ன மாதிரி
செம லூட்டி சார்
உங்கள் கொட்டம் தாங்கலையே
ஜாலியாக தான் சொல்லுதேன்
Last edited by vasudevan31355; 8th July 2014 at 06:15 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th July 2014, 06:15 PM
#1516
Senior Member
Diamond Hubber
அருமை கார்த்திக் சார்!
நம் பாடகி பாடிய (பச்ச குத்தலையோ பச்சை)
அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்குமலை
மேற்குமலை எங்கள் மலை
பாடலை மறந்து விட்டேன். அம்சமாக ஞாபகப்படுத்தி கார்த்திக் சார் கார்த்திக் சார்தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.
எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்
பாடலின் இடையிசையாக வரும் அந்த 'டொன் டொ டொ டொன் டொன் டொ டொ டொன்' மலைநாட்டு மியூசிக்கை மறக்கவே முடியாது.
Last edited by vasudevan31355; 8th July 2014 at 06:21 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th July 2014, 06:30 PM
#1517
Senior Member
Diamond Hubber
-
8th July 2014, 06:50 PM
#1518
Junior Member
Newbie Hubber
வாசு,
இந்த திரியில் தற்காலிக ஓய்வு எடுக்கு முன்.....
இந்த திரி யோசனை நாம் போனிலும் ,நேரிலும் பழைய பாடல்களை அலசும் போது உருவானது. நீங்கள் துவங்குங்கள் என்றாய். ஆனால் நான் பிடிவாத கருத்துகள் கொண்டவன். நீதான் சரியென்று எனக்கு தெரியும்.நீ சொன்னவுடனே இணைய முடிவு செய்தேன். உன்னுடைய உற்சாகம்,குறும்பு,உழைப்பு, நட்பான அணுகுமுறை எனக்கு மிக மிக உவப்பானது.இந்த திரி ஐந்து நட்சத்திரம் வாங்கிய சந்தோஷத்தை முதலில் உன்னுடன் பகிர்ந்தது (ஷிப்ட் இல் இருந்தாய் அப்போது)நானே.இப்போது எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுத்து நீ செய்யும் ஜாலம்....Hats off .....
கார்த்திக்,
நீங்கள் வந்தாலே ஒரு தனி களைதான் .அடடா இந்த பதிவுக்கு நாளை கார்த்திக் பதில் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்போம்.உங்கள் நீட்சி துணை பதிவுகள்,எங்கள் முதுகு தடவி எங்களை இன்னும் கொஞ்ச தூரம் கூட்டி செல்லும் நெகிழ்வு.உங்களிடம் உரையாடுவதில்,உரையாட போவதில் ,போராட போவதிலும் மகிழ்ச்சியே.
கிருஷ்ணாஜி,
இந்த திரியின் surprise package நீங்கள்தான். என் சிறு வயது நண்பன் ஒருவனுடம் கிரிக்கெட் ஆடும் போது , அவன் பந்து வீசும் அழகே தனி. ஒரு பால் பாஸ்ட். அடுத்து லெக் பிரேக்.அடுத்து கூக்ளி.என்று ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஆனால் length ,line எதுவுமே இருக்காது.ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு சரியாக வரும் போது செட்டில் ஆகவே முடியாத bats man stump பறக்கும்.அந்த மாதிரி புகுந்து விளையாடுகிறீர்கள். திரிக்கே புது மாதிரி ஒரு களை .என்ன ஒரு நினைவு சக்தி. அடடா.
அமர்க்களம். எங்கோ கொண்டு போகிறீர்கள்.
-
8th July 2014, 08:46 PM
#1519
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
டியர் ராஜேஷ் சார்,
கவர்ச்சி நடன நடிகைகளில் விஜயலலிதாவை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஜெய்குமாரிக்கு அடுத்தபடியாகத்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஜயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடத்தவறியதில்லை.
