அருமை அருமை சி கே சார் ஸ்வர்ணலதா பற்றிய பதிவு
சந்தடியில் ரம்யா கிருஷ்ணன் அழகு வர்ணனை
Printable View
ஸாரி கோபால் சார் கட் பேஸ்ட் செய்த போதுசெக் செய்யவில்லை..மன்னிக்க திருத்தி விடுகிறேன்.. (வரலாறு முக்கியம் அமைச்சரே) யூ டோண்ட் பிலீவ்.. மூன்று முறைவேறு விக்கிப் பீடியாவைப் படித்தேன்.. அதுவும் நாளை இந்த வேளை ஸ்வர்ணலதாவின் குரலில் எவ்ளோ அழகா இருக்கும்னு எண்ணம் வந்ததே ஒழிய படத்தலைப்பில் தவறென்று கண்ணில் படவில்லை..
கிருஷ்ணா ஜி.. நன்றி..(கொஞ்சம் ஆரம்பிக்கறதுக்கு இப்படித் தான் வருது…ச்சிலீர்னு ஆரம்பிச்சா தான் படிக்க உள்ளிழுக்க முடியும்னு ஆன்றோர்கள் சொல்லியிருக்காங்க..
உங்கள் ஆசிகளுக்கும் நன்றி கிருஷ்ணா சார்..அப்ப்புறம் ஹேமா ஆனந்ததீர்த்தன் ரிஸர்வ் வங்கியில் மேலதிகாரி என நினைவு..சட்டென்று அவரது கதைத்தலைப்புகள் நினைவில் வரவில்லை..கொஞ்சம் சிருங்காரமாக எழுதுவார்.யதார்த்த நடையில்!
FLASH BACK
http://i61.tinypic.com/152jrlw.jpg
CHENNAI - STAR TALKIES
http://i58.tinypic.com/2cpuydy.jpg
http://youtu.be/K-tmCoHv7aA
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-5.
ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.
ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)
எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.
இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.
chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.
கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.
இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.
அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.
மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.
சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?
என்னதான் அகந்தை இருந்தாலும் ஹேம நாதர் திறமைக்கு உலகம் அடிமையே. அவரின் ஒரு நாள் போதுமா பாட்டை உலகம் மெச்சிய அளவு இசை தமிழையும்,பாட்டும் நானேயையும் மெச்சவில்லை.
என்ன content என்று கூட படிக்காமல் cut &paste பண்ணும் தருமியான உமக்கு,ஆயிரம் பொற்காசுகளுக்கு வழி செய்வான்.பிழைத்து கொள்ளுங்கள்.
வாணியின் நெஞ்சை பிழியும் சில பாடல்கள் பந்துவராளி ராகத்தில்
நீராட நேரம் நல்ல நேரம் –
“கிளப் டான்ஸ்” என்று சொல்லக் கூடிய தேவை அற்ற சமாச்சாரத்த்திற்க்கு போடப்பட்ட இன்மையான பாடல்.ஒரு புதிய கோணத்த்தில் பந்துவராளி ராகத்த்தில் அமைக்கப்பட்ட மெல்லீசைப்பாடல்.மெல்லிசை மன்னரின் கற்ப்பனை வியக்க வைக்கும்.எம் எஸ் வி யின் அருமையான மெட்டுக்களில் வந்து அதிகம் ஒலிக்காத பாடல்களில் ஒன்று. பின்னணி இசையும் இப்பாடலுக்கு மெருகேற்றியுள்ளது.
கவியரசரின் அர்த்தம் புதைந்த வரிகளில்... வாணி ஜெயராமின் இனிமையான குரலில்...................
பாடலுக்கேற்ப காட்சிப் பதிவும் நன்றாக உள்ளது. அதிலும் சிவாஜியின் ஸ்டைல் மற்றும் சகுந்தலாவின் சரசமாடும் மினுக்கல் நடிப்பும்.
இருந்தாலும் பாடலை தனியே கேட்கும் பொழுது , இந்த துப்பறியும் காட்சிக்கு இல்லாமல் வேறு நல்ல சந்தர்ப்பங்களுக்கு இப்பாடலை பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் உணர்வு நிச்சயம் எழும் .
ஏழு சுரங்களுக்குள்
ராக மாலிகையில்அமைக்கப்பட்ட பாடல்.பாடல் ஆரம்பம் பந்துவராளி ராகத்தில்ஆரம்பித்த்து , பின் ரஞ்சனி ,சிந்துபைரவி , காம்போதி என மிக அழகாக நிறைவுறும் பாடல்.தமிழ் திரை தந்த சிறந்த பாடல் வரிசையில் நிச்சயமாக இந்தப் பாடலுக்கும் ஒரு இடம் உண்டு என்று துணிந்து கூறத் தக்க பாடல். படத்த்தில் கதாநாயகி ஒரு கர்நாடக இசைப்பாடாகியாக வரும் காட்சிக்கு அமைக்கப்பட்ட இந்தப் பாட்டைப் பாடி புகழின் உச்சிக்குச் சென்றவர் வாணி ஜெயராம். இசை நிகழ்ச்ச்சிகளில் அடிக்கடி ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்றாக் இருப்பதர்க்கு மக்கள் மத்தியில் இந்த பாடல் பெற்ற செல்வாக்கே காரணம் எனலாம்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு இசைமேதை என நிரூபிக்க இந்தப் பாடல் ஒன்றே போதும் .
MELODY QUEEN'S FAVORITE SONG- MANNAVAN VANTHANADI - THIRIVARUTSELVAR
http://youtu.be/5-y-J9Pabq8
01/07/2006
coffee with suchi என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் வாணி ஜெயராம். தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவர். வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண். தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது. தென்னகம் நல்ல வழி தந்தது. எல்லோருக்கும் பிடித்த பாடகியும் கூட. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில அருமையான துளிகள்.
கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?
வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.
கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?
வாணி : மூனும் பிடிக்கும்.
கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....
வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.
கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?
வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?
நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.
புதுமை செய்ய வேண்டும் என்கிற பெயரில் பல சீரழிவுகள் தமிழ்த்திரையுலகில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வாணி ஜெயராம் பேட்டியில் இது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது
வாணிஜெயராம் ஒரு கவிஞர் என்றும் பேட்டியில் கூறினார். உறக்கம் பற்றியும் ஒரு கவிதை சொன்னார். சொல் நயமும் பொருள் நயமும் மிகவும் பொருத்தம். அதை அழகாக உச்சரித்த விதமும் சிறப்பு. அவர் ஓவியம் மிகச்சிறப்பாக வரைவார் என்பது தெரிந்திருந்தது. ஆனால் கவிஞர் என்பது புதுச்செய்தி. முருகக் கடவுள் மேல் இவரே ஒரு கவிதை எழுதி அதற்கு இவரே இசையும் அமைத்திருக்கிறாராம். அதைக் கேட்கவும் ஆவல். ஆனால் தொலைக்காட்சித் தொகுப்பாளனி அவரை விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மாட்டி விடுவதிலேயே குறியாக இருந்தார்.
வாணி ஜெயராம் இந்தியில் முதலில் பாடிய பாடல் bole re pappihara என்ற பாடல். இன்றைக்கும் இது அழியாப் புகழ் பெற்ற பாடல். இந்த ஒரு பாடலே அவருக்குத் தான்சேன் விருது பெற்றுத் தந்தது.
மீரா என்ற படத்தில் முதலில் வாணியை வைத்து பண்டிட் ரவிசங்கர் ஒரு பாடலை எடுத்து விட்டார். இன்னொரு பாடலுக்கு ஒரு மிகப் பெரிய பாடகியைக் கூப்பிட்டதிற்கு அவர் வாணி பாடிய பாட்டையும் தான் பாடுவதானால் வருவதாகச் சொன்னாராம். ரவிசங்கர் என்பதால் அந்தப் பெரிய பாடகியை மறுத்து விட்டு எல்லாப் பாட்டுகளையும் வாணிக்கே கொடுத்து விட்டார்
தகவல் தந்து உதவிய நண்பர் ராகவன் அவர்களுக்கு நன்றி
http://upload.wikimedia.org/wikipedi...attucottai.jpghttp://www.thehindu.com/multimedia/d...g_1285123f.jpg
மகாதேவி திரைப்படத்தில் மக்கள் திலகம் கதாநாயகனாக.. மாறுவேடத்தில் கண்தெரியாதவராக... நடிக்கும் காட்சியில் நாட்டில் நடக்கும் சமுதாய பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளையும் ஒருங்கே சொல்லும் பட்டுக்கோட்டையாரின் பாடல் கேளுங்கள்..
( சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா ) - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை .
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடுகின்ற பாடல்! காலங்கள் பல ஆண்டுகள் முன்பே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமாயிருக்கிறது என்றால் இந்தச் சமுதாயம் திருந்தவில்லை.. மாறாக.. சுயநலங்கள் பெருகி.. பொதுநலங்கள் மருகிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்!
உழைப்பின்பால்பட்டே உயர்வு இருக்க வேண்டும் என்கிற நியதியை மாற்றி.. ஊரை ஏமாற்றி உலையில் போடும் கூட்டம் அதிகமாகிவிட்டபடியால்.. திருட்டு உலகம் இது என்பதை மறுக்க முடியுமா? வஞ்சமும் சூதும் மக்களின் நெஞ்சில் குடிகொள்ளத் தொடங்கியதால்.. ஏழைகள் மட்டும் இன்னும் அவலத்திலே மிதக்கிறார்.. இந்தச் சமுதாயத்தை சீர்திருத்த இன்னும் எத்தனை பட்டுக்கோட்டையார் வேண்டுமோ தெரியவில்லை! மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாய் கவிஞர் ஏக்கப்பெருமூச்சை பாட்டுவரிகளாக்கித் தந்திருப்பது நிதர்சனம்!
1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . " மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி " இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும் . இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார் . அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . இந்தப்பாடல் எழுதப்பட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும் , இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துக்கே இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்.
http://www.youtube.com/watch?v=fhmWh9xD-4w
சுசீலா பற்றிய மிக அருமையான பத்திரிகை ஆவணம் எஸ் வீ சார்
மிக்க நன்றி
அம்பா மனம் கனிந்துனது – படம்: சிவகவி பாடியவர்:எம்.கே.தியாகராஜா பாகவதர் – இசை:ஜி.ராமநாதன்
சுப்பர் ஹிட் பாடல் என்று சொல்லத் தக்க பாடல்.இசையமைப்பிலும் பாடப்பட்ட முறையிலும் தன்னிகற்ற எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களின் குரலினிமையில் இனிக்கின்ற பந்துவராளி அவரது ஆற்றலையும் ஞானத்தையும் என்றென்றும் பறை சாற்றும் பாடல்.நமது தாத்தாக்கள் அவருடைய குரலின் இனிமையை எவ்விதம் போற்றினார்கள் என்பதை நினைத்து பார்க்க வைக்கும். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவர்களது நினைவுகள் வந்து போவது தவிர்க்க முடியாதுள்ளது .அவரின் பெருமையை ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்.பாகவதரின் அழகிய குரலும் இன்பம் தரும் இனிய இசையும் பந்துவராளியை என்றென்றும் பெருமை சேர்க்கும்.இப்போது பல தலைமுறை தாண்டி கேட்கும் போதே பரவசம் அளிக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.ஒப்பற்ற பாடல்.பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் , எம்.கே.தியாகராஜா பாகவதர் வெற்றி கூட்டணி தந்த பாடல்.
http://www.buycinemovies.com/images/.../0393-vcd8.jpg
http://www.youtube.com/watch?v=X3DJ9e3Vlo0
' யார் அந்த
நிலவு " ........................
https://www.filepicker.io/api/file/s...default(4).jpg
http://www.tamilmp3songslyrics.com/l...ndhaNilavu.GIF
" சாந்தி " " யார் இந்த நிலவு ? " பாடலின் சிறப்பம்சங்கள் என்ன ? "
என்றா கேட்கிறீர்கள் ?
அந்த சிறப்பம்சங்கள்ளை நான் பட்டியலிடும்
முன்னர் , இந்த பாடல் , ' சாந்தி ' படத்தில் இடம் பெற்ற கதையின்
சூழ்நிலையை ( sitiuation ) உங்களுக்குத் தெரியவேண்டும் !
அதற்கு.......
" சாந்தி" திரைப்படத்தின் கதையையும் ஓரளவு
தெரிந்து வைத்திருந்தால் நலம் !
" சாந்தி "
கதை சுருக்கம் :
நடிகர் திலகமும் , எஸ் . எஸ் . ஆரும் இணை பிரியாத நண்பர்கள் !
" வாழ்ந்து பார்க்கவேண்டும் , அறிவில் மனிதன்
ஆகவேண்டும் ! " என்கிற பாடலை அவர்கள் பாடி மகிழ்கிறார்கள் !
அந்த பாடலை அவர்கள் கல்லூரி நாட்களில்
பாடி மகிகிறார்கள் !
அப்போது......
ஊரில் , எஸ் எஸ் ஆருக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது !
அந்த ஊரில் தோழிகள் இருவர் :
தேவிகா - விஜயகுமாரி !
இந்த இருவரில் விஜயகுமாரி இரு விழிகளை இழந்தவர்.
" தனக்கும் திருமணம் நடக்குமா ? " என்று ஏங்கும்
தன்னுடைய பார்வை இல்லாத தோழியான தேவிகா ,
விஜயகுமாரிக்கு ஆறுதல்
சொல்லி பாடுகிறார் :
" ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் !
வீடெங்கும் மாவிலைத் தோரணம் ! "
தேவிகா பாடும் பாட்டு !
விஜயகுமாரியின் சித்தப்பாவாக வரும்
' சூபர்' வில்லன் ( ! ) எம் . ஆர் . ராதா, அவர் விழிகளை இழந்தவர் என்கிற
உண்மையைச் சொல்லாமல் , எஸ் . எஸ் . ஆருக்கு பெண் கொடுக்கிறார் !
சரி, அப்போ தேவிகா ' செட் அப் ' யாரூ ? "
என்றா கேட்கிறீர்கள் !
வேறு யார் , நம்ம நடிகர் திலகம்தான் !
" நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் !
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ! "
பாடலை தேவிகா பாட , அதற்கு ' விசில்' அடிக்கிறார் நடிகர் திலகம் !
தான் மணக்கப் போகும் பெண் இரு விழிகளை
இழந்தவர் என்கிற உண்மையை அறியாத எஸ் . எஸ் . ஆர், தான் பார்க்காத
எதிர்கால மனைவுக்கு.....' காதல் கோட்டை ' - அஜித் - தேவயானை
' ஸ்டைலில்' கடிதங்களில் கவிதைகளை எழுதி மகிழ்கிறார் !
" செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் ! " பாடலை அங்கே எஸ் எஸ் ஆர் பாடுவார்,
அதற்கு 'எசப் பாட்டு' விஜயகுமாரி இங்கே பாடுவார் !
தன் மனைவிக்கு விழிகள் இரண்டும் இல்லை
என்று எஸ் எஸ் ஆர் க்கு தெரியாமல் எம் ஆர் ராதாவின் சூழ்ச்சியால்
திருமணம் நடந்து விடுகிறது.
விஷயம் பின்பு அதாவது , திருமணம் ஆனபிறகு , அறிந்து கொண்ட
எஸ் எஸ் ஆர் கோபம் கொள்கிறார், தான் ஏமாற்றப்பட்டதை
அறிந்து மனைவியை ஏறிட்டும் பார்க்காமல் அவரது ஒரே பொழுது போக்கான
காட்டில் மிருகங்களை வேட்டையாட வெளியேறுகிறார்.
" செந்தூர் முருகன் கோவிலிலே "
சோகப் பாடலை விஜயகுமாரி பாடுகிறார் !
விஷயம் அறிந்த நடிகர் திலகம் , காட்டுக்குள்
சென்று எஸ் எஸ் ஆரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
எப்படி ?
" உனக்கு திருமணம் ஆன பிறகு உன் மனைவிக்கு கண்களை
இழந்திருந்தால் உன்னால் என்ன செய்ய முடியும் ? அப்படி
நினைத்து நீ இந்த பெண்ணுக்கு வாழ்வு கொடு ! "
என்கிறார் சிவாஜி.
ஆனால் இந்த அறிவுரையை எஸ் எஸ் ஆர் கேட்கவில்லை, தொடர்ந்து
காட்டிலேயே தங்கிவிடுகிறார் !
இந்த சமயத்தில் விஜயகுமாரிக்கு கண் ஆபெரேஷன் நடக்கிறது !
ஆபெரேஷன் வெற்றி !
விஜயகுமாரிக்கு பார்வை வந்துவிட்டது !
தன் கணவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறார் , விஜயகுமாரி !
இந்த நேரத்தில்.......
புலி ஒன்று தாக்கி எஸ் எஸ் ஆரை இழுத்துச் சென்றுவிட்டது அந்த
களீபரத்தில் எஸ் எஸ் ஆர் இறந்து விட்டார் என்கிற சேதி ஊரில்
அடிபடுகிறது !
" எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம் ! " என்கிற
செய்தியை ஊரில் பரப்புகிறார் எம் ஆர் ராதா !
மேற்படி செய்தியை பயன்படுத்தி :
' சிவாஜியை, விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டும்,
இல்லையென்றால் எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம்
என்று சிவாஜியை பயமுறுத்துகிறார், ராதா !
வேறு வழி இன்றி தன் நண்பனின் மனவிக்காக , கணவன் மாதிரி
நடிக்க ஆரம்பிக்கிறார் நடிகர் திலகம் !
சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த சூழலில் விஜயகுமாரியின் உண்மையான கணவன்
ஆன எஸ் எஸ் ஆர் உயிருடன் ஊருக்கு திரும்புகிறார்!
தன் மனைவிவுடன் தன் உயிர் நண்பன் " குடும்பம் " நடத்துவதை
அறிந்து மனம் வருந்துகிறார் !
இந்த சேதியை சிவாஜி அறிந்து கொண்டு மனம் வருந்துகிறார் !
சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த ' கண்ணராவி' யை தேவிகாவும் காண்கிறார் !
தேவிகா அறிந்து விட்டதை சிவாஜி அறிந்து மனம்
வருந்துகிறார் !
சிவாஜியின் மன நிலை எப்படி இருக்கும் ?
" யார் அந்த நிலவு "
பாடல் இந்த சூழலில்தான் நடிகர் திலகம்
பாடுகிறார் !
http://i1.ytimg.com/vi/A3d0cMQcvUY/hqdefault.jpg
இப்போது, ' யார் இந்த நிலவு '
பாடல் படத்தில் இடம் பெற வேண்டுமான, சும்மா கானா பாலா
மாதிரி ஒருவரை அழைத்து வந்து ' கெக்கே - பிக்கே ' என்று
' துள்ளல் இசை ' என்று படு நாகரீகமாக சொல்லிக்
கொள்ளும் ' டப்பாங்குத்து ' பாடலைப் போட்டால் அது
நன்றாகவா இருக்கும் !
கதையின் இந்த சூழ்நிலைக்கு , நடிகர் திலகம் ஏற்றிருக்கும்
கதாபாத்திரத்தின் மன நிலையை அந்த பாடல்
வெளிப்படுத்தவேண்டும்......
சரி, அந்த கதாபாத்திரத்தின் மனநிலை என்ன ?
சொல்றேன்!
1. தன் நண்பனின் மனைவுக்கு கணவன் ஆக , நிர்பந்த சூநிலையில்
நடிக்க வேண்டும்....
அது :
குற்ற உணர்வு ( guilty conscious )
2. தான் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் காதலிக்கும்
பெண்ணுக்கு தெரியவந்தால் அதனால் ஏற்பட்ட :
அச்சம் - பய உணர்வு .
3. தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்கிற
சோகம் .
4. அதனால் ஏற்படும்
விரக்தி
5. தன் நண்பனுக்கு விஷயம் தெரிந்தால் தன்னை தவறாக
எண்ணுவானே என்கிற :
ஆதங்கம்
6. ஆக மொத்தத்தில் , ' தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ,
இன்னும் இதைவிட என்ன ஆகணும் ! '
என்கிற :
அலட்சியம் !
இந்த மாதிரியான
உணர்ச்சிக் கலவை யை அந்த பாடலில்
வெளிப்படுத்த வேண்டும் !
இயக்குனர் ஏ பீம்சிங் க்கு அந்த பாடலை
தான் நினைத்தபடி வெளிக்கொண்டு வர நினைத்தார்.
அதில் வெற்றி கண்டாரா ?
வெற்றி கண்டார், பாடலும் வெற்றி !
ஆனால் , தான் நினைத்தவாறு ஒரு பாடலைத்
தர அவர் மட்டும் எண்ணிவிட்டால் அது நடக்காது.....
பாடலை உருவாக்கும் :
" தாய்மார்கள் " ( ! )
அதான்,
1. பாடலாசிரியர்
2. இசையமைப் பாளர்
3. பாடகர்
4. மற்றும்
பாடல் காட்சியில் நடிப்பவர் !
மேற்கண்டவர்கள் :
அதாவது :
1. பாடலாசிரியர் : கண்ணதாசன்,
2. இசையமைப்பாளர்கள் : மெல்லிசை மன்னர்கள்
3. பாடகர் : டி எம் எஸ்
4. நடிகர் : நடிகர் திலகம் .....
இவர்களின் ' ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத.....
ஆனால்.....ஆரோக்கியமான பொறாமை இல்லாத
போட்டியால் பாடல் வெற்றி பெற்றது !
எப்படி ?
சொல்றேன்
" யார் அந்த நிலவு "
பாடலை எழுதிய : கவிஞர்
கண்னதாசன் :
" படகோட்டி " பாடல்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இன்
அனைத்துப் படங்களுக்கும் பாடல்களை எழுதியர் :கவிஞர் வாலி !
( தேவர் மற்றும் ஜி என் வேலுமணி படங்களுக்கு மட்டும் இதற்கு
விதிவிலக்கு ! கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவார் ! )
எனவே, கண்னதாசன் நிறைய சிவாஜி படங்களுக்கும் மற்ற
நடிகர்கள் படங்களுக்கும் பாடல்களை எழுதி குவித்தார் !
அதிலும் சிவாஜி படங்களுக்கு - அதிலும் - " ப' பட இயக்குனர்
பீம்சிங் இயக்கும் படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடல்
களை எழுதி குவித்தார் !
" சாந்தி " படத்தில் " யார் அந்த நிலவு " பாடலுக்கான
சூழ்நிலையை இயக்குமர் பீம்சிங் இடம் இருந்து கேட்டு அறிந்து
பின்னர் அழகு தமிழில் சொற்களை அமைத்து பாடலை
எழுதினார் !
ஒண்ணும் வாணாம் ! ( சென்னை தமிழ் ! )
படத்தைப் பார்க்கவேண்டாம் !
பாடகரின் குரல் வளத்தில் கவனம் செலுத்த வேண்டாம் !
இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டாம் !
வெறும் பாடல் வரிகளை மட்டும் கேட்டாலே போதும் ,
'சாந்தி ' படத்தின் கதையமைப்பை நீங்கள் புரிந்து
கொள்ளமுடியும் !
எடுத்துக்காட்டுக்கள் :
" மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை "
இந்த வரிகளைப் படித்தாலே 'சாந்தி ' படத்தின்
கதை போக்கை ஓரளவு நாம் புரிந்து கொள்ளமுடியும் !
" காலம் செய்த கோலாம் இங்கு நான் வந்த வரவு ! "
மேற்கண்ட வரிகளைப் படித்தாலே படத்தில்
நடிகர் திலகத்தின் சூழ்நிலை புரிய வரும் !
" உன் கோவிலின் தீபம் மாறியதை நீ அறிவாயோ ! "
" தீபம் மாறியது " என்பது எதனைக் குறிக்கின்றது என்பது உங்களுக்கு
புரியும் !
இப்படி வெறும் வார்த்தைகளால்நாகரீகமாக எளிதாக சொல்ல முடியாத
" கணவன் - மனைவி " சமாச்சாரத்தை பாடல் வரிகளைக்
கொண்டே மிக அழகாக விளக்கிய பெருமை கவியரசர்
கண்ணதாசனையே சாரும் !
' யார் இந்த நிலவு '
பாடலுக்கு இசை : மெல்லிசை மன்னர்கள் :
மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும் மற்ற இசையமைப்
பாளர்களின் பாடல்களுக்கும் இருக்கும் :
ஒரே ஒரு வித்தியாசம்
என்ன தெரியுமா ?
சொல்றேன் !
" மெல்லிசை மன்னர்களின் ஒவ்வொரு பாடலும் அவர்கள் இசையமைத்த
வேறு எந்த பாடல்களுடன் ஒப்பிடாமல்
தனித்து
விளங்குவது தான் அந்த வித்தியாசம் !
( இந்த 'மேட்டரை' பின்னர் வேறு சமயத்தில் விரிவாக
சொல்கிறேன் ! )
" யார் இந்த நிலவு " பாடலும் இப்படித்தான், அவர்களின் ஏனைய
பாடல்களையும் தனித்தும் இணை இல்லாததாகவும்
சிறந்து விளங்குகிறது !
முதலில் இந்த பாடல் இடம் பெறும் ' சிடுவேஷன்' ஐ கூர்ந்து கவனித்த
இசையமைப்பாளர்கள் , இந்த பாடலுக்கு இசையமைக்க
மேலை நாட்டு இசை பாணியை பின்பற்றி இசையமைத்தால்
நல்லது என்று முடிவு எடுத்தார்கள் !
சரியாரைப் பாட வைப்பது ?
இதில் என்ன குழப்பம் , ஸ்வாமி !
அந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்திற்கு பின்ணனி கொடுப்பவர் :
டி எம் எஸ் தானே !
அதில்தானே குழப்பம் , ஸ்வாமி !
' என்னய்யா அந்த குழப்பம் ' ?
என்கிறீர்களா ?
" டி எம் எஸ் அவர்களுக்கு மேற்கத்திய பாணியில் பாட இயலுமா ? "
என்பதுதான் மெல்லிசை மன்னர்களுக்கு
குழப்பம் !
எனினும் வேறு பாடகரை வைத்து , தாங்கள் நினைப்பது போல்
மேற்கத்திய பாணியில் இந்த பாடலை தங்களால் பாட
வைத்து பாடலை வெற்றி பெற முடியும் !
ஆனால்.......நடிகர் திலகம் அதற்கு உடன்படாவிட்டால் ?
" விச்சு ! திரைப்படங்களில் என் பாடலுக்கு டி எம் எஸ் பாடினால்தான்
அது நான் பாடுவதாக நம் ரசிகர்கள் எண்னுவார்கள் !
அப்படி டி எம் எஸ் பாடாமல் வேறு ஒருவரை வைத்து பாடினால்,
படத்தைப் பார்க்கும் போது அந்த பாடலை நான் பாடுவதாகவே
ரசிகர்கள் நினைக்கமாட்டார்கள் , மாறாக அந்த பாடகர் பாடுவதாகவே
ரசிகர்கள் நினைப்பார்கள் ! "
சொன்னவர் நடிகர் திலகம் !
" ஒரு நாளிலே உறவானதே ! "
டி எம் எஸ் - சுசீலா பாடிய ' சிவந்த மண் ' படப் பாடலை மெல்லிசை
மன்னர் முதலில் சுசீலாவுடன் பாடவைத்த பாடகர் :
பால முரளி கிருஷ்ணா !
மேற்கண்ட பாடகர் பாடிய பாடலைக் கேட்டுத்தான் நடிகர் திலகம்
மேற்கண்ட வசனங்களை மெல்லிசை மன்னரிடம் நடிகர் திலகம்
சொன்னாராம் !
மெல்லிசை மன்னர் ரொம்ப ரொம்ப கடுப்பாகித்தான் பால முரளி
கிருஷ்ணாவை நீக்கி விட்டு டி எம் எஸ் வைத்து பாடவைத்தாராம் !
" சர்த்தான் ஸ்வாமி ! அந்த பாடல் ' சிவந்த மண் ' படம் - 1970
வெளிய்யீடு ! ' சாந்தி ' படம் - 1965 படம் தானே ! "
என்கிறீர்களா ?
சொல்றேன் !
" சபாஷ் மீனா " படம் . சந்திரபாபு அந்த படத்தில் இரட்டை வேடங்களில்
பின்னிப் ' பெடல் ' எடுத்துக்கொண்டிருந்தார்..... சிவாஜி கணேசனுக்கு
அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரையும் கொடுக்கும்
சந்தர்ப்பம் இல்லை !
இதனை இந்த படத்தின் இசையமைப்பாளரிடம் ( டி . சலபதி ராவ் )
சொல்லிப் புலம்பினார்,
நடிகர் திலகம் !
" இந்த படத்தில் உங்களுக்கு பேர் வாங்கித் தரும் அளவுக்கு ஓர்
அழகான ' டூயட் ' பாடலைத் தரப் போகிறேன், ஆனால் பாடலைப்
பாடப் போகிறவர் டி எம் எஸ் இல்லை, வேறு பாடகரை தேர்வு செய்ய
நீங்கள் எனக்கு சுதந்திரம் தரவேண்டும், சம்மதமா ? "
சிவாஜியிடம் கேட்டவர் டி . சலபதி ராவ் !
" சரி ! "
வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினார் நடிகர் திலகம் !
அந்த பாடல்தான் :
" காணா இன்பம் கனிந்தது ஏனோ ! "
சுசீலாவுடன் சிவாஜிக்கு குரல் கொடுத்த பாடகர் :
டி . ஏ. மோதி !
பாடல் சூபர் ஹிட் !
இன்னொன்று :
" குங்குமம் " படத்தில் " சின்னஞ்சிறிய வண்னப் பறவை எண்ணத்தை
சொல்லுதம்மா ! "
பாடல் ! இந்த பாடலை எஸ். ஜானகியுடன் பாடியவர் :
சீர்காழி கோவிந்தர ராஜன் !
ஆனால் நடிகர் திலகம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை !
டி எம் எஸ் ஐ பாடச் சொல்லி இசையமைப்பாளர் கே . வி .
மகாதேவனிடம் சொல்லிவிட்டார் !
வேறு வழி !
சீர்காழி யை விலக்கி விட்டு டி எம் எஸ் ஐ பாட வைத்தார்கள் !
சீர்காழிக்கு , சிவாஜி மேல் செம கடுப்பு !
" ஐயா ! நீங்கள் எல்லோருக்கும் உணவு பறிமாருங்கள் !
ஆனால் எச்சில் உணவைப் பறிமாற வேண்டாம் ! "
நடிகர் திலகத்திடம் , சீர்காழியார் சொன்ன வார்த்தை !
நடிகர் திலகம் அவரை சமாதானப் படுத்த பெரும்
சிரமப் பட்டாராம் !
' கதை ' இப்படி இருக்க , மெல்லிசை மன்னர்கள் எப்படி
டி எம் எஸ் ஐ மாற்ற துணிவார்கள் !
அழகான, இனிய பியோனா இசையுடன் .....வேகமாகவும்
இல்லாமலும், அதே சமயத்தில் மிகவும் மந்தமான கதியில்
இல்லாமலும்......துன்பமான பாடலும் இல்லாமலும் அதே சமயத்தில்
சோகம் மற்றும் தத்துவப் பாடலும் ஆக இல்லாமலும்,
பாடகர் சிரிக்காமலும் , அழாமலும் .....அதே சமயத்தில் ரசிகர்கள்
' டம் ' அடிக்க தியேடரை விட்டு வெளியே போகாமலும்....
மிகுந்த ' மெலடி' வுடன் பாடலை மிகவும் நேர்த்திவுடன்
இசையமைத்தார்கள் !
இந்த பாடல் இன்றும் வாழ்கிறது !
சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ
எனக்குத் தெரியாது.....
டி எம் எஸ் முதலில் திரைப்படப் பாடல்களை பாட வரும் போது
அவர் ' காமடி ' - நகைச் சுவை பாடல்களை மட்டும் பாடுவதறு
அழைத்தார்களாம் !
பின்னர் " தூக்கு தூக்கி " படம் மூலமாக கிராமியப் பாடல்களைப்
பாடுவதில் வல்லவர் என்று அறியப்பட்டார் !
அப்புறம் ?
" அம்பிகாதி " படம் மூலம் டி எம் எஸ் மிகச் சிறந்த கர்நாடக இசைப்
பாடகர் என்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டார் !
இந்த நிலையில் " பாவ மன்னிப்பு " படத்தில் " வந்த நாள் முதல் "
பாடலைப் பாட யாரைப் போட்டு பாடவைக்கலாம் என்று மெல்லிசை
மன்னர்கள் மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள் !
முதலில் ஜி. கே. வெங்கடேஷ் ஐ வைத்துப் பாட வைத்தார்கள் !
" சரி , இந்த ஆள் நம்ம சிஷ்யன் , படத்தில் சோகப் பாடலுக்கு
இவர் பாடியதை வைத்துக் கொள்ளலாம், ஆனால்
குழந்தையை சைக்கிளில் வைத்து சிவாஜி பாடும் பாட்டை
யாரை வைத்துப் பாட வைப்பது ? "
மீண்டும் மண்டை + குடைச்சல் + கொண்டார்கள் !
பின்னர் வந்தார் டி . ஏ . மோதி !
பாடினால்....' வந்த நாள் முதல் '....
" ச்....ச் ... செ....ச் " - அதான் " உச் " கொட்டினார்கள் அனைவரும் !
" அண்ணே ! நீங்க யார் யாரையோ வைத்து பாட வைக்கிறீர்கள் !
எனக்கு இந்த பாடலைப் பாடுவதற்கு 'சான்ஸ்' கொடுங்கள் !
ஊதித் தள்லிவிடுகிறேன் ! "
சொன்னவர் டி எம் எஸ் - மெல்லிசை மன்னரிடம் !
" ஐயா ! இந்த " வந்த நாள் முதல் " பாட்டு மேற்கத்திய பாணி !
இது உங்களுக்கு பாட வருமா என்று எங்களுக்கு தயக்கம்.....
அத்தான்.... ! "
சற்று தடுமாற்றத்துடன் டி எம் எஸ் விடம் சொன்னார் மெல்லிசை
மன்னர் !
" ' சான்ஸ்' ஐ எனக்கு கொடுத்துப் பாருங்கள் , அண்ணே ! "
---- டி எம் எஸ் !
டி எம் எஸ் பாடினார் !
" வந்த நாள் முதல் ",........... !
பாடல் சூபர் ஹிட் !
டி எம் எஸ் ஆவர்களின் புகழ் இப்படி பரவி இருக்க ...
" யார் இந்த நிலவு " பாடலை டி எம் எஸ் தவிர வேறு எவர்
நன்றாக பாடியிருக்க முடியும்...
சொல்லுங்கய்யா !
எம்கேஆர்சாந்தாராம்
Deep analysis on one song. That is possible only by you Mr VasuJI. You have brought out so many information on
one song and very interesting as well as informative.
Thanks
இல்லை இல்லை. அது நான் எழுதவில்லை. அது சினிமாவைப் பற்றி அதிகம் தெரிந்த சாந்தாராம் என்ற அற்புத நண்பர் எழுதியது. எல்லாப் பாராட்டுகளும் அவருக்கே சேர வேண்டும். கீழே அவர் பெயரை போட்டிருக்கிறேன்.
அப்படியே இதை மறக்காமல் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=wXXP...yer_detailpage
krishna sir,
from my friend's laptop.
உண்மை வாசு சார்
எப்போதுமே நாம் கட்டுரை எழுதியவர் பெயரை குறிப்பிட்டு விடுவோமே
5 ஸ்டார்களை கவனீதீர்களா ?
1. பாடலாசிரியர்
2. இசையமைப் பாளர்
3. பாடகர்
4. பாடல் காட்சியில் நடிப்பவர்
5 இயக்குனர்
உங்கள் பங்களிப்பு மற்றும் கடமை உணர்ச்சி பிரமிக்க வைக்கிறது .வாசு சார்
நடிகர் திலகம் உடல் நலம் குன்றி இருந்தாலும் அல்லது தனது உறவினர்களோ நண்பர்களோ தவறி இருந்தாலும் தயாரிப்பாளர் கஷ்ட பட கூடாது என்று படபிடிப்பை ரத்து செய்யாமல் நடித்து கொடுப்பார் என்று கேள்விபட்டது உண்டு . இப்போது அதை உங்களிடம் காண்கிறேன்
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-6.
இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.
நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.
அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக்ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.
அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.
இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.
"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.
கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.
"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.
ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.
"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.
பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
(தொடரும்)
மனதோடு பேசிய பாடகி ஸ்வர்ணலதா நினைவில்(Thanks to POEM)
பாடகி ஸ்வர்ணலதா மறைந்தோடி நான்கு வருடங்களைத் தொடுகின்றது இந்த நாள்.
சந்தோஷமோ, சோகமோ குரலின் அடி நாதத்தில் சோகம் இழையோடும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியை இழந்த நினைப்பு என்னமோ புதிதாக அவரிடமிருந்து வராதபோது தான் பிறக்கின்றது.
ஸ்வர்ணலதா போன்ற அத்திப்பூக்கள் அடிக்கடி பூப்பதில்லை. ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயிலுக்குக் கிட்டிய பாட்டுகளையும் வேறொருவருக்கும் பொருந்திப் பார்த்துத் திருப்தி காணவியலாதவை. இந்தக் குரலின் இசை நரம்பு மாற்றில்லா அபூர்வம்.
நம் பால்யகாலத்தின் ஞாபகங்களின் எச்சங்களாக, அந்தக் காலகட்டத்தை மீண்டும் எம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கப் பண்ணும் சங்கதிகளில் அந்த நாட்களில் வந்த பாட்டுக்கள் பெரும் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணி விடும். அந்த வகையில் என் வாழ்க்கையின் பதின்ம வயதுகளின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன் குரலினிமையால் வசீகரித்த ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயில் ஓய்ந்த செய்தியை அப்போது கேட்டபோது ஒரு எல்.பி ரெக்கோர்ட் ஐ பாளம் பாளமாக உடைத்து நொருக்கும் நிலையில் இருந்தது என் மனம். அந்தத் துளிர் காலத்து நினைவுகளை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது போல இருந்தது அப்போது.
சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில், தமிழகத்துக் கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர் ஒருவரிடம் பேசும் போது "யார் யாரையெல்லாம் அழைத்து வருகின்றீர்களே, பாடகி ஸ்வர்ணலதாவையும் ஒரு முறை சிட்னிக்கு அழைத்து வரலாமே" என்று கேட்டேன். "அவரை ஏற்கனவே அணுகியிருக்கின்றேன், ஆனால் அவருக்கு விமானத்தில் ஏறிப் பயணிக்க இயலாமையை ஏற்படுத்தும் ஒருவித பயவியாதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார். "சரி அப்படியென்றால் ஸ்வர்ணலதாவின் தொலைபேசி எண்ணையாவது தாருங்கள், நான் ஒரு வானொலிப் பேட்டி எடுக்கின்றேன்" என்றேன். வானொலிப் பேட்டிக்கான தருணம் பார்த்திருக்கையில் அதை முற்றுப்புள்ளியாக்கியிருக்கின்றது ஸ்வர்ணலதாவின் அத்தியாயம்.
தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.
இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப்பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. "குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.
நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார். அந்தக் காலகட்டத்தின் நான் சென்னை வானொலியை நேசித்த போது லல்லு, சத்யா , ரேவதி என்ற முகம் தெரியாத சென்னைவாசிகள் ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பில் தொடர்ந்து கேட்ட அந்தப் பாட்டு என் விருப்பமாகவும் பெயர் சொல்லாது இடம்பிடித்தது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடலில் இவர் கொடுத்த உருக்கத்தை யாரை வைத்துப் பொருத்திப் பார்க்க முடியும்? அந்தக் காதல் அரும்பிய காலகட்டத்தில் நேசித்தவளின் குரலாகப் பிரதியெடுத்தது இந்தச் ஸ்வர்ணலதாவின் ஸ்வரம்.
"மாசிமாசம் ஆளான பொண்ணு" தர்மதுரை படப்பாட்டில் அடக்கி வாசித்த இவர் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்த போதும் தயங்காமல் ஏற்றுக் கொண்டது மனசு. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாட்டின் ஆரம்ப அடிகளில் இவர் செய்யும் ஆலாபனை இருதயத்தை ஊடுருவி காதல் மின்சாரம் பாய்ச்சும்.
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" என்ற அந்த மந்திரப்பாட்டுக் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும்.
1990 ஆம் ஆண்டில் இருந்து 1995 வரையான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இவரை மனதில் வைத்தோ என்னவோ அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தனை மெட்டுக்களும் அந்தந்தப் படங்களின் நாயகிகளுக்குப் பொருந்தியதோடு நம் மனசிலும் அழியாத கோலங்கள் ஆகி இது நாள் வரை தொடர்கின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக்குரல் தேடிடும் பயணத்தில் விட்டுவிலக்காத குயில்கள் வரிசையில் ஸ்வர்ணலதாவுக்கு மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்ததோடு தேசிய விரு(ந்)தாக "கருத்தம்மா" படப்பாடலான "போறாளே பொன்னுத்தாயி" பாடலைக் கொடுத்த பெருமை இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் மகுடம். அந்தப் பாடலில் ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.
ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு "சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா" - நீதிக்குத் தண்டனை
http://www.youtube.com/watch?v=P_uFYt_yoTo&sns=em
"மாலையில் யாரோ" - சத்ரியன்
http://www.youtube.com/watch?v=wGs9MXH42e4&sns=em
"குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" - என் ராசாவின் மனசிலே
http://www.youtube.com/watch?v=XSZ1Go57_FM&sns=em
"என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும் நேரம்" - வள்ளி
http://www.youtube.com/watch?v=x6CvQf2xLNs&sns=em
"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி" - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்"
http://www.youtube.com/watch?v=9Nm04p88DHM&sns=em
"போவோமா ஊர்கோலம்" - சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=tl0cFKXoErQ&sns=em
"காதலெனும் தேர்வெழுதி" - காதலர் தினம்
http://www.youtube.com/watch?v=h0JNePYUg3k&sns=em
"எவனோ ஒருவன் வாசிக்கிறான்" - அலைபாயுதே
http://www.youtube.com/watch?v=Ol2oJlHjKsw&sns=em
"போறாளே பொன்னுத்தாயி" - கருத்தம்மா
http://www.youtube.com/watch?v=Pexy9hx4BNU&sns=em
"நன்றி சொல்லவே உனக்கு என் மனவா வார்த்தையில்லையே" பாடல். சொந்தம் கொண்டாட யாரும் இல்லாத தனியன் ஒருவன், கல்யாணச் சந்தையில் விலை போகாத, ராசியில்லாதவள் என்று ஒதுக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் கைப் பிடிக்கிறான். இந்த இரு உள்ளங்களும் இது நாள் வரை தம் வாழ்வின் சோகப் பக்கங்களைப் பகிர்ந்தவாறே மாறி மாறித் தமக்குள் நன்றி பகிர்கின்றார்கள் இந்த புது வசந்தத்திற்காக. பாடலின் அடி நாதத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் , ஸ்வர்ணலதாவும் அள்ளிக் கொட்டிய அந்தப் பாடல் மீண்டும் நினைவில் எட்டிப் பார்த்துச் சோக ராகம் பிரிக்கின்து.
"திசையறியாது நானே இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே"
http://www.youtube.com/watch?v=OdmOvsezxQk&sns=em
எங்களைப் போன்ற இசையெனும் வேடந்தாங்கல் நாடி வரும் பறவைகளுக்கு நீராகாரமாய் நீக்கமற என்றும் துணை நிற்கும் ஸ்வர்ணலதா கொடுத்த வற்றாத இசை வெள்ளம்.
- Kana Prabha
http://www.youtube.com/watch?v=gkhMbyxVKKc
http://www.youtube.com/watch?v=nUqazZZR3ms
http://www.youtube.com/watch?v=UnsLQxyu-EQ
http://www.youtube.com/watch?v=eNT6UzC2ehI
Rest later. I will give all illustrations. Too many videos will cause problem for readers.
கிருஷ்ணாஜி ,
நீங்கள் cut paste பண்ணும் நிறைய பதிவுகள் விவகாரமானவை. படித்து விட்டு, சிலவற்றை நீக்கி பதிக்கவும்.
எனக்கு யாரையும் விரோதிகளாய் எண்ணியதில்லை. உள்ளதை சொல்வேன்,சொன்னதை செய்வேன் ,வேறொன்றும் தெரியாது, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது.அடிப்பது போல கோபம் வரும்.அதில் ஆபத்து இருக்காது.
இனியாவது இந்த மறை போர் உத்திகளை மறந்து,கருத்து வேற்றுமை இருந்தால் நேரடியாக வரவும்.
நட்போடு தொடர்வதில் விருப்பமே.
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி..
- சீர்காழியார் சென்னைத் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிக்கான கச்சேரி ஒன்றில் பாடியது.
http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI
இதே பாடலை நாதஸ்வரத்தில் இஞ்சிக்குடி சுப்ரமணியன்(ஒரே ஊர்க்காரர்!) வாசித்திருப்பதையும் பார்த்து கேட்டு மகிழலாம்.
http://www.youtube.com/watch?v=qmoGvnVV9pY
வாசு ஜி
வாங்கோ வாங்கோ எங்கே இவ்வளவு நாளாக ஆளை காணோம்.
ஸ்வரணலதாவின் கானங்கள்
https://www.youtube.com/watch?v=8LTAYZHmTbA
https://www.youtube.com/watch?v=aEJrAr1otBc
https://www.youtube.com/watch?v=mh8CEJxbcac
another fav of mano & swarnalatha
https://www.youtube.com/watch?v=hzSI89T40UE
http://i61.tinypic.com/14lo9g.jpg
TMS - S. JANAKI
ONE OF THE MOST POPULAR SONG
http://youtu.be/mS_DsFaQl28
ஹாய் குட்மார்னிங்க் ஆல் :) கொஞ்சம் லேட்டு..
வாங்கோ வெங்க்கி ராம்.. எனக்குப் பிடிச்ச பாட்டு சின்னஞ்சிறு பெண் போலே..அப்புறமா மாலை கேட்கிறேன் தாங்க்ஸ்.. //வெகு சின்ன வயது..மூத்த அக்கா கல்யாணம்.. நாதஸ்வர வித்வானிடம் போய் இந்தப் பாடல் ரெக்வஸ்ட்..மாப்பிள்ளை அழைப்பு டைம்.. அவர் பாடவில்லை..ஆனால் கல்யாணம் முடிந்த இரவோ அல்லது மா.அ அன்று இரவோ நினைவில்லை அவராகவே இசைக்க வேகமாக ஓடி தாங்க்ஸ் மாமா நன்னா வாசிச்சேள் எனச் சொல்ல..கண்களில் ஆனந்தம் பொங்கியது என்ற வார்த்தையை நேரில் பார்த்தேன்..ஒரு சின்னச் சிரிப்பு.. நன்னா இரு..என்பது போல் சொன்ன நினைவு..//
ஸ்வர்ணலதா பாடல்களுக்கு நன்றி ராஜேஷ் ஜி.. சின்னஞ்சிறிய வண்ணப் பறவைக்கு நன்றி எஸ்வி சார்..
அது சரி..போன வருடம் காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் அப்புறம் லே லடாக் போய்க் கொண்டிருந்த போது -ஜீப் - ஒற்றைப்பாதை டூவே ட்ரை- மலைப்பகுதி - போய்க்கொண்டிருக்கையில் - டிரைவர் நிறுத்திவிட்டான்..ஏண்டாப்பா.. இல்லீங்க்னா பக்ரா.. ஆடு என்றான்.. பார்த்தால் - நாங்கள் போய்க்கொண்டிருந்த சாலை ஒருபக்கம் கிடுகிடுபள்ளம் இன்னொரு பக்கம் மலை..அந்த மலைச்ச்சரிவில்சிலபல செம்மறி ஆடுகள் எதிர்பாராமல் பாயும் மாறன் மலர்க்கணை அம்புகள் போல (சே உவமை பொருந்தலை :) ) சரிவில் இறங்கி சாலையில் டபக் படக் என ஓடிக் காணாமல் போயின..ஸம் டைம்ஸ் அவை இறங்கும் போது பாறைகள் கற்களும் சேர்ந்து உருட்டி விடுமாம்.. ஐந்து நிமிடம் கழித்து ஜீப்பைக் கிளப்பிய டிரைவர் சொன்னான்..
எதுக்காக இது..யெஸ் ஹாங்க் ஜீ.. செம்மறி ஆடு..(ஒரு ஆட்டுப் பாட்டுக்குஇவ்ளோ பில்டப்பா டூமச் கண்ணா)
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமா சொல்ல்
தவிக்கின்ற நெஞ்சம் ஒன்று துணை இன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று ஊர் சொல்ல வேண்டாமா..
நல்ல பாட்டு படம் உழவன் மகன்..எஸ்பி பாலு அண்ட் வித்யாவாம்...
vanga si.ka. sowkiyama?paarthu romba nalachu?
செளக்கியமே கோபால் சார்.. :)
இந்த ஆயலோட்டும் பெண்ணேல்ல வர்ற ஆயல் என்பது பறவைகளையாக் குறிக்குது..
ஆடு பாடல்கள் என்று பார்த்தால்..
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் வெகு பொருத்தம் இருக்குது..
சாஞ்சா சாயற பக்கம் சாயற செம்மறி ஆடுகளா..
ஆனா மாட்டுக்கு நிறைய இருக்கறாப்பல இருக்கே
காடுமலை மேடு கண்ட மாட்டு ப் பொண்ணே - பப்ளிமாஸ் கன்ன கல்யாண் குமார் ஏறக்குறைய ஸேம் ஸேம் அன்ன தேவிகா..
மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா
காளை இருக்கு செவலை இருக்கு கண்ணுக்குட்டி எங்கய்யா
அந்தக் கன்னுக்குட்டிய விட்டுப் பாரு கட்டிப் பிடிப்பேன் நானய்யா..
மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு செல்லக் கண்ணு..
மாடாட்டம் வண்ண மயிலாட்டம்..ஓ அது மானாட்டமோ.. அதுக்கப்புறம் நெஞ்சுல மாடு முட்ட மாட்டேங்குது.
http://i58.tinypic.com/28ich0j.gif
மனதை மயக்கும் மதுர கானங்கள் - 15.9.2014 அன்று வெற்றிகரமான 100 வது நாளை தொடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் . ம .ம . ம .கா நிறுவன தலைவர் திரு வாசுதேவன் அவர்களின் தலைமையில் இந்த திரி 8.6.2014 அன்று துவங்கி மாண்பு மிகு உறுப்பினர்களால் சிறப்புடன் பல பாடல்கள் பற்றிய
பதிவுகள் - அலசல்கள் - கருத்து பதிவுகள் என்று பெருமையுடன் 15.9.2014 அன்று வெற்றிகரமான 100 வது நாளை
காண்கிறது .
இந்த இனிய நேரத்தில் மாண்பு மிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் .
மதிப்பிற்குரிய ஆய்வாளர்கள் .
நிறுவனர் - நெய்வேலி திரு வாசுதேவன்
உப தலைவர் - சென்னை திரு கிருஷ்ணா
பொங்கும் பூம்புனல் - திரு ராகவேந்திரன்
பூலோகம் - திரு சின்னகண்ணன்
திரு ராஜேஷ்
திரு மது
மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ் - திரு கோபால்
நடமாடும் பல்கலை கழகம் - திரு கார்த்திக்
திரு வெங்கி ராம்
திரு வாசுதேவன்
திரு யுகேஷ் பாபு
திரு முரளி ஸ்ரீனிவாசன்
திரு SSS
மற்றும் பல நண்பர்கள் .
அடுத்த வெளியீடு .
மனதை மயக்கும் மதுர கானங்கள் - பாகம் - 3 விரைவில் .........................