வாங்க எஸ்வி சார்.. நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது முன்பே ரேடியோவில் கேட்ட நினைவு.. ஆனால் உ.சு.வா எனத் தெரியாது..படமாக்கப்பட்டதா என்ன..
Printable View
வாங்க எஸ்வி சார்.. நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது முன்பே ரேடியோவில் கேட்ட நினைவு.. ஆனால் உ.சு.வா எனத் தெரியாது..படமாக்கப்பட்டதா என்ன..
நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
தமிழ் புத்தாண்டு முத்திரை பதிக்கும் சித்திரை வெயிலுக்கான குளிர் வாழ்த்துக்கள் ...!
Bed of Roses and Path of thorns! Bouquet and Brickbat in GG starrers!
காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
Quote:
மனித வாழ்வு சுழற்ச்சியில் மலர்ப் படுக்கை போன்ற இன்பமும் முள்பாதை போன்ற துன்பமும் மாறி மாறி அலைக்கழிப்பது இயல்பே!
மனித வாழ்வியலை உருவகப் படுத்தும் திரைப்படங்களிலும் சிலசமயம் கதைக் கருவுக்கேற்ற திரைக்கதை சீராக அமைந்து ஒரு மலர்படுக்கையில் நாம்புரள்வது போன்ற ரசனை இன்பத்தைத் தருவதும் வணிகரீதி கண்ணோட்டத்தில் பலசமயம் திரைக்கதை தடம் புரண்டு சீரற்ற வரிசையில் பயணிக்கும்போது
முள்பாதையாக மாறிக் குத்துவதும் காலம்காலமாக நாம் கண்ணுற்று அனுபவிப்பதே !
மலர்க்கொத்தாயினும் கல்லடியாயினும் காதல் மன்னர் பெரும்பாலும் தனது பங்கை சீராக அளித்து தனது பாத்திரப் படைப்பை மக்கள் ரசனைக்கேற்ப பதமாக மனதில் பதிப்பதில் வல்லவரே! பாலைவனத்தில் சோலைகளும் (Oases) பயணப் பாதையில் பூங்காக்களும் (Traffic Islands) கண்ணுக்கும் மனதிற்கும் இதமே!
தோல்வியடைந்த படங்களிலும் தனது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றும் காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Quote:
Quote:
இயக்குனர் செம்மல் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படம் கல்யாண பரிசு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆவலாக எதிர்பார்க்கப் பட்டு எதிர்பாராத விதமாக தோல்வியையே தழுவ நேர்ந்தது !
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் இளமை மந்திரத்தை ஸ்ரீதரால் மீண்டும் பிரயோகிக்க முடியவில்லை ...வயது ஏறுவது வெளிப்படையாகத் தெரியும்
ஜெமினி காஞ்சனா முத்துராமனுடன் பாலைவன சோலையாக பயணப் பாதைபூங்காவாக மச்ச கன்னி பாரதி.......ரோஜா மலர்ப்படுக்கை சுகமாக
மனதை வருடும் மெல்லிசை மன்னரின் சுகந்தமான இசையமைப்பில் காதுகளில் தேன் பாய்ந்த இனிமையான பாடல்கள் ...ஜெமினியின் இதமான
சீரான மனதை ஈர்க்கும் மிகையற்ற மிருதுவான நடிப்பின் வெளிப்பாடுகள் ....இருந்தும்.....தோல்வியே!
ரோஜா மலர் படுக்கையில் தேனை அள்ளிப் பருகும் வண்டாக நாம் !
1.இப்படத்தின் மூலம் நமக்கு ஒரு சாகாவரம் பெற்ற காதல் மனதின் உருவகப் பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' கிடைத்தது!
அந்தக் கால கட்டத்தில் எனக்குத் தெரிந்து தினமும் இந்தப் பாடல் அளவு வேறு எந்தப் பாடலும் நேயர்களால் வானொலியில் விரும்பிக் கேட்கப்படவில்லை! சாதனைப் பாடல் !
ஸ்ரீதருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பாடலை உயிர்பித்த ஜெமினி பாரதி இணைவிற்கும் நன்றிகள்!!
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
2. காதல் மன்னர் என்னை அடிமையாக்கிய மிகச் சிறந்த பாடல் காட்சியமைப்பில் எஸ்பி பாலசுப்ரமணித்தின் ஜெமினிக் குழைவிலான இப் பாடலுக்கு என்றும் என் மனதில் தனியிடமே!
Enjoy the english translation of the lyrics as subtitles!!
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
பயணப் பாதை கரடுமுரடான முள் படுகையானதால் நொந்துநூலான நாம்!
1. திரைக்கதைத் தடுமாற்றத்தில் நம்மைக் கடித்துக் குதறிய கற்பனைப் பஞ்சமான பாடல் காட்சி!
https://www.youtube.com/watch?v=7Srv1I9aOF4
The Traffic Islands Mirages and Speed Breakers in GG Starrers!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
நெரிசல் நிறைந்த போக்குவரத்தில் வேகத்தடைகளும் கானல்நீர் தோற்றங்களும் பாதையோர பசுமைப் பூங்காக்களும் சகஜமே !
பசுமைப் பூங்கா
https://www.youtube.com/watch?v=6fiqHLAHhLE
பாலைச் சோலை
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
வேகத்தடை/கானல்நீர் தோற்றம் !
https://www.youtube.com/watch?v=AcZIhu9xXWg
https://www.youtube.com/watch?v=e_5pjnQ2rUU
அருமை சி.செ.ஜி..
