சுந்தர்ராஜன் சார்
திரிசூலம் மலர் நிச்சயம் பாதுகாத்து வைத்துகொள்ள ஒரு பொக்கிஷமே. ஆனால் அதில் கூறப்பட்ட ஒப்பீடு விதம் சரியில்லை என்பதே எனது கருத்து. காரணம், நமது பராசக்தி படத்துடன் மதுரை வீரன் படம் ஒப்பீடு செய்தால் அது எந்தளவிற்கு சரியாக இருக்காதோ அதுபோல உள்ளது ஒப்பீடு.
மலர் தயாரித்த காலகட்டத்தில் அவர்கள் அப்படி ஒரு ஒப்பீடு எதுவும் யோசிக்காமல் அந்த மன நிலையில் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அதில் கொடுத்துள்ள தகவல் மிகவும் அருமையான தகவல்கள் அது வரையில் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம்.
இதுபோல நானும் விரைவில் என்னிடத்தில் உள்ள நடிகர் திலகம் அவர்கள் நடித்த திரைப்படங்களின் சுமார் 258 படங்கள் வெளியீடு, 50 நாட்கள், 100 நாட்கள், 175 நாட்கள் விளம்பர ஆவணங்கள்...சிறப்பு பேசும்படம் பதிவுகள்...interview , முன்னோட்டம் ஆகியவை E PAPER வடிவில் தரவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்...!
அதனை தங்களுடை WEBSITE www . சிவாஜிகணேசன்.in இல் பதிவேற்றி...நடிகர் திலகம் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வண்ணம் ஒரு பக்கத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !
நாம் இனி யாருடைய எந்த பிரம்மாண்ட நடிகர் திலகம் மலருக்காகவும் தேவுடு காக்கவேண்டாம் பாருங்கள் ..இப்போ வரும்...அப்போ வரும் என்று...ஏமாந்து போவதற்கு ...! அதற்க்கு சொன்னேன் !
Regards
RKS