http://i59.tinypic.com/rs4gfd.jpg
Printable View
அன்பு நண்பர்களே ஒரு முக்கிய அறிவிப்பு !
எனக்கு சிவந்தமண் ஆவணம் அனுப்பியது நண்பர் திரு ராமஜயம் சார் அவர்கள்!
அந்த ஆவணத்தை அவருக்கு கொடுத்தது நம் மதிப்புக்கு உரிய திரு பம்மலார் அவர்கள் தான்! நேற்று நண்பர் ரவிகிரன் சார் பதிவை பார்த்தபின்பு நேற்று இரவு
ராமஜெயம் அவர்கள் எனக்கு விவரம் கூறி உண்மையை திரியில் பதிவிட சொன்னார்! நேற்று இரவு net connection எனக்கு கிடைக்காத காரணத்தால் இன்று
இப்போது உண்மையை பதிவிடுகிறேன் !
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பம்மலார் சார் நீங்கள் மறுபடியும் உங்கள் நடிகர்திலகம் திரியில் பங்கெடுக்க அன்புடன் விரும்பி அழைக்கின்றேன்!
அன்பு நண்பர் ரவிகிரன் சார் !
யார் கேட்டாலும் தன்னிடமுள்ள ஆவணங்களை எல்லோரும் கொடுக்க மாட்டார்கள்! நீங்கள் சொல்லும் நபர் பம்மலார் அவர்களுக்கு நெருக்கம் இல்லாதவராக இருக்கலாம்! ராமஜெயம் அவர்களுக்கு பம்மலார் சார் மிகவும் நெருங்கிய நண்பர் அதனால் உடனே கொடுத்து விட்டார்! மேலும் உண்மை
எதுவென்று அனைவருக்கும் என் ஆவணங்கள் மூலம் தெரிந்தால் எனக்கு அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை என்றும் ராமஜெயம் அவர்களிடம்
பம்மலார் அவர்கள் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்! நடந்த உண்மையை கூறிவிட்டேன்!
சிவந்தமண் விசயத்தில் எனக்கு ஆதரவு அளித்து உண்மையை ஓங்கி உரைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
சிவாஜி புகழை காப்போம் !
எனதருமை எம்.ஜி.ஆர் திரி நண்பர்கள் சிலரிடம் ஒரு வழக்கம் உண்டு. நடிகர்திலகத்தை, அவருடைய சாதனைகளை எவ்வளவு தூரம் முடியுமோ அதுவரை தரமிறக்கிவிட்டு, கடைசியில் "எங்களுக்கும் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் உண்டு" என்று முடிப்பார்கள்.
ஒரு வெற்றிபெற்ற படத்தை தோல்விப்படமாக சித்தரிக்க நான்கு நாட்களாக மெனக்கெடுகிறீர்களே இதுதான் அவரை மதிக்கும் அழகா?.
இன்னும் சிலர் என்ன விவாதம் போய்க்கொண்டிருக்கிறது என்று கூட புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக "மக்கள் திலகம் புகழையும் அரசியல் வெற்றியையும் யாரும் மறைக்க முடியாது. யார் நினைத்தாலும் எதுவும் நடக்காது" என்று பதிவிடுவார்கள்.
சிவந்த மண் வெற்றிப்படம், லாபம் ஈட்டிய படம் என்று நாங்கள் சொல்வது எந்த வகையில் எம்.ஜி.ஆர். மதிபபைக்குறைக்கும் செயலாகும் என்பது திரிகளைப் படிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு தெரியும்.
திரு முத்தையன் சார்
ஒரு விண்ணப்பம்
திரு வாசுதேவன் அவர்கள் பதிவு செய்துள்ளது ஒரு இரண்டு நாட்களுக்கு இருக்கட்டும்...அதுவரை நீங்கள் புகைப்படங்களை பதிவிடுவதற்கு சற்று நிதானித்தால் மிகவும் நல்லது ..
உங்களை போலவே திரு வாசு அவர்கள் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு ஒரு பதிவு செய்துள்ளார்....அதன் focus தவறி போகாமல் இருக்கவே இந்த விண்ணப்பம் !
சில உண்மைகள் அனைவருக்கும் தெரியவேண்டும் ...ஆகவே புகைப்படங்களுக்கு உங்கள் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் விடுமுறை கொடுங்கள் !
நன்றி
உங்களுடைய சேவையை இரண்டு நாட்களுக்கு விடுமுறை கொடுத்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டுகிறேன் !
ரகஸ்
இனிய நண்பரே ........வசுதேவரே .........பாஸ்கர் போல மானம் காத்த தெய்வமே....
உன் பதிவை பார்த்து அதன் பிறகு பல விளக்கங்கள் பலரிடம் இருந்து வரலாம் ...
அதற்க்கு உந்துதலாக இருந்தது உனது விளக்கு நீ ஏற்றிய விளக்கு , கலங்கரை விளக்கு !
தமிழ் நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தும் !
நான் சொல்ல நினைத்ததை நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்கள் சொல்லி விட்டார். அதை வழிமொழிகிறேன்.
ஒரு முக்கிய விவாதம் அதற்கான ஆதாரங்களுடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, திரைப்பட ஸ்டில் பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய வேண்டுகோளும் கூட.
