Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பிரபல கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன்' எனும் நூலில் 'சிவந்த மண்' படத்தை பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.



    இரண்டாவது ஸ்ரீதர் 'தர்த்தி' நன்றக ஓட வில்லை என்று கூறியிருப்பதே சரியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.



    'தர்த்தி' வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 8 திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியிருக்கிறது. வசூலில் டல் அடித்திருந்தால் நிச்சயம் அது இத்தனை திரையரங்குகளில் இவ்வளவு நாட்களை எட்டியிருக்க முடியாது.

    கலை சார்,

    பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.

    இதற்கெல்லாம் மேலே ஒன்று.

    'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.

    அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.

    'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
    ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.
    Last edited by vasudevan31355; 14th September 2015 at 09:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •