http://oi66.tinypic.com/dxfvib.jpg
Printable View
யாழ்நகர் ராஜா திரை அரங்கில்
எங்கள் தங்க ராஜா
http://oi63.tinypic.com/eik00m.jpg
அனைத்து பதிவுகளுக்கான புகைப்படங்களை
தந்து உதவிய நண்பர் திரு சீனிவாசகோபாலன்
அவர்களுக்கு நன்றி
இனிய நண்பர் திரு சிவ அவர்களுக்கு
வணக்கங்கள். இந்த பதிவை நான் பதிவு செய்வதற்கு முதற்கண் எனது வருத்தங்கள்.
திரியில் தங்கள் பதிவு செய்யும் நடிகர் திலகம் அவர்களுடைய சரித்திர சஹாப்த அசுர சாதனை பற்றிய ஆவணங்களை நன்றி. ஆனால் அதில் மறைத்திரு எம் ஜி ஆர் அவர்களுடைய பெயர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்து பதிவு செய்ய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
காரணம் மக்கள் திலகம் அவர்களின் ஆராதகர்கள் மனம் வருத்தப்பட எந்த காலத்திலும் நாம் ஆளாக கூடாது. திரு எம் ஜி ஆர் - திரு சிவாஜி அவர்களின் உறவு என்பது மற்ற இதர நடிகர்களின் உறவு போல செயற்கையானது அல்ல. கிட்டத்தட்ட சகோதரத்துவம் வாய்ந்த உறவு அவர்கள் இருவருக்கும் கடைசி வரை இருந்ததை நாம் சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். இருவரின் தாயார் இடமும் இருவரும் அதீத அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் கால் வலி கண்டபோது அந்த தாயாருக்கு தைலம் தடவி விட்டவர் மக்கள் திலகம் அவர்கள். அதுபோல மக்கள் திலகத்திற்கு பசி எடுத்து உணவு கொடுங்கள் என்று அன்னை சத்யவிடம் கேட்டபோது...சற்று பொறு...கணேசன் வரட்டும் இருவரும் உண்ணலாம் என்று கூறியவர் அன்னை சத்திய அவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் திரு உருவ சிலையை திறக்க நடிகர் திலகம் வேறு யாரையும் அழைக்கவில்லை. மக்கள் திலகம் அவர்களைத்தான் அழைத்தார். இது போல மேலும் பல இனிய சம்பவங்கள் நமக்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவால் இந்த நல்ல விஷயங்கள் OVER SHADOW செய்யப்படக்கூடாது.
உத்யோகத்தில் போட்டி இருந்திருக்கலாம். அதுவும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளால் தான் அந்த போட்டி கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியலில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்களுக்காக அவரது கட்சிக்காக பிரச்சாரம் பல முறை மேற்கொண்டவர். அவருடைய துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருக்கு ஒரு சகோதரனாக உற்ற துணையாக மற்ற அனைவரும் மக்கள் திலகம் மறைந்தவுடன் கைவிட்ட நிலையில், அரசியல் களத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் முதலாக கட்சி ஆரம்பித்து அதனை சாதகமாக பயன்படுத்தாமல் (நேற்று கட்சி ஆரம்பித்த பொடியார்கள் கூட முதல் அமைச்சர் கனவுடன் தனித்து போட்டியிடும் நிலையில்), அவருக்காக, அவருடன் இருந்த பாசப்பிணைப்பின் காரணமாக, திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தவர் நடிகர் திலகம் என்றால் இருவரின் பாசத்திற்கும் எந்த பாசாங்கும் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும் ! இதில் இருந்தே அவர்களுக்குள்ள பரஸ்பர அன்பு தங்களுக்கு விளங்கும்.
இப்படி இருக்க நாமாக ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவு செய்து அவர்கள் மனதை கஷ்டப்பட வைக்க கூடாது என்பதை தாழமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களுடைய இது போன்ற நோட்டீஸ் எதையேனும் இருப்பின் அதனை நீக்கிவிட அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
நமது சாதனைகளை அவர்கள் அறிவார்கள் ....அவர்களின் சாதனைகளை நாமும் அறிவோம்....இதில் எதற்கு ஒரு பிரச்னையை கிளப்பும் ஒரு ஒப்பீடுகள் நமது பாகத்தில் இருந்து ? எனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் இங்கு பதிவு செய்கிறேன். தவறு ஏதேனும் இருப்பின் என்னை மணித்துக்கொள்ளுங்கள்.
Am extremely sorry if my open view had hurt you. Let us move cordially at all time unless and until there is invite that invites discrepancy.
Murali Sir...am sorry for expressing my views here.
நன்றி
RKS
வணக்கம் சூரியா
நீங்கள் எழுதியதை தவறாக எடுக்கவில்லை
ஆனால் வருத்தம் இருக்கின்றது
நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக நீங்கள்
கேட்டுக்கொண்ட பதிவுகளை நீக்கத்தயார்
ஆனால் அவர்களது வேலூர் பதிவுகளில்
வசூல் ஒப்பீடுகள் இருக்கின்றன அதற்கு
நாங்கள் ஒன்றும் சொன்னதில்லை.
அவர்கள் கேட்டுக்கொண்டால் என்பதிவுகளை
நான் நீக்கிவிடுகின்றேன்.
ஆனால் அவர்கள் கேட்கும் பட்சத்தில்
அவர்களுடைய ஒப்பீட்டு வசூல் விபரம் உள்ள
பதிவுகளை அவர்கள் நீக்க வேண்டும்
அவர்கள் நீக்குவார்களா?
வணக்கங்கள் பல !
அருமையான வார்த்தைகளுடன் கூடிய விளக்கம் தந்த என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய உடன் பிறவா சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு நன்றிகள் பல. நண்பர் திரு. சிவா அவரகள் பதிவிடும் பொழுதெல்லாம் சர்ச்சைகள் ஏற்படுகிறது. தங்களின் யோசனைகளுடன் கூடிய அறிவுரையை அவர் ஏற்பாரா என்பது சநதேகமே ! அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்து கொள்வதில் தவறில்லை.
மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதினால், இன்னொருவரை தாக்கி தங்கள் அபிமான நடிகரை புகழும் ரகத்தை சார்ந்தவர் திரு. சிவா எனபதில் மாற்று கருத்து கிடையாது என்பது அவரது முந்தைய பதிவுகளை பார்த்தால் புரியும்.
மக்கள் திலகத்தை கடவுளாக ஏற்று, அவரை பூஜிக்கும் நான், அன்னை ஜானகியின் கையால் உணவு உண்ட பலர் அரசியலில் அவருக்கு துரோகம் செய்த பொழுது, எந்த வித பிரதிபலனையும் பாராமல், 1988ம் வருடம், அரசியலில், தாமாக முன்வந்து, அன்னை ஜானகிக்கு உற்ற நேரத்தில். உதவிய நடிகர் திலகத்தின் பண்பினை வியந்து நான் பாராட்டியது என்னுடன் அந்த காலத்தில் இணைந்து பணியாற்றிய புரட்சித்தலைவர் காலத்து அரசியல்வாதிதிகளுக்கு தெரியும். இந்த காரணத்தினாலேயே, நான் இன்றும் அவர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.
மேலும், புரட்சித்தலைவர் அவர்கள் மறைந்த பொழுது, " இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் என் அன்பு ஆருயிர் அண்ணன் (எம்.ஜி. ஆர். என்று பெயர் கூட குறிப்பிட வில்லை என்று ஞாபகம்) போல் வாழ்ந்திட வேண்டும் " என்று நடிகர் திலகம் மறை-திரு சிவாஜி கணேசன் அவர்கள் கூறிய வார்த்தைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று !
நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது திரு. சிவா மற்றும் திரு. கோபால் போன்றவர்களின் நேரடி தாக்குதலால் நான் மனம் குலைந்து போன நிகழ்வுகள் பல உண்டு. நானும் ஆக்ரோஷமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்களை பதிவு செய்துள்ளேன். இது நடிகர் திலகம் திரி அன்பர்கள் பலருக்கும் தெரியும். ஆனாலும், அவர்கள் என் மீது ஆத்திரப்பட வில்லை. என் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு மவுனமாகி விட்டனர்.
என்றுமே, நானாக வலிய வந்து நடிகர் திலகத்தை தாக்கி பதிவுகள் மேற்கொண்டதே இல்லை. இதுவும் அவர்களுக்கு தெரியும்.
எனவே, வயதில் சற்று மூத்தவனாகிய என் அனுபவத்தில் சொல்கிறேன் - என் அன்பு - அருமை சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் கூறியது போல, சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்த்து, இந்த மய்யம் இணைய தளத்தையும், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளை சுமுகமாக கொண்டு செல்ல திரு. சிவா மற்றும் திரு கோபால் போன்றவர்கள் முன் வர வேண்டும்.
நன்றி !
வணக்கம் திரு செல்வகுமார் சார்
நான் பதிவுகள் இடும்பொழுது நீங்கள் பார்க்கும் பார்வையும்
எடுத்துக்கொள்ளும் விதமும்தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறது
உங்கள் திரியில் பழைய நோட்டீஸ்களை வேலூர் பதிவுகள்
என்றபெயரில் வெளியீட்டு இலக்கங்களுடன் நண்பர் ஒருவர்
பதிவிட்டு வந்தாரே அதேபோன்றுதான் நானும் எங்கள் திரியில்
பழைய பத்திரிகை நோட்டீஸ் போன்றவற்றை பதிவிட்டேன்
உங்கள் பழைய நோட்டீசில் நடிகர் திலகத்தின் படங்களை
ஒப்பிட்டு விபரங்கள் இருந்தன அதற்கு நாங்கள் ஒன்றும் சொன்னது
கிடையாது. பழைய நோட்டீஸ் முன்னர் பார்க்கத்தவறியவர்களுக்காக
பதிவிடுகிறார்கள் என பெருந்தன்மையுடன் விட்டுவிட்டோம்
ஆனால் அதேபோன்று நான் பதிவிட்டால்மட்டும்
ஏன் குய்யோ முறையோ என உங்கள் பக்கம் குமுறுகிறீர்கள்.
தாக்கி எழுதுகிறீர்கள்.
உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?
எவர் தூண்டினாலும் நடிகர் திலகத்தின் மீது உண்மையான பற்று இருந்தால்
நிச்சயமாக உங்களால் நடிகர் திலகத்தை தாக்கி எழுத முடியாது
ஆனால் நீங்கள்??????? நான் சொல்லத் தேவையில்லை
உங்கள் பழைய பதிவுகளே சொல்லும்.
உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதால்தான் எங்கள் பக்க
நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் .............
மற்றவர்கள் ரசி......... என்ற உங்கள் கண்டுபிடிப்புக்கு
நிச்சயமாக நோபல் பரிசுதான் சார்.
என்னுடைய பதிவுக்கு கோபாலை ஏன் இழுக்கிறீர்கள் சார்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...cd&oe=57F84FDD
இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இறைவன் அருளாலும் மக்கள் தலைவரின் நல்லாசியாலும் அவர் நீடூழி வாழ்ந்து எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...c7&oe=57F85487
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அடுத்த நிகழ்ச்சி...
சிவகாமியின் செல்வன் திரைப்படம் திரையிடப்படுகிறது. விவரம் விரைவில்..
2016 ன் தரமான வெற்றி
http://oi63.tinypic.com/wa1z6s.jpg
தொடரும் சரித்திர வெற்றி
http://oi64.tinypic.com/2nrnbc7.jpg
மதுரையை கலக்கிய திரிசூலம்
http://oi64.tinypic.com/212twqx.jpg
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளுவின் காரணமாக ஒரு சில தினங்கள் இடைவெளியில் மட்டுமே திரியை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்றைய தினம் நண்பர் சிவா அவர்கள் பதிவிட்ட அன்றைய இலங்கை வாழ் நடிகர் திலகம் ரசிகர்களால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள், வெளியிட்ட நோட்டீஸ் போன்றவற்றில் ஒரு சில வாசகங்கள் மாற்று திரி நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்திருப்பது தெரிகிறது.
நண்பர் சிவா அவர்களே,
நான் சென்ற முறை குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் சாதனைகளை பதிவிடுவதில் தவறில்லை. நீங்கள் பதிவிட்ட நோட்டிஸ்கள் 40 வருடத்திற்கு முந்தியவை என்பதும் அதை நீங்கள் எழுதவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் நம்மால் யார் மனமும் புண்பட வேண்டாம். ஆட்சேபத்துக்குரிய வரிகளை நீங்களே நீக்கி விடுங்கள்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள்!
அன்புடன்
முரளி சார் வணக்கம்
அவர்கள் பழைய நோட்டீஸ்களை பதிவிட்டதுபோலவே
நானும் எமது பழைய நோட்டீஸ்களை பதிவிட்டிருந்தேன்
ஆனால் அவர்கள் பதிவிட்டபோது அவர்களது பதிவுகளில் உள்ள
தீய விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டி பிரச்சினையை ஏற்படுத்தாததால்
அவர்கள் அப்படியான தீய பதிவுகளை வெளியிடவில்லையென்று
தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது
அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்துகொள்வதில் தவறில்லை
என்று எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் முன்னர் இட்ட பதிவுகளில் அப்படி இல்லையே.
மற்றும்அண்மையில் சிவகாமியின் செல்வன் கர்ணன் மறு மறு வெளியீட்டின் பின்னர்
அங்கு ஒரு நண்பர் அப்படங்களின் ஓட்டங்கள்பற்றி விவாதிப்போம் வாருங்கள்
என்று அழைப்பு விடுத்தார் .அவரவர் தங்கள் அபிமான நடிகரை
புகழ்ந்துகொள்வது தவறில்லை என்பவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களைப்பற்றி விவாதிக்க
ஏன் அழைக்கவேண்டும்?
இதுபற்றி அந்த நண்பருக்கு அங்கே யாரும் அறிவுறுத்தி பதிவிட்டதாகவும் தெரியவில்லை.
ஆனால் இது பற்றி நமது திரியின் பக்கமிருந்து நாங்கள் யாருமே
குய்யோ முறையோ என கத்திக் குளறி சர்ச்சையை கிளப்பவில்லை.
அங்கே ஒரு நீதி இங்கே ஒரு நீதி.
எனினும் உங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த பதிவை எடிற் பண்ண
முயற்ச்சித்தேன் சிரமமாக இருந்ததால் முழுமையாக அப்பதிவுகளை நீக்கிவிட்டேன்
மதுரையை கலக்கிய திரிசூலம்
http://oi64.tinypic.com/212twqx.jpg
http://www.sivajiganesan.in/Images/DSC02368.jpg
http://www.sivajiganesan.in/Images/DSC02345.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02353.jpg
நன்றி sivajiganesan.in
http://www.sivajiganesan.in/Images/DSC02352.jpg
நன்றி sivajiganesan.in