திரு. ராமஜெயம் சார் நன்றி.
Printable View
திரு. ராமஜெயம் சார் நன்றி.
திரு.பாலகிருஷ்ணன் சார் தாங்கள் வழங்கிய கர்ணன் இணையதள இணைப்பு செய்திகளுக்கு நன்றி.
அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !!!
கலைப் பொக்கிஷம் கர்ணன் குறித்த
முப்பெரும் ஆவணப் பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : திராவிடன் : 14.1.1964
http://i1110.photobucket.com/albums/...DC5572-1-1.jpg
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : The Hindu : 14.1.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC5574-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி[மதுரை] : 22.4.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC5575-1.jpg
குறிப்பு:
1. தமிழ்த் திரையுலகின் முதல் முழுநீள ஈஸ்ட்மென் வண்ணத் திரைக்காவியமான "கர்ணன்", முதல் வெளியீட்டில், நான்கு அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம். சென்னையில் சாந்தி, பிரபாத், சயானி ஆகிய 3 திரையரங்குகளிலும் முறையே ஒவ்வொரு அரங்கிலும் 100 வெற்றி நாட்கள். 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரையம்பதியின் 'தங்கம்' திரையரங்கில் 108 நாட்கள் ஓடி அமோக வெற்றி. இப்படி தங்கத்தில் 100 நாட்களைக் கடந்த சாதனைச் சக்கரவர்த்தியின் மூன்றாவது காவியம் "கர்ணன்". இந்த மகத்தான சாதனையை ஏற்படுத்திய முதல் இரண்டு கலைக்குரிசிலின் காவியங்கள் : பராசக்தி(1952)[112 நாட்கள்], படிக்காத மேதை(1960)[116 நாட்கள்]. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களைக் கொடுத்த ஒரே உலக நடிகர், நமது நடிகர் திலகம் மட்டும்தான் !
2. இந்த இதிகாச காவியத்தின் முதல் வெளியீட்டு 100வது நாள் சென்னை விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் இடுகை செய்கிறேன்.
பக்தியுடன்,
பம்மலார்.
saw Mayabazar colour. Gud work by universal, touchstone picture. Heard That Veera Pandiya Kattabomman is 2 b re released next.
Movies 4 c F/wd NT 2 future generations:(can b released like Karnan)
Wish I could C Navarathiri in Colour. Sivantha Mann in 3D,Uthamaputiran in colour.Pudiya Paravai in DTS, Thillana , Kapal Ottiya thamizan in colour, Sorgam, Bharata Vilas, Raja, Deiva Magan, Vasantha Maaligai, Thiruvilayadal, saraswathy sabatham, thiruaruthchelvar, Trisoolam,Gowravam, Thangapadakam,Ganaoli,Rajapart. Any patrons
"ராஜ ராஜ சோழ" சக்கரவர்த்தியின் 39வது ஜெயந்தி தினமான
இன்று [31.3.1973 - 31.3.2012] ஒரு ராஜ ராஜ பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : மாலை முரசு : 27.4.1973
http://i1110.photobucket.com/albums/...GEDC5580-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
வருக வருக புத்துணர்வுடன் புது பொலிவுடன் வருகை தந்திருக்கும் சுவாமி அவர்களே வருக!
அள்ளிக் கொடுத்த கர்ணனுக்கே விளம்பரங்களை அள்ளிக் கொடுத்த வள்ளலே!
தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று நூறு நாட்கள் படங்களை கொடுத்த இந்திய சினிமாவின் ஒரே நடிகன் என்ற பெருமையை நடிகர் திலகத்திற்கு அளித்த எங்கள் மதுரையின் மாண்பை அன்றைய நாளில் வெளியான விளம்பரங்களின் மூலமாக உலகறிய செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இதே செய்தியை நான் இந்த திரியில் கடந்த ஆறு வருடமாக சொல்லி வந்தாலும் அதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரத்தை அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி.
நடிகர் திலகமும் தங்கம் திரையரங்கும் இணை பிரிக்க முடியாதவை. காரணம் இருவருமே தங்கள் முதல் அறிமுகத்தை ஒரே நாளில்தான் துவக்கினார்கள். ஆம், எப்படி 1952 அக்டோபர் 17 நடிகர் திலகத்தின் அறிமுக நாளாயிற்றோ, அதே நாளில்தான் தங்கம் அரங்கும் தன் அறிமுகத்தை பராசக்தி படத்துடன் துவக்கியது.
மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் கலக்கல்கள்!
அன்புடன்
இன்று மார்ச் 31 ராஜ ராஜ சோழனின் வெளியீட்டு தினம் என்பது தெரியாமலே ராஜ ராஜ சோழனைப் பற்றி தற்செயலாக சகல பதிவிட அதற்கு பொருத்தமாக அந்தப் படத்தின் ஒரு விளம்பரத்தை பதிவிட்ட உங்கள் timing sense-க்கு ஒரு சல்யூட்.
http://www.goodlightscraps.com/conte...welcome-48.gif
http://i1087.photobucket.com/albums/...31355/1-84.jpg
திரியின் நாயகரே வருக! வருக!
திகட்டாத இன்பம் தருக! தருக!
அன்பு பம்மலார் அவர்களே!
ஆவணத் திலகம் அவர்களே!
இன்முகம் காட்டி
ஈகைக் குணத்தோடு
உத்தமரைப் பற்றிய உண்மைகளை
ஊர் உலகம் அறியச் செய்து
எல்லோர் மனதிலும் குடிகொண்ட
ஏற்றம் கொண்ட அன்பராய்
ஐயங்கள் பல போக்கி
ஒருவரும் தனக்கு ஈடு இல்லையென
ஓராயிரம் ஆவணங்களை
ஒளவைப் பிராட்டி தமிழ் தந்தது போல தந்து
மறுபடியும் மனம் மகிழ வைக்க வந்திருக்கும்
திரித் தென்றலே! வருக! வருக!
அன்புடன்,
வாசுதேவன்.
மீண்டும் ஆவணங்களுடன் பம்மலாரின் தகவல்கள்..நன்று.
அன்பு பம்மலார் சார்,
தங்களை மீண்டும் வருக வருக என மனதார மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தாங்கள் இல்லாமல் சர்க்கரை இல்லா பால் போல இருந்தது. தாங்கள் திரும்பி வந்ததும் கற்கண்டும், தேனும் கலந்த பாலாய் இனிக்க ஆரம்பிக்கத் துவங்கி விட்டது.
கர்ணன் 1964 ரிலீசில் படம் சுமாராகத்தான் போனது என்ற விவரமறியாதவர் இடும் கூக்குரலுக்கு சாட்டையடி கொடுக்க இப்படி ஒரு அற்புதப் பதிவை அளிக்க தங்களை விட்டால் வேறு யார்? அதுவும் வார ரீதியான வசூல் விவரங்கள். எவ்வளவு நீ.........ண்ட நாட்களாகி விட்டது இப்படி அருமையான பதிவுகளைப் பார்த்து? அசுரப் பதிவுகளை அட்டகாசமாக வழங்கியதற்கு நன்றிகள்.
ராஜ ராஜ பொக்கிஷம் அளித்த பதிவு ராஜரே! தங்கள் பணி மேலும் தழைக்க வாழ்த்துக்கள்.
'ராஜ ராஜ சோழன்' சில நிழற்படங்கள்.
http://img703.imageshack.us/img703/3578/39588178.jpg
http://img580.imageshack.us/img580/9...0413224812.jpg
http://img40.imageshack.us/img40/9493/captureou.jpg
http://img40.imageshack.us/img40/1656/44389943.jpg
http://img40.imageshack.us/img40/6184/wqwt.jpg
http://img641.imageshack.us/img641/7384/ttr.jpg
http://www.shotpix.com/images/39528360039299565367.png
http://www.shotpix.com/images/73357337000177602105.png
http://www.shotpix.com/images/93530452530498813963.png
http://www.shotpix.com/images/02463622819431725271.png
http://4.bp.blogspot.com/-6K1fP_cZYY...nap-442792.png
http://1.bp.blogspot.com/-B4oB6qSOZC...nap-443052.png
http://1.bp.blogspot.com/-BTpTmqqHhT...nap-443512.png
http://www.sirkali.org/cholan.jpg
http://img51.imageshack.us/img51/940...0217074805.png
"தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்"
http://www.youtube.com/watch?v=VyJ9B...yer_detailpage
"தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!"
http://www.youtube.com/watch?v=V5Vd-rmlivA&feature=player_detailpage
டியர் வாசுதேவன் சார்,
பெருந்தன்மையின் மறுவடிவமான தங்களுடைய இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கி வரும் அன்பிற்கும், வான்மழை போன்ற பாராட்டுப் பதிவுகளுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது எல்லையில்லா நன்றிகள் ! நெய்வேலியார் ஔவையாராக உருமாறி, இந்த எளியேனைப் பாராட்டும்விதமாக ஒரு ஆத்திசூடியையே யாத்து அளித்தது அடியேனது கண்களில் ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்துவிட்டது. தங்களது இணையில்லா அன்பிற்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள் !
