-
16th September 2013, 02:10 PM
#2051
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.
'ராஜா' பாட்டுப் புத்தகத்தின் முகப்பு அட்டையிலும், பல்வேறு செய்தித்தாள் விளம்பரங்களிலும் இடம்பெற்று, 'ராஜா' என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் இந்த அட்டகாசமான போஸ், படத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனது பெரிய ஏமாற்றமே. இந்த காட்சியை தவற விடக்கூடாது என்று, நடிகர்திலகம் - பாலாஜி இடையே நடக்கும் சண்டைக்காட்சியை கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருப்போம் . அப்படியும் அந்தக் காட்சி சட்டென்று கடந்து சென்று நம்மை வினாடியில் ஏமாற்றி விடும்....
-
16th September 2013 02:10 PM
# ADS
Circuit advertisement
-
16th September 2013, 02:16 PM
#2052
Junior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
Krishnaji,
It crossed 50 Days in most of the release centres and ran for 100 days in Chennai,Madurai and Trichy. It was a smashing super-hit and created new record in Devi Paradise.
Not only at deviparadise and also at ROXY central madras created new records of collection till closing date.
-
16th September 2013, 02:50 PM
#2053
Senior Member
Diamond Hubber
'ராஜா' ரிலீஸ் (கடலூர் பிளாஷ்பேக்)

நம் ராஜா நடித்த 'ராஜா' கடலூர் நியூசினிமாவில் வெளியானது. அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அதாவது கடிலம் ஆற்றுப் பாலத்தின் இறககத்தில் அமைந்துள்ள பழமையான அரங்கு நியூசினிமா. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'ராஜா' ரிலீஸுக்கு முன்னால் வரை நியூசினிமா திரை அரங்கில் தரை மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் ஓப்பனாக இருக்கும். வெயில்,மழை இவற்றை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் மணிக்கணக்கில் கியூவில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டும். அரங்கு நிறைந்து விட்டால் அடுத்த ஷோவிற்கு கூட்டம் எங்கும் போகாமல் அப்படியே நின்றவாக்கிலேயே தொடரும். ஒருவரையொருவர் விடாமல் கைகளோடு அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே நுழைந்துவிடாத வகையில் நிற்பார்கள். தரை டிக்கெட் ஐம்பது காசுகள். பெஞ்ச் டிக்கெட் ரூபாய் 1.10. தியேட்டரின் மெயின் கேட்டிற்கு உள்ள நுழைந்தால் அங்கு first class மற்றும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நமக்கு வேலையே இல்லை. அதனால் தியேட்டர் நிர்வாகம் தரை பெஞ்ச் டிக்கெட் வாங்குபவர்களுக்காக வேண்டி roof உடன் கூடிய நீண்ட கவுண்டர் சுவர்களை 'ராஜா' படத்திற்காகவே புதிதாக ஸ்பெஷலாகக் கட்டியது. ராஜாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு மிக அதிகமாக எல்லோரையும் தொற்றிக்கொள்ள அதிகமாக பரபரப்பானது தியேட்டர் நிர்வாகம். கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன் தங்கராஜ் முதலியார் அவர்களின் கைவசம் தியேட்டர் இருந்தது. ராஜாவிற்காக திரையரங்கு ஓரளவிற்கு புதுப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது நான் மேலே குறிப்பிட்ட தரை டிக்கெட், மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுப்பதற்கான புது கவுண்ட்டர்கள் கட்டப்பட்டதுதான். தரை டிக்கெட் கவுண்டர்களை இரண்டு வளைவுகளாகச் சென்று திரும்பி டிக்கெட் எடுக்கும்படி கட்டியிருந்தார்கள். 26.01.1972 அன்று 'ராஜா' ரிலீஸ்.
ஆனால் கடலூர் சில விஷயங்களில் சாதனை படைத்தது. 'ராஜா' தமிழ்நாடெங்கும் 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ் என்றால் எங்கள் கடலூரில் 25-1-1972 அன்று அதாவது ஒரு தினம் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது. (இது போல எனக்குத் தெரிந்து கௌரவம்,வெள்ளை ரோஜா இரு படங்களும் ரிலீஸுக்கு முந்தின நாளே கடலூரில் வெளியாகி விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் கடலூர் நியூசினிமாவில்தான் ரிலீஸ் ஆயின) 'ராஜா' 25-1-1972 இரவு சிறப்பு ரசிகர் காட்சியாகத் திரையிடப்பட்டு விட்டது. அதனால் ரசிகர் மன்றத்தினர் அனைவரும் முன்தினம் இரவே ராஜாவைக் கண்டு களித்து விட்டனர். படத்தின் ரிசல்ட் 'ஓகோ'வென இருந்தது. ராமாபுரத்தில் இருந்து ரசிகர்கள் பலர் சைக்கிளில் கடலூர் சென்று ரசிகர் ஷோ பார்த்து விட்டு திரும்பி படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாள் (26.01.1972) காலை நான் அம்மாவுடன் பஸ்ஸில் கடலூர் நியூசினிமா சென்று விட்டேன். முதல் நான்கு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் என்று ஞாபகம். முன்தினம் பார்த்த ரசிகர்கள் அடுத்தநாளும் கடலூர் நோக்கி படையெடுத்தனர். படம் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி வேறு பரவி விட்டது. சென்னை சாந்தி தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த அதே தலைவரின் ஸ்டைல் கட் அவுட் தியேட்டரின் மெயின் கேட்டிற்கு மேலே ஏற்றப் பட்டிருந்தது. பிரம்மாண்டமான பஞ்சு மாலைகள் தலைவரின் கழுத்தை அலங்கரித்தன. தலைவரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ஸ்கார்ப் அப்படியே தத்ரூபமாக காற்றில் பறப்பது போன்றே இருந்தது. கடலூர் மெயின் சாலையில் தியேட்டர் அமைந்திருந்ததால் அனைவர் கண்களும் ராஜாவின் மீது. கட்டுக்கடங்காத கூட்டம். ஜனம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற குரல்கள்தான் எங்கும் எதிரொலிக்கின்றன. அன்று ஐந்து காட்சிகள். அப்போதெல்லாம் காலை ஒன்பது மணி காட்சிக்கு பெண்கள் அதிகமாக வரவே மாட்டார்கள். ஒரு பத்து பதினைந்து பெண்கள்தாம். அதனால் டிக்கெட் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். பெண்கள் டிக்கெட் ஆண்களுக்கு செல்லாது. சிறுவர்களுக்கு செல்லும். பெண்கள் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்து விட்டு பின் மீதி டிக்கெட்களை ஆண்களுக்கு கொடுத்து விடுவார்கள். நான் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். அரங்கின் வெளியே முழுக்க கொடிகளும், தோரணங்களுமாகவே தெரிந்தன. போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும். சமுத்திரம் போன்ற கட்டுக்கடங்காத ரசிகர்களை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறத் துவங்கியது. மணி சரியாக எட்டு இருக்கும்.
திடீரென்று ஒரே மேளதாள சப்தம். கூடவே வானவேடிக்கை வேறு. வெடிச் சப்தங்கள் காதைக் கிழிக்க ஒரு இளைஞர் பட்டாளம் தியேட்டரில் புயலெனப் புகுந்தது. ஒரு ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ஒரு வண்டியில் மூட்டைகளாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலே சிலர் வந்தனர், பின் மூட்டைகளை இறக்கி அவிழ்த்தனர். பார்த்தால் அவ்வளவு ஆப்பிள் பழங்கள். வந்த கோஷ்டி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. சிலர் கோணி ஊசிகளை எடுத்து ஆப்பிளின் உள்ளே செருக, சிலர் சணல் கொண்டு தைத்து ஆப்பிள்களை மிகப் பெரிய மாலையாக அரைமணி நேரத்தில் தொடுத்து விட்டனர். இப்போது பிரம்மாண்டமான ராட்சஷ ஆப்பிள் மாலை தயார். அதிர்வேட்டுகள் முழங்க தலைவரின் கட்-அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்டது. அப்போது இந்த அலங்காரமாலை எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. "ஆப்பிள் மாலை டோய்" என்று பலர் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்து விட்டது. தலைவரின் கட்-அவுட் மேலும் அழகுடன் பரிமளித்தது.
முதன் முதலில் ஒரு கட் அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்ட பெருமையை ராஜா பெற்றார். (இது கடலூர் சினிமா ரசிகர்கள் இன்றளவும் பெருமையாக பேசி மகிழும் விஷயம்) பின் ஒரே கூச்சலும் குழப்புமாகவே இருந்தது. நான் அம்மாவை விட்டு விட்டு வந்து இந்த வேடிக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ என்னை விட வில்லை. கூட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அவர்களுக்கு. நான் ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு வருகிறேன் என்று அடம் பிடித்து வந்து ஒரு இடத்தில் safe ஆக நின்று கொண்டேன்.
சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பதற்கான பெல் கொடுத்து விட்டார்கள். அவ்வளவுதான். கூட்டம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அதுவரை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக நின்றிருந்த கியூ கண்மண் தெரியாமல் சிதறியது. ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்து டிக்கெட் கவுண்ட்டரை நெருங்க முண்டியடித்தனர். போலீஸ்கார்களால் சமாளிக்க முடியாமல் லத்தியைக் கையில் எடுத்து கண்ட மேனிக்கு சுழற்ற ஆரம்பித்து விட்டனர். ஒரே அடிதடி. துணி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் டிக்கெட் எடுக்க சில பேர் தாவிக் குதித்தனர். நிற்பவர்கள் தலை மேல் கால்வைத்து பலர் ஓடினர். கீழே இருப்பவர்கள் வலி தாங்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தனர்.
அப்போதுதான் கட்டியிருந்த புதிய கவுண்ட்டர் சுவர் சரியாகக் காயாமல் வேறு இருந்ததால் நெரிசலின் காரணமாக அப்படியே பெயர்த்துக் கொண்டு இடிந்து விழுந்தது. சிலருக்கு நல்ல காயம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இதையெல்லாம் கண்டு மிரண்டு போன நான் பயந்து போய் அம்மாவிடம் ஓடி வந்து விட்டேன். அம்மா அதற்குள் டிக்கெட் எடுத்து விட்டார்கள். பெண்கள் கவுண்ட்டரை சுற்றி பயங்கரமான ஆண்கள் கூட்டம் டிக்கெட்டுக்காக வெயிட் செய்தது. (கவுண்ட்டர் சுவர் முதன் முதல் கூட்ட நெரிசலால் இடிந்து உடைந்து விழுந்த பெருமையும் ராஜாவிற்கே சொந்தம்)
இதற்குள் டிக்கெட் எடுக்காத ஒரு கூட்டம் மெயின் கேட்டின் மேல் ஏறித் தாவி குதிக்க வேறு ஆரம்பித்து விட்டது. தியேட்டர் ஊழியர்கள் ஆளுக்கொரு கழியை எடுத்துக் கொண்டு இரும்பு கேட்டின் மேல் ஏறிக் குதிப்பவர்களை வாங்கு வாங்குவென்று வாங்கினர். அதில் சிலர் அவர்களிடமிருந்தே கழியைப் பிடுங்கி தியேட்டர் சிப்பந்திகளை பதம் பார்த்தனர். யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா மிகவும் மிரண்டு போய் என் கையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெண்கள் அமரும் இருக்கைக்கு சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் கூக்குரலிட்டு விசிலடித்தபடி பலர் தரை டிக்கெட்டுக்கான சாயும் வசதிகள் இல்லாத மூட்டைப் பூச்சிகளின் மூர்க்கத்தனமான கடிகள் கொண்ட மொட்டை பெஞ்ச்களில் தங்கள் நண்பர்களுக்காக துண்டுகளை விரித்து இடம் போட்டனர். வேறு யாராவது வந்து உட்கார்ந்தால் மவன் தொலைந்தான்.
படம் போட்டதும் கடலின் பேரிரைச்சல் போல அப்படி ஒரு இரைச்சல். தலைவரின் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கூடை கூடையாய் பூக்களின் உதிரிகள் பறக்கின்றன. விசில் ஒலிகளும், கைத்தட்டல்களும் காதைக் கிழித்தன. தியேட்டர் முழுதும் ஒரே ஜனக்கடலாகக் காட்சியளித்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவிற்கு நின்றவாறே பலர் நம் ராஜாவின் ஸ்டைல் ரகளைகளைக் கண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ரந்தாவாவுடனான அந்த ஈடுஇணையில்லாத சண்டைக்காட்சியின் போது முன் இருக்கைகளை எட்டி உதைத்து சிதைத்து ரசிகர்கள் காட்டிய உற்சாக மிகுதியின் மகிழ்வான உணர்வுகளின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தலைவரின் நடிப்பைப் போல. அதற்குப் பிறகு உள்ளே நடந்த அமர்க்களத்தை சொல்லவும் வேண்டுமா?! படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வழங்கப்பட்டது. (இதுவும் ஒரு சாதனை) காலை ஒன்பது மணி காட்சி முடிந்து திரும்பும்போது நண்பகல் 12 மணி காட்சிக்கு காலையில் இருந்தது போல இருமடங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டு நின்றது.
கடலூர் நியூசினிமாவில் ஒரு மாதத்துக்கு ஓடி வசூலில் தன்னிகரில்லா சாதனையைப் படைத்தார் ராஜா. பிறகு மறு வெளியீடுகளிலும் கடலூரில் ராஜாவின் சாதனை எவரும் விஞ்ச முடியாதது.
'ராஜா' நினைவலைகளை தட்டி எழுப்பிய என்னருமை கோபால் சாருக்கு நன்றி.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Last edited by vasudevan31355; 16th September 2013 at 02:54 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
16th September 2013, 02:55 PM
#2054
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
Both are nice roles of sivaji and he handled them very differently in his unique way of execution. We will take it up for sure. But my humble request is that regular hubber like you can do it for our pleasure.
sir, naan orathula ninnu intha phd. literature level thesis lam enjoy pannitu irukkaravan.....ennai poi kindal panreengale
... namakku comment adikkathan theriyum........ detailed ah athuvum interesting ah (especially when there is something special) narrate panna theriyaathu
-
16th September 2013, 02:59 PM
#2055
Senior Member
Seasoned Hubber
-
16th September 2013, 03:24 PM
#2056
Junior Member
Newbie Hubber
வாசு,
அந்த BATIK என்ற வகை படும் டிசைன் கொண்ட ஆரம்ப காட்சி ஜெர்கின் தலைவரின் மீது எவ்வளவு அழகாக உள்ளது!!!!
உங்கள் கடலூர் நியூ சினிமா அனுபவம் எனக்கு relate பண்ண கூடியது.நான் நியூ சினிமாவில் 1965 முதல் 1979 வரை படங்கள் பார்த்துள்ளேன்.(கடைசி படம் உதிரி பூக்கள்) உங்கள் அனுபவங்கள் நீங்கள் எழுதும் முறை உங்களை தேர்ந்த எழுத்தாளாராக காட்டுகிறது. நீங்கள் உங்கள் சிறு வயது அனுபவங்களை தொகுத்து சிறிதே ஒரு larger objective சேர்த்து அழகான நாவல் ஒன்று எழுதலாம். ஒரு copy இன்றே புக் செய்கிறேன்.
-
16th September 2013, 03:53 PM
#2057
Senior Member
Veteran Hubber
Following is the 'Release-Mela' celeberations of the Great RAJA at Madurai Central theatre, narrated by our Murali Srinivas sir, re-prodeuced here from previous part, due to Raja Fever now...
Now, over to our Murali sir.....
அந்த நாள் ஞாபகம்
ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
(Thank you Murali sir)...
Last edited by mr_karthik; 16th September 2013 at 03:57 PM.
-
16th September 2013, 04:00 PM
#2058
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Raja while we are discussing, Jaya TV is screening this film at 10 am on 18.09.2013
[/size][/color][/b]
தகவலுக்கு நன்றி ராகவேந்தர் சார்!
நிச்சயமாக பார்த்துவிடுவேன் .
ஆனால் எத்தனாவது தடவை என்பது
எனக்கும் என் மனசுக்கும் மட்டும்தான் தெரியும்!
-
16th September 2013, 04:07 PM
#2059
Junior Member
Newbie Hubber
ஆஹா... ஆஹாஹா .....
பம்மலார் இல்லாத குறையை ராகவேந்தர் மீள்பதிவிட்டு தீர்க்கிறார் என்றால், முரளி,சாரதா இல்லாத குறையை மீள்பதிவிட்டு தீர்க்கிறார் கார்த்திக்.
இருவருக்குமே நன்றி.
(எனக்குத்தான் இந்த மாதிரி யாருமே அமையவில்லை. நானே எனக்கு மீள்பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.)
-
16th September 2013, 05:26 PM
#2060
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
ஆஹா... ஆஹாஹா .....
பம்மலார் இல்லாத குறையை ராகவேந்தர் மீள்பதிவிட்டு தீர்க்கிறார் என்றால், முரளி,சாரதா இல்லாத குறையை மீள்பதிவிட்டு தீர்க்கிறார் கார்த்திக்.
இருவருக்குமே நன்றி.
எங்களை பதிவுகளைவிட்டு மீளா வகையில் அமைந்துள்ள மீள் பதிவுகளை அளிக்கும் நண்பர்களுக்கு நன்றி. (தங்களுக்கும்தான் கோபால் சார்.)
Bookmarks