நடிகர்திலகம் திரிகளின் ரெகுலர் வாசகர் மற்றும் பங்களிப்பாளரான உங்களுக்கு தெரிந்திருக்கும். நடிகர்திலகம் பாகம் 11-ல் நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர்' என்ற சீரீஸில் விஜயலலிதாவைப் பற்றிய தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். அத்தொடரில் இவரைப்பற்றி மட்டுமல்லாது ஜெய்குமாரி, பிரமீளா, சத்யப்ரியா, ஏ.சகுந்தலா, பத்மாகன்னா, சினேகலதா, விஜயஸ்ரீ ஆகியோரை பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆலம், தீபா, ஜெயமாலினி, சில்க் உள்பட இன்னும் சிலரைப்பற்றிய பதிவுகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் "அங்கே" பதிவிட எதிர்ப்பு வந்ததால், பழசு, புதுசு எல்லாவற்றையும் கலந்து தனித்தியாகப் பதிவிடாலாமா என்ற எண்ணம் உள்ளது..
yes yes. adhai yellam padithen kuripaaga A.sakunthalavai patri neengal kuripittadhu (male like lady ... 100% true) .. yes yes .. Somehow even though VJayalalitha did item numbers she can never be branded as item girl. she was more than that. she did character roles, dancer and good performer too.
-
9th July 2014, 09:39 AM
#1520

Originally Posted by
Gopal,S.
வாசு,
இந்த திரியில் தற்காலிக ஓய்வு எடுக்கு முன்.....
கிருஷ்ணாஜி,
இந்த திரியின் surprise package நீங்கள்தான். என் சிறு வயது நண்பன் ஒருவனுடம் கிரிக்கெட் ஆடும் போது , அவன் பந்து வீசும் அழகே தனி. ஒரு பால் பாஸ்ட். அடுத்து லெக் பிரேக்.அடுத்து கூக்ளி.என்று ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஆனால் length ,line எதுவுமே இருக்காது.ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு சரியாக வரும் போது செட்டில் ஆகவே முடியாத bats man stump பறக்கும்.அந்த மாதிரி புகுந்து விளையாடுகிறீர்கள். திரிக்கே புது மாதிரி ஒரு களை .என்ன ஒரு நினைவு சக்தி. அடடா.
அமர்க்களம். எங்கோ கொண்டு போகிறீர்கள்.

அனைவருக்கும் காலை வணக்கம் 09/07/14
வாசு சார்
காலையில் உங்களை போன் செய்து தொந்தரவு செய்து விட்டேன் மன்னிக்கவும் .நீங்கள் அப்போதுதான் இரவு பணி முடிந்து வந்து இருந்தீர்கள் .இருந்தும் எனக்காக சிறிது நேரம் ஒதுக்கியது மிகவும் மகிழ்ச்சி .
இன்றைய தமிழ் ஹிந்து பேப்பர் இல் என்னதே கண்ணைய பற்றிய ஒரு கால் பக்க குறிப்பு திரு ராஜாமணிகம் அவர்கள நினவு கூர்ந்து இருந்த்தார்கள்
அதை சொல்லவே போன செய்தேன்
ராகதேவன் கோபால் சார்
ஓய்வு அறியா சூரியன் நீங்கள் உங்களுக்கு ஓய்வு தேவையா
ஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள் .
நீல வானிலே செந்நிற பிழம்பாக சில வேளை சுட்டு எரித்தாலும்
குளிர்கின்ற நிலவாய் எங்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமர நிறைந்து நிற்கும் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் முத்திரை பதித்த ஒன்று என்றால் அது மிகை ஆகாதே. நேற்று இரவு மெகா டிவி யில் அமுத கானம் நிகழ்ச்சியில் சிநேகிதி திரை படத்தில் நீங்கள் மிகவும் சிலாகித்த
"தங்க நிலவே 'நீ இல்லாமல்' நினைத்து பார்க்க முடியுமா " பாடல் ஒளி பரப்பானது.
என்னை பற்றிய உங்களின் கருத்து மிக மிக சரி . (லைன் அண்ட் length
இல்லாத கிரிக்கெட் bowler ஆனால் விக்கெட் எடுப்பவர்). என்னுடைய மேல் அதிகாரி ஒருவர் நீங்கள் சொன்னதை போலவே ஒரு முறை கூறினார் .
ஜெமினியின் எல்லோரும் நல்லவரே 1975
பாலன் இயக்கம்
முத்துராமன் மஞ்சுளா நடித்தது
குமார் இசை
ஒரு அருமையான கிராம கதை
'பூதாய்யான மகா அய்யு ' என்ற கன்னட பட தழுவல்
Bookmarks