[தாங்கள் வழங்கியுள்ள "ராஜ ராஜ சோழன்" மெகா ஆல்பம் மகா கம்பீரம் !]
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
உங்கள் பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
3 : பச்சை விளக்கு(1964), ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்)(1964)
6 : கவரிமான்(1979)
9 : இல்லற ஜோதி(1954)
10 : கிரஹப்பிரவேசம்(1976), படையப்பா(1999)
11 : ஹரிச்சந்திரா(1968), வியட்நாம் வீடு(1970), அவன் தான் மனிதன்(1975), விடுதலை(1986)
12 : வணங்காமுடி(1957), நான் வணங்கும் தெய்வம்(1963), கலாட்டா கல்யாணம்(1968), வாணி ராணி(1974), நட்சத்திரம்(1980)
13 : அந்த நாள்(1954), கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954), தெய்வப்பிறவி(1960), நீதியின் நிழல்(1985)
14 : உலகம் பலவிதம்(1955), சம்பூர்ண ராமாயணம்(1958), தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை(1959), படித்தால் மட்டும் போதுமா(1962), பேசும் தெய்வம்(1967), சுமதி என் சுந்தரி(1971), பிராப்தம்(1971), சங்கிலி(1982), இமைகள்(1983), வாழ்க்கை(1984), வீரபாண்டியன்(1987), பசும்பொன்(1995)
21 : புனர்ஜென்மம்(1961)
22 : சாந்தி(1965)
24 : அமரகாவியம்(1981)
26 : தர்மராஜா(1980)
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
பச்சை விளக்கு
[3.4.1964 - 3.4.2012] : 49வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
சாரதியின் அழகுத் தோற்றம் வண்ணத்தில்...
http://i1110.photobucket.com/albums/...Sarathy2-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : கலைமகள் : மே 1964
http://i1110.photobucket.com/albums/...Vilakku1-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.7.1964
http://i1110.photobucket.com/albums/...100Tamil-1.jpg
100வது நாள் விளம்பரம் : The Hindu : 11.7.1964
http://i1110.photobucket.com/albums/...lakku100-1.jpg
குறிப்பு:
"பச்சை விளக்கு", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
HEARTY WELCOME TO PAMMALAR WITH A BIG BANG OF KARNAN VASUL DETAILS. KARNAN WAS A GREAT FILM HIT ON COLLECTIONS ALSO JUST TO DEMERIT THE MOVIE THE OTHER BANNER PEOPLE CREATED A BIG FUSS THOSE DAYS IN THEATRES WHERE IT WAS RELEASED. AFTER FEW WEEKS WHEN THEY REALISED KARNAN CAN NOT BE TOPPLED, they kept quit. that is the fact. many similar happenings took place later years also. now KARNAN IS PROVING its myth after almost half a centuary.
vasu sir raja raja cholan stills eyecatching.
This free distribution of trees by Fans association, is very appreciable.
Wish all the best -Kodai vallal Karnan Vazga
திரி சாரதி வழங்கிய பச்சை விளக்கு சாரதியின் அழகு வண்ணமுகம் அசத்தலோ அசத்தல். பச்சை விளக்கு முதல் மற்றும் நூறு நாள் வெளியீட்டு விளம்பரங்கள் அதியற்புதம். (குறிப்பாக அந்த பச்சை கலர் 'Pammalar' watermark matching super)
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள் லிஸ்ட் 'ஓ' போட வைக்கின்றன. சூப்பர். பாராட்டுக்கள்
வாசுதேவன்
Raja Raja Cholan Samadhi
http://www.shotpix.com/images/67845343436978802083.jpg
உலகிலேயே மிகப் பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன், 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை. இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்.
thanks to tamilcreation.com.
vasudevan
'பச்சை விளக்கு' காவியத்தில் பார் போற்றும் நடிகர்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-85.jpg
School Master (Malayalam) 1964
http://www.thehindu.com/multimedia/d...P4_894226e.jpg
http://www.thehindu.com/multimedia/d...LD_257965f.jpg
vasudevan
வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்...!
புதுப்பொலிவுடன் வெளியாகி இருக்கும் சிவாஜியின் கர்ணன் படம், வசூலில் புதிய படங்களையே பின்னுக்கு தள்ளிவிட்டது. 1960களில் நடிகர் திலகம் சிவாஜி, முத்துராமன், என்.டி.ராமாராவ், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி காலத்தை வென்ற சரித்திர திரைப்படம் கர்ணன். இப்படம் இப்*போது நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் புதிய படங்களின் வசூலையே மிஞ்சிவிட்டது.
இதுகுறித்து இப்படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கர்ணன் படம் இப்போது எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சியாக காணப்படுகிறது. இதற்காக 2 வருடமாக கடுமையாக உழைத்தோம். அது வீண்போகவில்லை. இந்த நேரத்தில் சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இதையடுத்து நிறைய பேர் எங்களிடம் அடுத்து யாருடைய படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட போறீங்க என்று கேட்குறாங்க. சிலர் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை டிஜிட்டல் செய்ய சொல்லி கேட்குறாங்க. சிலர் புதிய பறவையை விரும்புறாங்க. அதனால் அடுத்து புதிய பறவை படத்தை வெளியடும் முயற்சியில் இருக்கிறோம். புதிய பறவை பாடலை கேட்பதற்கு என்றே இன்றும் சிவாஜியின் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. எனவே அடுத்தபடியாக புதிய பற*வை படத்தை அவருடைய பிறந்தநாளில் வெளியிட எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
As regular readers of this thread would recall, we had launched NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] on January 22nd with Paarthal Pasi Theerum. The second programme of the Association was held today evening. As we had screened a serious family drama last time, this time we decided to go for different genre comedy and so Bale Pandiya was screened at Four Frames theatre. As the artists of this movie are no more [save for Vasanthi,who could not be traced] we have only the musicians and though MSV, TKR, TMS, PBS, PS and Jamuna Rani were invited, only Suseelamma turned up in spite of travelling all night and was kind enough to sit and watch the entire movie. Our sincere thanks to her. The screening went off well and as it always happens, the people who had turned up enjoyed the movie well and there was huge applause at the end.
Regards
கே[லி]ள்வி பிறந்தது அன்று; நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
என்று சத்திய வாக்கையும், நமது பல்வேறு கனவுகளை பொறுத்தவரை
ஒளிமயமான எதிர்காலம் நம் உள்ளத்தில் தெரிகிறது
என்ற மங்கள சொற்களை முழங்கி வரும் சாரதிக்கு
வண்ணமயமான வரவேற்பு நல்கிய சுவாமி அவர்களே!
உங்களுக்கு
நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன்
டியர் வாசுதேவன் சார்,
தங்களது பாராட்டுப் பதிவுக்கு எனது கனிவான நன்றிகள் !
சோழ சக்கரவர்த்தி ராஜ ராஜன் சமாதி பற்றிய புகைப்படத் தகவல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டது. உரியவர்கள் (மத்திய-மாநில அரசுகள்) உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
"பச்சை விளக்கு" ஸ்டில்லும், "ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்)" ஸ்டில்லும் சூப்பர் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
தங்களின் பாராட்டுக்கு எனது தீர்க்கமான நன்றிகள் !
"பச்சை விளக்கு" பாடலை அன்றும்-இன்றும் என்ற ரீதியில் எழுதியது பிரமாதம் !
அன்புடன்,
பம்மலார்.
"புதிய பறவை" டிஜிட்டலில் வெளிவந்து
மாபெரும் வெற்றிச்சிறகுகளை விரிக்கட்டும் !!!
http://i1110.photobucket.com/albums/...aar/Gopal1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
சிங்கத்தமிழனின் சீரிய பேட்டி
வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1997
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5581-1.jpg
இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5582-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் குறித்த தகவலார்ந்த கட்டுரை
வரலாற்று ஆவணம் : தினமலர் வாரமலர் : 30.9.2001
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5583-1.jpg
இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5584-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
Thank you Pammalar sir.
If a movie run 100 days in Madurai Thangam which is equal to 100 days in 4 theatres, so I cannot understand why this this movie marked as failure in the first release? Is it some thing done with the purpose to make some one happy or as usual wrong propaganda done against NT.
If a movie collects of 1.86 lakhs at one theater then think of cumulative of all the theaters released and don't get any mathematical answer to label this movie as a failure, I do hope our senior hubbers will clarify my query?
Cheers,
Sathsih
welcome back swamy pammalar sir
i missed you when Vasanthamalagai released in Bangalore
regards
kumareshanprabhu
Warm Welcome to Mr.Pammalar Sir,
we really missed U for 2 1/2 months
with regards
a.balakrishnan