அவளுக்கென்று ஒரு மனம் ( அது ஒரு மனமா அல்லது ஓர் மனமா என்று பெரிய குழப்ப கிச்சடி நடந்ததும் உண்டு )... நல்லா ஓடியிருக்க வேண்டிய படம். அதன் ஹிந்தி பதிப்பும் (துனியா க்யா ஜானே ) இதன் வழியே நடந்து விட்டது. காவியத் தலைவனாக நடித்தவர் இப்படி மழையில் குதிக்கலாமா என்று கேட்டவர்களுக்கு அதுதான் வெர்சடைல் ஆக்டிங்... அப்பராக நடித்த நடிகர் திலகம் அடுத்த படங்களில் ஜிலுஜிலு டான்ஸ் ஆடிக் காட்டவில்லையா என்று சொல்லி வாயடைத்தார்கள். படம் மறந்து போனாலும் பாடல்கள் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
உங்க லிஸ்ட் போக இன்னும் காஞ்சனா பூஜை செய்யும் "மனமெல்லாம் உன் கோவில்" மற்றும் கடைசியில் பாரதி சிறைக்குச் செல்லும்போது ஒலிக்கும் "ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம்" பாடல்கள் அதிகம் ஒலித்ததில்லை..
சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் பாட்டு படத்தில் லேது..
சிக்கா... சுசீலா பாடி படத்தில் இடம் பெறாத பாடல் லிஸ்ட் போடுவோமா ? ம்ம்.. சில பாடல்கள் பின்னர் நீக்கப்பட்டும் இருக்கலாம்.
1. நினைக்கும்போது - உலகம் சுற்றும் வாலிபன்
2. நீ தொட்டு பேசினால் - நினைத்ததை முடிப்பவன்
3. மன்னன் ஒருவன் மஞ்சத்தில் - கலாட்டா கல்யாணம்
4. நீராடும் கண்கள் இங்கே - வெண்ணிற ஆடை.
5. மஹாராஜன் உலகை ஆளலாம் - கர்ணன் ( டி.எம்.எஸ்)
6. கண்ணழகின் சன்னதியில் - நானும் ஒரு பெண்
7. தென்றல் வரும் சேதி வரும் - பாலும் பழமும்
8. மேகம் வந்தது மின்னல் வந்தது - கவிதா
9. அத்தான் நிறம் சிவப்பு - நிறைகுடம்
10.கண்களினால் காண்பதெல்லாம் - நாடோடி (டி.எம்.எஸ் )
11. கொடுக்க கொடுக்க இன்பம் - நான் ஆணையிட்டால் ( எம்.எஸ்.வி)
தொடருங்க...
ராகவ் ஜி...
நெஞ்சிருக்கும் வரை படம் அந்தக் காலத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் "எங்கே நீயோ நானும் அங்கே" பாடல் இரு வெர்ஷன்கள் ( ஒன்று நார்மல் மற்றது சோகம் ) கேட்டிருக்கிறேன். அனேகமாக நார்மல் பாட்டுதான் கேட்பேன். ஆனால் பிற்காலத்தில் படம் பார்த்தபோது சோகப்பாட்டு மட்டும்தான் இருந்தது. இப்போதும் நெட்டிலும் எங்கேயும் அந்த நார்மல் வெர்ஷன் வீடியோ இல்லை. ( ஆடியோ கிடைக்குது )
அது படத்தில் இருந்துச்சா இல்லையா ?
ஹாய் ஹாப்பி ராம நவமி டு ஆல்
மதுண்ணா.. பி சுசீலா படத்தில் வராத பாடல்களுக்கு தாங்க்ஸ்..
இந்த பாடினார் கவிஞர் பாடினார் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அதே போல ஊ.வ உ லைஉம் ஒரு பாட் உண்டே மறந்து போச்..
புத்தம் புது காலையும் படத்தில் கட் பண்ணியிருந்தார்கள்..வெகு நாட்கள் கழித்து வெகு வருடங்கள் கழித்து போன வருடமோ முந்தின வருடமோ வீடியோ யூட்யூபில் பார்த்தேன்.. நல்லவேளை கட் பண்ணினார்கள் என நினைத்துக் கொண்டேன்..
ஈவன் பொதிகை மலை உச்சியிலே யில் ஒரு பாரா கட் பண்ணியிருப்பார்கள்..ஆனால் அது சென்சார்க்காக..
நானும் நெஞ்சிருக்கும் வரை அந்தக்காலத்தில் பார்த்ததோடு சரி..மேக்கப் இல்லாமல் ந.தி பார்க்கலாம்..கே.ஆர்.வி..ம்ஹுஹூம்..
ராமன் பாட்டென்று லிஸ்ட் போட்டால்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் எத்தனை ராமனடி
ஜகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ (மிஸஸ் ராமன்)
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே..
பழகிய ராமன் வரவை எண்ணி பார்வையில் அவள் பூத்திருந்தாள்..ஸாரி டைப்போ பாதையில் அவள் காத்திருந்தாள் :)
ராமனுக்கு மன்னன் முடி தரித்தானே..
ராமா ராமாஸ்ரீராமா
ராமன் கதை கேளுங்கள்
https://youtu.be/ra6qETtPYz0
சீதா ராம சரிதம்..(ஜெகம்புகழும் ரீமேக்..ஒட்டலை)
தேவர்கள் சிந்திக்க நாவெல்லாம் தித்திக்க சீதா ராமர் கதை இது ( இது ஓ.கே.. காரணம் டயானா மரியம் குரியன்!)
https://youtu.be/TMBXi7NBA8M
இன்னும் நிறைய ராம் இருக்கோன்னோ..எனக்கு நினைவுக்கு வரலை...
ராகவ் ஜி.. வியட் நாம் வீடுக்கான உங்கள் கருத்து தான் அடியேனோடதும்.. தாங்க்ஸ்ங்க்ணா..
மதுண்ணா!
படங்களில் இடம் பெறாத சுசீலாவின் பாடல்களை பட்டியல் போட்டுட்டீங்க ஜோராகவே. இதோ முன்பு நான் பதிந்த 'கண்ணழகின் சன்னதியில்'
http://www.mayyam.com/talk/showthrea...990%3B/page324
https://www.youtube.com/watch?v=A9aJH7D334w
இதில் 7 நிமிடம் சென்று 11 நிமிடம் வரை குதூகலம்.குமார் என்ற இசையமைப்பாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சிகளுக்கு கணக்கே இல்லை.1965 முதல் 1975 வரை தொடர்ந்தவற்றில் இந்த மாப்பிள்ளை அழைப்பும் வாலியுடன் அவர் கொடுத்த இன்ப அதிர்வே 1972 இன் மாப்பிள்ளை அழைப்பு..
வழக்கொழிந்து போன ராகவன் ,ராட்சஷி இணைவில் இது ஒரு ஜாலி திருவிழா. நமது ஈஸ்வரி கடாத்ஷத்தில் அந்த ஹ , வ்வா வ்வா வ்வா வ்வா ,அடடா.....என்ன குழைவு....என்ன கொஞ்சல்.....என்ன ஜாலி இசை..... ராகவன் தனது அற்புதமான பாடும் முறையால் ஈஸ்வரியுடன் இழையும் -இணையும் அழகு.
சராசரி காட்சி.நாகேஷிடம் இருந்து ஜூனியர் காஞ்சனா (என்னா சூடு,வீ.பா குழந்தை,உணர்ச்சிகள் உணர்ச்சி விதவை,கிண்ணத்தை ஏந்திய நம் குறுகிய கால அண்ணி)எதையோ எடுக்க ,தேங்காய் துணையுடன் நடிக்கும் சாதாரண காட்சி.
மாப்பிள்ளை அழைப்பில் உள்ளத்தில் நூறு நினைக்கும் நாயகி நமது விஜயலலிதாவாக்கும்.காலம் வெல்லும் புகழ் மாதங்கன் கதை .வசனத்தில் ,நமது மருத நாட்டு வீரன் ரகுநாத் இயக்கம்.
இந்த படத்துக்கு ரெண்டு பேர். பலே ஆனந்தன் என்று நினைக்கிறேன்.
ஜாலி படம் ஹீரோ miscast ஆனதால் படு தோல்வி கண்டது.
சின்னா!
நீங்க தான் யானை. உங்க அவ்தாரை ஒருதரம் பாருங்கோ.:) பூனையாய் இருப்பதே பூலோகத்தில் சிறந்தது. அப்போதான் இருட்டில் திருட்டுத்தனம் பண்ண முடியுமாக்கும். ஐ மீன் பால் குடிப்பதை சொன்னேன். பசும்பால்.:) ஒரு பாட்டை மறுதரம் போட்டா சறுக்கலா?:banghead: அதற்க்கும் முன்னாடியே அதை நான் போட்டுட்டேங்காணும்.:yessir: அது எனக்கும், கோபாலுக்கும் மட்டுமே சொந்தம் என்று நாங்கள் சொல்லிக் கொள்வது. அந்தப் பதிவு அவருக்கு மட்டுமே. ராமு ராஜா நட்பு. ஆமா! அது என்ன? 'கோ'வைக் கொஞ்....சி..... ('நற நற நன்றி ந்றி றி' வேற):) நான் எங்கேப்பா கொஞ்சினேன்? 'புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா.:) கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட....
இதே எல்.காஞ்சனா அதே நாகேஷுக்கு தங்கையாக ஒரு படம் நடித்து 'ஸ்ரீ' யுடன் ஜோடி சேர்ந்து ஒரு அட்டகாசமான டூயட் அடித்தாரே. டூயட்டில் பாலா குரல் வருவதால், தொடர் பாதிக்கும் என்பதால் பாட்டி சொன்ன விடுகதையா... புதிரா சொல்றேன். புதிரை மதுண்ணா அவிழ்த்துடுவார்னு தெரியும். சின்னா கவிழ்த்திடுவார்னும் தெரியும்.:)
//புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட// கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட (எனக்குப் பிடிக்காத ) ரோஜாவோன்னோ...” கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்.. நீங்களும் சும்மா இல்லை..கோ சுடச்சுட பஜ்ஜி கொடுத்தாலும் அதை ஐஸ்க்ரீமா நினச்சு உருகுவீர்..” என்றெல்லாம் ஆன்றோர்கள் சொல்வார்கள் :) (ஆனா இப்பல்லாம் கோபால் முன்பை விட வெகு அழகாக பிரமாதமாக எழுதுகிறார் என்று நான் சொல்வதை ரசிக்காவிட்டாலும் அது அவருக்கே தெரியும்..இப்படியே தொடர்வார் என எதிர்பார்க் பார்க் க்கிறேன்.. :) ஹைய்யா கோச்சுண்டு ஒருமாசம் வரமாட்டாரே :) )
உமக்குத்தான் உவமை சொல்லத்தெரியுமா..சலங்கை கட்டிக்கொண்டு ச்சும்மா சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே பானுப்ரியா மம்முட்டியிடம் அழகனில் சொல்வாரே..லவ் இஸ் நாட் பொஸாஸிவ்.. நு என்னமோ ஒரு தத்வம்..அந்த மாதிரி பொஸஸிவ்வா இருந்தா தப்பா. ஆனா நான் பொ..இல்லை.. நட்புல பொ இருக்கப்படாது..இருக்கவும் இருக்காது..இல்லியோ..ராமு ராஜா நட்பா.. ம்ம் பாவம் விழி..அடிக்கடி இமை கோச்சுக்குமே..
எல்.காஞ்சனாவை இனிமே தான் பார்க்கணும்..:)
//கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்//
கோபாலுக்குத் தெரியாத கெட்டவனும் நான்தான்:)
'அவளுக்கென்று ஓர் மனம்' அடுத்து ஸ்ரீதருக்கு 'அலைகளா'ய் தோல்வி. முன்னதை விட தோல்வி. சொல்ல முடியாத அளவுக்கு அலைஅலையாய் அடுக்கடுக்காய் துன்பங்களை ஸ்ரீதர் நாயகி இதிலும் அனுபவிக்க, அநியாய தோல்வி கிடைத்தது மீண்டும் ஸ்ரீதருக்கு.
https://i.ytimg.com/vi/78rcHhkh7dM/hqdefault.jpg
விஷ்ணு ஜெயச்சந்திரன் மூலம் 'சந்திரகலா' சுவைத்து 'பொன்னென்ன பூவென்ன கண்ணே'வை வைத்த போது 'அலைகளி'ல் அது மட்டுமே நம் கண்ணாடி உள்ளத்தில் அழியா பிம்பமாய் இன்றும் பிரதிபலிக்கிறது.
முன்னது பாடல்களில் மணிமகுடம் தரித்தது. சுசீலா, ஜானகி அவரவர்களுக்கென்று நம் மனதில் மீண்டும் ஓர் இடத்தைப் பிடித்தார்கள்.
ஆனால் 'அலைகளி'ல் ராட்சஸி பிரளய சுனாமி நடத்துவர். ஆனால் சுனாமி எடுபடாமல் அடங்கிவிட்டது. பிரபலம் ஆகாவிட்டால் என்ன! நம்மில் சிலர் இருக்கிறோமே அந்த அபூர்வ முத்துக்களைப் பொறுக்கி ரசிப்பதற்கு. அது போதும்.
'பச்சை இலை போலே பட்டுச் சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே!
உச்சிவரை பறந்து பூமியை மறந்து
ஊர்வலம் நடத்திடும் அழகுகளே!
அச்சம் என்பதில்லையே!
ஆசை கொண்டதில்லையே!
என்றும் உங்கள் வாழ்வில் விடுதலையே!'
என்று உல்லாச குதூகலமிட்டு காதுகளுக்கு அமுதூட்டும் ஈஸ்வரியை மிஞ்ச யார்? எழுபத்து மூன்றோடு மறந்து விட்ட பாடல். ஆனால் எந்நாளும் நான் கேட்டு கேட்டு இன்புறும் பாடல். 'பிராப்த'த்தின் 'சலசல ஆத்தோட்ட'மும் நினைவுக்கு வந்து போகும். இதுவும் சந்திரகலாவே.
ஜானகியும் அழ வைப்பார் அபூர்வமாக.
'ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ...
இது நினைவோ... வெறுங்கனவோ'
கேட்கையில் வெறுமையில் நம் மனம் வெதும்புவதை உணர முடியும். மனதில் இனம் புரியா பாரங்கள் வந்து அழுத்தும். கண்களில் நீர் மல்கும்.
'கானல் சிலர் கண்ணில் நீராகத் தெரியும்
காணும் கண் செய்த தவறு'
முடிந்தவுடன் வரும் புல்லாங்குழலின் அவசர ஓசைகள் அநியாய அதிசயம். 'நெஞ்சிருக்கும் வரை' நினைவிருக்கும் ஒற்றுமையும்.
'இது நினைவோ... வெறுங்கனவோ' வருகையில் மனம் உருகாமல் இராது.
'வாங்கையா..பேரெடுக்க' ராவடி பாட்டு. சுமார் ரகம் 'வாத்தியாரே'. அரங்கேற்றம்...வாயாடி பாணி.
'அவளுக்கென்று ஓர் மனம்' போல பாடல்கள் அமையாவிட்டாலும் 'அலைகளு'க்கென்று தனி ரசனை மனங்கள் உண்டு. அதிலொன்று இந்த மனம்.
இன்று கேட்டு கொஞ்சம் அப்செட்தான்.
நான்கு அலைகளுக்கும்
http://www.friendstamilmp3.com/index...&spage=Alaigal
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!
எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது.
டி.ராமண்ணாவின் இயக்கத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்.
காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.
அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:
இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை.
எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.
courtesy - giridharan.net
அலைகள் பற்றிய நினைவைக் கிளறி மனக்குளத்தில் வட்ட வட்டமான அலைகளை எழுப்பிட்டீங்க வாசுஜி..
புகை வண்டியோடு ஆரம்பிக்கும் முதல் பாதி வேகமாக நகர இண்டர்வெல்லுக்கு அப்புறம் மாட்டு வண்டியில் ஆரம்பிக்கும் அடுத்த பாதி அதே வேகத்தில் போவதாக ஒரு பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது..
ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?
இதோ வாசுஜியின் ராட்சசி பாடல்களின் வீடியோக்கள்
பச்சை இலை போலே
https://www.youtube.com/watch?v=YLi16sw3OEI
வாங்கையா
https://www.youtube.com/watch?v=h-4sydCLyhM
ரொம்ப ரொம்ப நன்றி மதுண்ணா! சின்ன வயதில் ஒரே முறை அலை பார்த்தது. எதுவும் நினைவில்லை. ஆஜானுபாகுவாக ஒரு வில்லன் மட்டும் நினைவில் இருக்கிறார். 'அலைகள்' செல்வகுமார் என்றே பின்னாளில் அவர் அழைக்கப்பட்டார் என்று நினைவு. கொஞ்சம் மனோகரை காப்பி அடிப்பார். குரலும் இரவல்தான். ராட்சஸியின் பாடல்களை ராட்சஸத்தனமாக கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
முடிந்தால் அந்த ஜானகி பாடலும்.:)
தமிழிலேயே சில அப்லோடர்கள் 'யூ ட்யூபி'ல் டைட்டில் தருவதால் வீடியோ கண்டு பிடிக்க சற்று சிரமமாக உள்ளது.
மீண்டும் மீண்டும் நன்றி மதுண்ணா.
https://www.youtube.com/watch?v=aIEPHm7ye6U
வாசு சார்
என்ன சொல்வது.. எப்படிப் பாராட்டுவது.. அலைகள் பாடல்கள் நான்குமே மிகவும் வித்தியாசமானவை. நிச்சயமாக பிரபலமாகாது என்று தெரிந்தே ஸ்ரீதர் கேட்டு வாங்கிய பாடல்கள். ஒரே ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லையா என்பதை இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் யாராவது சொன்னால் உண்டு. ஸ்ரீதர் வேண்டாமென்று நிராகரித்த மெட்டுத் தான் கண்ணிலே என்ன உண்டு என்று அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம் பெற்றது என்பார்கள். அதற்கு பதிலாகத் தான் இந்த ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ பாடல். இந்தப் பாடலில் மெல்லிசை மன்னரின் உருவாக்கம் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். முடிந்தால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். ஆனால் இப்போதைக்கு இந்த்ப பாடல் காட்சியை பார்ப்போம் கேட்போம்.
அருமை ராகவேந்திரன் சார். எங்கிருந்தாலும் நீங்கள் இன்று வந்து விடுவீர்கள் என்று நம்பகமாகத் தெரியும். வந்தது மட்டுமல்ல... மது அண்ணா போல தாங்களும் 'அலைகள்' பற்றி அற்புதமான தகவலைப் பகிர்ந்து கொண்டீர்களே! அதுதான் 'ரசிக வேந்தர்' என்று எங்களை கூப்பாடு போட வைக்கிறது. இப்படிப்பட்ட படங்களைப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில்தான் எத்துணை மகிழ்ச்சி!
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,
விஷ்ணுவர்தனுக்கு பின்னணிக் குரல் யாருன்னு இப்போதான் 'அலைகள்' பார்த்து கொஞ்சம் கண்டு பிடிச்சேன். நீங்களும் சொல்லி அது மேட்ச் ஆயிட்டா தொகுதி நிலவரத்தை ஜனங்களிடம் வெளியிட்டு விடலாம்.:)
எஸ்வி,
குடும்பத்தினர் நலமா? நீங்கள் போட்ட ஜல் ஜல் பாடல் எனக்கு மிக பிடித்தங்களில் ஒன்று. ஆரம்ப கால ஜானகி பாடல்களில் ஒரு அற்புதம். வண்டி பாடல் என்றால் டி.கே.ராமமூர்த்திக்கு உற்சாகம் பிய்த்து கொள்ளுமே?(சாட்டை கையில் கொண்டு)
முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன்.
கவியரசர் கவியரசரே.
ராமண்ணாவின் நன் முயற்சி சரியான நட்சத்திர தேர்வு இல்லாததால் பிசுபிசுத்து விட்டது. பாசம் நல்ல படம்.
நன்றி எஸ்.வீ.
மாப்பிள்ளை அழைப்பு - ஆஹா இன்னொரு பெயர் பலே ஆனந்தன் கிடையாது.அலேக் ஆனந்தன்.
'கண்ணிலே என்ன உண்டு?... கண்கள்தான் அறியும்' என்ற கவிதாவின் கதறலை விட 'ஊமைப் பெண்ணை பேசச் சொன்னால்' அந்த சோகமே தாக்கத்தை மனதில் அதிகம் ஏற்படுத்தும் என்பது என் சொந்தக் கருத்து. அப்படி இருந்தால் ஸ்ரீதரின் முடிவே சாலச் சிறந்தது. ஸ்ரீதர் ஸ்ரீதர்தான் பாடல்களை தெரிவு செய்வதில்.
மக்கள் திலகத்தின் ''பாசம் '' நல்ல திரைப்படம் என்று கூறியதற்கு மனமார்ந்த நன்றி திரு கோபால்
.தங்களின் அன்புக்கும் மிக்க நன்றி .
ஒருத்தரு ஏ.எல்.ராகவன் மூடுல இருக்கறதனாலே அவருக்கு இந்தப் பாட்டு.:) நடிச்சதும் ராகவனே. ராஜஸ்ரீயை ராகிங் பண்ணுவார். தயாரிச்சதும் அவருதானே! நாயகரோ 'பாடகர் திலகம்'
வழக்கம் போல ராகவனின் நாக்கு பிறழல்கள், தொண்டை கமறல்கள் கலாட்டா உண்டு. (தகதிமிபூபா... தகதிமிபூபா) கூட நாகு வேற. (வழக்கமான கால் முட்டி மாற்றல்கள் உண்டு) சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட நடன மாதர்கள் பிளாக் பிகினியில் உண்டு. சின்னா தூக்கம் போச்.:) வெஸ்டர்ன் கிடார் வெளுத்து வாங்குதே! ஆனா பாட்டு மனசுல நிக்கல. ஹிட்டும் அடிக்கல. இருந்தாலும் பார்த்து கேட்டு வைப்போம்.
