கீதா குளிக்கிறதை ரெண்டு தரம் பாக்கணுமா சின்னா!:)
Printable View
கீதா குளிக்கிறதை ரெண்டு தரம் பாக்கணுமா சின்னா!:)
அநியாயம்.. அக்கிரமம்....
காமிரா மேதை கர்ணன் என்றால் எல்லோருக்கும் அவ்வளவு இளக்காரமா.. அப்போது மட்டும் கத்திரி கூர்மையாக இருக்கிறதே..
இப்போது சி.க. சார் கத்திரிக்கோலை வேண்டுமென்றே ஒளித்து வைத்து விட்டாரோ...
சரி செவ்வானத்தை நானே காட்றேன்.
https://youtu.be/x4BRKvHZNOg
ஹத்த்தான்.. இந்த ஏந்திழையைப்படுத்துவது நியாயமா- ந்னு அ கால ராஜகுமாரி ஸ்டைல்ல பேச ஆரம்பிச்சுடுவேன்.. ரத்தத்தின் ரத்தமேயா.. ம்ம்
இந்த நானோ உன் அடிமைபாட் போடலேன்னா ப.பியோட ஆவி என்னை மன்னிக்காது இல்லியோ..
https://youtu.be/X9Uy1vRL2MU?list=PL...5QsJ3M37XN7STO
அந்தக் காலத்திலிருந்தே சென்ஸார் போர்ட் நியாயமா செயல்பட்டதில்லையே ராகவேந்திரன் சார்! சின்னா மட்டும் விதி விலக்கா என்ன?:)
சரி செவ்வானத்தை நானே காட்றேன்// தாங்க்ஸ்ங்க.. குட்டிபத்மினி உன்னி மேரி ம்ம் நினைவுக்கே வரலை..
கத்திரி என்னங்க நான் பாட் போட்டதோட சரி தெ இ மங்கையை..ம்ம் மறுபடி பார்க்கணுமோ.. ராகவேந்தர் சார்..
எதுக்காக ரெண்டாவது முறையா பார்க்கணும் தலைவி பாட்டுல ல மறுபடி குளிக்கறாங்களா என்ன..
இப்படி டிபார்ட்மெண்ட் ஹெட், ப்ரொபஸர்லாம் அனியாயத்துக்கு சி.க வை ராகிங் பண்றாங்கப்பா..:) ப்ளட் டின் ப்ளட் தேடிப் பார்க்கணும்
'தென் இலங்கை மங்கை' பாட்டை ரெண்டு தரம் வீடியோ காண்பிச்சிருக்கீக சின்னா. பாக்கலையோ? என்ன குழப்பம்?
ஹச்சோ..தெரியாத்தனமா போட்டுட்டேன்.. இப்போ மாத்திட்டேன்..ஸாரி.. :)
இப்போ புரியுதா ரெண்டு தடவைக்கு அர்த்தம்?:)
எளியேன்
எல்.கே.ஜி ஸ்டுடென்ட்
ராஜகுமாரி
சென்சார் அதிகாரி
இன்னும் எத்தனை மாய வேஷங்களோ எங்கள் சின்னக் கண்ணனுக்கு.:)
எம்.ஜி.ஆர். தன் அ.தி.மு.க. தொண்டர்களை அன்போடு அழைக்கும் சொற்றொடர் ரத்தத்தின் ரத்தமே..Quote:
எளியேனை ரத்தத்தின் ரத்த்மே பற்றி விளக்கம் கூறி க்காப்பாற்றுங்கள்..கூகுள் கை விட்டு விட்டது..
ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் ஜெய் நடித்து ஒரு படமும், என் ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் பாக்யராஜ் நடித்து ஒரு படமும் உண்டு.
ஜெய் நடித்த ரத்தத்தின் ரத்தமே படத்தின் கதாநாயகி சிலோன் கீதா.
இதுக்கு மேலே கேட்காதீர்கள்... தெரியாது ........
அவ்வளவு தான்.. எஸ்கேப்...
ராகவேந்தர் சார் உங்க சின்னவயசு போட்டோலயும் நீங்க ஹாண்ட்ஸம்மா இருக்கீங்களாக்கும் :) எதைப் பற்றியுமே தெரியாத, எல்லாவற்றையும் அறியத்துடிக்கும் ஆவலுள்ள இந்த பச்சிளம் பாலகன் மீது கருணை காட்டக் கூடாதோ..
வாஸ்ஸூ கைண்ட்லி ஆட் ப பா ஆல்ஸோ :)
//இதுக்கு மேலே கேட்காதீர்கள்... தெரியாது ........//
சின்னா! இதுக்கு மேலதான் விஷயமே இருக்கு.:) சாமர்த்தியம் இருந்தா பொழச்சுக்கோங்க.:)
நான் மெதுவாகத்தொடர்கின்ற போது கண்மயங்காமல் இருப்பாளோ மாது
சுகமான சிந்தனையில் இதமான உணர்வோடு சொர்க்கங்கள் வருகின்றன
இது ராஜ கோபுர தீபம் அகல் விளக்கல்ல
சாந்தீஈ மை ஹோலி ஏஞ்சல்
இதெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்ட பாட்ஸ் எஸ்பிபி தானே எப்போ வ்ரும்..
//நான் மெதுவாகத்தொடர்கின்ற போது கண்மயங்காமல் இருப்பாளோ மாது//
http://www.jayachandransite.com/images/differ_p3.jpg
//இதெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்ட பாட்ஸ் எஸ்பிபி தானே எப்போ வ்ரும்..//
இப்போ வராது. ஆனா கண்டிப்பா வரும்.
நாலு நாள் மழையில் சிக்கிய மல்லிகைக் கொடியாக நனைந்து பாலுமகேந்திராவின் ஊட்டியாக ஈரமாக இருக்கிறேன். அதுக்குள்ள இங்கே ஏழெட்டு பக்கம் நகர்ந்து போச்சா ?
சிக்கா... கீதாவின் இரட்டைக் குளியல் என்று படிக்கிறப்பவே எனக்கு நீங்க ரெண்டு வாட்டி வீடியோ போஸ்ட் செஞ்சிருப்பீங்கன்னு தோணிச்சு.. ( நீங்க டெலீட் செஞ்சுட்டாலும் கூட )..
நா.ம வின் க .க. க. பாட்டு உமாவுக்கு.. ஜெ.சிக்கு அல்ல...
பவர் பிரச்சினையால் பதிய முடியவில்லை. அப்புறமா வரேன்
பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்
சென்னை : பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். இவர், கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். பக்திப்பாடகரான இவர் தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தினமலர் இணையப்பக்கத்திலிருந்து- http://www.dinamalar.com/news_detail.asp?id=1388839&
திரு பித்துக்குளி முருகதாஸ் மறைவு பக்கி சங்கீதத்திற்கு பேரிழப்பு. பஜனை சம்பிரதாயத்தில் பொது மக்களை மிக அதிக அளவில் பங்கு கொள்ள வைத்த பெருமை இவருக்கும், கே.பி.சுந்தராம்பாள், பெங்களூரு ரமணி அம்மாள் ஆகியோருக்கு உண்டு. அவர்களுடைய தலைமுறையைச் சார்ந்த பித்துக்குளி முருகதாஸ் அந்தக்கால பஜனை சம்பிரதாயத்தின் பிரதிபலிப்பாக நம்மிடையே வாழ்ந்து வந்தார். அவருடைய மறைவுக்கு நமது அஞ்சலியை செலுத்திக் கொள்வோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அவர் நினைவாக அவர் புகழை என்னாளும் கூறும் தெய்வம் படத்தில் இடம் பெற்ற அவருடைய பாடல்..
https://www.youtube.com/watch?v=Uh7rxS-eJhQ
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
50-ஆவது சிறப்புப் பதிவு
http://kevinblakeman.files.wordpress.../number-50.jpg
50
'உத்தரவின்றி உள்ளே வா'
http://padamhosting.me/out.php/i7334...08h48m29s0.pnghttp://padamhosting.me/out.php/i84186_uiuv8.png
'உன்னைத் தொடுவது இனியது'
பாலாவின் இன்னொரு அலாதியான உற்சாகப் பாடல் அதே 'உத்தரவின்றி உள்ளே வா' படத்திலிருந்து. பாடல்களுக்கு ஒரு படமல்லவா அது!
இந்தப் படத்தின் பாடல்கள் பல பேரைக் குழப்பும் திறன் வாய்ந்தவை. ஏனென்றால் ஒன்றையொன்று மிஞ்சும் ரகம். 'உத்தரவின்றி உள்ளே வா' பாடல் அருமை என்றால் 'காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ' தான் டாப் என்பவர்கள் பலர். 'நோ.. நோ... மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி'தான் அனைத்தையயும்விட டாப்' என்று ஒரு வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு வரும். 'அதெல்லாம் கிடையாது...'உன்னைத் தொடுவது இனியது' தான் செம ஜாலி' என்று கூக்க்குரலிடும் ஒரு கும்பல். 'நிறுத்துங்கப்பா! தேன் மாதிரி ஈஸ்வரி பாட்டை மறந்துட்டு ஏதேதோ பேசறீங்களே...'தேனாற்றங்கரையினிலே' மாதிரி பாடல் வருமா?' என்போர் ஒரு குரூப். இப்படி ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தினாலும் அத்தனைப் பாடல்களும் அத்தனைப் பேருக்கும் அவ்வளவு பிடிக்குமே! இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இப்படி சில படங்கள்தான் பாடல்களுக்கென்றே அமையும். (எனக்கு இதில் 'வெண்ணிற ஆடை' முதல் இடத்தைப் பிடிக்கும். அப்புறம் 'காவியத் தலைவி'. நடிகர் திலகம் படப் பாடல்கள் கதை வேறே. அதை இதில் கலக்க மாட்டேன்:))
இதில் நான் 'உன்னைத் தொடுவது இனியது' ஆதரவாளர்கள் கட்சியைச் சேர்ந்தவன். முதலிடம் அதற்குத்தான். அவ்வளவு பிடிக்கும்.
வீட்டிலேயே அடைந்து சதா வேலை செய்து கொண்டிருக்கும் காதலி காஞ்சனாவை வற்புறுத்தி வெளியே பார்க்குக்கு காரில் அழைத்துச் செல்வார் ரவி. அங்கு சென்று பார்த்தால் அவருக்குத் தெரியாமல் நாகேஷ் 'நாதா' பைத்தியத்துக்குப் பயந்து காரில் ஒளிந்து கொண்டு உறங்கி விட்டிருப்பார். நாகேஷுக்குத் தெரியாமல் 'நாதா' ரமாபிரபா காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டிருப்பார். டிபன் கேரியர் எடுக்க ரவி டிக்கியைத் திறக்கும் போது ரமா அங்கு ஒளிந்திருப்பது தெரிய வரும். ரவி காஞ்சனாவுடன் டூயட் பாட ஒரு பக்கம் செல்ல, நாகேஷை விடாமல் இன்னொரு பக்கம் துரத்தி ரமா செல்வார். இப்போது இரு ஜோடிகளுக்கும் அதியற்புதமான பாடல்.
அது உங்களையும் என்னை மட்டும் தொட்ட இனிய பாடல் அல்ல..தமிழ்நாட்டையே கலக்கிய தங்கப் பாடல்.
எப்போது கேட்டாலும் புதிதாகத் தெரியும் பாடல். மின்னல் போல உடலில் துடிப்பை ஏற்படுத்தும் பாடல்.
முன்பின் இல்லாத அளவிற்கு நம் நினைப்பிலேயே நின்றுவிட்ட பாடல்.
'உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது'
'ஆஹா' என்பதா? 'ஓஹோ' என்பதா? 'பேஷ் பேஷ்' என்பதா? எதைச் சொல்லி இந்தப் பாடலைப் பாராட்டுவது?
https://i.ytimg.com/vi/pZQwOBTGJWs/hqdefault.jpg
உற்சாகம் என்றால் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நாயகன் நாயகி இருவரும் இளமை பொங்க 'துறுதுறு'ப்பாயும், 'சுறுசுறு'ப்பாயும் பார்க்கைச் சுற்றி சுற்றி வந்து ஆடிப்ப் பாட, அங்கே நாகேஷ் தன் தலைவிதியை நொந்து தன்னையே சுற்றும் பூர்வஜென்மப் பைத்திய ராமாவின் கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக பதில் சொல்லிக் கொண்டிருக்க நகைச்சுவையும், நயமும் கொப்புளிக்கும் ஜோரான பாடல்.
