-
17th August 2015, 10:19 PM
#581
Junior Member
Veteran Hubber

Originally Posted by
SUNDARAJAN
திரிசூலம் வசூல்சாதனை மலர் ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும்.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
சுந்தர்ராஜன் சார்
திரிசூலம் மலர் நிச்சயம் பாதுகாத்து வைத்துகொள்ள ஒரு பொக்கிஷமே. ஆனால் அதில் கூறப்பட்ட ஒப்பீடு விதம் சரியில்லை என்பதே எனது கருத்து. காரணம், நமது பராசக்தி படத்துடன் மதுரை வீரன் படம் ஒப்பீடு செய்தால் அது எந்தளவிற்கு சரியாக இருக்காதோ அதுபோல உள்ளது ஒப்பீடு.
மலர் தயாரித்த காலகட்டத்தில் அவர்கள் அப்படி ஒரு ஒப்பீடு எதுவும் யோசிக்காமல் அந்த மன நிலையில் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அதில் கொடுத்துள்ள தகவல் மிகவும் அருமையான தகவல்கள் அது வரையில் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம்.
இதுபோல நானும் விரைவில் என்னிடத்தில் உள்ள நடிகர் திலகம் அவர்கள் நடித்த திரைப்படங்களின் சுமார் 258 படங்கள் வெளியீடு, 50 நாட்கள், 100 நாட்கள், 175 நாட்கள் விளம்பர ஆவணங்கள்...சிறப்பு பேசும்படம் பதிவுகள்...interview , முன்னோட்டம் ஆகியவை E PAPER வடிவில் தரவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்...!
அதனை தங்களுடை WEBSITE www . சிவாஜிகணேசன்.in இல் பதிவேற்றி...நடிகர் திலகம் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வண்ணம் ஒரு பக்கத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !
நாம் இனி யாருடைய எந்த பிரம்மாண்ட நடிகர் திலகம் மலருக்காகவும் தேவுடு காக்கவேண்டாம் பாருங்கள் ..இப்போ வரும்...அப்போ வரும் என்று...ஏமாந்து போவதற்கு ...! அதற்க்கு சொன்னேன் !
Regards
RKS
-
17th August 2015 10:19 PM
# ADS
Circuit advertisement
-
17th August 2015, 11:19 PM
#582
Junior Member
Veteran Hubber
LISTEN TO VIETNAM VEEDU SUNDARAM - EVERY CHILD IN THE UNIVERSE WILL REALISE & VOUCH WHO POSSESSED PHENOMENAL REAL TALENT AND EXPERTISE IN ALL THE FUNCTIONS OF FILM NUANCES YET REMAINED HUMBLE !!!
Last edited by RavikiranSurya; 17th August 2015 at 11:32 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th August 2015, 12:22 AM
#583
ஆர்கேஎஸ்,
இரண்டு மூன்று நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது. உண்மைகள் நிறுவப்பட வேண்டும் என்ற உங்கள் துடிப்பும் புரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இவர் முன் வந்து பேசவில்லையே இவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று யாரையும் சொல்லிக் காட்ட வேண்டாமே! அதிலும் ராகவேந்தர் சார் உங்களை விட வயதில் மிகவும் மூத்தவர். அவருக்கென்று ஒரு வழியை தேர்ந்தெடுத்து அவர் பயணம் செய்கிறார். அவரின் ஸ்டாண்ட் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அதற்காக அவரை விமர்சிப்பது சரியா?
நானும் அவரும் கூட ஒரு சில விஷயங்களில் முரண்படுகிறோம். அதற்காக அவர் மீது விமர்சனம் வைக்க மாட்டேன். ஏன் நேற்றுக் கூட, வாசு பதிவிட்ட நாம் பிறந்த மண் பாடலுக்கான பின்னூட்டத்தில் பெருந்தலைவர் பற்றிய வரியை குறிப்பிட்டு இதே பாடல் 1975-க்கு முன் வந்திருந்தால் பலரும் பாராட்டியிருப்பார்கள் என்று என்னை வாரியிருந்தார். நான் அதை எளிதாகதான் எடுத்துக் கொண்டேன். அவர் நிலைப்பாடு அவருக்கு என் நிலைப்பாடு எனக்கு. அதில் நான் உறுதியாக் இருப்பேன்.
மற்றொரு விஷயம். இதை நான் இரண்டு மூன்று தடவை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். பல நேரங்களில் பல உண்மைகள் நமக்கு தெரிந்தால் கூட ஒரு சில விஷயங்களை கருதி நாம் அதை தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை. இங்கே சில விஷயங்கள் விவாதிக்கப்படும்போது அதே கோணத்தில் எடுத்துக் கொண்டாலே போதுமே!
உங்கள் சக்தி ஆக்கப்பூர்வமாக செயல்படட்டும்!
அன்புடன்
-
18th August 2015, 12:41 AM
#584
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
நாம் பிறந்த மண் பாடலைப் பற்றிய பின்னூட்டத்தில் நான் குறிப்பாக யாரையும் சுட்டிக்காட்டி எழுதவில்லை, தாங்கள் உட்பட. அன்றைக்கு இருந்த காலகட்டத்தில் அப்படமோ பாடலோ பெற வேண்டிய வரவேற்பினைப் பெறவில்லையே என்ற கோபம் எனக்கு எப்போதுமே உண்டு. அந்தக் கால கட்டத்தில் சிவாஜி ரசிகர்கள் இரு கூறாகப் பிரிந்ததன் விளைவில் வந்த ஆதங்கத்தின் காரணமாக படம் வெளியான அன்றே இக்கருத்தை நான் சொல்லி யிருக்கிறேன். முன்பே வேறோர் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சித்ராவில் படம் வெளியாகியது, ரசிகர் மன்ற சிறப்புக் காலைக்காட்சி சாந்தியில் நடைபெற்றது. முதன் முதலில் ரசிகர்களுக்குள் அரங்கத்தினுள்ளேயே மோதல் ஏற்பட்டது. சிவாஜி ரசிகர் எனச் சொல்லிக்கொண்டு நடிகர் திலகத்தைத் தரக்குறைவாக விமர்சித்த ஒருவர், குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய சந்தனத் தேவன் வாழ்க்கை வரலாற்றை வின்சென்ட் அவர்கள் மிகவும் பாடுபட்டு உருவாக்கிய அந்த சித்திரத்தை மனம் போன போக்கில் அரசியல் காரணங்களுக்காக விமர்சித்த போதே இதில் யார் யாரோ உள் நுழைந்து இது தான் சாக்கு என நடிகர் திலகத்தை கேவலப்படுத்த தங்கள் காழ்ப்புணர்ச்சியைக் கொட்ட சரியான தருணமாக மாற்றினர். இந்த கருத்தை புதியதாக உங்களுக்காகவோ அல்லது இன்றைக்கு இருக்கும் ரசிகர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படத்தினைப் பற்றித் தாங்கள் என்னிடம் பேசும் போது பல முறை பாராட்டிக்கூறியுள்ளீர்கள். அதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எனவே யாரையும் குற்றம் கூறும் நோக்கில் அந்தப் பதிவில் நான் எதையும் எழுதவில்லை, தாங்கள் உட்பட.
நான் சொல்லாத ஒன்றை ஆர்கேஎஸ் அவர்கள் கூறுகிறார். நல்லிணக்கம் வேண்டியே நான் எந்தக் கருத்தையும் எதிர்க்காமல் மௌனம் சாதிக்கிறேன் என்பதாக. கருத்துப் பரிமாற்றங்கள் கொண்டும் நல்லிணக்கம் பேண முடியும். என்னிடம் கைவசம் ஆதாரம் இருந்தாலொழிய நான் இந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை என்பதை இந்த மய்யத்தில் நான் இணைந்த நாள் தொட்டு கடைப்பிடித்து வருவது ஆர்கேஎஸ்ஸுக்குத் தெரியுமோ இல்லையோ தங்களுக்குத் தெரியாமல் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை என்கிற காரணத்தால் இவையெல்லாம் என் நினைவிலும் அவ்வளவாக இல்லை. அந்நாட்களைப் பற்றிய நினைவாற்றலில் தங்களுடையதில் ஒரு சதவீதம் கூட எனக்குக் கிடையாது, குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ஓடிய நிலவரங்களைப் பொறுத்த மட்டில்.
பம்மலாரைப் பற்றி எழுதி்யுள்ளார். இன்று இவர் இணையத்தில் மேற்கோள் காட்டும் பெரும்பாலான ஆவணங்கள் நமது ஆவணத்திலகம் பம்மலார் அவர்களுடையதே. அவருடைய ஆவணங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவர் ஆதரவு தரவில்லை என அவர் மீதே குற்றம் சாட்டுகிறார். இதை நீங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. அவருடைய பதிவுகள் நீக்கப்பட்டு விட்டாலும் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அப்படியே தான் இருக்கும்.
தாங்கள் கடைசி பாராவில் எழுதியதை நானும் ஆமோதிக்கிறேன். அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
Last edited by RAGHAVENDRA; 18th August 2015 at 12:50 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th August 2015, 06:55 AM
#585
Senior Member
Diamond Hubber
செந்தில்வேல்,
'பைலட் பிரேம்நாத்' பாடலைக் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் இடையிடையே நம் தெய்வத்தின் புகழ் பாடியிருப்பது சுவை. மகிழ்ச்சி. தொடருங்கள். ரசிக்கக் காத்திருக்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th August 2015, 08:45 AM
#586
Senior Member
Devoted Hubber
மனதை தேற்றிக்கொள்ள இப்படியும் வழிகள் உண்டா?
(மேலே உள்ள உங்களுக்கில்லை இது வேறு)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th August 2015, 08:59 AM
#587
Senior Member
Devoted Hubber

Originally Posted by
raghavendra
சுந்தர்ராஜன்
அருமை நண்பர் எத்திராஜ் அவர்களின் திரிசூலம் மலரைப் பத்திரமாக வைத்திருந்து இன்று பார் போற்றும் வண்ணம் இணையக் கோப்பாக மாற்றி எல்லோரும் உண்மையை உணரும் வண்ணம் அளித்துள்ள தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
.
70 பதுகளில் என்னுடன் கடிதத்தொடர்பாடலில் இருந்தவர்
நண்பர் திரு d.எத்திராஜ் அவர்கள்
தற்சமயம் இவர் மதுரையில் இருப்பதாக தகவல்
அவரை தொடர்புகொள்ளக்கூடிய நண்பர்கள்
எவரேனும் இருப்பின் அறியத்தாருங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th August 2015, 09:12 AM
#588
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
சுந்தர்ராஜன்
இந்த மலரில் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய நண்பர்கள் சிவா எ சிவானந்தம், கதிர் காமநாதன், மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து என உலகெங்கும் அந்நாட்களிலேயே இருந்த குறைந்த பட்ச வசதியான அஞ்சல் தலை மற்றும் உறைகளின் பயன்பாட்டுடன் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதும், அவற்றைத் தொகுத்து மலராய் வெளியிட்டதும் எத்துணை சிரமம் என்பதை அறியலாம்.
.
ராகவேந்திரா சார் நண்பர் கதிர்காமநாதனுடைய பழைய விலாசத்திற்கு
கடந்த வருடம் கடிதம் அனுப்பி ஒருமுறை பதிலும் கிடைத்தது
என்ன நடந்ததென தெரியவில்லை அதன் பின் அவரிடம் இருந்து
பதில் ஏதும் வரவில்லை
சோகம் என்னவெனில் மலரில் குறிப்பிடப்பட்டுள்ள
நாகர்கோயில் நண்பர் செல்வராஜ் அவர்கள்
கடந்தவருடம் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th August 2015, 10:07 AM
#589
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
ராகவேந்திரா சார் நண்பர் கதிர்காமநாதனுடைய பழைய விலாசத்திற்கு
கடந்த வருடம் கடிதம் அனுப்பி ஒருமுறை பதிலும் கிடைத்தது
என்ன நடந்ததென தெரியவில்லை அதன் பின் அவரிடம் இருந்து
பதில் ஏதும் வரவில்லை
சோகம் என்னவெனில் மலரில் குறிப்பிடப்பட்டுள்ள
நாகர்கோயில் நண்பர் செல்வராஜ் அவர்கள்
கடந்தவருடம் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
செல்வராஜ் மறைந்து விட்டாரா.. மிகவும் மன வருத்தமாயுள்ளது. கப்பலோட்டிய தமிழன் நினைவு தான் வருகிறது.
அல்சூர் ஜெயகுமார் மறைவு மனதை மிகவும் பாதித்தது என்றால் இதுவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th August 2015, 02:16 PM
#590
Junior Member
Junior Hubber
வணக்கம்
வீர பாண்டிய கட்டபொம்மன் வரும் வெள்ளி 21/08/2015 வெளியாவது சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த படம் தமிழகம் முழுவதும்
நல்ல திரைஅரங்குகளில் வெளியாக வேண்டும் என்று எங்கள் திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜிபக்தர்கள் கடந்த சில தினங்களாக பெரும் முயற்சி
செய்து வெற்றி அடைந்து விட்டோம்! அதற்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து ஊர்களிலும் உள்ள நம் ரசிகர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள் !
குறிப்பாக திருச்சி தஞ்சை ஏரியாவில் பெரும் முயற்சி செய்து உழைத்த அன்பு நண்பர் சௌத்ரிராம் அவர்களுக்கு என் நன்றி!
எங்கள் மாரிஸ் குரூப் சிவாஜி இருந்த போதும் அவர் புகழ் பரவ உழைத்தோம்! அவர் இல்லாத போதும் உழைத்து கொண்டிருக்கிறோம்!
அந்த வேலைகளினால் கடந்த சில தினங்கள் பதிவிடவில்லை! இனி அதிகம் பதிவிடும் எண்ணமும் இல்லை !
பொதுவான இரு திரி ரசிகர்களிடம் ஒரே ஒரு கேள்வி ! என் பதிவில் வேகம் இருந்திருக்கும்! நான் மறுக்கவில்லை ! ஆனால் வார்த்தைகளில் கண்ணிய
குறைவோ செய்திகளில் உண்மையற்ற தன்மையோ இருந்ததாக கூற முடியுமா?
பொய் செய்திகள் பதிவிட்டு என்னை நானே ஏமாற்றி கொள்ளும் நபர் நானில்லை! அதைபோல் உறுதி படுத்தப்படாத சிவாஜியின் சாதனைகளையும் பதிவு
செய்ய மாட்டேன் !
சில நண்பர்கள் எதுக்கெடுத்தாலும் ஆதாரம் கேட்டு வாதத்தை திசை திருப்புவதை சாமர்த்தியமாக செய்கிறார்கள்! இப்படி இணையதள வசதி வருமென்று
அக்காலத்திலேயே அறிகுறி தெரிந்து இருந்தால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் ஆதாரங்களை பாதுகாத்து இன்று பதிவிட்டு எளிதாக நிரூபிக்க வசதியாக
இருந்திருக்கும்! பொதுவாக 1950 முதல் 1960 வரையிலான படங்களில் தான் ஓடிய விவரங்களில் சில சந்தேகங்கள், சில உறுதிபடுத்த முடியாத விவரங்கள், இரு தரப்பு நண்பர்களுக்கும் இருக்கும் ! அதை கூட ஏற்க வேண்டாம்! 1960 க்கு பிறகு ஓடிய படங்களுக்கு சாட்சியாக ஒரு சிறு சந்தேகம் கூட இல்லாமல் ஒப்பு கொள்ளும் உண்மையான இரு திலகங்களின் ரசிகர்கள் இன்றும் ஆயிரக்கணக்கில் உயிரோடு தான் இருக்கிறார்கள் நண்பர்களே!
உங்களுக்கு சந்தேகம் உள்ள விசயங்களில் அந்த நல்ல உள்ளங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாமே ? மக்கள் திலகம் சினிமாவில் சாதனைகள் பல செய்திருக்கிறார் என்று ஒப்புகொள்ள மறுக்கும் முட்டாள் அல்ல நான்! ஆனால் அவரை விட சினிமாவில் அதிக சாதனைகள் படைத்தது மட்டுமின்றி இன்று
வரையிலும் நெருங்க கூட முடியாத எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் நான் உயிராக மதிக்கும் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே! இது என் கருத்து
மட்டுமல்ல ! சத்தியமான சினிமா வரலாற்று உண்மை! உண்மை! உண்மை!
நன்றிகள் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
sss liked this post
Bookmarks