'ஐயா ஊரு ஆப்பிரிக்கா காடு
எங்கம்மா வீடு எங்கே?'
இப்படி கூச்சல் போட்டா எப்படி 'கல்லும் கனியாகும்?' ம்...
https://youtu.be/FDffUlscw-8
சின்னா!
'ராஜா' நட்பு பாசம் பறி போயிடும் போலிருக்கே!:) 'வினோத' நட்பு உருவாவுதே! உம்மா பேச்சை கேக்காம 'பாச'த்தால் மோசம் போனேனே!:)
'கோபலனோடு நான் ஆடுவேனேi
நந்த கோபாலன்...ஹாங்...
வேணு கோபாலன்
ஹாங்...
அலைகள் சாந்தியில் தான் பார்த்தது என நினைக்கிறேன்..வெகு சின்ன வயதில் தான்.. சந்திரகலா பரிதாப ப் பட்ட பெண்ணாக வந்து விஷ்ணுவர்த்தனைக் காப்பாற்றுவார் காப்பாற்றி கடிமணம் புரிவார் இல்லியோ.. ஊமைப்பெண்ணை பேசச்சொன்னால் உறவோ, பொன் என்ன பூவென்ன கண்ணே இரண்டும் நினைவிருக்கிறது..மற்ற பாடல்களுக்கும் நன்றி வாசு ராகவேந்தர் மதுண்ணா..
எஸ்விசார்.. ஜல் ஜல் எனும் சலங்கையொலி என்னை மிகக் கவர்ந்த பாடல்களில் ஒன்று..அதுவும் சிலோன் ரேடியோவில் எத்தனை முறை கேட்டிருப்பேன்.. நன்றி..
ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..
ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..
ஜெ.ராஜகிருஷ்ணாவா யார் அது ?!
ஏற்காட்டில யாரும் கை குலுக்கலை.இன்ஃபேக்ட் சேலத்தில் இருந்த அக்கா அத்திம்பேர் தான் ஒரு வருடத்தில் அய்யம்பேட்டை ட்ரான்ஸ்ஃபரில் செல்ல அங்கு மனது குலுக்கியவரைப் பற்றி ஏற்கெனவே பகின்றிருக்கிறேன் என்பதை நீவிர் அறிய மாட்டீரா என்ன வாஸ்ஸு.. (ஹா..என்னே தமிழ்)
வாசு சார்
எண்ண அலைகளைப் பாய விட்டு விட்டீர்கள்...
முதன் முதலில் ஓடியன் தியேட்டரில் பார்த்த பொழுது மெல்லிசை மன்னரின் இசைக்காகவும் ஸ்ரீதரின் இயக்கத்திற்காகவும் இப்படத்தை விரும்பிப் பார்த்தேன். எப்படி அவளுக்கென்று ஓர் மனம் முடிவில் ஒரு Hangover ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக அலைகள் ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் பாடல் தான் நெஞ்சில் நெகிழ்வூட்டியது. அன்று முதல் அடிக்கடி மனதில் இப்பாடல் எங்கோ ஓர் மூலையில் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு நிலைத்து நின்ற பாடல். உண்மையில் இப்போது பார்க்கும் போது, மெல்லிசை மன்னர்-கவியரசர்-எஸ்.ஜானகி இவர்களின் கூட்டணியை வைத்து ஸ்ரீதர் கொண்டு வந்த அற்புதமான பாடல் ஊமைப்பெண்ணைப் பேசச் சொன்னால். தாங்கள் கூறியது மிகவும் சரி. இந்த ட்யூன் தான் இதற்கு மிகவும் பொருததமாய் அமைந்து விட்டது.
இனி இப்பாடலைப் பற்றி என் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
https://youtu.be/aIEPHm7ye6U
நாயகி சந்தர்ப்ப வசத்தால் ஒரு காமுகனால் விலைமாதராக வாழ்க்கையில் தள்ளப்படுகிறாள். நாயகன் அவளை எதிர்பாராத விதமாக அவளை சந்திக்கும் போது அவள் நிலை அறிந்து வருந்துகிறான். அவளுக்கு வாழ்வைக் கொடுக்க முன் வருகிறான். அவளுடைய சூழ்நிலை, அதற்கான காரணம் போன்றவற்றைக் கேட்கிறான். அவள் நேரில் சொல்லாமல் நழுவுகிறாள். தன் அறையில் இருக்கும் பொழுது அவள் அங்கே வருவது போன்று ஒரு பிரமை அவனுக்கு ஏற்படுகிறது. அப்போது அவள் அங்கே தோன்றி தன் மனநிலையை பாடலில் சொல்கிறாள். அவனுக்கோ இது உண்மையாய் அவள் சொல்கிறாளா இல்லை தான் ஏதாவது கனவு காணுகிறேனா என புரியாமல் அந்த பிரமையினுள்ளேயே மூழ்குகிறான்.
இந்த சூழ்நிலையில் தான் இந்தப் பாடல் அலைகள் படத்தில் இடம் பெறுகிறது. எஸ்.ஜானகியின் குரலில் இப்படி ஒரு உயிரோட்டமான உணர்வினை நாம் கேட்கும் போது நம்மை நாம் மெய்ம்மறந்து போவது உறுதி.
அவள் நுழைவதைச் சுட்டிக்காட்ட ஒரு Chord. Guitar and Sitar combination. அதனுடனே ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடல் துவங்குகிறது.
இப்போது நாயகி அவன் கண் முன் வருகிறாள். அவனுக்கும் அது கனவா இல்லை நினைவா என ஐயம் எழுகிறது., அவன் ஒரு விதமான சந்தேகப் பார்வையுடன் பார்க்கிறான். இதற்கான சூழ்நிலையை இந்த ஹம்மிங்கிலேயே மன்னர் உணர்த்தி விடுகிறார்.
...ஹம்மிங்...ஒலிக்கிறது...
பாடல் தொடங்குகிறது..
ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ
மீண்டும் வெறும் கனவோ என ஐயத்தை எழப்புவதன் மூலம் தன் ஐயத்தை அவன் மேலும் திணிக்கிறாள்.
அவனுக்கு தன் சூழ்நிலை என்பது கொஞ்சம் மறக்கும் நிலை ஏற்படுகிறது. உண்மையிலேயே அவள் தான் முன்னால் நிற்கிறாளா என உற்றுப் பார்க்கிறான்.
இதற்குப் புல்லாங்குழலும் குழு வயலின்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவனுடைய இந்த திடுக்கிடும் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் வகையில் இந்த இசையமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனி புல்லாங்குழலை ஒருவிதமான மர்ம சூழலை பிரதிபலிக்க மன்னர் பயன்படுத்தியிருப்பது அவருடைய மேதைமையைப் புலப்படுத்துகிறது.
இப்போது சரணத்திற்கு முந்தைய பின்னணி இசை. ஷெனாய் என்னமாய் ஒலிக்கிறது..
(இது போன்ற ஷெனாய் இசையையெல்லாம் நாம் கவனிக்காமலேயே விட்டு விடுகிறோம். எல்லோருக்கும் தெரிந்தவற்றை விட்டு வெளிவந்து இது போன்ற அபூர்வ முத்துக்களைத் தேர்ந்தெடுத்து வெளியுலகிற்கு சொல்வதே மெல்லிசை மன்னருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.)
இப்போது...ஆஹா. தொடரும். அந்த சாரங்கி இசையை எப்படி சொல்வது.. அவனுடைய மன நிலையை - என்ன சொல்வது, என்ன செய்வது ஒன்றுமே தெரியாமல் விழிக்கும் த்த்தளிக்கும் மனநிலையை அந்த சாரங்கி சொல்கிறது.. அவளை சந்தித்த சூழலை சொல்கிறது...
இப்போது வயலின் மிகவும் குறைந்த மாத்திரை இடைவெளியிலும் சரணத்தை இணைக்கிறது. அதோடு அவள் மனதையும்...
இப்போது அவள் அவனை சந்தித்த அனுபவத்தை சொல்கிறாள்..
கூண்டுக்கிளியாக வாழ நினைத்தேன்.. தாங்கும் கை ஒன்று கண்டேன்...
அவளுக்கு அடைக்கலம் கொடுக்க அவன் முன் வந்ததை அவள் மனம் இவ்வாறு சொல்கிறது. கவியரசரின் பங்கிற்குக் கேட்கவா வேண்டும்.
இப்போது அவள் முகத்தில் வடியும் கண்ணீரை ஒரு கை துடிக்கிறது.
இங்கே இயக்குநரின் பங்கினை நாம் காண்கிறோம். அந்தக் கை யாருடையது என காட்டவில்லை.
அவள் அவனைத் தான் சொல்கிறாளா என்ற ஐயத்தை எழுப்பும் வகையில் இந்த கை மட்டும் திரையில் காட்டப்படுகிறது..
அது யாருடையதாக இருக்கும் என்ற ஐயத்தை பாடலைக் கேட்போர் பார்ப்போர் அறிய வேண்டாமா.. அதற்கு அந்த மர்மத்தை சொல்ல மீண்டும் புல்லாங்குழல் இங்கே...
இது வரை இருந்த தாளம் மாறி இப்போது தபேலா துவக்கம்...
இப்போது அந்த மர்மத்தை உடைத்து அந்த வரியை மீண்டும் பாடியபடியே அவள் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கு மனம் ஒரு நிலைக்கு வருகிறது..
இதற்குத் தான் தபேலா பயன்படுத்தினாரா மன்னர்.. கேள்வி எழுகிறதல்லவா...
நின்றன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று ஓடி வர நோக்கி நின்றேன்...
தன் மனதில் எழுந்த சலனத்தை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு ஓர் ஆறுதல், புகலிடம் கிடைத்த்து என்று மனம் லேசானதை வெளிப்படுத்துகிறாள். அதை எதிர்பார்ப்பதாக உணர்த்துகிறாள். இப்போது அவளுக்கு அது கோயிலாகத் தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் திரையில் ஒரு கோபுரம் நிழலாக மேலெழும்புகிறது...
இத்தனையும் நினைவு தானோ இல்லை கனவாகப் போய் விடுமோ என்று அவளுக்கு மனதில் ஓர் ஆதங்கம்.. இப்போது மிருதங்கம் (அல்லது டோலக்?) ஒலிக்கிறது.
பல்லவி ஒலிக்கிறது. முடியும் போது அவள் திரையிலிருந்து மறைகிறாள். அவன் அவள் மறையும் திசையைப் பார்க்கிறான்.
இப்போது முதலில் அவளை சந்தித்த போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வு அவன் மனத் திரையில் நிழலாடுகிறது. இது மறக்க வேண்டிய சம்பவம் என்பதாக அவன் முகத்தை திருப்பிக் கொள்கிறான். இதை சித்தரிக்க இங்கே மீண்டும் ஷெனாய்.. மனத்திரையில் இக்காட்சி முடியும் போது மிக்க் குறைந்த மாத்திரை அளவிற்கான நேரத்திற்குள் ஒரு சாரங்கி மீண்டும் ஒலிக்கிறது.
இந்த சாரங்கி அவள் உள் மனதை உலுக்குவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. அவள் பாடுகிறாள். தன் மனசாட்சியை வெளிப்படுத்துகிறாள்.
பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது என்னை நீ காண முடியும்...
இந்த வரியின் மூலம் ஏராளமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவளால் பேச முடியாத நிலை. அவள் பேசும் பொழுது அவனைப் பற்றிய அவளுடைய உயர்ந்த எண்ணங்களைக் கூறுவாள். அதற்கான சந்தர்ப்பம் வரும் என்கிற நம்பிக்கை.. இத்தனையும் இந்த ஒரு வரியில்... கவியரசராயிற்றே...
முடியும் என்கிற பொழுது ஜானகியின் குரலில் வெளிப்படும் அந்த சங்கதிகள், அவள் மன நிலையை சொல்வதில் அவளுக்குள்ள உறுதியான நிலைப்பாட்டை சொல்வதாய் அமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு சங்கதிக்கும் மன்னர் ஒரு காரணம் வைத்திருப்பார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா..
கேயில் தீர்த்தங்கள் அபிஷேகமானால் எண்ணம் உனைத் தேடி அடையும்...
இரண்டாம் முறை அடையும் சொல்லும் போது அந்த ம்.. எழுத்திற்கு சங்கதி.. இங்கும் அவள் மன உறுதியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் அவள் மனம் ஏங்குகிறது. இது நினைவோ வெறும் கனவோ..
ஆனால் இந்த முறை அது ஏக்கமாக பிரதிபலிக்கிறது. இது நினைவாக இருக்கக் கூடாதா என அவளுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறாள்.
இப்போது பல்லவிக்குப் பிறகு அடுத்த சரணத்திற்கு முந்தைய பின்னிசை. இருவரின் மனநிலையும் மீண்டும் அல்லாடுகிறது. அதே போல அதை சித்தரிக்க மீண்டும் ஷெனாய், அதைத் தொடர்ந்து சாரங்கி.. பின் இந்த தெளிவற்ற மனநிலையை உணர்த்த புல்லாங்குழல் மீண்டும் ஒலிக்க, சரணம் தொடங்குகிறது..
பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும் காணும் கண் செய்ய தவறு..
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்கிற வழக்கினை இந்த வரியில் கவியரசர் என்னவாய் வெளிப்படுத்துகிறார். அது அவளுடைய மன நிலை, அவன் அவளை சரியாகப் புரிந்து கொள்ளாத மனநிலை, ஏனென்றால் அவள் அவனுடைய காதலியாய் இருந்தவள் சந்தர்ப்ப வசத்தால் இது போன்ற சூழலில் அவனைப் பார்க்கிறாள், அதைத் தன் மனதின் குரலாய் வெளிப்படுத்துகிறாள்.
பாவங்கள் ஏதேனும் இருந்தால் யாவும் நான் கொண்ட அழகு... என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்..
பல்லவி மீண்டும் தொடர ...
கனவோ கனவோ ... என்று அவளுக்கு மனதிற்குள் இது கனவாகப் போய் விடுமோ என்கிற பயம்... அதனை வெளிப்படுத்தியவாறே மறைகிறாள்..
ஒரு மூன்று நிமிடங்கள் நம்மையும் அவர்களின் உலகத்தில் அழைத்துக் கொண்டு போய் விடுகிறார். மெல்லிசை மன்னர்..
இப்போது நமக்குள்ளும் ஒரு ஐயம் எழுகிறது..
மெல்லிசை மன்னர் மறைந்து விட்டார்... இது நினைவோ அன்றி கனவோ...
வேண்டாம் அவர் மறைவு என்பது கனவு..
அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...
From vaazhkkai (1949)
http://www.youtube.com/watch?v=9WkssnWrwxE
From the Treasure Island of GG with Pleasure!
கலாய்க்கிறாரே காதல் மன்னர் !....கும்பல் கூட இருக்கும் தைரியத்தில்.....
பகுதி 1 பாக்கியலக்ஷ்மி.......(1961)காந்தக் கண்ணழகி ஈ வி சரோஜாவின் சிங்காரச் சோலையான இளமைக் கொண்டாட்டத்தில்.......Quote:
ஜெமினி கணேசன் அவர்கள் காதல் நாயகனாக வலம் வந்த போதும் காதலியுடன் இணைநது இனிமையான பாடல் காட்சிகளைத் தந்த போதும் இளமையான கூட்டத்தோடு சேர்ந்து காதலியைக் கலாய்க்கும் பாடல் காட்சிகளிலும் எல்லை மீறாத கண்ணியத்தைக் கடைப்பிடித்தார்!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
பகுதி 2 காதல் என்பது எதுவரை.....ஆராய்ச்சி முனைவர் ஜெமினி அம்பாரி ஆனையின் மேலே...
பாதகாணிக்கை!
https://www.youtube.com/watch?v=stFj0OrPi4w
பகுதி 3
பெண்கள் இல்லாத உலகத்திலே.....ஆண்களினாலே என்ன பயன்! சரணாகதி அடையும் காதல் கைதியும் ஜெமினியே!!...ஆடிப்பெருக்கு
https://www.youtube.com/watch?v=TwO31yVw8vY
பகுதி 4 வீர அபிமன்யு
கடவுளையே கலாய்க்கலாமா கன்னிப் பெண்கள் கூட்டம் ? மாயக் கண்ணனாக மயக்குகிறார் லீலா கிருஷ்ணர் ஜெமினி!!
https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q