-
14th June 2011, 11:04 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் முரளி சார்,
'எங்க திரி ராஜா'வாகிய நீங்கள் "எங்க ஊர் ராஜா"வை அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.
கதை, Double நடிகர் திலகம் உள்ளிட்ட அனைவரது performance, பாடல் & பாக்ஸ்-ஆபீஸ் என ஒவ்வொரு பாகப்பதிவும் அருமை மட்டுமல்ல அசத்தல் !
எங்க ஊர் ராஜாவுக்கு முன்னும்-பின்னும் போட்டிப் படங்களாக தில்லானா, லக்ஷ்மி கல்யாணம், உயர்ந்த மனிதன், அன்பளிப்பு ஆகிய புதிய படங்களை எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில், சற்றேறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு - திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கத் துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்த நேரம் - அக்மார்க் புத்தம் புதிய படமாக நமது நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" சென்னை மற்றும் தென்னகமெங்கும் 15.8.1968 சுதந்திரத் திருநாள் முதல் வெளியாகி எல்லா புதிய படங்களோடும் போட்டாபோட்டி போட்டதையும் அவசியம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெளியீட்டில் "பராசக்தி" சென்னையிலும் இதர இடங்களிலும் இணைந்த 100வது நாள் விழாவும் கொண்டாடியது. இது தவிர அந்தந்த நேரங்களில் வரும் அவரது பழைய படங்கள் வேறு போட்டியைக் கடுமையாக்கும்.
சிக்கலாருக்கு சிக்கலை ஏற்படுத்தியது வடிவாம்பாள் மாத்திரமல்ல, விஜய ரகுநாதரும் தான் ! 14 அரங்குகளில் தனது வாசிப்புக்கு (நூறு நாள்) விழாக் கொண்டாடியிருக்க வேண்டிய சண்முகசுந்தரம் 7 அரங்குகளாக இறங்கியதற்கு சேதுபதியும் கொஞ்சம் பாதகாதிபதியாக வந்ததனால் தான். சேலம், கரூர், கடலூர், பாண்டி, குடந்தை, தஞ்சாவூர், நெல்லை என இந்த எழு ஊர்தோறும் எண்ணிக்கையில் 86ஐ எட்டிய நேரத்தில் சிக்கலார் தனது சங்கீதத்தை விஜய ரகுநாதருக்காக விட்டுக் கொடுத்தார்.
நமது காவியங்களே நமது காவியங்களுக்குப் போட்டி, என்ன செய்வது !
அன்புடன்,
பம்மலார்.
-
14th June 2011 11:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks