-
31st March 2012, 11:44 PM
#11
வருக வருக புத்துணர்வுடன் புது பொலிவுடன் வருகை தந்திருக்கும் சுவாமி அவர்களே வருக!
அள்ளிக் கொடுத்த கர்ணனுக்கே விளம்பரங்களை அள்ளிக் கொடுத்த வள்ளலே!
தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று நூறு நாட்கள் படங்களை கொடுத்த இந்திய சினிமாவின் ஒரே நடிகன் என்ற பெருமையை நடிகர் திலகத்திற்கு அளித்த எங்கள் மதுரையின் மாண்பை அன்றைய நாளில் வெளியான விளம்பரங்களின் மூலமாக உலகறிய செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இதே செய்தியை நான் இந்த திரியில் கடந்த ஆறு வருடமாக சொல்லி வந்தாலும் அதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரத்தை அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி.
நடிகர் திலகமும் தங்கம் திரையரங்கும் இணை பிரிக்க முடியாதவை. காரணம் இருவருமே தங்கள் முதல் அறிமுகத்தை ஒரே நாளில்தான் துவக்கினார்கள். ஆம், எப்படி 1952 அக்டோபர் 17 நடிகர் திலகத்தின் அறிமுக நாளாயிற்றோ, அதே நாளில்தான் தங்கம் அரங்கும் தன் அறிமுகத்தை பராசக்தி படத்துடன் துவக்கியது.
மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் கலக்கல்கள்!
அன்புடன்
இன்று மார்ச் 31 ராஜ ராஜ சோழனின் வெளியீட்டு தினம் என்பது தெரியாமலே ராஜ ராஜ சோழனைப் பற்றி தற்செயலாக சகல பதிவிட அதற்கு பொருத்தமாக அந்தப் படத்தின் ஒரு விளம்பரத்தை பதிவிட்ட உங்கள் timing sense-க்கு ஒரு சல்யூட்.
-
31st March 2012 11:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks