5-11-1986 'இதயம் பேசுகிறது' இதழில் 'நடிகர் திலகத்தின் திலகத்தின் 50 ஆண்டுகள்' என்று தலைப்பிட்டு நடிகர் திலகத்தைப் பற்றிய சிறப்புப் பேட்டிகளும்,கட்டுரைகளும் இடம் பெற்றன. அதில் 'நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்' என்ற தலைப்பில் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை ஒன்று இடம் பெற்றது. இக்கட்டுரையில் ஸ்ரீதர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றியும், அவருடைய பெருங்குணம் பற்றியும், கலைத்துறையில் அவருடைய ஈடுபாடு பற்றியும், ஒத்துழைப்பு பற்றியும் நிறையவே கூறியிருக்கிறார். அப்போது நயாபைசா கூட இல்லாத ஸ்ரீதருக்கு நடிகர் திலகம் வாழ்வளித்த உண்மையை ஸ்ரீதர் நன்றியுடன் இங்கே பாராட்டுகிறார். படியுங்கள்.
![]()
Bookmarks