ரவியின் டிரெஸ் நிரம்ப அழகு. ப்ளைன் ஸான்டல் கலரில் முழுக்கை சட்டை ரவிக்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். நீள் கோடிட்ட டிசைன் பிரவுன் பேன்ட் அந்த ஷர்ட்டின் கலருக்கு அவ்வளவு மேட்ச் ஆகும். காஞ்சனா வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் புறப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள சாதாரண புடவையையே அணிந்திருப்பார். இந்தப் பாடலிலும் அவருக்கு மிக எளிமையான உடையே. ஆனால் அதுதான் அழகே!
ரவிக்கு ரசனை மிகுந்த பாலா குரல். காஞ்சனாவிற்கு 'கானக் குயிலி'ன் குரல். இவர்கள் ஒரு பக்கம் தூள் பண்ணிக் கொண்டிருக்க,
அங்கே நாகேக்ஷுக்கு எனக்கு மிக மிகப் பிடித்த, அவருக்கு பொருத்தமான சாய்பாபாவின் குரல். ரமாபிரபாவிற்கு எனதருமை ராட்சஸி குரல். நால்வர் கூட்டணி. இப்போது புரிகிறதா எனக்கு ஏன் இந்தப் பாடல் முதலிடம் என்று?
மெலிதாயும் இல்லாமல், வலிதாயும் இல்லாமல், இடைப்பட்ட சுகமான கிடார் ஒலியில் ஆரம்பித்து வயலின்களின் இசை பின்னல் சேர, ஆர்கன்களின் ஓசை பின்னி எடுக்க, செம ஜாலியாக பாலா,
'லா...லலல்லா
லா... லலலலலா'
எடுக்க உங்கள் அங்கமெல்லாம் தேன் மாரி பொழிய ஆரம்பித்துவிடும். அதே ஓசை டிரம்பெட் ஒலியில் கம்பீரமாகத் தொடரும். இத்தனை உபகரணங்களும் இசை மழை பொழிந்த பின்பு பாலா என்ற காமதேனு தன் வழுக்குக் குரலால் மேலும் இனிமையைப் பொழிய ஆரம்பிக்கும்.
'உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது'
என்று குழைவாக அதே சமயம் கம்பீரம் கெடாமல் முழங்க, அதைத் தொடர்ந்து குயில் குரல் தரும்.
'இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு'
இந்த நான்கு வரிகள் நானூறு வருஷத்துக்குப் போதுமைய்யா! பாடல் முழுவதையும் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்.
சரணத்தில் பாலா பேஸ் வாய்ஸில், கட்டைக் குரலில்,
'பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னாலென்ன?'
என்று பாடும்போது அப்படியே நம் நெஞ்சம் 'சர்'ரென்று 'பி.எஸ்.எல்.வி' வேகத்தில் பறக்கும். ரத்த நாளங்கள் சுறுசுறுப்பாகும். அதுவும் 'பள்ளிப் பாடம்' சொல்லி முடித்து 'சொன்னாலென்ன?' என்று சற்று வேகமாக ஒரு தூக்குத் தூக்குவாரே பார்க்கலாம். அய்யோ!
சுசீலா அடுத்த வரிகளை முடித்தவுடன் பாலா,
'லலலலலலலலலால்லா
ல லலலலலலலலலால்லா'
என்று குதூகல ஹம்மிங் போடுவது குஷியோ குஷி! எதிர்ப்புறமும் அப்படியே.
அப்படியே அவர்களை மறந்து இங்கே வாருங்கள்.
பூங்காவில் மலை போல நிற்கும் யானை சிலையின் கால்களுக்கிடையில் ரமா புகுந்து வர,
'ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்'
என்று திடீரென ஒரு அரக்கியின் அடாவடிக் குரல் கேட்கும். விசாரித்தால் 'ஈடு இணையில்லா ஈஸ்வரி' என்று சொல்வார்கள். நாகேஷின் ஒயிட் ஜிப்பா அவரைப் போலவே காமெடியில் கலக்கும்.
'சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே! நான் யார்? நீ யார்?
நானோ எலும்பு.. நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம்'
என்று நாகேஷ் சாய்பாபாவின் சாய வைக்கும் குரலில் ரமாவுக்கு வேண்டுகோள் விடுப்பது வேடிக்கை கலந்த அபாரம். அதுவும் நாகேக்ஷின் உடலை அவரே நையாண்டி செய்து ('நானோ எலும்பு') துரத்தும் ராமாவை 'அயர்னு'க்கு ஒப்பிட்டு ('நீயோ இரும்பு') பூர்வ ஜெமத்தையும் 'கண்ணே!' என்று கனிவோடு அழைத்துச் சுட்டிக் காட்டும் போது எவர் சிரிக்காமல் இருக்க முடியும்? பாபா குரல் பிளஸுக்கும் பிளஸ் பாய்ன்ட். குரலில் குல்கந்து கலந்திருப்பாரோ!
'அங்கே பேசு என்னிடம் வேண்டாம்' என்று நாகேஷ் இசைக்கும்போது ரமாபிரபா பின்பக்கமாக படிக்கட்டுகளில் இறங்கியபடியே கைகளை பறவை இறகுகள் போல் வைத்து வெகு ஜோராக இடுப்பை அசைத்து வருவது அமர்க்களம். (மறவாமல் pause பண்ணி பார்க்க):)
'நானோ எலும்பு' என்று சொல்லுபோது படிக்கட்டில் ராமாவுக்காக பயந்து சாயும் நாகேஷின் முக அஷ்ட கோணலை பார்க்க மறக்காதீர்கள்.
இப்போது ரவி, காஞ்சனா டர்ன்.
சரண இடையிசைக்கு புடவையுடன் காஞ்சனா ட்விஸ்ட் ஆடும் போது நம் எல்லோர் மனமும் ஆட்டம் காணும். உடன் ரவி ஒரு காலை மட்டும் தூக்கி தூக்கி ஆடியபடி மிக அழகாக ஜாயின் செய்வார். பிறகு ரவி அப்படியே காஞ்சனாக் கொடியை 'அலேக்' காகத் தூக்க 'மெல்லிசை மன்னர்' இப்போது புகுந்து புறப்படுவார் பாருங்கள்! பாடலின் பல்லவி வரிகளை அப்படியே இசைக்கருவிகளின் மூலம் இந்த இடத்தில் டைமிங்கில் அற்புதமாக ஒலிக்க வைத்து அம்சமாக பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுவார் எம்.எஸ்.வி.எமகாதகன்.
http://i67.tinypic.com/xpsetf.jpghttp://i64.tinypic.com/24oowt3.jpg
அதே இசைக்கு (பின் இரண்டு லைன்கள்) இங்கே நடந்ததற்கு தலைகீழாக அங்கே ரமாபிரபா சர்வ அலட்சியமாக நாகேஷை 'அலேக்'காகத் தூக்கி மூன்று முறை சுற்றிக் கிடாசுவார். (ரவி கூட காஞ்சனாவை தூக்கி ஒருமுறைதான் சுற்றுவார்) அப்பப்பா! வயிறு சிரித்து சிரித்து வெடித்தே விடும். என்ன நளினமான அழகான கற்பனை! ஹீரோ ஹீரோயினைத் தூக்குவது வாடிக்கை. காமெடியினி காமெடியனை தூக்கி சுடுவது நிஜமான காமெடி. தியேட்டர் குலுங்கும்.
அடுத்த சரணத்தில்
'தேகமெங்கும் மோக வண்ணம்
சிந்து பாடும் பெண்ணல்லவோ'
என்று இரண்டாம் தரம் பாடும் போது பாலா 'பெண்ண..ல்லவோ' என்று கொஞ்சிக் குழைந்து 'இன்னும் ஒரு முறை பாலா... ப்ளீஸ்!' என்று நம்மைக் கெஞ்சிக் கூத்தாட வைப்பார். அடடா! இந்த இடத்தில் பாலா குரலால் வாழ்ந்து காட்டுவார்.
இதே சரணத்தில் காஞ்சனா பாடுவதாக வரும்,
'மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ'
வரிகளை மறக்கவே முடியாது. என்னா கவிஞன்யா அவன்! இந்த வரிகளுக்கு அர்த்தம் சொன்னால் என்னை விட மாங்காய் இருக்க முடியாது. காஞ்சனா வேறு அவர் பங்குக்கு இந்த இடத்தில் நமம்க் கொல்வார். எத்தனை இன்ப இம்சைகள்!
காஞ்சனா, ரவி ஆடுவது நடன மாஸ்டர் சொல்லித் தந்தது போலவே இராது. ரொம்ப இயல்பாக அவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவது போலவே அவ்வளவு இயற்கையாக இருக்கும்.
இவர்கள் போர்ஷன் முடிந்தவுடன் திரும்ப நாகேஷ், ரமா. ஆற்றின் குறுக்கே நிற்கும் பாலத்தில்.
'நீ பாண்டியனின் பிள்ளையோ?' என்று ஈஸ்வரி கொக்கரிப்பார். அந்த 'யோ' அழுத்தம் அய்'யோ'!
'நான் மாமதுரைக் காதலி
என் மன்னவனின் நாயகி'
என்று ராட்சஸி பாடுவதை இரண்டு முறைக்குக் மேல் நிறுத்திக் கேட்காமல் மேலே போக முடியாது.
நாகேஷ் சொல்லும் பதிலில் நகைச்சுவை மண்டிக் கிடக்கும்.
'நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை'
பாருங்கள். 'கொஞ்சம் சரித்திரம்' படித்தாராம். நாகேஷின் படிப்பு மக்குத்தனத்தை, அதே சமயம் புத்திசாலித்தனத்தை ஒருங்கே வெளிப்படுத்தும் வரிகள்.
'காதல் உலகை வாழ விடம்மா'
என்று ராமாவிடம் கெஞ்சல் வேறே.:)
'சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்'
'நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை'
என்ற சாய்பாபாவின் வரிகள் இரண்டு சரணங்களிலும் முடிந்தவுடன் விட்டு விட்டு ஒலிக்கும் 4 முறை வரும் அந்த ம்யூசிக். (டைன்... டைன்... டைன்... டைன்) சான்ஸே இல்லை.
பாடல் முழுதும் எதை ரசிப்பது என்ற குழப்பம் நமக்கு. பாடகர்களின் குரலையா, நடிகர்களின் நடிப்பையா, நாகேஷ் ராமாவின் காமெடியையா, வெளுத்து வாங்கும் 'மெல்லிசை மன்ன'ரின் மகோன்னத இசையையா, வெளிப்புற கலர்புல் படப்பிடிப்பையா, அட்டகாசமான பாடல் வரிகளையா என்று எதை எடுப்பது எதை உடுப்பது போன்ற இன்பக் குழப்பம் ஏற்படுத்தும் இனிமைப்பாடல். இளமைப் பாடல். துள்ளல் பாடல்.
இனி பாடல் வரிகள்
http://i64.tinypic.com/25jy4w6.png
லா... லலல்லா
லா... லலலலலா
லா லலலலலலா
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னாலென்ன
தேவையென்றால் கோடி உண்டு
தேடித் தேடித் தந்தாலென்ன
பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னாலென்ன
தேவையென்றால் கோடி உண்டு
தேடித் தேடித் தந்தால் என்ன
லலலலலலலலலால்லா
லல்லல்லலல்லலல்லலல்லலால்லா
லலலலலலலலலால்லா
லலலலலலலலலலால்லா
ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
ஒரே முறை பார்த்தேன்
நிலாவினைக் கேட்டேன்
அதே முகம் என்றாள்
இதோ என்னைத் தந்தேன்
சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே! நான் யார் நீ யார்
நானோ எலும்பு நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம்
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
தேகமெங்கும் மோக வண்ணம்
சிந்து பாடும் பெண்ணல்லவோ
மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ
தேகமெங்கும் மோக வண்ணம்
சிந்து பாடும் பெண்ணல்லவோ
மேனி என்னும் காதல் சின்னம்
தேடும் சொந்தம் நீயல்லவோ
லலலலலலலலலால்லா
ல லலலலலலலலலால்லா
லலலலலலலலலால்லா
ல லலலலலலலலலால்லா
நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ
நீ பாண்டியனின் பிள்ளையோ
உன் பால் மனது வெள்ளையோ
நான் மாமதுரைக் காதலி
என் மன்னவனின் நாயகி
நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
ராஜா ராணி நம்மைப் போல் இல்லை
தானே பார்த்து தானே சிரித்து
தானே அணைத்தால் தாங்காது தாயே
காதல் உலகை வாழ விடம்மா
கண்ணே பூர்வ ஜென்மம்
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
//தானே பார்த்து தானே சிரித்து
தானே அணைத்தால் தாங்காது தாயே
காதல் உலகை வாழ விடம்மா
கண்ணே பூர்வ ஜென்மம் //சேரன் சோழன் திரும்பவும் வருவான்
காதல் வீடு கல்யாணமெல்லாம்
அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
அம்மா தாயே! நான் யார் நீ யார்
நானோ எலும்பு நீயோ இரும்பு
கண்ணே பூர்வ ஜென்மம் // ககக்னு சிரிக்காம யார் தான் இருப்பாங்க.. வாஸ்ஸூ..வழக்கம் போல கலக்கல்ஸ்.. எனக்கு நாகேஷ் ரமாப்ரபா போர்ஷன்ரொம்ப ப் பிடிக்கும்.. நன்னி, தாங்க்ஸ், வளர நன்னியானு, நன்னிலு, ஷூக்ரான் ஹபிபி.. வேற மொழில்ல ராஜ்ராஜும் ராகதேவனும் சொல்வாக..
http://www.dailymotion.com/video/xip...niyathu_school
வாசு சார்
சூப்பரோ சூப்பர்... இதை விட இந்தப் பாடலைப் பற்றி வேறு யாரும் எழுத முடியாது. அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து உதறி விட்டீர்கள்.
உத்தரவின்றி உள்ளே வா ... சந்தேகமே யில்லாமல் இசைக்கென்ரு ஓர் படம்...
தங்கள் எழுத்தில் படிக்கப் படிக்க மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆர்வமே எவருக்கும் மேலிடும்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
இசைக்கென்றே ஒரு படமான உத்தரவின்றி உள்ளே வா படத்தின் டைட்டில் இசையும் நாம் கேட்டால் முழுமை அடைந்து விடுமே..
இதோ உங்களுக்காக உத்தரவின்றி உள்ளே வா திரைப்படத்தின் முகப்பிசை. தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.
https://www.mediafire.com/?ol08dj4cc7vo3uy
நேத்திக்கு ஒரு பாட் கேட்டேன்..கேட்டேனா..
ஹிப்பி ஸ்டைல்ல முத்துராமன்.. அப்புறம் யாராக்கும் இது தேர்ந்த சிற்பியால செதுக்கப் பட்ட கருங்கற்சிற்பம் சுடிதார் டைப் ட்ரஸ்ல ஆடுதோ ந்னு வியக்கவைக்கற மாதிரி அழகோட ஃபடாபட்.. படம் உறவுகள் என்றும் வாழ்கன்னு நினைக்கிறேன்
பாட் சொல்லலாம்போட முடியாத்..வாசு திட்டும்..
நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே.. நல்ல இசை..
ஆமா என்னவாக்கும் கதை? :)
வாசு ஜி..
உன்னைத் தொடுவது பாடல் எனக்கும் ரொம்பப் பிடித்தது. ( நாலு குரல்களில் ஒரு பஃபே பார்ட்டியே கிடைத்தால் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா ? ) முதல் காரணம் அந்தப் பாட்டின் வேகமான மெட்டு. பாலு,சுசீலா,ஈஸ்வரி பற்றி சொல்லவே வேண்டாம். நாகேஷ் என்றால் ஏ.எல்.ராகவன் குரல்தான் சரி என்று நினைத்திருப்போருக்கு "ம்ம்ம்மாட்டிகிட்டான்" படத்தின் ரோமியோவும்... இந்தப் பாட்டும் ஷிர்டியும் புட்டபர்த்தியும் போல.....( சிக்காவுக்கு புரிஞ்சா போதும்.. )
அ
நினைத்துப் பார்க்கிறேன்
https://i.ytimg.com/vi/Aa08VgC1YkE/maxresdefault.jpg
இந்தப் பதிவைத் தொடங்குதற்கு முன் முதலில் மேலே காணும் இரு இசைத் தெய்வங்களுக்கும் உளமார்ந்த அஞ்சலி.
இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில், டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ... இவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகுடம் சூட்டிய பாடல்...
ஒரு மனிதன் மரணத்தை நோக்கிப் பயணிக்கும் போது அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. அவன் என்னவெல்லாம் நினைப்பான்... இதை நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா.. அதுவும் அவன் தான் இறக்கப் போகிறோம் என்பதைத் தானே உணர்கிறான்.. அதற்குக் காரணம் அவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான்.. அப்போது அவன் மன ஓட்டம் எப்படி இருக்கும்...
இப்படி ஓர் சூழ்நிலை ஒரு படத்தில் உருவாகியுள்ளது. இதற்குப் பாடல் எழுத வேண்டும், இசையமைக்க வேண்டும், பாட வேண்டும்...
முதல் சவால், பாடலில் எந்த விதமான விஷயங்கள் இடம் பெற வேண்டும், அவை என்ன சொல்ல வேண்டும், என்னென்ன கால கட்டங்கள் இடம் பெற வேண்டும், அதைப் பற்றி அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. இப்படிப் பல விஷயங்களைப் பாடலில் கொண்டு வருவதற்கான முதல் படி.
இரண்டாவது ... இசை ...இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன மாதிரியான இசையமைக்க வேண்டும்,, என்னென்ன கருவிகளைக் கையாள வேண்டும், பாடலில் என்னென்ன உணர்வுகளைக் கொண்டு வர வேண்டும்...
