-
31st March 2012, 08:08 PM
#11
Senior Member
Veteran Hubber
கலைப் பொக்கிஷம் கர்ணன் குறித்த
முப்பெரும் ஆவணப் பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : திராவிடன் : 14.1.1964

முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : The Hindu : 14.1.1964

100வது நாள் விளம்பரம் : தினமணி[மதுரை] : 22.4.1964

குறிப்பு:
1. தமிழ்த் திரையுலகின் முதல் முழுநீள ஈஸ்ட்மென் வண்ணத் திரைக்காவியமான "கர்ணன்", முதல் வெளியீட்டில், நான்கு அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம். சென்னையில் சாந்தி, பிரபாத், சயானி ஆகிய 3 திரையரங்குகளிலும் முறையே ஒவ்வொரு அரங்கிலும் 100 வெற்றி நாட்கள். 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரையம்பதியின் 'தங்கம்' திரையரங்கில் 108 நாட்கள் ஓடி அமோக வெற்றி. இப்படி தங்கத்தில் 100 நாட்களைக் கடந்த சாதனைச் சக்கரவர்த்தியின் மூன்றாவது காவியம் "கர்ணன்". இந்த மகத்தான சாதனையை ஏற்படுத்திய முதல் இரண்டு கலைக்குரிசிலின் காவியங்கள் : பராசக்தி(1952)[112 நாட்கள்], படிக்காத மேதை(1960)[116 நாட்கள்]. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களைக் கொடுத்த ஒரே உலக நடிகர், நமது நடிகர் திலகம் மட்டும்தான் !
2. இந்த இதிகாச காவியத்தின் முதல் வெளியீட்டு 100வது நாள் சென்னை விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் இடுகை செய்கிறேன்.
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 1st April 2012 at 02:00 AM.
pammalar
-
31st March 2012 08:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks