-
மிகவும் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தைப் போலவே சூப்பர் ஹிட் விவாதமாக ராஜா படத்தைப் பற்றிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது. கேன்டீன் வியாபாரமும் நடக்க வேண்டும் அல்லவா. அதற்காக இடைவேளை விடுவதாய் நினைத்துக் கொண்டு குறுக்கிடுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். மிகச்சிறப்பான தகவல் மற்றும் நிழற்படப் பகிர்வுக்காகவே இந்த பீடிகை
கோவை நண்பர் செந்தில் அவர்கள் முகநூலில் பகிர்ந்து கொண்டுள்ள நிழற்படம் மற்றும் தகவல். உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ்ப் படத்திற்கு ஒரு திரையரங்கில் படப்பிடிப்பு நடப்பதாகக் காட்சி போலும். விவரம் தெரியவில்லை. அந்த திரையரங்கில் நடிகர் திலகத்தின் நவராத்திரி திரைப்படம் ஓடுவதாக படப்படிப்பு நடைபெற்றுள்ளது. அந்தத் திரையரங்க படப்பிடிப்புக்காக கட்அவுட் பேனர் போன்றவை ரம்மியமாக உள்ளன. செந்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்த நிழற்படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...94848173_n.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...78717643_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...59311905_n.jpg
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...94560583_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...54746240_n.jpg
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...93569923_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...97374227_n.jpg
-
Quote:
Originally Posted by
vasudevan31355
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.
அதுவும் தேவி பேரடைஸில் எம்.எஸ்.வி.யின் டைட்டில் இசை தனி அனுபவத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை இப்படத்தை தேவி பேரடைஸில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கியது ராஜா. குறிப்பாக ரந்தாவா சண்டைக் காட்சியில் ஒவ்வொரு அடியும் அரங்கில் இடியாய் எதிரொலிக்கும். பிரம்மாண்டமான தியேட்டரில் ஒலி அமைப்பு அட்டகாசமாய் துல்லியமாய் ஒலிக்கும் போது பார்க்கும் அனுபவம் அலாதி.
ராஜா படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு குறிப்பிடத் தக்கது. பின்னணி இசை மிரட்டும். அதே போல் கண்களைக் கொண்டு வா பாடலைத் தியேட்டரில் கேட்கும் போது எல் ஆர் ஈஸ்வரியின் ஹஸ்கி குரல் நம் காதில் வந்து ரகசியமாய் சொல்லி விட்டுப் போவது போல் இருக்கும்.
நிச்சயமாக தேவி பேரடைஸில் ராஜா பாடத்தைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் தமிழகத்தின் வேறு எந்த திரையரங்கிலும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.
-
வாசு சார்
கோபாலின் ராஜா பதிவிற்கு தங்களுடைய பதில் பதிவுகள் சூப்பர்.
கார்த்திக் சார், சாரதி சார், சிவன் சார் மற்றும் நண்பர்களுக்கு,
ராஜா நம் அனைவரையும் எப்படி சுண்டி இழுக்கிறது பார்த்தீர்களா.
-
வாசு,
தூள் கிளப்பி விட்டாய். உன்னுடைய ஸ்டில் எல்லாமே அழகு. துணை பதிவுகள் உன் ரசனையின் உச்சம்.நீ வந்தாலே தனி களைதான்.
கார்த்திக் சார்,
உங்கள் பதிவு ,சாரதாவின் மீள் பதிவு எல்லாமே superb சாரதா எல்லா சிவாஜி ரசிகர்களாலும் நேசிக்க படுபவர். ஏன் இப்போது தலை காட்டுவதே இல்லை?
சாரதி,
ரொம்ப நாள் கழித்து. தொடர்ந்து பதிவிட்டு எங்களை குஷி படுத்துங்கள்.
ராகவேந்திரா ஐயா
உங்களுக்காக காத்திருக்கிறோம்.நீங்கள் ராஜாவை மகாராஜா ஆக்கி விட மாட்டீர்களா?
-
Quote:
Originally Posted by
raghavendra
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.
அதுவும் தேவி பேரடைஸில் எம்.எஸ்.வி.யின் டைட்டில் இசை தனி அனுபவத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை இப்படத்தை தேவி பேரடைஸில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கியது ராஜா. குறிப்பாக ரந்தாவா சண்டைக் காட்சியில் ஒவ்வொரு அடியும் அரங்கில் இடியாய் எதிரொலிக்கும். பிரம்மாண்டமான தியேட்டரில் ஒலி அமைப்பு அட்டகாசமாய் துல்லியமாய் ஒலிக்கும் போது பார்க்கும் அனுபவம் அலாதி.
ராஜா படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு குறிப்பிடத் தக்கது. பின்னணி இசை மிரட்டும். அதே போல் கண்களைக் கொண்டு வா பாடலைத் தியேட்டரில் கேட்கும் போது எல் ஆர் ஈஸ்வரியின் ஹஸ்கி குரல் நம் காதில் வந்து ரகசியமாய் சொல்லி விட்டுப் போவது போல் இருக்கும்.
நிச்சயமாக தேவி பேரடைஸில் ராஜா பாடத்தைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் தமிழகத்தின் வேறு எந்த திரையரங்கிலும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.
devi paradise- raja trailors--rajapicture- 26th even show- meeting with cvr-- aravarangal--aarpattangal--
marakkamudiyatha anubhavangal. Ninaithale inikkum.
-
Raja while we are discussing, Jaya TV is screening this film at 10 am on 18.09.2013
TV Schedule of NT's films this week
THIRUMAL PERUMAI – J MOVIES – 17.09.2013 – 6 AM
KALYANIYIN KANAVAN – J MOVIES - 19.09.2013 – 1 PM
RAJA – JAYA TV – 18.09.2013 – 10 AM
HARICHANDRA – 18.09.2013 – MURASU TV – 7.30 PM
ANBULLA APPA – 21.09.2013 – MURASU TV – 7.30 PM
NERMAI – POLIMER TV – 22.09.2013 – 2 PM
NATCHATHIRAM – RAJ DIGITAL PLUS – 17.09.2013 – 4 PM
THEERPPU – RAJ TV – 17.09.2013 –1.30 PM
SANTHIPPU – RAJ TV – 18.09.2013 –1.30 PM
NAAM IRUVAR – RAJ TV – 19.09.2013 –1.30 PM
SAVALE SAMALI – RAJ TV – 20.09.2013 –1.30 PM
SAADHANAI – RAJ TV – 21.09.2013 –1.30 PM
LAKSHMI VANTHACHU – ZEE TAMIZH – 17.09.2013 – 2.30 PM
AVAN THAN MANITHAN – ZEE TAMIZH – 19.09.2013 – 2.30 PM
-
Quote:
Originally Posted by
Gopal,S.
மிருதங்க சக்கரவர்த்தி மிக பெரிய வெற்றி படம். உமையாள்புரம் சிவராமன் சிவாஜியின் performance பற்றி மிக மிக சிலாகித்திருந்தார். அந்த இறுதி காட்சி ஒரு அபூர்வம். பல நாட்களாக மிருதங்கத்தை தொடாமல் விட்டவர் (சபதம் காரணமாய்) ,திடீரென்று போட்டியில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் அதுவும் முதிர்ந்த வயதில். மகனுடன் தோற்க கூடாது என்ற நிர்பந்தம். தொடர்ந்த பயிற்சியின்மை ,வயது முதிர்ச்சி, anxiety எல்லாம் சேர்ந்து அவரை மெனகெட வைப்பதாய் காட்சி. அவர் தாளத்தை வாயால் சொல்லி வாசிப்பார். சிவாஜியின் நடிப்பு மிக அர்த்தமுள்ளது.
ஆனந்த விகடன் ஒரு வருடன் விமர்சனத்தை நிறுத்தியது வேறொரு காரணம்.அதற்கும் ,மிருதங்க சக்ரவர்த்திக்கும் சம்பந்தமில்லை.
Gopal Sir,
You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.
Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !
Regards
-
Quote:
Originally Posted by
NTthreesixty Degree
Gopal Sir,
You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.
Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !
Regards
இந்த வகை நடிப்பை Astraud ஸ்கூல் என்பதில் வகை படுத்த படும்.உள்ளே இருக்கும் ஆத்மாவின் துடிப்பை முகத்தில் cruelty முறையில் வெளிபடுத்த படுவது.
இந்த படம் எனக்கு பிடித்தமில்லா விட்டாலும், சிவாஜியின் நடிப்பு மிக மிக துல்லியமான கதையோடு ஒட்டிய ஒன்றே. விமரிசனர்கள் என்று அந்த காலத்தில் இருந்தவர்கள் எதிலும் ஆழமாக சென்று ஆராயும் மனநிலை இல்லாத சராசரிகள்.
என்ன செய்வது?
ஏன்?சிவாஜி நினைத்திருந்தால் திருவிளையாடல் போல இலகுவாக வாசித்திருக்க முடியுமே? ஏன் அவர் அப்படி செய்யவில்லை என்று யோசிக்கும் அறிவு கூட இல்லாத மடையர்கள் விமரிசகர்களாய் உலவி கொண்டிருந்தனர். உண்மையான அறிவுள்ள என் போன்ற உண்மை விமரிசகர்கள் ,வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பொறியாளர்,மருத்துவர்,சி.ஏ என்று உரு மாறி ,இந்த மாதிரி போலிகளை விமரிசகர்கள் ஆக்கி விட்டோம் .என்ன செய்வது?
-
raja
ராகவேந்தர் சார் கோபால் சார் வாசு சார் கார்த்தி சார் முரளி சார் N T சார் மற்றும் எல்லா சார்களக்கும்
ராஜா சார் பற்றி எழதுவதற்கு தனி திரி ஒன்றை தொடங்கலாம்
அவ்வளவு விஷயம் உள்ளது.
ராஜா மற்றும் விஸ்வம் அறிமுகம் ஆகும் போலீஸ் லாக் up காட்சி ஓன்றே போதும் அந்த படத்தின் வெற்றியை குறிக்க
ராஜா ரம்பத்தை வைத்து கம்பியை உடைக்கும் காட்சி
அந்த வெள்ளை kaiidi போட்ட சிகப்பு கலர்
ஸ்லாசன்கேர் டென்னிஸ் ராக்கெட் பற்றி பேசும் காட்சி
விஸ்வம் தண்ணி அடிக்கும் காட்சி
சந்திரபாபு அடி வாங்கும் காட்சி
விஸ்வம் "வித் pleasure "
என்று அடி தொண்டையில் பேசும் காட்சி
பிறகு பாபுவை சந்திக்கும் போது "பாபு ராஜாவை நான் கொஞ்சமா நம்பினேன் கொஞ்சமா ஏமாந்தன் நீ முழுக்க நம்பிட்டே "
எந்த ஊரிலாவது 175 டேய்ஸ் உண்டா சார்
-
Krishnaji,
It crossed 50 Days in most of the release centres and ran for 100 days in Chennai,Madurai and Trichy. It was a smashing super-hit and created new record in Devi Paradise in collection breaking all previous ones.
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.
'ராஜா' பாட்டுப் புத்தகத்தின் முகப்பு அட்டையிலும், பல்வேறு செய்தித்தாள் விளம்பரங்களிலும் இடம்பெற்று, 'ராஜா' என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் இந்த அட்டகாசமான போஸ், படத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனது பெரிய ஏமாற்றமே. இந்த காட்சியை தவற விடக்கூடாது என்று, நடிகர்திலகம் - பாலாஜி இடையே நடக்கும் சண்டைக்காட்சியை கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருப்போம் . அப்படியும் அந்தக் காட்சி சட்டென்று கடந்து சென்று நம்மை வினாடியில் ஏமாற்றி விடும்....
-
Quote:
Originally Posted by
Gopal,S.
Krishnaji,
It crossed 50 Days in most of the release centres and ran for 100 days in Chennai,Madurai and Trichy. It was a smashing super-hit and created new record in Devi Paradise.
Not only at deviparadise and also at ROXY central madras created new records of collection till closing date.
-
'ராஜா' ரிலீஸ் (கடலூர் பிளாஷ்பேக்)
http://i1087.photobucket.com/albums/..._001255554.jpg
நம் ராஜா நடித்த 'ராஜா' கடலூர் நியூசினிமாவில் வெளியானது. அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அதாவது கடிலம் ஆற்றுப் பாலத்தின் இறககத்தில் அமைந்துள்ள பழமையான அரங்கு நியூசினிமா. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'ராஜா' ரிலீஸுக்கு முன்னால் வரை நியூசினிமா திரை அரங்கில் தரை மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் ஓப்பனாக இருக்கும். வெயில்,மழை இவற்றை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் மணிக்கணக்கில் கியூவில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டும். அரங்கு நிறைந்து விட்டால் அடுத்த ஷோவிற்கு கூட்டம் எங்கும் போகாமல் அப்படியே நின்றவாக்கிலேயே தொடரும். ஒருவரையொருவர் விடாமல் கைகளோடு அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே நுழைந்துவிடாத வகையில் நிற்பார்கள். தரை டிக்கெட் ஐம்பது காசுகள். பெஞ்ச் டிக்கெட் ரூபாய் 1.10. தியேட்டரின் மெயின் கேட்டிற்கு உள்ள நுழைந்தால் அங்கு first class மற்றும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நமக்கு வேலையே இல்லை. அதனால் தியேட்டர் நிர்வாகம் தரை பெஞ்ச் டிக்கெட் வாங்குபவர்களுக்காக வேண்டி roof உடன் கூடிய நீண்ட கவுண்டர் சுவர்களை 'ராஜா' படத்திற்காகவே புதிதாக ஸ்பெஷலாகக் கட்டியது. ராஜாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு மிக அதிகமாக எல்லோரையும் தொற்றிக்கொள்ள அதிகமாக பரபரப்பானது தியேட்டர் நிர்வாகம். கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன் தங்கராஜ் முதலியார் அவர்களின் கைவசம் தியேட்டர் இருந்தது. ராஜாவிற்காக திரையரங்கு ஓரளவிற்கு புதுப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது நான் மேலே குறிப்பிட்ட தரை டிக்கெட், மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுப்பதற்கான புது கவுண்ட்டர்கள் கட்டப்பட்டதுதான். தரை டிக்கெட் கவுண்டர்களை இரண்டு வளைவுகளாகச் சென்று திரும்பி டிக்கெட் எடுக்கும்படி கட்டியிருந்தார்கள். 26.01.1972 அன்று 'ராஜா' ரிலீஸ்.
ஆனால் கடலூர் சில விஷயங்களில் சாதனை படைத்தது. 'ராஜா' தமிழ்நாடெங்கும் 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ் என்றால் எங்கள் கடலூரில் 25-1-1972 அன்று அதாவது ஒரு தினம் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது. (இது போல எனக்குத் தெரிந்து கௌரவம்,வெள்ளை ரோஜா இரு படங்களும் ரிலீஸுக்கு முந்தின நாளே கடலூரில் வெளியாகி விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் கடலூர் நியூசினிமாவில்தான் ரிலீஸ் ஆயின) 'ராஜா' 25-1-1972 இரவு சிறப்பு ரசிகர் காட்சியாகத் திரையிடப்பட்டு விட்டது. அதனால் ரசிகர் மன்றத்தினர் அனைவரும் முன்தினம் இரவே ராஜாவைக் கண்டு களித்து விட்டனர். படத்தின் ரிசல்ட் 'ஓகோ'வென இருந்தது. ராமாபுரத்தில் இருந்து ரசிகர்கள் பலர் சைக்கிளில் கடலூர் சென்று ரசிகர் ஷோ பார்த்து விட்டு திரும்பி படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாள் (26.01.1972) காலை நான் அம்மாவுடன் பஸ்ஸில் கடலூர் நியூசினிமா சென்று விட்டேன். முதல் நான்கு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் என்று ஞாபகம். முன்தினம் பார்த்த ரசிகர்கள் அடுத்தநாளும் கடலூர் நோக்கி படையெடுத்தனர். படம் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி வேறு பரவி விட்டது. சென்னை சாந்தி தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த அதே தலைவரின் ஸ்டைல் கட் அவுட் தியேட்டரின் மெயின் கேட்டிற்கு மேலே ஏற்றப் பட்டிருந்தது. பிரம்மாண்டமான பஞ்சு மாலைகள் தலைவரின் கழுத்தை அலங்கரித்தன. தலைவரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ஸ்கார்ப் அப்படியே தத்ரூபமாக காற்றில் பறப்பது போன்றே இருந்தது. கடலூர் மெயின் சாலையில் தியேட்டர் அமைந்திருந்ததால் அனைவர் கண்களும் ராஜாவின் மீது. கட்டுக்கடங்காத கூட்டம். ஜனம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற குரல்கள்தான் எங்கும் எதிரொலிக்கின்றன. அன்று ஐந்து காட்சிகள். அப்போதெல்லாம் காலை ஒன்பது மணி காட்சிக்கு பெண்கள் அதிகமாக வரவே மாட்டார்கள். ஒரு பத்து பதினைந்து பெண்கள்தாம். அதனால் டிக்கெட் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். பெண்கள் டிக்கெட் ஆண்களுக்கு செல்லாது. சிறுவர்களுக்கு செல்லும். பெண்கள் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்து விட்டு பின் மீதி டிக்கெட்களை ஆண்களுக்கு கொடுத்து விடுவார்கள். நான் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். அரங்கின் வெளியே முழுக்க கொடிகளும், தோரணங்களுமாகவே தெரிந்தன. போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும். சமுத்திரம் போன்ற கட்டுக்கடங்காத ரசிகர்களை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறத் துவங்கியது. மணி சரியாக எட்டு இருக்கும்.
திடீரென்று ஒரே மேளதாள சப்தம். கூடவே வானவேடிக்கை வேறு. வெடிச் சப்தங்கள் காதைக் கிழிக்க ஒரு இளைஞர் பட்டாளம் தியேட்டரில் புயலெனப் புகுந்தது. ஒரு ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ஒரு வண்டியில் மூட்டைகளாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலே சிலர் வந்தனர், பின் மூட்டைகளை இறக்கி அவிழ்த்தனர். பார்த்தால் அவ்வளவு ஆப்பிள் பழங்கள். வந்த கோஷ்டி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. சிலர் கோணி ஊசிகளை எடுத்து ஆப்பிளின் உள்ளே செருக, சிலர் சணல் கொண்டு தைத்து ஆப்பிள்களை மிகப் பெரிய மாலையாக அரைமணி நேரத்தில் தொடுத்து விட்டனர். இப்போது பிரம்மாண்டமான ராட்சஷ ஆப்பிள் மாலை தயார். அதிர்வேட்டுகள் முழங்க தலைவரின் கட்-அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்டது. அப்போது இந்த அலங்காரமாலை எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. "ஆப்பிள் மாலை டோய்" என்று பலர் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்து விட்டது. தலைவரின் கட்-அவுட் மேலும் அழகுடன் பரிமளித்தது.
முதன் முதலில் ஒரு கட் அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்ட பெருமையை ராஜா பெற்றார். (இது கடலூர் சினிமா ரசிகர்கள் இன்றளவும் பெருமையாக பேசி மகிழும் விஷயம்) பின் ஒரே கூச்சலும் குழப்புமாகவே இருந்தது. நான் அம்மாவை விட்டு விட்டு வந்து இந்த வேடிக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ என்னை விட வில்லை. கூட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அவர்களுக்கு. நான் ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு வருகிறேன் என்று அடம் பிடித்து வந்து ஒரு இடத்தில் safe ஆக நின்று கொண்டேன்.
சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பதற்கான பெல் கொடுத்து விட்டார்கள். அவ்வளவுதான். கூட்டம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அதுவரை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக நின்றிருந்த கியூ கண்மண் தெரியாமல் சிதறியது. ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்து டிக்கெட் கவுண்ட்டரை நெருங்க முண்டியடித்தனர். போலீஸ்கார்களால் சமாளிக்க முடியாமல் லத்தியைக் கையில் எடுத்து கண்ட மேனிக்கு சுழற்ற ஆரம்பித்து விட்டனர். ஒரே அடிதடி. துணி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் டிக்கெட் எடுக்க சில பேர் தாவிக் குதித்தனர். நிற்பவர்கள் தலை மேல் கால்வைத்து பலர் ஓடினர். கீழே இருப்பவர்கள் வலி தாங்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தனர்.
அப்போதுதான் கட்டியிருந்த புதிய கவுண்ட்டர் சுவர் சரியாகக் காயாமல் வேறு இருந்ததால் நெரிசலின் காரணமாக அப்படியே பெயர்த்துக் கொண்டு இடிந்து விழுந்தது. சிலருக்கு நல்ல காயம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இதையெல்லாம் கண்டு மிரண்டு போன நான் பயந்து போய் அம்மாவிடம் ஓடி வந்து விட்டேன். அம்மா அதற்குள் டிக்கெட் எடுத்து விட்டார்கள். பெண்கள் கவுண்ட்டரை சுற்றி பயங்கரமான ஆண்கள் கூட்டம் டிக்கெட்டுக்காக வெயிட் செய்தது. (கவுண்ட்டர் சுவர் முதன் முதல் கூட்ட நெரிசலால் இடிந்து உடைந்து விழுந்த பெருமையும் ராஜாவிற்கே சொந்தம்)
இதற்குள் டிக்கெட் எடுக்காத ஒரு கூட்டம் மெயின் கேட்டின் மேல் ஏறித் தாவி குதிக்க வேறு ஆரம்பித்து விட்டது. தியேட்டர் ஊழியர்கள் ஆளுக்கொரு கழியை எடுத்துக் கொண்டு இரும்பு கேட்டின் மேல் ஏறிக் குதிப்பவர்களை வாங்கு வாங்குவென்று வாங்கினர். அதில் சிலர் அவர்களிடமிருந்தே கழியைப் பிடுங்கி தியேட்டர் சிப்பந்திகளை பதம் பார்த்தனர். யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா மிகவும் மிரண்டு போய் என் கையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெண்கள் அமரும் இருக்கைக்கு சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் கூக்குரலிட்டு விசிலடித்தபடி பலர் தரை டிக்கெட்டுக்கான சாயும் வசதிகள் இல்லாத மூட்டைப் பூச்சிகளின் மூர்க்கத்தனமான கடிகள் கொண்ட மொட்டை பெஞ்ச்களில் தங்கள் நண்பர்களுக்காக துண்டுகளை விரித்து இடம் போட்டனர். வேறு யாராவது வந்து உட்கார்ந்தால் மவன் தொலைந்தான்.
படம் போட்டதும் கடலின் பேரிரைச்சல் போல அப்படி ஒரு இரைச்சல். தலைவரின் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கூடை கூடையாய் பூக்களின் உதிரிகள் பறக்கின்றன. விசில் ஒலிகளும், கைத்தட்டல்களும் காதைக் கிழித்தன. தியேட்டர் முழுதும் ஒரே ஜனக்கடலாகக் காட்சியளித்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவிற்கு நின்றவாறே பலர் நம் ராஜாவின் ஸ்டைல் ரகளைகளைக் கண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ரந்தாவாவுடனான அந்த ஈடுஇணையில்லாத சண்டைக்காட்சியின் போது முன் இருக்கைகளை எட்டி உதைத்து சிதைத்து ரசிகர்கள் காட்டிய உற்சாக மிகுதியின் மகிழ்வான உணர்வுகளின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தலைவரின் நடிப்பைப் போல. அதற்குப் பிறகு உள்ளே நடந்த அமர்க்களத்தை சொல்லவும் வேண்டுமா?! படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வழங்கப்பட்டது. (இதுவும் ஒரு சாதனை) காலை ஒன்பது மணி காட்சி முடிந்து திரும்பும்போது நண்பகல் 12 மணி காட்சிக்கு காலையில் இருந்தது போல இருமடங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டு நின்றது.
கடலூர் நியூசினிமாவில் ஒரு மாதத்துக்கு ஓடி வசூலில் தன்னிகரில்லா சாதனையைப் படைத்தார் ராஜா. பிறகு மறு வெளியீடுகளிலும் கடலூரில் ராஜாவின் சாதனை எவரும் விஞ்ச முடியாதது.
'ராஜா' நினைவலைகளை தட்டி எழுப்பிய என்னருமை கோபால் சாருக்கு நன்றி.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
-
Quote:
Originally Posted by
Gopal,S.
Both are nice roles of sivaji and he handled them very differently in his unique way of execution. We will take it up for sure. But my humble request is that regular hubber like you can do it for our pleasure.
sir, naan orathula ninnu intha phd. literature level thesis lam enjoy pannitu irukkaravan.....ennai poi kindal panreengale :)... namakku comment adikkathan theriyum........ detailed ah athuvum interesting ah (especially when there is something special) narrate panna theriyaathu :)
-
-
வாசு,
அந்த BATIK என்ற வகை படும் டிசைன் கொண்ட ஆரம்ப காட்சி ஜெர்கின் தலைவரின் மீது எவ்வளவு அழகாக உள்ளது!!!!
உங்கள் கடலூர் நியூ சினிமா அனுபவம் எனக்கு relate பண்ண கூடியது.நான் நியூ சினிமாவில் 1965 முதல் 1979 வரை படங்கள் பார்த்துள்ளேன்.(கடைசி படம் உதிரி பூக்கள்) உங்கள் அனுபவங்கள் நீங்கள் எழுதும் முறை உங்களை தேர்ந்த எழுத்தாளாராக காட்டுகிறது. நீங்கள் உங்கள் சிறு வயது அனுபவங்களை தொகுத்து சிறிதே ஒரு larger objective சேர்த்து அழகான நாவல் ஒன்று எழுதலாம். ஒரு copy இன்றே புக் செய்கிறேன்.
-
Following is the 'Release-Mela' celeberations of the Great RAJA at Madurai Central theatre, narrated by our Murali Srinivas sir, re-prodeuced here from previous part, due to Raja Fever now...
Now, over to our Murali sir.....
அந்த நாள் ஞாபகம்
ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
(Thank you Murali sir)...
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
Raja while we are discussing, Jaya TV is screening this film at 10 am on 18.09.2013
[/size][/color][/b]
தகவலுக்கு நன்றி ராகவேந்தர் சார்!
நிச்சயமாக பார்த்துவிடுவேன் .
ஆனால் எத்தனாவது தடவை என்பது
எனக்கும் என் மனசுக்கும் மட்டும்தான் தெரியும்!
-
ஆஹா... ஆஹாஹா .....
பம்மலார் இல்லாத குறையை ராகவேந்தர் மீள்பதிவிட்டு தீர்க்கிறார் என்றால், முரளி,சாரதா இல்லாத குறையை மீள்பதிவிட்டு தீர்க்கிறார் கார்த்திக்.
இருவருக்குமே நன்றி.
(எனக்குத்தான் இந்த மாதிரி யாருமே அமையவில்லை. நானே எனக்கு மீள்பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.)
-
Quote:
Originally Posted by
Gopal,S.
ஆஹா... ஆஹாஹா .....
பம்மலார் இல்லாத குறையை ராகவேந்தர் மீள்பதிவிட்டு தீர்க்கிறார் என்றால், முரளி,சாரதா இல்லாத குறையை மீள்பதிவிட்டு தீர்க்கிறார் கார்த்திக்.
இருவருக்குமே நன்றி.
எங்களை பதிவுகளைவிட்டு மீளா வகையில் அமைந்துள்ள மீள் பதிவுகளை அளிக்கும் நண்பர்களுக்கு நன்றி. (தங்களுக்கும்தான் கோபால் சார்.)
-
Rishimoolam (another 1980's super hit NTmovie) photos
-
வாசுதேவன் சார்,
நீண்ட நாட்களுக்குப்பின் வந்த என்னை நியூ சினிமா திரை அரங்கைப்பற்றி எழுதி என் இளமைக்காலங்களை நினைவு படுத்தி என்னையும் எழுத வைத்துவிட்டீர்கள். நான் 1978-களின் பிந்தியில் வந்து கடலூரில் குடி கொண்டவன். நாங்கள் குடியிருந்ததோ புதுப்பாளையம் என்னும் பகுதி - நியூ சினிமா-விர்க்கு அருகில் இருந்த பகுதி. அதிகமான திரைப் படங்களை குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை இங்கேதான் பார்த்திருக்கிறேன். ரிஷிமூலம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்கள் துவங்கி. (ராஜா திரைப்படம் - நான் மிகச்சிறுவனாக இருந்த காலத்தில் வந்ததால், அதன் வெளியீடு காலத்தைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. பின்னர் ஒருமுறை திண்டுக்கல் அருகே ஒரு திரை அரங்கில் என் உறவினர்களோடு பார்த்திருக்கிறேன்.) நடிகர் திலகத்தின் பழைய திரைப்படங்கள் நியூ சினிமா-வில் திரையிடப்படும் போதெல்லாம் நீங்கள் சொல்கின்ற (பலே பாண்டியா, அமர தீபம், தெய்வ மகன், சிவந்த மண், ஆலய மணி, ...) உற்சாக கொண்டாட்டங்களை கண்டிருக்கிறேன். ஏன் பழைய படம் பார்ப்பதற்க்கு இப்பிடி அடிதடியா என்று மனதிர்க்குள் ஒருபக்கம் வைதுகொண்டே, ஒரு பக்கம் பெருமைப் பட்டுக்கொண்டும் செல்லுவோம். நீங்கள் சொல்கின்ற அதே ரூ. 0.50 மற்றும் ரூ.1.10 டிக்கெட்-களில் நானும் பல படங்களை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் சில படங்களை 50 பைசா டிக்கெட்டில் பார்த்துவிட்டு, அதன் இருட்டு இரட்டை சந்துகளில் செல்வதற்கு பயந்து (அதற்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது) பின்னர் எப்போதும் உயர் வகுப்பு டிக்கெட்-களையே (அதிகமாக ரூ.1.10) எடுத்துக்கொண்டு படம் பார்த்திருக்கிறேன். ஆக பல வருடங்களாக டிக்கெட் விலைகளில் மாற்றம் இல்லாமலேயே இருந்திருக்கிறது. அப்புறம் நீங்கள் சொல்கின்ற புது படங்களில் வெள்ளை ரோஜாவை ரிலீஸ் அன்று (ஒரு தீபாவளி அன்று) மாலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். நான் கடலூர் வந்த புதிதில் கோபால் சார் சொல்கின்ற உதிரிப்பூக்கள் படத்தையும் இங்குதான் பார்த்திருக்கிறேன். உங்கள், கார்த்திக் சார், கோபால் சார், ராகவேந்திரா சார் மற்றும் முரளி சாரின் பழைய அனுபவங்கள் எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகளை அசை போட வைக்கின்றன. நானும் கடலூரான் ஆகிபோனதினால் உங்கள் அனுபவம் என்னை அசைத்து போடுகின்றன.
மற்றபடி நீங்கள் சிறிய ஓய்விர்க்குபிறகு திரும்ப வந்து உங்களது தொடர்களாகிய நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள், ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் மற்றும் நாயகியர் தொடர்களை தொடர்வது கண்டு மிக மகிழ்ச்சி. சொல்ல மறந்துவிட்டேன் ... பாடலியில் வெற்றிக்கு ஒருவன் - நானும் அங்கேதான் பார்த்திருக்கிறேன். (எங்கள் வீட்டு சிறுகுழந்தை எங்களோடு பார்த்து விட்டு அந்த படத்தை வெற்றிக்குறவன் என்று மழலையாக சொல்லிக்கொண்டிருந்தது வேறு விஷயம்.) அப்போது நடிகர் திலகத்திர்க்கு ஸ்ரீப்ரியா ஜோடியாக அதிகமான படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
-
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது மீள்பதிவு அல்ல. என்னுடைய சொந்த (புதிய) பதிவு...
'ராஜா’வில் 'தாரா' (பத்மாகன்னா)
நான் முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல, ராஜாவில் பத்மா கன்னா ஏற்றிருந்த தாரா ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன். முதன்முதல் ராஜா பார்த்தபோது, வில்லனின் கூட்டத்தில் ஒருவனைக் காதலிப்பதால் அந்தக்கூட்டத்தில் ஒருத்தியோ என்று தோன்றியது. ஆனால் போகப்போக எவ்வளவு நல்லமனம் படைத்தவள் என்று தெரிகிறது. வில்லன் கூட்டத்தில் இருந்துகொண்டு சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்து வரும் காதலன் குமாரை (பயில்வான் ரந்தாவா) தன் காதலை மையமாக வைத்து நல்வழிப்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்ற அவளது ஆசை கிட்டத்தட்ட கைக்கெட்டும் தூரத்தில் வரும்போது ராஜாவின் தலையீட்டால் தவிடு பொடியாகிறது. பெரிய பாஸுக்கும் (ரங்கராவ்), சின்ன பாஸுக்கும் (பாலாஜி) கூட தான் தப்பி ஓடும் திட்டம் தெரியாமலிருக்க, குமாரைப் பின்தொடர்ந்த ராஜாவால் சின்ன பாஸ் பாபுவுக்கும், பின்னர் பாபு மூலம் பெரிய பாஸ் தர்மலிங்கம் (என்கிற நாகலிங்கத்துக்கும்) தெரிய வர அவள் வாழ்க்கையே திசை மாறிப்போகிறது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூர் நோக்கிப் பறக்கப் போகிறோம் என்ற ஆவலுடன் 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே' என்று கேட்க, அதற்கு குமார் 'நேரமில்லை தாரா. மாட்டினால் என்ன தண்டனை தெரியுமா?' என்று கேட்க, 'மரண தண்டனை' என்ற பதிலுடன் கண்ணாடிக்கதவை உடைத்து தாழ்ப்பாளை திறக்கும் பாபு (பாலாஜி)யைக் கண்டதும், 'ஐயோ வந்துட்டான்களே' என்ற மிரட்சி கண்களில் தெரிய, (நமக்கு 'ஐயோ பாவம குழந்தை' என்ற பரிதாபம் ஏற்படும்) குமார் பாபுவுடன் சண்டையிடும்போது தாராவும் தன் பங்குக்கு உதவுவாள்.
வந்திருப்பவன் பாபு மட்டும்தான் என நினைத்து அவனை அடித்து வீழ்த்தி விட்டு, பணப்பையுடன் புறப்படும்போது திடீரென்று வாசலில் ராஜா தோன்ற மீண்டும் அதிர்ச்சி. அப்புறம்தான் அந்த ஹை-லைட்டான சண்டைக்காட்சி. அதற்கு முன்னதாக சிகரெட்டை கீழே போட்டு அணைப்பதும், 'அன்னைக்கு கொடுத்தியே ஞாபகம் இருக்கா? நான் யார் கிட்டேயும் கடன் வச்சுக்கிரதில்லே' என்ற வசனத்தோடு குமார் முகத்தில் பஞ்ச் விடுவதும், அதனை தொடர்ந்து மோதிரத்தை வாயால் ஊதியவாறு தாராவைப்பர்த்து 'எக்ஸ்கியுஸ் மி மேம்' என்றவாறு ஸ்டைலாகப் படியிறங்கி குமாரை நோக்கிப் போவதும் கைதட்டலை அள்ளும்.
சண்டையிட்டு குமாரைப் பிடித்தாகி விட்டது. (தலைவரின் இருப்பிடத்தை ராஜா தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக, தன்னைப்பின் தொடராமல் இருக்க, இன்னொரு காரை துப்பாக்கியால் சுட்டு பஞ்சராக்கி விட்டு 'வந்தவழியே நடந்துபோ' என்று சொல்லும் இரக்கமில்லாத சின்ன பாஸ்), துப்பாக்கி முனையில் பெரிய பாஸ்இடமும் கொண்டு சென்றாகிவிட்டது. கருணையில்லாத பாஸ், தன் காதலனுக்கு மரண தண்டனைதான் அளிப்பார் என்று தெரியும். இருந்தும் தன் காதலனை உயிரோடு விட்டால் போதும் என்று தன்னையே விலையாகப் பேசுகிறாள். தன்னை அவள் அழகுக்கு அடிமைப்படுத்தி விட்டால் காதலனுக்கு விடுதலை அளிப்பதாக கூறும் பாஸின் வார்த்தையை நம்பி, பாடிக்கொண்டே (முகத்தைத்தவிர வெளிக்காட்டாத) தன் உடலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த, படிப்படியாக அவள் அழகுக்கு அடிமையாகும் பாஸ். ('கண்களை கொண்டு வா' பாடலில் ‘பாஸ்’ ரங்கராவ் நடிப்பு சூப்பர்). தன் காதலனை பாஸ் நிஜமாகவே விடுதலை செய்யச் சொல்கிறார் என்று நம்பி 'என்னை மன்னிச்சுடு குமார்' என்று மன்றாடும் தாரா.
கோயில் கொள்ளையை வெற்றிகரமாக முடித்ததற்காக பாஸை சந்திக்க பாபு ராஜாவை அழைத்துச்செல்ல, அங்கே தாராவைப் பார்க்கும் ராஜாவுக்கு அதிர்ச்சி. 'இவள் குமாரின் காதலியல்லவா?. இங்கே எப்படி?' என்பது போல பாபுவைப்பார்க்க, 'நடந்ததை அப்புறம் சொல்கிறேன்' என்று பாபுவும் கண் ஜாடையில் உணர்த்துகிறான். அதே நேரம் ராஜாவை தாரா பார்க்கும் பார்வையில் 'என்னுடைய இந்த நிலைமைக்கு நீயும் ஒரு காரணமல்லவா' என்ற ஏளனம் தென்படும் (முக்கிய காரணமே அவர்தான் என்பது நமக்கு மட்டுமே தெரியும்). எல்லாம் பார்வைப் பரிமாற்றங்கள் மட்டுமே. (பின்னே பக்கத்தில் பெரிய பாஸ் இருக்கிறாரே) . ஆனால் அப்போதும் கூட தன் காதலன் குமார் எங்கோ உயிருடன் இருக்கிறான் என்றே தாரா நம்பிக்கொண்டிருக்கிறாள்.. பாவம.
மீண்டும் தாரா வருவது அவளது இறுதிக்காட்சியில்தான். லம்பாடி வேடத்தில் வந்து பெரிய பாஸிடம் மாட்டிக்கொள்ளும் ராதா (ஜெயலலிதா)விடம் பாஸ் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும் தாரா, அவளுக்கு அந்த இருப்பிடத்தைக் கட்டிக்கொடுத்தது யார் என்று விசாரிக்கும்போது, 'நிச்சயம் குமாராயிருக்க முடியாது, ஏன்னா, அவனை எப்பவோ கொன்னுட்டேன்' என்று சொல்ல அதிர்ச்சியடையும் தாரா, துப்பாக்கி முனையில் ராதாவை விடுவிக்கிறாள். ஆனால் குமாரின் முடிவை நினைத்து கண்கலங்கி நிற்கும் கணத்தில் பாஸ் துப்பாக்கியைப் பிடுங்கி தாராவை சுட பரிதாபமாக உயிரை விடுகிறாள்.
(இவ்வளவு அற்புதமான துப்பறியும் படத்தில் அனாவசிய சாவுகள் இல்லை. அனைவரும் உயிருடனேயே பிடிக்கப்படுகிறார்கள். மூன்றே மரணங்கள் துவக்கத்தில் இன்ஸ்பெக்டர் சங்கர், பின்னர் குமார், அப்புறம் தாரா).
எப்போது 'ராஜா' வைப் பார்த்தாலும் தாரா (பத்மாகன்னா) வின் மரணத்துக்கு என் இருசொட்டு கண்ணீர் உண்டு....
