பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 01
எந்த ஒரு சமய நிகழ்ச்சி அல்லது பண்டிகை என்றாலும் உடனே மக்கள் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம். எப்படி விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்டு மக்கள் வணங்கி தங்கள் நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார்களோ, அதே போன்று முழுமுதற் பாடலாக அல்லது படமாக நடிகர் திலகத்தின் படங்கள் அல்லது பாடல்களே இடம் பெறுகின்றன. குறிப்பாக திருவிளையாடல். அவ்வாறு பக்தி மணம் கமழும் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம்.
தொடக்கமாக, மிகவும் அபூர்வமான ஒரு பக்திப் பாடல். தற்போதைய தலைமுறை ரசிகர்கள் பலர் இப்பாடலைக் கேட்டிருக்க அல்லது பார்த்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம், அதனால் இப்பாடலை அறிமுகப் படுத்துவது பெருமையாகவும் உள்ளது.
கிட்டத்தட்ட ராமாயணத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் நானே ராஜா. கல்பனா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் டி.ஆர்.ராம்நாத். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும். இப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ். குரல் கொடுத்துப் பாடியிருக்கும் ஒரு பக்திப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. வேறொரு தலைப்பில் இதே படத்தில் இடம் பெற்ற மிகப் பிரபலமான பாடலான மந்த மாருதம் தவழும் பாடல் இடம் பெற உள்ளது.
இங்கே இடம் பெறும் பக்திப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே என்ற பாடலாகும். தனிப்பட்ட முறையில் இப்பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும்.
இப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றமும் ஒய்யாரமும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.
இதோ அந்த பக்திப் பாடல்
http://www.youtube.com/watch?v=la5-yM9mPQE&
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்