இதனால் சம்மந்தப்பட்ட ஆதாரப்பதிவுகள் பல பக்கங்கள் பின்தங்கிப்போக நேரிடும்.
உலக தமிழ் மாநாட்டிற்கு நமது நடிகர் திலகம் தமது வியெட்னாம் வீடு நாடகத்தை நடத்தி அதில் வசூலான தொகை முழுவதையும் நன்கொடையாக கொடுத்தார். அதன் அடையாளமாக நடிகர் திலகம் அவர்களை அமைப்பாளர் கௌரவிக்கும் அறிய புகைப்படம் - உபயம் முகநூல்
உலக தமிழருக்கு தமிழர் பெருமையை உலகிற்கு புரியவைத்த மண்ணின் மைந்தராக...தேசியத்திற்கு நாட்டின்வித்தாக இருந்தவர் நடிகர் திலகம் !
நடிகர் திலகம் சமுதாயத்துக்கு என்ன செஞ்சார்...என்ன செஞ்சார் ...என்று விஷயம் தெரியாமல் கேள்வி மட்டும் வக்கணையாக கேட்பவர்களுக்கு ஒரு சிறு ஆதாரம்
http://i501.photobucket.com/albums/e...psw6ltptpm.png
தேசியத்தை ஒவ்வொரு மனிதனிடம் விதைத்ததில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் திலகம். விடுதலைக்காக பாடுபட்டவர்களை திரையிலும் நிஜத்திலும் உலகறிய செய்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உரிய மரியாதையை செய்வதில் முன்னணியில் உள்ள ஒரே கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.
விடுதலை போரில் ஆங்கிலேயர்களால் தூக்கில் இடப்பட்ட மறைதிரு வீரர் பகத்சிங் அவர்களின் தாயார் அவர்களுக்கு நடிகர் திலகம் அவர்கள் மரியாதை செய்யும் அரிய புகைப்படம் - உபயம் முகநூல் -
எந்த வரலாற்றிலாவது இந்த பூகோளத்தில் இது போல கடமை உணர்ச்சியை ஒரு நடிகர் காட்டியுள்ளாரா என்ற கேள்வி எழும்போது, நடிகர் திலகம் தவிர ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்கும். தேசத்தை தனது கண்ணாக பாவித்த ஒரே தேசிய நடிகர் நமது நடிகர் திலகம் !
http://i501.photobucket.com/albums/e...psrtbhdcwl.png
அன்னை இல்லத்தில்
நேற்று விக்ரம்பிரபுவை பார்த்து பேசியபோது எடுத்தபடம்.
படங்களுக்கு போதிய விளம்பரமின்மை,ரசிகர்களுக்கு சரியான தகவல்கள் தகுந்த நேரத்தில் சென்றடையாதிருத்தல்,
ரசிகர்களின் மனநிலைஎடுத்துச் சொன்னோம்.கவனத்தில் கொள்வதாகவும்,சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.
http://i1065.photobucket.com/albums/...psfwokv7y4.jpg
http://i1065.photobucket.com/albums/...pscygjdcpo.jpg
சாந்தி திரையரங்கில் நேற்றுமாலை 4 மணி முதல் 7மணி வரை காத்திருந்தோம்.ரசிக நண்பர்கள் யாராவது வந்தால் பேசிவிட்டு வரலாம் என்று இருந்தோம்.யாரும் வரவில்லை யாதலால் தியேட்டரை சுற்றி பார்த்துவிட்டு வந்து விட்டோம்.
அங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் தியேட்டர் இடித்து கட்டியபின் இடம் பெறலாம் இல்லை இடம் பெறாமலும் போகலாம்.எல்லாரும் பார்த்ததுதான்,இருப்பினும் பின்னாளில் நினைவு கூற இந்த பொக்கிஷங்களைபதிவிடுகிறேன்.
http://i1065.photobucket.com/albums/...psz2fu6epa.jpg
டியர் செந்தில்வேல்
காலம் காலமாக தாங்கள் காத்து வரும் அபூர்வ ஆவணங்கள் அந்நாளைய நினைவுகளைத் தட்டி எழுப்புகின்றன. மக்கள் தலைவருடன் அந்நாளைய அகில இந்திய சிவாஜி மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை காட்சி தரும் அபூர்வமான புகைப்படம். மிக்க நன்றி.
ஒரு வேண்டுகோள்.
தாங்கள் பதிவிடும் அபூர்வ ஆவணங்கள் நிழற்படங்கள் யாவற்றிலும் தங்களுடைய பெயர் அல்லது ஏதாவது watermark பொறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் இப்படிப்பட்ட அபூர்வ ஆவணங்களை சிலர் பல்வேறு தளங்களில் மீள் பதிவு செய்யும் போது மறந்தும் கூட அதற்கு நன்றி கூறுவதில்லை, பெயர் கூட குறிப்பிடுவதில்லை. மாறாக தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து அளிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கவும் தயங்காத கலிகாலமிது,
தாங்கள் இதற்கு பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பீர்கள் என்பது தெரியும் என்றாலும் என் மனது கேட்காத காரணத்தால் தங்களிடம் இக்கருத்தைக் கூற விரும்பினேன்.
சென்னை சாந்தி திரையரங்கில் இருக்கும் இப்படம் இரு பரிமாணங்களில் அந்தக் காலத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்காகவே தினமும் வந்து பார்த்து விட்டுப் போனதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்.