மூன்றாவது ... பாடகர்கள்... இத்தனை விஷயங்களையும் தீர்மானித்தபின் இதை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் பாடகர்கள் தானே.. அவர்களிடம் இருந்து என்ன கொண்டு வர வேண்டும்...
இப்படி வெவ்வேறு சவால்களை எதிர்நோக்கும் இசையமைப்பாளனுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய பரீட்சையே...
ஆனால் இந்த சவாலை சந்தித்தவர்கள் யார்... மெல்லிசை மன்னர்களாயிற்றே.... விட்டு விடுவார்களா என்ன... கூட இருப்பது என்ன சாமான்யரா... கவிச்சக்கரவர்த்தியாயிற்றே...
ஒரு மனிதன் கடைசி காலத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன வென்று புரிந்து கொள்கிறான். அதற்குள் எல்லாமே கடந்து போய் விடுகின்றன.. வாழ்க்கையில் இளமையின் அனுபவங்கள், முதுமையின் துவக்கத்தில் படிப்பினைகள், கடைசி காலத்தில் முக்தியை வேண்டுதல் என மனித வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களையும் மன ஓட்டங்களையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். காலங்கடந்த ஞானோதயம் .. சராசரி மனித மனம் அப்படிப்பட்ட நேரங்களில் என்ன செய்யும்.. இறைவனிடம் புலம்பும்..
இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தையென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடு விட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன...
இந்தத் தொகையறாவிலேயே பாடலின் சூழலைக் கொண்டு வந்து விடுகிறார்கள்..
இங்கேயே ஆரம்பித்து விடுகிறது பாடகர் திலகத்தின் குரல் சாம்ராஜ்ஜியம்...
http://www.siruppiddy.net/wp-content...013/05/tms.jpg
வீடு வரை உறவு,
வீதி வரை உறவு,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ
... இந்தப் பல்லவியை முதன் முதலில் கேட்டவுடன் நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...
முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்பவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...
http://tamiledhal.com/wp-content/upl.../07/sivaji.jpg
இப்படி உடனேயே நடிகர் திலகத்தின் முகத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்ட இந்தப் பாடல் பாத காணிக்கை படம் என்ற வுடன் இயல்பாகவே மக்கள் மனதில் இது சிவாஜி படம் போல இருக்கிறது, என அவரை நினைத்து தியேட்டருக்கு வரவழைக்கும் அளவிற்கு இந்தப் பாடல் அமைந்து விட்டது. படத்தின் இயக்குநர் பீம்சிங் எனவும் மக்கள் கணிக்கும் அளவிற்கு முதல் எழுத்து பானாவும் சேர்ந்து கொண்டது.
போகப் போக பாடலில் சூழ்நிலைகள் வெவ்வேறு வகையாக மாறவும் மக்கள் தீர்மானமே செய்து விட்டனர் இது சிவாஜி படமென்று.
எல்லாமே படத்தின் இசைத்த்ட்டு பரபரப்பாக விற்பனையாகி சக்கை போடு போட ஆரம்பித்த பிறகு, படத்தில் சிவாஜி இல்லை எனத் தெரியும் வரைதான்.
இப்படிப்பலவாறாக எதிர்பார்ப்பை உண்டாக்கி, பின்னாளில், இப்படத்தில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்று நிரந்தரமாகவே என்னை ஏங்க வைத்த பாடல் - என்னை மட்டுமல்ல உங்களையும் நிச்சயம் ஏங்க வைத்திருக்கும் தானே...
அசோகன் மிகத் திறமையான நடிகர். இருந்தாலும் இந்தப் பாடலில் மட்டும் நடிகர் திலகம் நடித்திருந்தால் இதனுடைய ரேஞ்ச் எங்கோ போயிருக்கும்... 1962ல் நடிகர் திலகத்திற்கு மற்றுமோர் வெள்ளி விழாப்படமாக அமைந்திருக்கும்.
மெல்லிசை மன்னர் இப்பாடலை எப்படிப் போட்டிருந்தார்கள்... இதைச் சொன்னாலே நாம் இப்பாடலில் நடிகர் திலகம் இல்லை என ஏன் ஏங்குகிறோம், என்பது புலனாகும்.
தொகையறா முடிந்து வீடு வரை உறவு பல்லவி முடிந்தவுடனேயே அதே தாளக்கட்டில், இளமையில் ஆட்டம் போடுவதைக் குறிக்கும் வண்ணம் டிரம்பெட்டில் ஒரு மேற்கத்திய இசைக்கோர்வை, இந்த இடத்தில் இயக்குநர் சமயோசிதமாக சில்ஹௌட்டில் நடனத்தை ஒளிப்பதிவு செய்ய வைத்திருப்பார், அப்படியே காமிரா கீழிறங்கி அசோகனிடம் செல்லும்...ஆடும் வரை ஆட்டம் சரணம் தொடங்கும்... அதற்கு அடுத்த சரணம், இளமையின் விளைவுகளைப் பற்றியும் சிற்றின்பம் வாழ்க்கையில் அதன் தாக்கம்,
அதைச் சொல்லும் விதமாக தன் அன்னையை நினைக்கிறான்.. அப்போது தாயின் தாலாட்டு.. ஹம்மிங்கில் ஒலிக்கிறது...
இந்த இடத்தில் மெல்லிசை மன்னரின் இசை ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.. தாய்க்கு தாலாட்டு பாடும் சூழ்நிலையில், அவருக்கு வார்த்தைகள் இல்லாமல் ஆரிரோ மட்டுமே பாட வைத்திருப்பார். சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளை விட ஹம்மிங்கிலேயே சொல்லி விடத் தீர்மானித்து, அதற்கு மிகச் சரியாக அவர் பயன்படுத்திய பாடகி..
http://www.indya101.com/gallery/Sing...01(dot)com.jpg
ஹம்மிங் பேர்ட் என நாம் அன்போடு நினைவு கூறும் பி.வசந்தாவுக்கு முன்னோடி ஈஸ்வரி அவர்களே.. இவருடைய ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளைப் பல பாடல்களில் கொண்டு வந்திருப்பார். ஏட்டில் எழுதி வைத்தேன் பாடலில் காதலன் காதலியை நினைவு கூற வைக்கும் குரல், எண்ணிரண்டு பதினாறு வயது பாடலில் காதலனின் காதலை ஏற்று ஆமோதிக்கும் குரல், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் காதலனின் கலைநயத்தை ரசிக்கும் குரல்.. இப்படி தன் ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திய ஈஸ்வரியை, இப்பாடலில் தாய்மைக்கும் தாலாட்டிற்கும் ஒரே சேர பயன்படுத்தி யிருக்கும் உத்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தான சிறப்பாகும்.
இந்த ஹம்மிங் முடிந்தவுடனே வரும் சரணத்தில் நாயகனின் உணர்வுகளை விளக்கும் சரணம்...
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி
இந்த வரிகளின் மூலம் வாழ்க்கையில் சலிப்பும் விரக்தியும் ஏற்படுவதைச் சொல்லி விடுகிறார் கவிஞர்.
இந்த நேரத்தில் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதமான எண்ணத்தில் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து பதைபதைப்புடன் தம்பி அவனைத் தேடி வருகிறான். இதையும் பாட்டில் கொண்டு வரவேண்டும். மெல்லிசை மன்னராயிற்றே சும்மாவா.. இதையும் மிகவும் தத்ரூபமாக டி.கே.ஆரின் வயலினில் அந்த டென்ஷனைக் கொண்டு வந்து விடுகிறார். கேட்கும் போதே நாமும் பதறி விடும் அளவிற்கு உணர்வு பாட்டிலேயே எதிரொலிக்கும்.
இப்போது பாடலின் நாயகன் செல்லும் வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அந்தக் கல்லறைகள் அவன் மனதில் ஒரு தாக்கத்தையும் தத்துவத்தையும் போதிக்கிறது. இதற்கு கவிஞரின் வரிகள் எப்படி அமைகின்றன.
சென்றவனைக் கேட்டால்
வந்து விடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்
சென்று விடு என்பான்...
இரண்டே வரிகளில் வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் அவற்றால் மனிதன் மனதில் ஏற்படும் விரக்தியையும் வெறுப்புணர்வையும் சொல்லி விடுகிறார் கவிஞர். சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான் .. என்ற வரிகளில், ஒரு மனிதன் , மரணமடைந்த ஒருவனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் மரணமடைந்தவன் அவனையும் தான் இருக்கும் இடத்துக்கே வந்து விடு என்று கூறுவதாக கவிஞர் உருவகப் படுத்திக்கொள்கிறார். அந்த அளவிற்கு மனித வாழ்க்கை மோசமாக இருக்கமாம். அதற்கு அடுத்த வரி இன்னும் ஆழமானது. வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்... இந்த வரி எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியது. ஒரு மனிதனின் இழப்பில் தான் இன்னொருவனின் பிழைப்பே இருக்கிறது என்பதாக உருவகம் செய்கிறார். அதற்காக நீ இன்னும் இருந்து என்ன சாதிக்கப் போகிறாய், நீ செத்தால் இன்னொருவன் பிழைப்பானல்லவா என இருப்பவனையும் மேல் லோகத்துக்கு அனுப்பத் துடிக்கும் மனித மனத்தையல்லவா இந்த வரிகள் கூறுகின்றன.
இந்தக் கல்லறை அவன் மனதில் ஏற்கெனவே துளிர் விட்டிருந்த தற்கொலை எண்ணத்தை மேலும் அதிகமாகத் தூண்டி விட தான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிழைத்து விழக்கூடாது எனத் தீர்மானித்து உயரமான மலையிலிருந்து குதி்ப்பதுவே மரணத்திற்கு உத்தரவாதமளிக்கும் என்ற எண்ணத்தோடு மலை உச்சிக்குப் போகிறான்.
இதை உணர்த்துவதற்காக மெல்லிசை மன்னர் இசைக்கருவிகளின் - குறிப்பாக வயலின் இசையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்கிறார். அப்படியே மேலே போகப் போக, கேட்பவர்களுக்கு ஒரு பரபரப்பை உண்டு பண்ணி விடுகிறது.
அவ்வளவுதான்..
க்ளைமாக்ஸ்.. காட்சியில் மட்டுமல்ல...
பாடலின் வரிகளில்.. பாடலின் இசையில்...பாடும் குரலில்...
விட்டு விடும் ஆவி
பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...
அந்த சூனியத்தில் நிலைப்புடன் அவன் நிறுத்திக் கொள்கிறான்.
ஆனால் அந்த பரபரப்போ நிற்கவில்லை..
காரணம்.. அவன் தேடப்படுகிறான். உறவால் தேடப்படுகிறான்.. அவன் தம்பி தேடுகிறான்.. அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமே.. பாடல் முடிந்த பின் தான் அதற்கு விடை கிடைக்கும்.. எனவே இசை அப்படியே மேல் ஸ்தாயியிலேயே சஞ்சரித்து ஒரு ஸ்டேஜில் போய் நிற்கிறது. காட்சியின் தொடர்ச்சிக்காக..
....
இப்படி பல்வேறு வகையில் மகத்துவம் வாய்ந்த பாடலில் பக்கம் பக்கமாக எழுதினாலும் தீராத விஷயமுள்ள காலத்தால் அழியாத காவியப் பாடலில் நம் மனதை மிகவும் பாதித்த ஒரு விஷயம்..
இப்பாடல் காட்சியில் நம் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்கிற மிகப் பெரிய குறையே.
https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw
ராகவ் ஜி...
இன்றைக்கும் "வீடு வரை உறவு" பாட்டுக்கு என் மனதுக்குள் ஓடும் வீடியோ "சட்டி சுட்டதடா"தான் என்றால் நம்புவீர்களா ? ( இது போல இன்னும் பல பாடல்களை ந.தி. நடிப்பில் மனதுக்குள் ஓட விட்டதுண்டு.. (உ-ம்) மெல்ல மெல்ல அருகில் வந்து )..
பாட்டை சக்கையாக திறனாய்வு செய்து கசக்கிப் பிழிந்து உலர்த்தி விட்டீர்கள் ... ஆனால் பாட்டின் ரசம் மட்டும் மெல்ல மெல்ல மனதுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது..
May his soul rest in peace.
An article in the Hindu mentions two of his song - alai payudhe kaNNa and aadaadhu asangaadhu- both by oothukkadu Venkatasubbaiyar.
Here is alai payudhe kaNNa.......
http://www.youtube.com/watch?v=TPnbrBoDvDc
Pithukuli Murugadas was a welcome change in the days when carnatic vocalists relegated Tamil compositiions to thukkada section towards the end of the concert. That has changed now. I heard one vocalist sing RTP with a Tamil compositon.
Another one opened the concert with a Tamil composition instead of 'vathapi ganapathim...'. Another had a concert with mostly Tamil compositions. Finally, they are listening to what Bharathiyar said long time back- sing in a language people can understand ! :))
குட்மார்னிங்க் ஆல்
ராகவ் ஜி.. காலங்கார்த்தால என்ன சோகம்..
ஆனாக்க
ட்ரூ.. இந்த வீடு வரை உறவு ந.திக்குக் கிடைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்..ஆனால் எப்போது கேட்டாலும் படித்தாலும் ஒரு விதமான சோகம்மனதைக் கவ்வுவது இந்தப் பாடலினால் தான்..
இன்னும் சில பாடல்கள் உண்டு
சமரசம் உலாவும் இடமே
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
தத்துவப் பாடல்களில் சிவாஜிக்கு இது அமைந்தால் நன்றாக இருக்குமென நினைத்துப் பார்க்கும் பாடல - ம்ம் சி.செயை வம்புக்கு இழுக்கலாம் :) மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போதுவள்ளலாக்லாம்.. ஆனால் இதை டி.எம்.எஸ் குரலில் ஏனோ பொருத்திப் பார்க்க முடியவில்லை..
Vanakkam
டியர் ராகவேந்தர் சார்,
உங்கள் 'வீடுவரை உறவு' பாடல் ஆய்வு படித்து ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். என்ன அருமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். அற்புதம். உண்மையில் நடிகர்திலகத்துக்கு கிடைத்திருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது சரியான கணிப்புதான். ஆனால் அசோகனும் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது அவரது மேக்கப் மற்றும் உடைகள்.
குறிப்பாக பாடலின் துவக்கத்தில், காலூன்றும் கட்டைகளால் தலையில் அடித்துக்கொள்ளும்போது பதற வைப்பார். இசைத்தட்டில் இடம் பெறாமல் படத்தில் மட்டும் இடம் பெற்றிருக்கும் (ஜெமினியின்) 'அண்ணா', 'அண்ணா' என்ற அலறல் சற்று டிஸ்டர்ப்ட் ஆகவே இருக்கும்.
அசோகன் எத்தனை பாடல்களில் நடித்து இருந்தாலும், இந்த 'வீடுவரை உறவு' பாடலும், இரவும் பகலும் படத்தில் அவரே சொந்தக்குரலில் பாடிய 'இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்' பாடலும் அவருக்கு பெரிய பெயரையும் புகழையும் தந்தன என்றால் மிகையில்லை.
பாடலின் ஒவ்வொரு வரிக்கும் உங்கள் சிறப்பான ஆய்வுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
மதுஜி
வீடு வரை உறவு பார்த்த உடனே தங்கள் மனதில் மட்டுமல்ல, பலருக்கும் ஆலயமணி பாடல் தான் நினைவுக்கு வரும். பாத காணிக்கை படத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்ற குறை நம்மைப் போலவே இயக்குநர் சங்கருக்கும் இருந்திருக்கும். காரணம் முதலில் சரவணா ஃபிலிம்ஸ் அணுகியது நடிகர் திலகத்தைத் தான். இந்தப் பாத்திரத்தை அவர்கள் உருவாக்கியதே நடிகர் திலகத்தை மனதில் வைத்துத் தான். என்றாலும் தொடர்ச்சியான கால்ஷீட், அமெரிக்கப் பயணம் போன்ற காரணங்களால் நடிகர் திலகத்தால் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் போய்விட்டது. என்றாலும் சங்கர் விடவில்லை. அதே போன்ற ஒரு பாடல் காட்சியை உருவகப்படுத்தி ஆலயமணி படத்தில் கொண்டு வந்து கிட்டத்தட்ட அதே போன்ற முடவன் வேடத்தில் நடிகர் திலகத்தை நடிக்க வைத்து - மன்னிக்கவும் - நடக்க வைத்து, தன்னுடையை ஆவலைத் தீர்த்துக்கொண்டார். அது நமக்கும் மிகப் பெரிய போனஸாக அல்லவா அமைந்து விட்டது.
படப்பிடிப்பு நடந்த இடமும் அதுவாகக் கூட இருக்கலாம்.
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி.
சி.க. சார்
அன்னக்கிளி படத்தில் சுஜாதா சொல்வது போல, சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறதன்றோ..
மனிதன் என்பவன் பாடல்...
டி.எம்.எஸ். பாடினாலும் நன்றாக இருந்திருக்கும்.. ஆனால் படமாக்கியிருக்கக் கூடிய முறை வேறாக இருந்திருக்கும்.
ஆதிராம்
அசோகன் ... நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களைப் பொறாமைப் படவைக்கக் கூடிய அதிர்ஷ்டசாலி...
இது மட்டுமல்ல இன்னும் பல பாடல்கள்,, நடிகர் திலகத்திற்குக் கிடைத்திருக்க வேண்டிய பாடல்கள் அவருக்கு வாய்த்து விட்டன.
அவற்றில் ஒரு சில இத்தொடரில் இடம் பெறவும் உள்ளன.
பாதகாணிக்கை அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு - நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
இன்னிக்கு நயன் தாரா பர்த்டேயாமே.. சொல்லவே இல்லை..(கல் நாயக்கா இருந்தா மொதல்ல சொல்லியிருப்பார்.. ராஜேஷ்.. ம்ம் இன்னும் சர்ரூவ விட்டே வரமாட்டேங்கறார்..)
நல்ல நடிப்பென்றால் நானுண்டு என்றுவந்து
அல்லதை விட்டே அழகாக - சொல்ல
வியக்கும் எழிலுடனே வித்தைகள் செய்பவர்
நயன் தாரா என்றே நவில்
https://youtu.be/WD6MWLyGG3k