-
Quote:
Originally Posted by
vasudevan31355
டியர் கார்த்திக் சார்,
நன்றி!ஆனால் இந்த சிறிய பதிவுக்கு மூல காரணாமாய் இருந்த கோல்ட் ஸ்டாருக்கும், அட்டகாசமான தங்களுக்கே உரித்தான பாணியில் 'வெற்றிக்கு ஒருவன்' பதிவைத் தந்து கடலூர் நினைவுகளை பின்னோக்கிப் பார்க்க வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! தங்களின் ஜோரான வெற்றிக்கு ஒருவனுக்கு என்னுடைய சிறிய பரிசு.
Thank you Vasu and Karthik sir. I am glad and happy that my small effort of "Vettrru Oruvan" stills made to write about VO details and its always make more happy and complete satisfaction when ever Karthik sir write about his Chennai theater experience of NT movies as his style is very unique and we cannot get these details any where.
Karthik sir, I will keep publish NT's 1980 movies and you please keep write about these movies and make us happy and soak us in happy moods for days to come.
Cheers,
Sathish
-
Wow Raja all the way
Vasu sir cuddalore experience, Karthik sir's, பத்மாகன்னா write up, (special claps) and Gopal sir
big thanks to all
But I could not write as Iam in outstation audit for 2 weeks(still one week to go) ,I cannot control my excitement so typing from mobile phone
Dear Gopal sir,
I will defnitely write about Thooku tookhi , its a great honour that a senior like you asking to write
Vasu sir,
Your series on dreesing sense of NT in thuli visham, superb- saw from my mobile phone
-
Dear friends,I also come across the same situation with my close friends.recently I told them that in a temple function to do abhisekam,lot of people will bring milk,few intellectuals like those who comment NT will bring water and think that abisekam will be only of water.But they don't understand that when many people pour milk,the water mixes with it and become invisible.like that a few pouring bad comments will get mixed in the praise poured by lakhs of fans.So let us not mind them.Thanks/Regards
Quote:
Originally Posted by
NTthreesixty Degree
Gopal Sir,
You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.
Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !
Regards
-
டியர் கார்த்திக் சார்,
ராஜாவுக்கு தாங்கள் அளித்துள்ள அழகிய பின்னூட்டங்கள் ஆகட்டும்... பத்மாகன்னா பற்றிய பரிதாபப்பட வைக்கும் பதிவாகட்டும் மிக மிகச் சிறப்பு. மிகுந்த ரசனையுடன் வர்ணித்திருக்கிறீர்கள். பாலாஜியுடன் வில்லனின் கோட்டைக்கு முதன் முதல் நுழையும் ராஜா ரங்காராவிடம் பாலாஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அங்கு வில்லனுக்கு விஸ்கி கொண்டு வரும் பரிதாபத்துக்குரிய அந்த தாராவைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஐயோ! இந்தப் பெண் எப்படி இங்கு வந்து மாட்டினாள்? என்று ஒரு செகண்ட் குற்ற உணர்ச்சியில் தாராவை நோக்குவார் நடிகர் திலகம். அதில் பரிதாபமும், பச்சாதாபமும் தெரியும். அதே சமயம் பாலாஜியிடம் என்ன இது என்பது போல ஒரு முறை முறைப்பார். இதற்கே தாராவை ஒரே முறைதான் சந்தித்திருப்பார் ராஜா. அதுவும் தாரா தன் காதலனின் உயிருக்காக வேண்டி, அவளுடைய ஜோடிப்பறவை சுட்டு வீழ்த்தப்பட்டது தெரியாமலேயே கொத்தடிமை போல வில்லனின் போகப் பொருளாகி, அவனுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுக்கும் வேலைக்காரியாய் அவள் இருக்கும் போது அவள் மேல் பரிதாபம் ஏற்படாமல் என்ன செய்யும்?
ராஜாவின் அட்டகாசங்களில் தாராவை மறக்காமல் அவள் நினைவை தங்கள் பதிவின் மூலம் இங்கே நினைக்கச் செய்ததற்கு நன்றி!
திரையுலகம் காணாத சிறு அழகுப் புதுக் கவிதை. வில்லன் கையாளின் கவிதைக் காதல். ஆனால் அமரத்துவம் நிறைந்தது. போலீஸ் திருடன் சண்டைகளுக்கு மத்தியில் மனதை நோகச் செய்த மயிலிறகுக் காதல்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி! முகநூல் நண்பர் மூலமாக நவராத்திரி படம் திரையரங்கில் நடைபெறுவது போலவும், அங்கு ஷூட்டிங் நடை பெறுவதாகவும் தாங்கள் அளித்துள்ள பதிவு உள்ளத்தை உவகையுறச் செய்தது. நிஜமாகவே நவராத்திரி படம் ஓடுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அருமையான தலைவர் கட் அவுட், மாலை, பேனர்கள் என்று தூள் கிளப்பியுள்ளார்கள். வித்தியாசமான பதிவும் கூட. மிக மிக ரசித்தேன். தங்களுக்கும், முகநூல் நண்பருக்கும் மனமார்ந்த நன்றி!
-
Quote:
Originally Posted by
rsubras
Reproducing for everybody's benefit - Courtesy Mr.RS
'I have lost my brother'
S Balaji
The father-in-law of Malayalam superstar, Mohanlal, Balaji has the distinction of producing the maximum number of Sivaji films and acting as Sivaji’s brother in many films.
"With his death, I lost my own brother,” said Balaji, his eyes moist:
I still remember I had to stand in a queue for two days to get a ticket of Sivaji’s first film, Parasakthi. He was amazing in the film. People talked only about him those days. He was a craze in Tamil Nadu.
At the time, I was working as a production assistant at Narasu’s Studio. When I heard that my boss Narasu had booked Sivaji for A S A Swamy's Thulivisham, my happiness knew no bounds. Ever since I saw Parasakthi, I was eager to meet him.
When Sivaji came to the studio, Narasu introduced us. What I liked most about him was that he did not behave like a star. When he came to know I was also interested in acting, he asked the director to give me a role too. That's how I got a small role in the film. It was another matter that only one scene of mine escaped the editor’s scissors.
Even though he had become a major star acting in all the major production companies, Sivaji was extremely friendly with everyone.
Whatever I have achieved in life is thanks to three people: my schoolmaster S S Subbaraman (who made me act in school dramas), Gemini Ganesan (who introduced me to films and is like a godfather to me), and Sivaji Ganesan. Gemini Ganesan had given me a chance to act in Avvayyar in 1950.
In 1952, I was introduced to Sivaji.
He and I were not in touch between 1954 and 1960. In 1960, Gemini was to act as Sivaji’s brother in Padithal Mattum Potuma, but was not very keen on it. So he asked me to step in. When he introduced me to Sivaji after a gap of six years, Sivaji said, "As if I do not know Balaji! I know him very well!"
My role in the film was a major one, and the film became a huge hit in Tamil Nadu. Afterwards, Sivaji started recommending me if there was a second role in any of his films.
That was the beginning of our friendship. It strengthened further when I started producing my own films.
I made my first film in 1965 with Gemini Ganesan. It was my way of thanking him and showing my gratitude.
My second film was Thangai with Sivaji. Do you know how I signed him? One day I met him at Gemini studios and said, "Annai, I am producing a film and you should act in it."
Immediately, he brushed me aside, saying, "Poda, you a producer? You must be joking!"
He did not believe me. But when he realised that I was serious about making a film, without even batting his eyes, he said, “Get a good story and a director, and I'm in!"
The funniest thing was that Thangai was an action film. Sivaji was known as an emotional hero. It was M G Ramachandran who did all the fights in his films.
Sivaji was very skeptical about the action scenes. But I assured him the film would give him a new image. He agreed reluctantly. He was so sure that people would not accept him as a fighting hero.
Fortunately, the film was Ame a big success! Till then, only MGR was applauded when he fought, but with Thangai, Sivaji also started getting credit for his fight scenes. After that, every film of his had at least one fight!
As an actor, he was phenomenal. He would ask me whether he had performed well after each shot. Was it necessary for a person of his stature to ask me that question? Still, he wanted assurance from the producer.
Sometimes I used to say, "No, that was not good. We will have one more take."
Immediately, he would say, “Balaji didn’t like the shot. Let me do it again." He wanted everything to be perfect.
I am also a perfectionist. That was why he liked me as a producer. All the 16 films that we made together were successes. He used to do two films a year for me, while other producers had to wait for years to get his dates. That was not because he considered me his friend or a brother; it was only because I am a disciplined and meticulous filmmaker.
Later, I made films with Kamal Haasan and Rajnikanth. That did not affect our friendship. He knew I am a producer and I had to make films. He was very understanding and open-hearted. Soon, I stopped production because of ill health. He, too, stopped acting.
The beauty of our relationship is that it went beyond films and production. Whenever he passed my house, he would drop in. The truth was he just couldn’t pass by without coming home. I would also visit him regularly.
We are on poda-vada (informal) terms! He was a very reserved person, and friendly, too. He was one of my closest friends. We were always there for each other. He was by my side when my wife passed away. He took control of the situation and saw to it that everything was done properly.
Whenever he introduced me to some overseas dignitary, he would say, "Meet Balaji, my boss." The moment they left, he would tell me, “Now, don’t think too much of yourself just because I called you my boss."
I never thought that he would leave this world so soon.
Just two days before his death, I met him at the hospital. He was reluctant to get up. Then his wife said, “Your friend has come. Won’t you get up?”
He just looked at me and said, “I can’t, my friend.” I felt very bad. To cheer him, I said, "Annai, you are okay and you are getting up and talking to me."
He asked the nurse to prop the bed, and the first thing he asked me was, “Did you drive?” He knew I always drove my vehicle, and he objected to me driving after my two kidney transplants. That day, we talked for a very long time about the good old days.
I used to pick him up every day when he was shooting for my films -- I enjoy driving and he enjoyed sitting in the car when I drove!
I still remember once we were going to shoot the film Neethi in Mysore. We flew from Madras to Mysore and my car was waiting for us at the airport. As usual, I drove. Sivaji's wife was also there.
Suddenly one of the tyres got punctured. I was really worried. It was 2000 hrs, not a soul visible anywhere. In the car was one of the top actors and it was dark everywhere but Sivaji was calmness personified.
He got out and took the stepney and changed the tyre himself. Imagine Sivaji Ganesan changing a car tyre. Later, I used to tease him about it.
Of late, we used to talk only about the old times. During rainy days, he would call me for a drive and we would drive to the beach. We loved drinking gin mixed with tender coconut water when it rained.
Two months back ago, he called me and said it's been a long time we enjoyed the rain together.
What more can I say, with his passing away, I have lost my brother.
As told to Shobha Warrier
-
Hi everybody. I am a small drop in the ocean of NT fans.
I am too impressed by gopal and vasudevan write ups.
So many other shares of karthik, raghavendran etc no words to say enough thanks.
Each post is a Thesis enough.
This post is just to say, I LOVE SHIVAJI a lot, but I am not a blind fan who says whatever he did is to my liking. I am like a child who would say "dad what u did is wrong" or a devotee who would question my deity.
To me mruthanga chakravarthy was too much to digest, I used to not like shivaji sir's performance in that song. Seriously gopal's write up on how the MIND of an old man, who is otherwise not too vibrant to keep up the competition, who lost touch, who is remembering how to do it by sayiang the jathi himself, who is worried about nothing of his body language just the tune of mruthangam.
gopal, u hit the nail. I should say i would look at this song with a new understanding now. Same goes to vasudevan's gnaana oli, its my fav movie too, but the way u loved it, u described it, make us yearn to watch all again.
I am reading all of u. Thankyou. keep up.
-
சக்திப்ரபா
வெகு நாட்களாயிற்று தங்கள் பதிவுகளைப் பார்த்து. இது கனவா நனவா என்கிற ஐயப்பாடே வந்து விட்டது போல மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் வரவு புத்துணர்வூட்டுகிறது. தங்களுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் மிருதங்க சக்கரவர்த்தி படத்தைப் பற்றிய அபிப்ராயம் ஒன்று விழுந்து விட்டது. இக்காட்சியமைப்பு, இது படமாக்கப் பட்ட விதம் போன்றவை நிச்சயம் இந்த ஐயத்தையும் தவறான அபிப்ராயத்தையும் போக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இதே மிருதங்கத்தை இளைய வயதில், கே.ஆர்.விஜயாவின் பக்க வாத்தியமாக வாசிக்கும் பொழுது அவருடைய நடிப்பை கவனித்தீர்களானால் தங்களுக்கு அந்தப் பாத்திரத்தின் தன்மை விளங்கும். கவலை அறியாத வயது, வேகம் போன்றவை அப்பாத்திரத்தில் பிரதிபலிப்பதோடு அவருடைய வாசிப்பிலும் அது தெரியும். தாளங்களுக்கு கைகளின் வேகம் ஒரே அளவுதான் என்றாலும் அதை வாசிக்கும் போது உடல் நலம் முக்கிய பங்கு வகிக்கும். ஒரே வித்வான் இள வயதில் வாசிப்பதற்கும் வயோதிகத்தில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கொண்டோமானால் அப்போது அந்த வித்தியாசத்தை நன்கு உணரலாம். வயதாக ஆக அந்த வாத்தியம் அவர் சொல்வதைக் கேட்கும் ஜீவனாக மாறி விடுகிறது, ஒரு ஆளுமை வந்து விடுகிறது. அந்த ஆளுமையின் வேகத்திற்கும் வயோதிகத்தின் இயலாமைக்கும் இடையே அவருடைய சுயமரியாதையும் தன் பங்கிற்கு அந்த மனிதருக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சவாலில் ஜெயிக்க வேண்டும், அதுவும் மோதுவது தன் மகனே என்கிற போது தன்னை மறந்த ஒரு ஆளுகை அவருக்குள் ஏற்பட்டு அது அந்த வாசிப்பில் பிரதிபலிக்கிறது. இத்தனை உணர்வுகளைக் கொண்டு உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு அவர் வாசிக்கும் போது தன்னையறியாமல் அவருடைய வாய் முணுமுணுத்துக் கொண்டே, அந்த தாளத்தோடு பயணிக்கிறது.
இதனைத் தான் இந்த படத்தில் நடிகர் திலகம் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்தப் பாடலில் வெறும் மிருதங்கம் வாசிப்பதோடு நில்லாமல் அந்தப் பாத்திரத்தின் அத்தனை உள்ளுணர்வுகளையும் கொண்டு வரவேண்டும்.
இதையெல்லாம் படப்பிடிப்பு சமயத்தில் நேரிலேயே நாங்கள் கண்டு பிரமித்து நின்றது நிஜம். அதுவும் இந்த இறுதிக் கட்ட காட்சியின் படப்பிடிப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலையரங்கில் கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களுக்கு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகளாக அந்தப் படப்பிடிப்பைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றோம். கர்நாடக சங்கிதத்தில் மிருதங்கத்தில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் நடிகர் திலகத்தின் வாசிப்பினை ஒவ்வொரு நுணுக்கமும் தவற விடாமல் செய்ததைக் கண்டு வியந்து நின்றார்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் அவர்களைக் கேட்டுக் கொண்டே தன் நடிப்பைத் தொடர்ந்தார் நடிகர் திலகம்.
ஏராளமான ரசிகர்கள் சாட்சியாக பாத்திரத்தின் தன்மைக்கு கடுகளவு ஊறு கூட நேர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்துப் பார்த்து எடுக்கப் பட்ட காட்சி இது.
இளம் வயதில் சுகமான ராகங்களே பாடலுக்கு மிருதங்கம் வாசிக்கும் காட்சி
http://youtu.be/Y5xxzt_zxH0
க்ளைமேக்ஸ் சவால் காட்சி
http://youtu.be/FnvSiVhqrZs
-
Raja - always Vasool king
-
Quote:
(நமக்கு 'ஐயோ பாவம குழந்தை' என்ற பரிதாபம் ஏற்படும்)
கார்த்திக் சார்,
ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
-
சக்தி,
நீண்ட நாள் கழித்து வருகை தருவதற்கு நன்றி.
இப்போது துண்டு துண்டாக டீவீயில் காட்சிகள் ,பாடல்கள் வருவதால் நடிகர்திலகத்தை பற்றி நாம் நிறைய பேசுவதும் அவசியமாகிறது. மற்ற நடிகர்கள் எந்த பாத்திரம் எந்த சூழ்நிலையானாலும் கவலை படாமல் ஒரே மாதிரி நடித்து கொண்டிருந்ததால், அவர்கள் சம்பந்த பட்ட பாடல்களை ,காட்சிகளை சுலபமாக பார்வையாளர்கள் கடந்து செல்ல முடியும்.
ஆனால் நடிகர்திலகத்தின் காட்சிகளையோ,பாடல்களையோ பார்பவர்களுக்கு படத்தின் கதை,சூழ்நிலை ,பாத்திர படைப்பு இவைகள் தெரிந்திருந்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும். அவர் காதல் காட்சிகளோ, நடன காட்சிகளோ,சண்டை காட்சிகளோ,உணர்ச்சி மிகு காட்சிகளோ,ஒரே மாதிரி அமைப்புக்குள் வராமல் , அந்தந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.அவர் அளவு சோதனை முயற்சிகள் செய்தவர் உலக அளவில் விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை சோதனை முயற்சிகளிலும் நூறு சதவிகித வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே.
நடிப்பின் மிக நுண்ணிய நுணுக்கங்கள் புரிந்து தன் அபார திறமையினால் அதனை செய்தும் காட்டிய ஒப்பிலா மேதை.
எல்லாம் புரிந்த தெரிந்த எனக்கும் ,இன்னும் புரிந்து கொள்ள நிறைய உள்ளது என்று நாள் தோறும் உணர்த்தும் மேதை நடிகர்திலகம்.
தொடர்ந்து பங்களியுங்கள்.எங்களுக்கும் உற்சாகம் மிகும்.
-
கார்த்திக் சார்,
உங்கள் சொந்த பதிவு ,சோக பதிவாக மலர்ந்து விட்டது. இப்போது சொன்னால் நம்புவீர்களோ ,மாட்டீர்களோ பாலாஜி பட வில்லி மற்றும் item girls அல்லது துணை கதாநாயகிகள் பற்றி எழுதுவதாக இருந்தேன். காஞ்சனா முதல் சினேகலதா வரை . நீங்கள் பத்மகன்னா பற்றி அற்புதமாக வரைந்து ,சுமையை குறைத்து விட்டீர்கள். தொடர்ந்து நீங்களே எழுதுங்கள். தங்கை-காஞ்சனா, திருடன்-விஜயலலிதா, எங்கிருந்தோ வந்தால்-ஜெயகுமாரி, ராஜா-பத்மா கன்னா,நீதி-சகுந்தலா, என் மகன்-சினேகலதா (இவரை பற்றி நிறைய எழுதலாம்),தீபம்-சத்யப்ரியா,தியாகம்-படாபட்.
தொடருங்கள்.
-
சிவன் சார்,
தொடர்ந்து பங்களியுங்கள். எங்களுக்கு இதனால் glucose குடித்த விளையாட்டு வீரன் போல சக்தி.
ராகுல்- தூக்கு தூக்கி யை ஒரு தூக்கு தூக்கேன் பார்க்கலாம்.
ராகவேந்தர் சார்,
தங்கள் illustration உடன் கூடிய explanation பிரமாதம்.ஒன்றை மறந்து விட்டீர்கள்.வயதானவருக்கு டச் விட்டு போச்சு.
அதுதான் மெயின் பாயிண்ட். சங்கீத காரர்களுக்கு தொடர்ந்த பயிற்சி அவசியம்.
-
Welcome Kalnayak Sir. only person missing is Adiram. He is the one who instigated me to write about Raja.
பாகம்- 10 இல் ஆதிராம் அவர்களின் பதிவு.
Quote
Gopal sir,
Ok, 'Raja' padaththukku Index (poruladakkam) pottutteenga.
Next ovvoru pointtaaga eduththu deeppaaga analayse pannuveengannu edhirpaarkkirom. Because Index itself very cute and neat. We already enjoyed your deep analysis for serious movies. But now want to enjoy your smart analyse for a commercial entertainment Raja.
adhuvaraikkum naanum Vasudevan sirum Vaira Nenjaththai asai pottukkondu irukkirom.
Unquote
-
1972ல் ராஜா .... கிட்டத்தட்ட அனைத்து ஹப்பர்களையும் -வரவழைத்து விட்டது. அது தான் ராஜாவின் பவர். இருந்தாலும் பம்மலார், முரளி சார், சாரதா போன்ற ஸ்டால்வர்ட்ஸ் மிஸ்ஸிங்... அது நிறையவே தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நீதி... இத்துடன் 1972 நிறைவடையும். வசந்த மாளிகை .. இன்னும் நிறைய அலச வேண்டும் என்றாலும் அதற்கென உள்ள திரியில் பார்த்துக் கொள்ளலாம்.
இன்னும் ராகுல் ராமின் தூக்குத் தூக்கி, கோல்ட் ஸ்டாரின் ரிஷிமூலம் அணிவகுப்பில் காத்திருக்கின்றன.
திரியின் பங்களிப்புத் திலகம் வாசு சாரின் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர், நாயகியர் தொடர் என அவை இடம் பெற வேண்டும்.
கோபால் சாரின் ஐட்டம் பெண்கள் தொடர்...
இவையன்றி அவ்வப்போது தகவல் பரிமாற்றங்களும் இடம் பெற வேண்டும்.
இவற்றை முறைப் படுத்தும் வகையில் ஆலோசனை கேட்டிருந்தேன்.
ஜோ சார் கருத்துச் சொன்னது போல் மற்றவர்களிடமிருந்து வரவில்லை என்றாலும் தற்காலிகமாக ஒரு ஏற்பாடாக எண்ணம் தோன்றுகிறது.
Turn முறையில் ஒருவர் ஒரு விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்து அதற்கு மூன்று நாட்கள் என வைத்துக் கொண்டு நான்காவது நாள் மற்றொருவர் இன்னொரு விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் அமைத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றுகிறது.
யார் யார் என்ற வரிசைக் கிரமத்தை திரியிலேயே இளையவர் பிரஸ்தாபிக்கட்டும். அவரை விட அடுத்த மூத்தவர் அதனை வழிமொழியட்டும். அதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். அந்தந்த வரிசைப் படி விவாதங்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
இது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. மற்றவர்களும் இதில் உள்ள சாதக பாதகங்களைக் கூறலாமே. எல்லோரும் கூடி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதனை நடைமுறைப் படுத்தி விடலாம்.
ஒவ்வொரு விவாதத்திலும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லை யென்றால் அவருடைய விவாதம் அவருடைய வரிசையில் இடம் பெறாமல் கடைசியில் தள்ளப் படும் என வைத்துக் கொள்வோம். அப்போது அனைவரும் பங்களிப்பார். தவிர்க்க முடியாத காரணமிருந்தால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் விட்டு விடலாம்.
இது வெறும் யோசனை மட்டுமே.
-
கோபால் சார்
Item girl - நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்த வரையில் இது மிகவும் முக்கியம் வாய்ந்த சப்ஜெக்ட். பல படங்களில் இது கதையின் போக்கையே நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மிகவும் விரிவாக நீங்கள் எழுத வேண்டும்.
முக்கியமாக விஜயலலிதா ... முதல் இடத்தில் என் அனுமானத்தில் இருப்பவர். எதிரொலி, திருடன் போன்ற படங்கள் இவரைச் சுற்றித் தான் நகருகின்றன.
இப்போதே தயார் செய்யுங்கள்.
-
ராகவேந்தர் சார்,
1972 -வசந்த மாளிகையில் துவங்கியதை நீதி,பட்டிக்காடா பட்டணமா படங்களோடு நிறைவு பெறும். பிறகு Item Girls ஆரம்பிக்கலாம். இது நானும் கார்த்திக் சாரும் இணைந்து தொகுத்து, நீங்கள் படங்கள் வழங்கினால் அமர்க்களமாய் நகரும். (வாசு சார் நாயகியர்,சண்டை,உடை என்று நிறைய வைத்திருப்பதால் அவரை இழுக்க தயக்கம்)
என்ன சொல்கிறீர்கள்?